Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரன் கரிகாலனின் மனைவிக்கு சுயதொழில் ஊக்குவிப்புக்காக தையல் இயந்திரம் வழங்கிவைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்க மாவீரர்களில் ஒருவரான கரிகாலன் என்று அழைக்கப்படும் பாலமுரளியின் உடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுகின்ற வகையில் அவரின் மனைவி சர்மிளாதேவிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியால் சுய தொழில் முயற்சிக்காக தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

கரிகாலனின் விதவை மனைவி சர்மிளாதேவி அவரின் குழந்தையுடன் மூளாய், காளி கோவிலடியில் மிகுந்த வறுமையில் வாழ்கின்றார். இவரின் கஷ்ட நிலை குறித்து அறிந்த ஜனநாயக போராளிகள் நேரில் சென்று விசாரித்து ஆறுதல் சொன்னார்கள்.

இவர் தையல் வேலைகளில் கை தேர்ந்தவராக இருப்பதால் இவரின் வாழ்வாதார மேம்பாட்டு சுய தொழில் முயற்சிக்காக தையல் இயந்திரம் ஒன்றை வழங்கி வைக்குமாறு ஜனநாயக போராளிகளிடம் இவர் கோரிக்கை விடுத்தார்.

இவரிடம் ஒரு தையல் இயந்திரம்கூட இல்லாத நிலையில் இவரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுகின்ற வகையில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தனால் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை தையல் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது.

மேலும் மிகுந்த கஷ்டத்தில் வாழ்கின்ற முன்னாள் போராளி ஒருவரின் வாழ்வாதார முன்னேற்றத்துக்காக 50000 ரூபாய் சகாய நிதியையும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் வழங்கி வைத்தார்.

இவ்வைபவங்களில் விசேட அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

IMG_1797.jpg

https://www.tamilcnn.lk/archives/759907.html

இவனுகள் இன்னமும் தையல் மிஷின் கலாச்சாரத்தில் இருந்து  வெளிவரவில்லையா........?

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

பினாமிகள் எல்லாம் புலம்பெயர் நாடுகளில் "குடியும்" குடித்தனமுமாகி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழும்போது உயிரைக்கொடுத்த போராளியின் குடும்பத்தை காப்பாற்ற தையல் மெசின் என்ன தையில் ஊசியே போதும். ஒன்றில் பனையோலை சிரட்டையில் அலங்காரப்பொருள் அல்லது பூச்செடிகள்  கோழி ஆடு மாடு வளர்ப்பது இப்போது தையல் மெசின் இதை வெச்சி உற்பத்தியிலை ஜப்பானோடை போட்டி போடலாம் எண்ட நினைப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.