Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னுடைய தவறு, பொறுப்பேற்கிறேன்; பேஸ்புக் சிஇஓ மார்க் ஸுக்கர்பர்க் மன்னிப்பு

Featured Replies

என்னுடைய தவறு, பொறுப்பேற்கிறேன்; பேஸ்புக் சிஇஓ மார்க் ஸுக்கர்பர்க் மன்னிப்பு

 
mark

படம். | ஏ.பி.

கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா என்ற தேர்தல் உத்தி வகுப்பு தகவல் சேவை அமைப்பு உலகம் முழுதும் உள்ள பேஸ்புக் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை அனுமதியின்றி களவாடியது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் பேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஸுக்கர்பர்க் அமெரிக்க காங்கிரஸில் மன்னிப்பு கேட்கிறார்.

புதனன்று அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் பேசவிருப்பதன் எழுத்து வடிவத்தை ஹவுஸ் எனெர்ஜி அன்ட் காமர்ஸ் கமிட்டி வெளியிட்டுள்ளது.

“இப்படிப்பட்ட தகவல் களவுகளைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது தெளிவு. அதுவும் அந்தத் தகவல்கள் தவறான பயன்பாட்டுக்குச் செல்கிறது என்பதையும் நாங்கள் தடுக்கத் தவறிவிட்டோம். இது போலி செய்திகளுக்கும் பொருந்தும். எங்கள் பொறுப்புடைமை பற்றிய பரவலான பார்வையை நாங்கள் கொண்டிருக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது. இது ஒரு மிகப்பெரிய தவறு. இது என்னுடைய தவறு. நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் பேஸ்புக்கைத் தொடங்கினேன், நான் தான் நடத்துகிறேன், என்ன நடந்ததோ அதற்கு நானே முழு பொறுப்பேற்கிறேன்” என்று அதில் ஸுக்கர்பர்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு குறித்தும் எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி ஸுக்கர்பர்க் மன்னிப்புக் கோரியுள்ளார்.

மேலும் ஸுக்கர்பர்க் இவ்வாறு கூறலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களிடையே தொடர்பு ஏற்படுத்துவது மட்டும் போதாது. இந்தத் தொடர்புகள் நேரானதுதானா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மக்கள் குரல் கொடுப்பதுடன் பணி நிறைவடையவில்லை மாறாக அவர்கள் தங்கள் தகவல்களை பிறர் புண்படச் செய்யும் விதமாக பயன்படுத்துவதையும் தடுத்திருக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/world/article23494597.ece

 

தகவல் கசிந்த விவகாரம்: அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ஃபேஸ்புக் நிறுவனர் விளக்கம்

 
மார்க்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைகளுக்காகவும் பயன்படுத்த பார்க்கும் ரஷ்யர்களிடம் தொடர்ந்து போராடி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க், அமெரிக்க செனட்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் 87 மில்லியன் முகநூல் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் கசிந்த விவகாரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழு மார்கிடம் விசாரணை நடத்திய போது அவர் இதனை தெரிவித்தார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மார்க் சக்கர்பர்க் அமெரிக்க செனட்டர்களிடம் பதிலளித்தார்.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரித்து வரும் விசாரணையாளர் முல்லர், ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களை விசாரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அவர் தன்னை விசாரிக்கவில்லை என்றும் மார்க் தெரிவித்துள்ளார்.

"சிறப்பு விசாரணைக் குழுவுடன் நாங்கள் ஆற்றி வரும் பணியானது மிகவும் ரகசியமானது எனவே இங்கே நான் அதை சொல்ல விரும்பவில்லை" என்றார் மார்க்.

பிப்ரவரி மாதம் முல்லர், மூன்று ரஷ்ய நிறுவனங்களுடன் சேர்த்து 13 ரஷ்யர்கள், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக குற்றம் சாட்டினார்.

தற்போது தங்கள் நிறுவனம் போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் கருவிகளை உருவாக்குவதாக தெரிவித்தார் மார்க்.

"ரஷ்யாவில் இருக்கும் சிலரின் பணி நமது அமைப்பை தங்களது சுய நலத்துக்காகவும் தேவைகளுக்காகவும் பயன்படுத்தி கொள்வதுதான் நாம் அதை சரிசெய்வதற்கும் முதலீடு செய்ய வேண்டும்" என்றார் மார்க்.

சமூக ஊடகம் எவ்வாறு தீவிரமாக கண்காணிக்கப்படலாம் என அமெரிக்க செனேட்டர்கள் மார்க் சக்கர்பர்கிடம் கேள்விகளை கேட்டனர்.

http://www.bbc.com/tamil/global-43721546

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரத்தை மேற் கொண்டு நடத்த வேண்டுமே
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வியாபாரத்தை மேற் கொண்டு நடத்த வேண்டுமே
 

அவர் கடையை மூடினாலும் பாவனையாளர்கள் விடுவினமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அவர் கடையை மூடினாலும் பாவனையாளர்கள் விடுவினமோ?

சும்மா பகிடிக்கும் கதைக்காதேங்கோ.....பேஸ்புக்கை மூடினால் எங்கடை அருமை பெருமை அதுஇதுகளை காட்ட எங்கை போறது? :grin:

  • தொடங்கியவர்

தகவல் கசிந்த விவகாரம்: "எனது தரவுகளும் எடுக்கப்பட்டுள்ளன" - மார்க் சக்கர்பர்க்

அந்தரங்க தரவுகள் ரகசியமாக எடுக்கப்பட்டதில் தன்னுடைய தரவுகளும் அடங்கியுள்ளன என்று ஃபேஸ்புக்கின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பர்க் வெளிப்படுத்தியுள்ளார்.

சக்கர்பர்க்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரண்டாவது நாளாக வாஷிங்டன்னில் கேட்கப்பட்ட கேள்விகளின்போது, சக்கர்பர்க் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இன்னொரு முன்னேற்றமாக, இதில் ஈடுபட்டுள்ள அரசியல் ஆலோசனை நிறுவனத்தின் தற்காலிக தலைமை செயலதிகாரி பதவி இறங்குவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி தன்னுடைய நிறுவனம் ஆய்வு நடத்தி வருவதாகவும் சக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட தரவுகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்காக சேகரித்த ஆய்வாளர் இருக்கின்ற இடத்தில் இந்த நிறுவப்பட்டுள்ளது.

"இதுபோன்ற செல்பேசி மென்பொருட்களை வடிவமைக்கும் பிற ஆய்வாளர்கள் பலர் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தோடு மொத்த திட்டமும் தொடபுடையதாக உள்ளதை கண்டறிந்துள்ளோம்" என்று சக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார்.

ஃபேஸ்புக்படத்தின் காப்புரிமைDANIEL LEAL-OLIVAS/AFP/GETTY IMAGES

"எனவே, ஒட்டுமொத்தமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மோசமான செயல்கள் ஏதாவது நடைபெறுகிறதா என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இதற்கு எங்களிடம் இருந்து பலமான எதிர்வினை இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கான பதில் ஒன்றை தயாரித்து வருவதாக இந்தப் பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சுமார் மில்லியன் கண்க்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் 2015ம் ஆண்டு அழித்துவிட்டதை பரிசீலிக்க தவறிவிட்டதற்கு முன்னதாக சக்கர்பர்க் மன்னிப்பு கோரியிருந்தார்.

மாறாக, ஃபேஸ்புக் சமூக வலைதள விதிகளுக்கு எதிராக திரட்டப்பட்ட தரவுகளை இந்த அரசியல் ஆலோசனை நிறுவனமே அழித்துவிட்டதாக அதுவே சுயசான்று அளிக்க வேண்டுமென ஃபேஸ்புக் விட்டுள்ளது.

இந்த செல்பேசி மென்பொருள் வடிவமைப்பாளரான கோகான் மற்றும் கேம்பிரிட்ஜ் அனல்டிக்கா நிறுவனத்தோடு நடைபெற்றவை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என்று மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-43729650

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.