Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு கவலையளிக்கிறது – முதலமைச்சர்

Featured Replies

பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு கவலையளிக்கிறது – முதலமைச்சர்

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருகின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று (புதன்கிழமை) கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்புவிடுத்திருந்தார். எனினும் முதலமைச்சரின் அழைப்பை ஏற்பதில்லை எனவும் கலந்துரையாடலில் பங்கேற்பதில்லை எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்தது.

இதுதொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் துரதிஷ்டவசமாக இன்றைய கலந்துரையாடலுக்கு வரவில்லை. இது எங்களுக்கு மிகவும் மன வருத்தத்தைத் தருகின்றது. மாணவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பல்கலைக்கழகத்தினூடாக வந்தவர்கள் தான் நாங்களும். ஆகவே அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

ஏதோ சில பிழையான கருத்துக்கள் அவர்களை ஆட்டிப்படைப்பதாக நான் நினைக்கின்றேன். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தும் எண்ணம் அவர்களுக்கு இருக்கின்றது என்றால், முதலில் எம்முடன் வந்து கலந்தாலோசித்திருக்கலாம். 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்னர் வந்து, இவ்வாறு நாம் செய்யவுள்ளோம். எங்களுக்கு செய்வதற்கு பிரியமாகவுள்ளது எனக் கூறியிருக்கலாம். எங்களுடைய உறுப்பினர்களையும் சேர்த்து அவர்களுடன் பேசி, நாங்கள் அதனைக் கொண்டு நடத்தியிருக்கலாம்.

ஆனால் “நாங்கள் செய்யப்போகின்றோம் எல்லோரும் வந்து சேருங்கள்” என்று அவர்கள் கூறியது வருத்தப்படவேண்டிய செயல். ஏனெனில் ஒவ்வொருவரும் வந்து சொல்லலாம், நாங்கள் செய்கின்றோம் – நீங்கள் வந்து சேருங்கள் என்று.

உத்தியோகபூர்வமாகத்தான் நாம் இந்த விடயத்தில் உள்நுழைந்துள்ளோம். 3 வருடங்களாக செய்து வந்துள்ளோம் – அதனை முன்னெடுக்கும் காணி எமது அமைச்சின் கீழ் வருகின்றது. மாகாணத்தின் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையில் எமக்கு அந்த உரித்து இருக்கின்றது. ஆகவே நாங்கள் உத்தியோகபூர்வமாக எமது கடமைகளைச் செய்துகொண்டிருக்கின்றோம்.

எனவே இதில் ஏதாவது திருத்தங்கள் செய்யவேண்டுமாயின் பல்கலைக்கழக மாணவர்கள் எம்முடன் வந்து பேசியிருக்கவேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாதது எமக்கு மன வருத்தமாக உள்ளது – என்று தெரிவித்தார்.

http://athavannews.com/?p=669427-பல்கலைக்கழக-மாணவர்களின்-செயற்பாடு-கவலையளிக்கிறது-–-முதலமைச்சர்

 

 

முதன்மைச் சுடரை முதலமைச்சர் ஏற்றமாட்டார் – துளசி

 

Mullivaikkal.jpg

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மைச் சுடரை போரில் உறவுகளை இழந்தவர்கள் சார்பில் ஒருவரே ஏற்றிவைப்பார் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் துளசி தெரிவித்தார். அதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாணசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பொது மக்களின் சார்பில் பொதுப் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

வடக்கு மாகாண சபையால் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் முதன்மைச் சுடரை வடக்கு மாகாண முதலமைச்சரே ஏற்றிவைத்தார். ஏனைய சுடர்களையே போரில் உறுவுகளை இழந்த மக்கள் ஏற்றிவைத்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மைச் சுடரை போரில் உறவுகளை இழந்தவர்கள் சார்பில் தாயார் ஒருவரே ஏற்றிவைப்பார் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/?p=669511-முதன்மைச்-சுடரை-முதலமைச்சர்-ஏற்றமாட்டார்-–-துளசி

 

 

இழப்பைச் சந்தித்த மண்ணில் பிரிவினைவாதம் வேண்டாம்: யாழ். மாணவர்கள்

 

வடக்கு மாகாண சபையின் தலைமையில் கடந்த மூன்று வருடங்களில் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது, பிரிவினைவாத செயற்பாடுகள் இடம்பெற்றதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இழப்பைச் சந்தித்த அந்த மண்ணில் இம்முறையும் அவ்வாறான சம்பவங்கள் நடந்தேறக்கூடாது என்பதற்காகவே குறித்த நிகழ்வை நடத்துவதற்கான அனுமதியை கோருவதாக ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக வடக்கு மாகாண சபை இன்று (புதன்கிழமை) நடத்தும் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், மாணவர்கள் இந்த சந்திப்பை புறக்கணித்துள்ளனர். இது குறித்து எமது ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமீனன் மேற்குறித்த விடயத்தைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை இந்நிகழ்வை நடத்தினால் அதில் அரசியல் கலந்திருக்குமென தெரிவித்த கிருஷ்ணமீனன், கடந்த காலங்களைப் போன்று மக்கள் அசௌகரியங்களை சந்திக்கக் கூடாதென்பதற்காகவே தம்மிடம் குறித்த நிகழ்வை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்குமாறு கோரியதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், வடக்கு மாகாண சபை தமது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை நடத்தும் பொறுப்பை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த நிகழ்வில் மக்களோடு மக்களாக அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளலாமென அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/?p=669236-இழப்பைச்-சந்தித்த-மண்ணில்-பிரிவினைவாதம்-வேண்டாம்:-யாழ்.-மாணவர்கள்

 

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – முதலமைச்சர்- மாணவர் ஒன்றியம் இழுபறி

 

mullivaykkal-300x200.jpgஎதிர்வரும் 18ஆம் நாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பாக, வடக்கு மாகாணசபையும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், விடாப்பிடியான நிலைப்பாடுகளில் இருப்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தாமே இம்முறை ஒழுங்குபடுத்தி நடத்தப் போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்திருந்தது.

எனினும், கடந்த மூன்று ஆண்டுகளாக நி்னைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்தி  நடத்தி வரும் வடக்கு மாகாணசபை, இம்முறையும் தாமே நிகழ்வை நடத்தப் போவதாகவும், இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்  தொடர்பான  கலந்துரையாடலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்ளாமை மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

“பல்கலைக்கழக மாணவர்கள் எமக்கெதிரானவர்கள் அல்ல. ஆனால், தவறான பல கருத்துக்களால் மாணவர்கள் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை நினைவுகூருவதற்கான எண்ணம் மாணவர்கள் மத்தியில் இருந்திருந்தால், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் எம்முடன் கலந்தாலேசித்திருக்கலாம்.

அவ்வாறு செய்யாமல், நாங்கள் தான் நிகழ்வை செய்யப்போகின்றோம் எங்களுடன் நீங்கள் கலந்கொள்ளுங்கள் என்று கேட்பது வருத்தப்பட வேண்டிய ஒரு செயல்.

ஒவ்வொருவரும் நாங்கள் செய்கின்றோம் எங்களுடன் கலந்து கொள்ளுங்கள் என்று கேட்டால் அவ்வாறு நாங்கள் செய்ய முடியாது. அதிகாரபூர்வமாக  ஒன்றைத் தான் செய்ய முடியும்.

கடந்த 3 ஆண்டுகளாக செய்து வருகிறோம். அதன் காணி எமது அமைச்சின் கீழ் வருகிறது. வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதனால், மக்களின் பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க வேண்டிய உரித்து எமக்கு உள்ளது.

அதிகாரபூர்வமாக எமது கடமைகளைச் செய்து வருகின்றோம். இதில் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் எம்முடன் முற்கூட்டியே கலந்தாலோசித்து செயற்படுத்தியிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், எமது கலந்துரையாடலிலும் கலந்துகொள்ளாமல் இருந்தமை மனவருத்தத்தைத் தருகின்றது.

தனியாக செய்யாமல் அனைவரும் இணைந்து செய்வது உசிதம்.

பல்கலைக்கழக மாணவர்கள் எமக்கு எதிரானவர்களும் அல்ல. நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்களும் அல்ல. எம்முடன் இணைந்து நினைவுநாள்  நிகழ்வில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவற்றை நடைமுறைப்படுத்த உதவி புரிய வேண்டும்.

எம்முடன் இணைந்து நினைவுகூரல் நிகழவை முன்னெடுக்க வேண்டும்,” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தரப்பில் இருந்து இதற்கு எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

http://www.puthinappalakai.net/2018/05/10/news/30783

நீங்கள்/உங்களை சார்ந்தவர்கள் அழுத்தம் கொடுத்து பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தை தடுக்காமல் விட்டிருந்தால்,  அவர்கள் தங்களின் அஞ்சலி நிகழ்வை அங்கேயே நடாத்தி இருப்பார்கள். 

இப்போ நிகழ்வு நடக்கும் இடம் யாருக்கு சொந்தம் என்று சட்டங்களை கதைக்கும் நீங்கள், அங்கு மாவீரரானவர்கள் யாருக்கு சொந்தம் என்று என்றாவது நினைத்ததுண்டா.??

அவர்களின் கனவை நனவாக்க மாகாண சபை அதிகாரத்தை வைத்து இதுவரை என்ன செய்தீர்கள்.

அங்கு களமாடி தோழர்களை/தோழிகளை இழந்து அவையவங்களை இழந்து இன்று சமுதாயத்தோடு இணைய முடியாமல் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு என்ன செய்தீர்கள்?

”இரும்படிக்கும் இடத்தில் இலையானுக்கு என்ன வேலை”

வடக்கு மாகாணசபை ஒரு கையேலாத அமைப்பு. தானும் படான் தள்ளியும் படான் எண்டமாதிரி, யாழ் பல்கலையில் கட்டிக்கொண்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை தமது சுயநலத்துக்காக தடுத்த கூட்டம்தான் வடக்கு மாகாணசபை மற்றும் தமிழ் MPகள். இப்ப தங்களுடன் பல்கலை மாணவர்கள் சேரவில்லை எண்டு கூச்சல் வேறு. என்னத்த சொல்ல எல்லாம் தலைவிதி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.