Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருவயதில் பிரிந்த தந்தையை தேடும் மகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29498011_1010817059069285_9075321088246916953_n-495x354.jpg

சிங்கப்பூரில் பெண் ஒருவரை மணந்து, குடும்பம் நடத்தி, ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி, ஒரு வயதாக மகள் இருக்கும் போது, தாயகம் போய் வருவதாக 1991ம் ஆண்டு இலங்கை சென்று திரும்பியே வராத தந்தையை தேடுகிறார் 28 வயது மகள், துர்கா கேசவ்.

யுத்தத்தில் மாண்டு போய் இருப்பார் என எண்ணி இருந்து, யுத்தம் முடிந்த பின்னர் தந்தையினை தேடி பல தகவல்களை திரட்டி உள்ளார் துர்கா.

27 ஆண்டுகளுக்கு முன் தன்னையும், தாயையும் விட்டுச்சென்ற, இன்று 60 வயது ஆகக் கூடிய இலங்கைத் தமிழரனான கனகசுந்தரம் சோமசுந்தரம்  பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்கிறார் துர்க்கா.

தனது தாயார் மறுமணம் செய்யவோ, வேறு யாருடனும் தொடர்பிலோ இல்லாமல், தந்தை நினைவுடனே தன்னை வளர்த்து எடுத்தார் என்கிறார் துர்க்கா. எமது பல கேள்விகளுக்கு தந்தை பதில் தர வேண்டி உள்ளது என்கிறார் அவர்.

அவர் வேலை செய்த இடத்தில், நடந்த விபத்தில், கையில் சில விரல்களை இழந்து மனமுடைந்த நிலையிலே இலங்கை திரும்பியிருந்தார் கனகசுந்தரம் சோமசுந்தரம்.

அவரது தம்பியும், தங்கை ஒருவரும், மடு தேவாலயத்தின் அண்மையாக பண்டி விரிச்சான் பகுதியில் இன்னமும் வாழ்கின்றனர் என துர்கா அறிந்து கொண்டுள்ளார்.

தான் எடுத்த பல முயற்சிகளின் காரணமாக, தனது தந்தை இறந்து போகவில்லை எனவும், வேறு திருமணம் செய்து, அதன் மூலம் தனக்கு அரை சகோதரங்கள் உள்ளனர் எனவும் அவர்கள் தன்னை ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் என்னை தம்முடன் பேசுமாறு கோரினாலும், தான் அவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்கிறார் துர்கா.

தான் தந்தையுடன் பேசியதாகவும், அவர் தனது தாய் அனுப்பிய கடிதங்களை வைத்திருப்பதாக சொன்னார் எனவும் சொல்கிறார் துர்கா. எனினும் தான் எங்கே இருக்கிறார் என சொல்லவில்லை என்கிறார் மகள் துர்கா.

ஆயினும் தனது தந்தை எந்த நாட்டில் இப்போது உள்ளார் என தெரியவில்லை என்கிறார் அவர். 1994-95 காலப்பகுதியில், தனது புதிய குடும்பத்துடன் கனடா அல்லது அவுஸ்திரேலியா சென்றிருக்க கூடும் என நினைக்கிறார் துர்கா.

தனது தந்தையிடம் இருந்து எதனையும் தான் எதிர்பாக்க வில்லை எனவும், அவரை சந்தித்து, தனக்கு கிடைக்காத தந்தையின் அன்பினை பெற விரும்புவதாகவும் சொல்கிறார் துர்கா.

இந்த படத்தில இருப்பவரை பார்த்தால் சொல்லுங்கப்பா... என்ன மனிதம்?

http://www.thesundayleader.lk/2018/04/08/girl-finds-missing-father/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Nathamuni said:

ஆயினும் தனது தந்தை எந்த நாட்டில் இப்போது உள்ளார் என தெரியவில்லை என்கிறார் அவர். 1994-95 காலப்பகுதியில், தனது புதிய குடும்பத்துடன் கனடா அல்லது அவுஸ்திரேலியா சென்றிருக்க கூடும் என நினைக்கிறார் துர்கா.

தனது தந்தையிடம் இருந்து எதனையும் தான் எதிர்பாக்க வில்லை எனவும், அவரை சந்தித்து, தனக்கு கிடைக்காத தந்தையின் அன்பினை பெற விரும்புவதாகவும் சொல்கிறார் துர்கா.

கனடா அவுஸ் சனங்கள் உங்கினேக்கை மைனரைக்கண்டால் அமுக்குங்கப்பா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கனடா அவுஸ் சனங்கள் உங்கினேக்கை மைனரைக்கண்டால் அமுக்குங்கப்பா...

சிங்கப்பூர்ல வேலை செய்த ஆக்கள் முன்னுக்கு வாங்கோ....

படமும் போட்டாச்சு.... தப்ப ஏலாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Nathamuni said:

சிங்கப்பூர்ல வேலை செய்த ஆக்கள் முன்னுக்கு வாங்கோ....

படமும் போட்டாச்சு.... தப்ப ஏலாது...

சிங்கப்பூரிலை வேலை செய்த எங்கடை ஆக்கள் எண்டால் கட்டாயம் எஞ்சினியர்மாராய்த்தானிருக்கும்....

மீசையை வழிச்சு....தலையையும் மாத்தியிழுத்துப்போட்டு சொக்கத்தங்கம் மாதிரி திரியப்படாது கண்டியளோ....

பெண்பாவம் பொல்லாதது....

சாத்திரம் சம்பிரதாயத்துக்காவது கலோ சொல்லுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

சிங்கப்பூரிலை வேலை செய்த எங்கடை ஆக்கள் எண்டால் கட்டாயம் எஞ்சினியர்மாராய்த்தானிருக்கும்....

மீசையை வழிச்சு....தலையையும் மாத்தியிழுத்துப்போட்டு சொக்கத்தங்கம் மாதிரி திரியப்படாது கண்டியளோ....

பெண்பாவம் பொல்லாதது....

சாத்திரம் சம்பிரதாயத்துக்காவது கலோ சொல்லுங்கோ.

சிங்கப்பூர்ல இருந்து இப்ப கனடாவில் இருக்கும் யாழ் கள ஆள் ஒராளை தெரியும்... நமக்கேன் பொல்லாப்பு....  :grin: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மனுசனப்பா அந்த ஆள்..? கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல்..??

கலியாணம் கட்டி பிள்ளையை பெத்துப்போட்டு ஓடிவந்து விட்டவரை மனுசனாக எண்ணத் தோன்றவில்லை..

இதில் இன்னொரு கலியாணம் குழந்தை குட்டிகள் வேறு.. கேவலம்..! tw_rage:

இவர்களெல்லாம் எதற்கு பூமிக்கு பாரமாய்..?

4 hours ago, Nathamuni said:

சிங்கப்பூர்ல இருந்து இப்ப கனடாவில் இருக்கும் யாழ் கள ஆள் ஒராளை தெரியும்... நமக்கேன் பொல்லாப்பு....  :grin: 

அவரே வார் அறுந்து, டங்கு டங்குன்னு அலுவலக வேலையில் மும்முரமாய் இருக்கிறார்..! :(:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.