Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் ஜே.வி.பி. 20 ஆம் திருத்­தத்தில் உள்­ள­டக்க வேண்டும்....ஜே.வி.பி.யுடன் கூட்­ட­மைப்பு பேச்­சு­வார்த்தை நடத்தும் என்­கிறார் சுமந்­திரன்

Featured Replies

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் ஜே.வி.பி. 20 ஆம் திருத்­தத்தில் உள்­ள­டக்க வேண்டும்

656-b3d066ad4ad6f56ef9b0ed66d17ca2e43eede970.jpg

 

ஜே.வி.பி.யுடன் கூட்­ட­மைப்பு பேச்­சு­வார்த்தை நடத்தும் என்­கிறார் சுமந்­திரன்

(ஆர்.யசி)

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­ மை­யை நீக்க வேண்டும் என்­பதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­டையே மாற்­றுக்­க­ருத்து இல்லை. எனி னும் ஜே.வி.பி தனியே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­ மையை இலக்கு வைக்­காது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வி­னையும் அதில் உள்­ள­டக்க வேண்டும்  என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.  

20ஆம் திருத்தம் குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மக்கள் விடு­தலை முன்­ன­ணியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­துடன் ஜே.வி.பி இணங்கும் பட்­சத்தில் பிர­ர­ணையை ஆத­ரிக்கும் அவர் குறிப்­பிட்டார்.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கும் வகையில் மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வ­ர­வுள்ள 20ஆம் அர­சியல் அமைப்பு திருத்தம் குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு தொடர்பில் வின­விய போதே கூட்­ட­மைப்­பினர் இதனைக் குறிப்­பிட்­டனர் . இது குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் எம்.எ.சுமந்­திரன் மேலும் குறிப்­பி­டு­கையில்

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வது என்­பது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் உறு­தி­யான நிலைப்­பாட்டில் ஒன்­றாகும். நிறை­வேற்று ஜன­தி­பதி முறை­மை­யினை நீக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் மாநா­டு­களில் நாம் தொடர்ச்­சி­யாக இந்த நிலை­பாட்­டினை சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­துடன் தீர்­மா­னங்­களும் நிறை­வேற்­றி­யுள்ளோம். ஆகவே எமது இந்த நிலைப்­பாட்டில் எந்த மாற்­றமும் இல்லை. அதேபோல் புதிய அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்­கப்­படும் நோக்­கத்தில் அதற்­கான பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இப்­போது அவை இடை நடுவே நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இதிலும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டு­வது என்­பது பிர­தான கார­ணி­யாக உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வும் மிக முக்­கிய விட­ய­மாக உள்­ளது. இந்த நாட்டின் மிக நீண்­ட­கால இனப்­பி­ரச்சி தீர்க்­கப்­பட வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மான விட­ய­மாகும்.

 1978 ஆண்டின் பின்னர் தான் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட வேண்டும் என்ற கருத்து நிலவ ஆரம்­பித்­தது. ஆனால் 1948ஆம் ஆண்டில் இருந்தே தேசிய இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு அவ­சியம் என்ற கோரிக்கை அதற்­கான போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதன் விளை­வாக இது­வ­ரையில் பல்­லா­யிரக் கணக்­கான உயிர்­களை இழக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை­மையும் உரு­வா­கி­யது. ஆகவே தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வே மிக முக்­கி­ய­மாக புதிய அர­சியல் அமைப்பில் உள்­ள­டக்­கப்­பட வேண்டும்.

  புதிய அர­சியல் அமைப்பு வரை­புகள் இடம்­பெற்­றுக்­கொண்­டுள்ள இந்த வேளையில் இவற்றில் ஒரு விட­யத்தை மாத்­திரம் கவ­னத்தில் கொள்ள முடி­யாது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை மாத்­திரம் அடை­யா­ள­ப­டுத்தி 20ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரு­வதை விடவும் பிர­தான கார­ணி­யான தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு குறித்தும் மக்கள் விடு­தலை முன்­னணி கவனம் செலுத்த வேண்டும். ஆகவே இவ்­வா­றான முயற்­சி­களில் நிறை­வேற்று முறை­மை­யினை நீக்­கு­வதை மாத்­திரம் இலக்கு வைத்து அர­சியல் அமைப்பு திருத்­த­மாக கொண்­டு­வர வேண்டாம் என்­பதை மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு நாம் வலி­யு­றுத்­துவோம். பிர­தான அனைத்து விட­யங்­க­ளையும் ஒன்று சேர்த்து கொண்­டு­வர வேண்டும் என்­பது தான் நாம் ஜே.வி.பி. யின­ருக்கு முன்­வைக்கும் கோரிக்­கை­யாகும்.

ஜே.வி.பி. நிறை­வேற்று முறை­மை­யினை ஒழிக்கும் தீர்­மா­னத்தை கொண்டு வந்­தாலும் அதனை நாங்கள் ஆத­ரித்­தாக வேண்டும். ஏனெனில் அதுவும் எமது கோரிக்­கை­களில் ஒன்­றாக உள்­ளது. எனினும் இந்த வாய்ப்­பு­களை சரி­யாக பயன்­ப­டுத்தி அதற்­க­மைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்­பதே எமது பிர­தான இலக்­காக இருக்க வேண்டும். ஜே.வி.பி கொண்­டு­வரும் 20 ஆம் திருத்த வரைபை பார்க்­க­வில்லை. அதன் உள்­ள­டக்கம் என்ன என்­பது குறித்து ஆரா­யவும் இல்லை. எனினும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அதன் பார­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் ஆரா­ய­வுள்­ளது. 7ஆம் திகதி பிற்­பகல் நாம் பாரா­ளு­மன்­றத்தில் கூட­வுள்ளோம். இதன்­போது நாம் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் 20 ஆம் திருத்தம் குறித்து கலந்­தா­லோ­சித்து அதனை ஆராய்­வதா என்­பது குறித்து சிந்­திக்­க­வுள்ளோம்.

 மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யு­டனும் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்­தையும் உள்­ள­டக்கி 20ஆம் திருத்த சட்­டத்தை கொண்­டு­வர வேண்டும் என்ற தெரி­விக்­க­வுள்ளோம். அதற்கு மக்கள் விடு­தலை முன்­னணி ஆத­ரவு தெரி­விக்­கா­த­வி­டத்து அல்­லது மாற்றுக் கருத்­துக்­களை முன்­வைக்­கு­மாயின் அதன் பின்னர் கூட்­ட­மைப்பும் சிந்­தித்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டர்.

இலங்கை தமி­ர­ழசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா எம்.பி இது குறித்து கூறு­கையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்குவது குறித்த 20ஆம் திருத்த சட்ட மூலம் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் அவர்களின் முழுமையான உள்ளடக்கம் என்ன என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நாம் இன்னும் ஆராய்ந்து பார்க்கவில்லை. எனினும் எதிர்வரும் 7ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இந்த பிரேரணை தொடர்பில் ஆராயவுள்ளது. அதன் பின்னர் பொருத்தமான ஒரு முடிவினை நாங்கள் முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-05#page-1

  • தொடங்கியவர்

தேசிய பிரச்சினைக்கான தீர்வுகள் 20 ஆம் திருத்தத்தில் உள்ளடக்கப்படாது

asass-0727beae389d5a95273e734cf56854c26769f62e.jpg

 

கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம் என்கிறது ஜே.வி.பி. 

(ஆர்.யசி)

மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வரும் 20ஆம் திருத்த யோச­னையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது என்ற காரணி மட்­டுமே உள்­ள­டக்­கப்­படும். அதற்கு அப்­பா­லான தேசிய பிரச்­சி­னைகள் குறித்து இதில் உள்­ள­டக்­கப்­படமாட்­டது என ஜே.வி.பி. தெரி­வித்­துள்­ளது.

20ஆம் திருத்­தத்தை நிறை­வேற்­று­வது குறித்து சகல கட்­சி­க­ளு­டனும் நாம் பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுக்கத் தயார். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பு­ட­னான பேச்­சு­வார்த்­தையில் எமது நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­துவோம் எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் வகையில் 20ஆம் திருத்த யோச­னையை மக்கள் விடு­தலை முன்­னணி இம்­மாதம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது குறித்த நகர்­வுகள் எவ்­வா­றா­னது என வின­வியபோதே அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வது என்ற நிலைப்­பாட்டில் அர­சாங்­கமும் எதிர்க்­கட்­சி­களும் சிவில் அமைப்­பு­களும் நாட்டு மக்களும் என ஒரு­ம­ன­தான நிலைப்­பாட்டில் உள்­ளனர். ஆக­வேதான் நாம் 20ஆம் திருத்த யோச­னை­யாக நிறை­வேற்று முறை­மை­யினை நீக்கும் யோச­னையை கொண்­டு­வ­ர­வுள்ளோம். எப்­போது கொண்­டு­வ­ரு­வது என்ற உறு­தி­யான திகதி ஒன்­றினை நாம் இன்னும் தீர்­மா­னிக்­க­வில்லை. எனினும் மே மாதத்­திற்குள் எமது யோச­னைகளை நாம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைப்போம். இந்த விடயம் குறி த்து சகல கட்­சி­க­ளு­டனும் சிவில் அமைப்­பு­க­ளு­டனும் நாம் பேச்­சு ­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­க­வுள் ளோம்.

நாம் கொண்­டு­வரும் 20 ஆம் திருத்த யோச­னையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக் கும் காரணி மட்­டுமே உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு அப்­பா­லான எந்த கார­ணி­க­ளையும் நாம் உள்­ள­டக்­க­வில்லை. தேசிய பிரச்­சி­னைகள் குறித்த தீர்­வு­க­ளையும் அதற்­கான நகர்­வு­க­ளையும் உள்­ள­டக்­கிய வகையில் 20ஆம் திருத்­தத்தை கொண்­டு­வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கோரிக்­கை­யினை முன்­வைத்­துள்ள போதிலும் எம்மால் அதனை செய்ய முடி­யாது.

தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு அவ­சி­ய­மான ஒன்­றாகும். அதனை நாம் மறுக்­க­வில்லை. எனினும் இப்­போ­துள்ள நிலையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்குவது மிகவும் அவ­சி­ய­மான ஒன்­றாகும். ஆகவே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை ­யினை நீக்­கி னால் அதன் பின்னர் ஜன­நா­யக ரீதி­யி­லான, தீர்­வுகள் குறித்து அனை­வரும் அமர்ந்து பேசக்­கூ­டிய சூழல் ஒன்று உரு­வாகும். அந்த சூழலில் தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்­வு­க­ளையும் நீண்­ட­கால அர­சியல் நெருக்­க­டிகள் குறித்து பேசி தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க முடியும்.

ஆகவே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எம்­முடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்கும் நிலையில் நாம் எமது இந்த நிலைப்­பாட்­டினை தெளி­வாக அவர்­களுக்கு எடுத்­து­ரைக்க முடியும். அதே போல் ஜனா­தி­பதி முறை­மையினை நீக்­கு­வது குறித்து சகல கட்­சி­களு­டனும் முன்னெடுக்கும் பேச்சு வார்த்தைகளில் சகலரதும் கருத்து க்களுக்கு அமைய திருத்தங்களை செய்யவும் நாம் தயாராக உள்ளோம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும். அதனை முன்னெடுக்க அனைத்து நகர்வுகளையும் நாம் கையாள் வோம் எனவும் அவர் குறிப்பிட் டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-05#page-2

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் ஜே.வி.பி. 20 ஆம் திருத்­தத்தில் உள்­ள­டக்க வேண்டும்

656-b3d066ad4ad6f56ef9b0ed66d17ca2e43eede970.jpg

 

ஜே.வி.பி.யுடன் கூட்­ட­மைப்பு பேச்­சு­வார்த்தை நடத்தும் என்­கிறார் சுமந்­திரன்

இலவு காத்த கிளிபோல் ஏமாறப்போகும் சுமந்திரன்.  

Bildergebnis für இலவம் பஞ்சு Bildergebnis für இலவம் பஞ்சு

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஜே.வி.பி. நிறை­வேற்று முறை­மை­யினை ஒழிக்கும் தீர்­மா­னத்தை கொண்டு வந்­தாலும் அதனை நாங்கள் ஆத­ரித்­தாக வேண்டும். ஏனெனில் அதுவும் எமது கோரிக்­கை­களில் ஒன்­றாக உள்­ளது. எனினும் இந்த வாய்ப்­பு­களை சரி­யாக பயன்­ப­டுத்தி அதற்­க­மைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்­பதே எமது பிர­தான இலக்­காக இருக்க வேண்டும்.

பேச்சுவார்த்தை நடாத்துவதில் பிரச்சனை இல்லை. ஜேவிபி அடிப்படையில் ஒரு இனவாத கட்சி. பிறகு கேட்க கூடாது எது இனவாத கட்சி இல்லை என??
சில வேளைகளில் பொது எதிரியை வீழ்த்த  சமரச முடிவுக்கு வரலாம். ஆனால் தமிழர்களுடன் இப்படியான முடிவுகளுக்கு வந்த சிங்கள அரசியல் கட்சிகள் இல்லை என்றே கூறலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.