Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் குடாவில் 2000 இளைஞர்களைக் கொலை செய்யப் படையினர் திட்டம் - இராணுவ உளவாளி

Featured Replies

யாழ் குடாவில் 2000 இளைஞர்களைக் கொலை செய்யப் படையினர் திட்டம் - இராணுவ உளவாளி

யாழ் குடாநாட்டில் மேலும் இளைஞர்களில் ஒரு பகுதியினர் கொல்லப்படலாம் என இராணுவ உளவாளிகளின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவத்துடன் வெள்ளை வானில் திரிந்து காட்டிக் கொடுக்கும் ஒருவர் இந்த திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட குரோதங்களுக்காக பலரை இராணுவத்தினரின் வெள்ளை வானில் சென்று தாக்கியும், காட்டிக் கொடுத்தும், கடத்தியும், கொலைகள் செய்தும் வந்த குறிப்பிட்ட நபர் தற்போது தான் பல பிழைகளை விட்டு திருந்தியுள்ளதாக தெரிவித்து குறிப்பி;டட்டவர்களிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டியுள்ளார்.

இதன்போது தான் எதிர்காலத்தில் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடப் போவதில்லையென்றும் எதிர் காலத்தில் மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை படுகொலை செய்யும் நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சுமார் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக் குழுக்களினால் கடத்தியும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இத்தகைய செயல்பாடுகள் இடம் பெற்றுள்ளமையும் இவைகள் சம்பந்தமாக ஆயிரக் கணக்கான முறைப்பாடுகள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளமையும் இந்த நிகழ்வுகளுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றமையும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.

இளைஞர்களைத் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் அழிப்பதன் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு எட்டலாம் என்ற நிலைப்பாட்டில் தான் இரண்டு மூன்று வருடங்களில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அழிக்கப்பட்டுவிடுவார்கள் என முக்கிய அமைச்சர் வெளி நாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியவுடன் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.

Pathivu

1989 களில் தங்கட ஆட்களையே சுமார் 50,000 பேரைக் கொன்ற சிங்கிளப் படைகளிற்கு உதைச் செய்வது ஒரு பெரிய விடயம் இல்லை. குடா நாட்டு இளைஞர்கள் தான் தமது பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

தறுதலைகளின் ஆட்சியில் இதைவிட வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

திருந்தினாலும் அவ் கறுப்பாட்டுக்கு தக்க தண்டனை கொடுக்க வேன்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஸ்ரேலிய மொஷாட் படை தான் ஸ்ரீலங்கா அரசிற்கு இந்த திட்டத்தை பல வருடங்களிற்கு முன்பே கூறியதாக அறிந்தேன். எப்படியென்றால் கொல்லப்படும் பத்து தமிழர்களில் ஒரு புலி அல்லது புலி ஆதரவாளராவது சிக்குவார் என்பது தான் திட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழின் இன்றைய நிலவரம் குறித்து யாழில் இருந்து பொதுமகன் தெரிவித்த கருத்துக்கள்

http://www.tamilnaatham.com/audio/2007/mar...na20070324.smil

பொது மகன் கூறிய கருத்தைக் கேட்பதற்கு மனதிற்கு மிகக் கஸ்டமாக இருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் நாங்கள் கூட இவ்வாறான கேவலமான, பண்பாட்டை சீரழிக்கும் வழிகளில் மனதைச் செலுத்தாத போது, குடாநாட்டு மக்கள் மிகத் திட்டமிட்ட முறையிலும், அவர்களை அறியாமலும் பண்பாட்டை, களாச்சார விழுமியங்களை அழிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றார்கள் என்ற செய்தி அதிர்ச்சியைத் தருகின்றது.

மேலும், இங்கு வெளிநாடுகளில் மற்றவரின் அனுமதி இல்லாமல் செல் போனில் படம் எடுக்க முடியாது. அது குறிப்பிட்ட நபரின் Privacy ஐ மீறும் குற்றமாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தமது உறவுகளிற்கு பணம் அனுப்பும் போது, பொருட்கள் அனுப்பும் போது மேற்குறித்த கருத்தில் அந்தப் பொதுமகன் கூறியுள்ளபடி கொஞ்சம் எச்சரிகையாக இருந்து, தமது உறவுகள் நாசமாய்ப் போகாதிருக்க முயற்சிகள் எடுப்பது நல்லது.

முன்பு நாம் யாழ்குடா நாட்டில் இருந்த போது, வெளிநாடுகளில் வாழ்பவர்கள் கேவலமான வாழ்வு வாழ்வதாக சொல்லி நையாண்டி செய்தோம். ஆனால், உண்மையில் இப்போதுள்ள நிலமையைப் பார்த்தால், விரைவில் குடாநாட்டின் பண்பாட்டையும், களாச்சாரத்தையும் பார்த்து வெளிநாடுகளில் உள்ளவர்கள் கெக்கட்டம் போட்டு சிரிக்கப்போகின்றார்கள் போல இருக்கின்றது.

இதற்கெல்லாம் ஒரே தீர்வாக அமையக் கூடியது, யாழ் குடாநாடு தமிழர் படைகளால் விரைவில் கைப்பற்றப்பட்டு, குடாநாட்டிலுள்ள தமிழர்கள் இராணுவத்தினதும், கூலிக் குழுக்களினதும் பிடியில் விடுவிக்கபடுவதே ஆகும். வேறு வழியில்லை!

சிங்களவங்கள் 2000 என்ன 20000 மேல் கொல்ல திட்டமிட்டிருப்பாங்கள்!! அதில் எந்த ஒரு சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை!! ஆனால் ....

.... உந்தப் பதிவிற்கு எங்கிருந்து உந்த உளவுத்தகவல் வந்தது!!! சிலவேளை கோதபாயவோடு நேரடித்தொடர்போ தெரியாது???????? இருக்கும்...... :P :P :unsure:

இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமாயின் .... யாழ்களத்தில் "மின்னல்", "பறவைகள்", ... எனும் பெயர்களில் நடமாடும் "***" யாழ்கள முக்கியஸ்தகரின் மொழியில் சொல்வோமாயின் ....

இது எந்த ஊடகத்திலையும் வராதுங்க ** ஏனெண்டா கோத்தபாய ராஜபக்சா ****** நடத்திறவரை மட்டும் தனியா கூப்பிட்டு தான் இப்பிடித்தான் செய்யிறனான் எண்டு இரகசியத்தை சொன்னவர்இன்னொரு விடயம் தெரியுமா ******* நடத்திறவர்தான் போய் பயங்கர குகைக்குள்ளை புகுந்து வாள்சண்டையெல்லாம் போட்டு அங்கையிருந்த சிங்கத்தை கொலை செய்து அவரை மீட்டு வந்தவர் அதுவும் கடலுக்கள்ளாலை நீந்தியபடி ****** வரை வந்தவர். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமாயின் .... யாழ்களத்தில் "மின்னல்", "பறவைகள்", ... எனும் பெயர்களில் நடமாடும் "***" யாழ்கள முக்கியஸ்தகரின் மொழியில் சொல்வோமாயின் ....

இது எந்த ஊடகத்திலையும் வராதுங்க ** ஏனெண்டா கோத்தபாய ராஜபக்சா ****** நடத்திறவரை மட்டும் தனியா கூப்பிட்டு தான் இப்பிடித்தான் செய்யிறனான் எண்டு இரகசியத்தை சொன்னவர்இன்னொரு விடயம் தெரியுமா ******* நடத்திறவர்தான் போய் பயங்கர குகைக்குள்ளை புகுந்து வாள்சண்டையெல்லாம் போட்டு அங்கையிருந்த சிங்கத்தை கொலை செய்து அவரை மீட்டு வந்தவர் அதுவும் கடலுக்கள்ளாலை நீந்தியபடி ****** வரை வந்தவர். :P

இப்ப என்ன சொல்ல வாறீர் சிறீலங்கா ரானுவம் தமிழர்களின் பாதுகாப்புக்காகத்தான் யாழ்ப்பானத்தில் இருக்கு என்று சொல்லுறீரோ? இது வரை ஒரு கொலையும் செய்தது இல்லை என்று சொல்லுறீரோ? அப்ப ஒட்டுக்குழுக்களும் அதுக்குதான் இருக்குதோ? அப்ப அங்க கொலைகள் செயவது யார் என்று சொல்ல வாறீர்? :angry: :angry: :angry:

  • தொடங்கியவர்

சிங்களவங்கள் 2000 என்ன 20000 மேல் கொல்ல திட்டமிட்டிருப்பாங்கள்!! அதில் எந்த ஒரு சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை!! ஆனால் ....

.... உந்தப் பதிவிற்கு எங்கிருந்து உந்த உளவுத்தகவல் வந்தது!!! சிலவேளை கோதபாயவோடு நேரடித்தொடர்போ தெரியாது???????? இருக்கும்...... :P :P :unsure:

http://www.tamilnaatham.com/audio/2007/mar...na20070324.smil

யாரப்பா அந்த புத்தன் ?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்குடாமீது பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு யாழை சிங்கள காடையர்கள் கைப்பற்றியது எதற்கு? என்ன யாழ் மக்களை சீராட்டவா?

கொஞ்சம் கொஞ்சமாக கொல்லத்தானே!

யாழ்பாணத்தை இராணுவம் கைப்பற்றுவதற்கு முன்பு. காங்கேசன்துறையிலும் பலாலியிலும் சிறு இராணுவ முகாம்களே இருந்தன. ஆனாலும் அந்த முகாம்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தும் பலத்தில் புலிகள் இருக்கவில்லை இருப்பினும் இம்முகாம்களை சுற்றி பாரிய கவலரண்களை அமைத்து பாதுகாப்பாக இருந்தால் இராணுவத்தை வெளியேறவிடாமல் தடுக்க முடியுமெனவும் தயவு செய்து போதிய ஆட்கள் தட்டுபாடு கரணமாக காவலரண்களை பலபடத்த முடியாமல் இருப்பதாகவும். இளைஞர்களை தமது காவலரண்களை சீரமைக்க உதவுமாறும் கேட்டு கொண்டனர். ஆனால் ஒரு சிலரே அவ்வாறு சென்று உதவி செய்தார்கள் ஏனையோர் ஊதாசினப்படுத்திவிட்டு ஊர்சுற்றி திரிந்தனர். அதன் விளைவு 1996ம் ஆண்டு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் யாழை விட்டு வெளியேறினர்....... இந்த ஐந்து லட்சத்தில் வெறும் ஓரு ஆயிரம் இளைஞர்களுக்கு புலிகள் சொன்னது விளங்கியிருப்பின் இன்றைய யாழின் நிலை வேறாக இருக்கும். கடமைகளை நாம் ஊதாசினப்படுத்துவதன் பலன்களையே நாம் இப்போது அனுபவிக்கின்றோம். தொடர்ந்தும் ஊதாசினப்டுத்தினால் விளைவு படுகொலைதான். சற்றேனும் சிந்தித்தால்தான் செயற்பட்டால்தான் நாம் அதன் பலனை அனுபவிக்கலாம். அதைவிடுத்து விதைக்காத வயலில் விளையுமென காத்திருந்தால் பட்டினிதான்........ இதை யாரால் தடுக்க முடியும்? சமாதான காலத்தில் ஆதாவது 3வருடங்களுக்கு முன்பு நான் ஊர் சென்றிருந்தேன் அங்கே வீடுகள் கட்டுவதற்கும் கோயில் கட்டுவதற்கும் பலர் என்;னிடம் காசு கேட்டார்கள் இவர்கள் இராணுவகாவலரனில் இருந்து வெறும் 6கிலோமீற்றர் துரத்தில் இருந்ததால் நான் சொன்னேன் இது வெறும் வேலை தயவுசெய்து அதை உடனடியாக நிற்பாட்டுங்கள். புலிகளின் காவலரண்களை பலப்படுத்த வேண்டி ஒரு இக்கட்டான நிலையிலேயே நாமிருக்கிறோம். வாழ்வதற்கு ஏற்றவாறு வீட்டை சீரமைத்தல் தவிர்க்க முடியாதது அதை செய்யலாம் ஆடம்பரமாக வீட்டை கட்டுவது வீண்வேலை அதுவும் இப்போது கோயிலை கட்டுவதால் பாவமே வந்து சேருமென்றும்.

ஆனால் அவர்கள் என்னை ஒரு கஞ்சன் காசு தரமாட்டான் அதுதான் கதையளக்கிறான் என்று எள்ளிநகையாடினர். தொடர்ந்தும் தமது கோயிலை கட்டுவது வீட்டை ஆடம்பரமாக கட்டுவது என்று பிடியாய் இருந்தார்கள். ஆனால் இப்போது எனது ஊரில் யாருமில்லை எல்லோரும் இடம்பெயர்ந்து கிளிநொச்சியை அண்டிய பகுதியில் வாழ்கிறார்கள். அது பரவாயில்லை அவர்கள் கட்டியவையெல்லாம் செல்லடித்து உடைந்துவிட்டதாம் ரெலிபோனில் சோககதை சொல்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் இந்த சோககதைகளை இவர்ளே முன்பு தாமாக கட்டி கொண்டிருந்ததை நான் எனது கண்ணால் பார்த்து பரிதாபபட்டுவிட்டு வந்திருந்ததால் இப்போது எனக்கு வருத்தமாக தெரியவில்லை!

சணக்கியன் இதை வாசித்தால்........ என்னை கேட்கும் கேள்வி ஏன் நீர் புலிகளுடன் போய்சேர்ந்திருக்கலாம்....... ஏன் திரும்பி இங்கு வந்தேன் என்று?

எனது ஒரே பதில். கடமையை செய்யாவிடினும் பரவாயில்லை..... கடமையை செய்பவனை ஊதாசினப்படுத்தாதே என்பதே. வெள்ளம் வருமுன்பு அணைகட்டுவது பற்றி சிந்திக்க வேண்டியவன் அணைக்கு அருகில் இருப்பவனே அவனே அதை ஊதாசினப்படுத்தினால் உதவிசெய்ய விரும்புவனுக்கும் உபத்திரவபமே. அதை அவன் பொறுப்புடன் செய்தால் பர்ப்பவனுக்கும் ஒரு இரக்கம் வரும் ஊக்குவிக்க வேண்டுமென்ற ஒரு துடிப்புவரும்.

ஆகவே ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தமக்கு வரும் துன்பங்களை தடுக்க அணைகட்ட தொடங்கினால்தான் புலத்தில் வாழ்பர்கள் அதை ஊக்கிவிக்க முடியும் அந்த அணையும் ஒரு திடமானதுவாக உரம் பெறும் அதன் பலனை அனைவரும் அனுபவிக்க முடியும். அதைவிடுத்து எதிர்கால சிந்தனையே இல்லாதவனுக்கு காசை கொடுத்தால்..... அதை மடித்து கடதாசிதான் விளையாடுவான் என்பது என்னுடைய தனிபட்ட எண்ணம். தப்பெடின் எந்த வகையில் என அறிய ஆவலாய் உள்ளேன்!

தப்பெனில் எந்தவகையில் என அறிய ஆவலாய் உள்ளேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.