Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்கைப்பிரகடனமும் யதார்த்த நிலையும்!

Featured Replies

கொள்கைப்பிரகடனமும் யதார்த்த நிலையும்!

 

ஓர் ஆட்சி மாற்­றத்தின் ஊடாக உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அர­சியல் ஸ்திரத்­தன்மை ஆட்டம் கண்­டி­ருப்­பது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது. அர­சியல் ஸ்திரத்­தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது மிகவும் முக்­கியம். உறு­தி­யான அர­சியல் நிலைமை இல்­லாமல் ஆட்­சியைக் கொண்டு நடத்­து­வது என்­பது கடி­ன­மான காரியம். 

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளான இரண்டு அர­சியல் கட்­சி­களும் பலப்­ப­ரீட்­சைக்­கான மோதல்­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றன. தனித்து ஆட்­சியை நடத்­து­வதா? அல்­லது இணைந்து செயற்­ப­டு­வதா என்­பதில் இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் முடிவு காண முடி­ய­வில்லை. அதி­கா­ரத்தைத் தொடர்­வ­தற்­கான போராட்டம் அர­சியல் இருப்­புக்­கான போராட்டமாக விஸ்­வ­ரூபம் எடுத்­துள்­ளது.

ஊழல் செயற்­பா­டு­களை இல்­லாமல் செய்து, சட்ட ஆட்­சியை நிலை­நி­றுத்தி ஜன­நா­ய­கத்தை மேம்­ப­டுத்தி, நீண்­ட­காலம் இழு­பறி நிலையில் உள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண வேண்டும் என்ற நோக்­கத்­துடன் உரு­வாக்­கப்­பட்ட புதிய ஆட்சி, அதன் மூன்­றாண்டு காலத்­தி­லேயே அல்­லாடத் தொடங்­கி­விட்­டது. அதன் ஆட்சிக் காலம் முடி­வ­டைய இன்னும் ஒன்­றரை வரு­டங்­களே இருக்­கின்­றன. இந்த எஞ்­சிய காலத்தில் எவ்­வாறு அர­சாங்­கத்தைக் கொண்டு நடத்­து­வது என்­பது குறித்த ஜனா­தி­ப­தியின்,பாராளு­மன்றக் கொள்கைப் பிர­க­டனம் நாட்டு மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஊட்­டு­வ­தாக அமை­ய­வில்லை. 

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­த­பின்னர் நாட்டில் ஊழல்கள் மலிந்­தன. எதேச்­ச­தி­கா­ரத்­துக்­காக ஜனா­தி­பதி ஆட்சி முறை தீவி­ர­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. சவால்­க­ளுக்கு உட்­ப­டுத்த முடி­யாத நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் மேலும் வலுப்­ப­டுத்­தப்­பட்­டன. யுத்த மோதல்கள் கார­ண­மாக நலிந்­தி­ருந்த நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சிப் பாதையில் வேகம் கொண்­டி­ருந்­தது. இத்­த­கைய ஓர் அர­சியல் சூழ­லி­லேயே ஆட்சி மாற்றம் நிகழ்ந்­தது. ஆயினும், நல்­லாட்­சிக்­காக உரு­வாக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­பட்ட புதிய அர­சாங்கம் நல்­லாட்­சியை வெற்­றி­க­ர­மாக நடத்த முடி­யாமல் நடு­வ­ழியில் நிலை­த­டு­மாறி தவிக்­கின்­றது. 

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முத­லா­வது பாரா­ளு­மன்ற அமர்வுத் தொடர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, அதன் இரண்­டா­வது தொடர் அமர்வு, ஜனா­தி­ப­தி­யினால் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்­தலின் போது மக்­க­ளுக்கு அளித்த ஆணை­களை அர­சாங்கம் நிறை­வேற்­ற­வில்லை. காலத்தை இழுத்­த­டிப்­ப­தி­லேயே நோக்­க­மாகக் கொண்­டி­ருக்­கின்­றது. ஜன­நா­யகம் நிலை­நி­றுத்­தப்­பட்ட போதிலும், ஊழல்கள் ஒழிக்­கப்­ப­ட­வில்லை. ஊழல் புரிந்­த­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு, நீதி வழங்­கப்­ப­ட­வில்லை என்ற குறை­பா­டுகள், பொது­வாக நாட்டு மக்கள் மனங்­களில் மேலோங்­கி­யி­ருந்­தன. 

இனிப்­பான பேச்­சுக்கள்

ஏமாற்றம் தரும் போக்கு 

யுத்தம் மூள்­வ­தற்கு மூல கார­ண­மாக விளங்கும் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் எரியும் பிரச்­சி­னைகள் பல­வற்றை புதிய அர­சாங்கம் தீர்த்து வைக்கும், பெரும்­பான்மை இன மக்­க­ளுடன் சம­மான உரி­மை­க­ளுடன் ஒற்­று­மை­யாக சக­வாழ்வு வாழ முடியும் என்று நம்பி இருந்த சிறு­பான்மை தேசிய இன­மா­கிய தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களும் நிறை­வே­ற­வில்லை. மாறாக அவர்­களின் நாளாந்தப் பிரச்­சி­னைகள் மேலும் மேலும் அதி­க­ரித்துச் செல்­வ­தற்கே அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் துணை­பு­ரி­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன என்ற மன உணர்­வுக்கு அவர்கள் ஆளாக நேர்ந்­துள்­ளது. இந்த நிலையில் ஜனா­தி­ப­தியின் கொள்கைப் பிர­க­டன உரை பெரும் ஏமாற்­றத்­தையே அளித்­தி­ருக்­கின்­றது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கடந்த மூன்று ஆண்டு காலப்­ப­கு­தியில் கவர்ச்­சி­க­ர­மான வாக்­கு­று­திகள் நிறைந்த இனிப்­பான பேச்­சுக்­க­ளையே அரச தலை­வ­ரி­ட­மி­ருந்தும், பிர­தமர் உள்­ளிட்ட அமைச்­சர்­க­ளி­ட­மி­ருந்தும் வெளிப்பட்­டி­ருக்­கின்­றன. ஆனால் ஊழல்­களை ஒழிப்போம், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பேணி, நீதியை நிலை­நாட்­டுவோம் என்ற தேர்தல் காலத்து ஆணை உள்­ளிட்ட உறுதிமொழிகள் முறை­யாக நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. 

ஊழல் புரிந்­த­வர்­களும் முறை­கே­டான செயற்­பா­டு­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்­களும் தண்­டனை பெறு­வதில் இருந்து தப்பி இருப்­ப­தற்­கான தண்­டனை விலக்­கீட்டுக் கலா­சா­ரமே புதிய அர­சாங்­கத்­திலும் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. முன்­னைய அர­சாங்­கத்தில் முறை­கே­டாகச் செயற்­பட்­ட­வர்­களும் அவற்­றுக்குப் பொறுப்­பா­ன­வர்­களும் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை.மாறாக அவர்கள் அதி­கார பலத்தின் ஊடாக வெளிப்­ப­டை­யா­கவே பாது­காக்­கப்­பட்­டார்கள்.அதி­கார பாது­காப்பின் நிழலில் அவர்கள் தொடர்ந்து செயற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உரு­வா­கி­யி­ருந்­தன. 

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அத்­த­கைய வெளிப்­ப­டை­யான செயற்­பா­டுகள் குறைந்­தி­ருக்­கின்ற போதிலும், ஊழல்கள் குறை­வ­டை­வ­தற்­கான அறி­கு­றி­களை காண முடி­ய­வில்லை. புதிய ஆட்­சியின் கீழேயும் ஊழல்கள் குறித்து பல முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. பெருந்­தொ­கை­யான அரச நிதி மோசடி செய்­யப்­பட்­டி­ருப்­பது குறித்த தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. மோசடி செய்­த­வர்கள் பற்­றிய தக­வல்­களும் பகி­ரங்­க­மாக வெளி­யாகி பெரும் பர­ப­ரப்பும் ஏற்­பட்­டி­ருந்­தது. 

இலஞ்சம், ஊழல் மற்றும் நிதி மோச­டிகள் தொடர்­பாக பலர் இலஞ்ச ஊழல்­களை விசா­ரணை செய்யும் ஆணைக்­கு­ழு­வி­னரால் விசா­ரணை செய்­யப்­பட்­டார்கள். அந்த விசா­ரணை அறிக்­கை­களில் பெருந்­தொ­கை­யான அரச நிதி மோசடி செய்­யப்­பட்­டி­ருப்­பது பற்­றிய தக­வல்கள் அதிர்ச்­சி­ய­ளிக்கும் வகையில் வெளி­யா­கி­யி­ருந்­தன. விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பலர் கைது செய்­யப்­பட்டு பின்னர் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். நிதி­மோ­ச­டிகள் தொடர்­பான பல விசா­ர­ணை­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது பற்­றிய வெளிப்­ப­டைத்­தன்மை காணப்­ப­ட­வில்லை. 

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் மூன்று முக்­கிய குறிக்­கோள்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட15 வேலைத்­திட்­டங்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இரண்­டா­வது பாரா­ளு­மன்ற அமர்வின் கொள்கைப் பிர­க­ட­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

அதன்­படி, துரித பொரு­ளா­தார வளர்ச்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு, இலங்­கையை அனைத்து துறை­க­ளிலும் வளர்ச்சி பெறச் செய்­வது அர­சாங்­கத்தின் முத­லா­வது கொள்கை. அர­சியல் ஸ்திரத்­தன்­மைக்­காக தேசிய மற்றும் மத நல்­லி­ணக்­கத்தைப் பெற்­றுக்­கொள்­வது இரண்­டா­வது கொள்­கை­யாகும். ஊழல் மற்றும் மோச­டி­க­ளற்ற செயல்­வினை மிக்க அரச தந்­தி­ரத்தை உரு­வாக்­கு­வது மூன்­றா­வது குறிக்­கோ­ளாகும். 'எனது ஆட்­சிக்­கா­லத்­திற்குள் மேற்­கு­றிப்­பிட்ட வெற்­றி­களைப் பெறு­வதே எனது ஒரே எண்­ண­மாகும்' என்று ஜனா­தி­பதி தனது கொள்கைப் பிர­க­ட­னத்தில் கூறி­யுள்ளார்.

பிரச்­சி­னை­களை

தீர்ப்­ப­தற்­கான 15 விட­யங்கள்

மக்­களின் பொரு­ளா­தார சுபீட்சம், வறுமை ஒழிப்பு, இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு, அரச பணி­யா­ளர்­க­ளுக்குத் திருப்­தி­க­ர­மான சூழல் என்­ப­வற்றை ஏற்­ப­டுத்­து­வ­துடன், பொலிஸ் மற்றும் முப்­ப­டை­யி­னரின் தன்­னம்­பிக்­கை­யையும், உயர் குறிக்­கோ­ளையும் உறு­திப்­ப­டுத்தல், சட்டம், அதி­காரம், ஜன­நா­யகம், மனித உரிமை மற்றும் பேச்சு சுதந்­தி­ரத்தை உறுதி செய்தல், தமிழ் மக்­களின் சம உரிமை அடிப்­ப­டை­யி­லான அபி­லா­சை­களை ஏற்­றுக்­கொள்­வது, முஸ்லிம் மக்­களின் சமூக, கலா­சார தேவை­களை உறுதி செய்தல், மலை­யக மக்­களின் பொரு­ளா­தார, சமூக நிலையை மேம்­ப­டுத்தல், பெரும்­பான்­மை­யி­ன­ரா­கிய சிங்­கள மக்­களின் கலா­சார உரி­மை­களை பலப்­ப­டுத்தி உறுதி செய்து தேசத்தின் அடை­யா­ளத்தை வலுப்­ப­டுத்தல், பெண்­களின் நேரடி பங்­க­ளிப்­புக்­காக அவர்­களைப் பலப்­ப­டுத்தல், விசேட தேவையுடை­ய­வர்­க­ளுக்­கான உணர்­வு­பூர்வச் செயற்­பாடு, இயற்கை சூழலைப் பாது­காக்கும் தேசிய வளங்­களின் அபி­வி­ருத்தி, சமய நம்­பிக்­கை­க­ளையும், மர­பு­ரி­மை­க­ளையும் பாது­காக்க, சமயப் பெரி­யார்­க­ளையும் மத­கு­ரு­மார்­க­ளையும், மகா சங்­கத்­தி­ன­ரையும் போஷித்தல், தேசிய அபி­வி­ருத்­திக்­காக, அர­சியல் பலப்­ப­ரீட்­சைக்கு அப்பால், சகல அர­சியல் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்தல் ஆகிய விட­யங்­களை உள்­ள­டக்­கிய 15 வேலைத்­திட்­டங்­களே ஜனா­தி­ப­தி­யினால் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. 

அர­சாங்­கத்தின் மீத­முள்ள ஆட்சிக் கால­மா­கிய ஒன்­றரை வரு­டங்­களில் இந்த வேலைத்­திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்­பதே ஜனா­தி­பதி வெளி­யிட்­டுள்ள பிர­க­ட­னத்தின் சாராம்­ச­மாகும்.

ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வது, ஊழல்­களை ஒழித்து நீதியை நிலை­நாட்­டு­வது, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்டு நாட்டில் இன நல்­லி­ணக்­கத்­தையும் ஐக்­கி­யத்­தையும் உரு­வாக்கி நல்­லாட்சி நடத்­து­வது என்ற முன்­னைய கொள்கை நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை என குறிப்­பிட்­டி­ருந்­தா­லும்­கூட, அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியின் மூலம் தீர்வு காண்­கின்ற மூலோ­பாயம் இப்­போது ஜனா­திபதியினால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 

யுத்­தத்­தினால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் நாளுக்கு நாள் பல்கிப் பெருகிக் கொண்­டி­ருக்­கின்­றன. பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்டு, அவற்றைப் படிப்­ப­டி­யாகக் குறைத்து நீடித்த நிலை­யான அர­சியல் உறு­திப்­பாட்­டிற்­காக இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணு­கின்ற வழி­மு­றைகள் கைவி­டப்­பட்­டுள்­ள­தான ஒரு தோற்­றத்­தையே பாரா­ளு­மன்­றத்தின் இரண்­டா­வது செய­ல­மர்வுத் தொட­ருக்­கான பிர­க­டனம் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

ஊழல்கள் ஒழிக்­கப்­ப­டா­மையும், ஊழல், உரிமை மீறல், இன, மத­வாதச் செயற்­பா­டுகள் உள்­ளிட்ட மக்கள் நலன்­க­ளுக்குப் பாத­க­மான செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­களைக் கண்­ட­றிந்து நீதியை நிலை­நாட்­டு­கின்ற செயற்­பா­டுகள் பல­வீ­ன­மா­கவே இருக்­கின்­றன. நாட்டில் நீதித்­து­றைக்­கான கட்­ட­மைப்பு செயற்­பட்டு வரு­கின்ற போதிலும் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் முறை­யாகப் பேணி, நீதியை நிலை­நாட்­டு­கின்ற செயற்­பா­டுகள் வல்­லமை குறைந்­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றன. 

ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­து­வ­தா­கவும் அதனை மேம்­ப­டுத்­து­வ­தா­கவும் அரசு கூறி­னாலும், ஜன­நா­ய­கத்தின் அடிப்­படை அம்­ச­மா­கிய மனித உரிமை மீறல்கள் பல்­வேறு வடி­வங்­களில் தொடர்­கின்­றன. இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளுக்­கான பொறுப்பு கூறு­கின்ற சர்­வ­தேச கடப்­பாட்டை நிறை­வேற்­று­வதில் உளப்­பூர்­வ­மான ஆர்­வத்தைக் காண முடி­ய­வில்லை. வெறு­மனே கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. நலிந்து போயுள்ள நாட்டின் பொரு­ளா­தா­ரத்தைத் தூக்கி நிமிர்த்தும் நோக்­கத்­திற்­காக சர்­வ­தேச பொரு­ளா­தார உதவி நலன்­களைப் பேணு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களே முதன்மை பெற்­றி­ருக்­கின்­றன. 

நாட்டு மக்­க­ளி­டையே ஐக்­கி­யத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள், பொரு­ளா­தார நலன்­க­ளுக்­காக சர்­வ­தேச மட்­டத்தில் சந்­தைப்­ப­டுத்­து­கின்ற ஓர் அர­சியல் இரா­ஜ­தந்­திரச் செயற்­பாடே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு அமை­வாக உறுதிமொழிகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. பொறுப்­புக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அந்த வகை­யி­லேயே ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின் தீர்­மா­னங்­க­ளுக்கு இணை அனு­ச­ரணை வழங்­கப்­பட்­டது. ஆனால் அவற்றை நிறை­வேற்­று­வதில் காலம் தாழ்த்தும் போக்­கி­லான திசை­மா­றிய நட­வ­டிக்­கை­களே முதன்மை பெற்று வரு­கின்­றன.

இத்­த­கைய செயற்­பாட்டு நிரலின் கீழேயே பாரா­ளு­மன்­றத்தின் இரண்­டா­வது தொடர் செய­ல­மர்­வுக்­கான விட­யங்கள் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அர­சியல் ரீதி­யாக அணு­கப்­பட்டு, தீர்வு காணப்­பட வேண்­டிய விட­யங்­க­ளுக்கு, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியின் மூலம் முடிவு காண்­ப­தற்­கான தந்­தி­ரோ­பாயம் பதி­லீடு செய்­யப்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

முதன்மை பெறாத

அர­சியல் ஸ்திரத்­தன்மை

நாட்டில் அர­சியல் ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்­து­வதும், அதனை உறு­திப்­ப­டுத்­து­வதும் முதன்மை பெற்­றி­ருக்க வேண்டும். அர­சியல் ஸ்திரத்­தன்மை இல்­லையேல் எந்­த­வொரு காரி­யத்­தையும் முன்­னெ­டுக்க முடி­யாது. "சுவர் இருந்­தால்தான் சித்­திரம் கீற முடியும்". பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யென்­றா­லும்­சரி, அர­சியல் மேம்­பா­டா­யி­னும்­ சரி, அர­சியல் ஸ்திரத்­தன்மை அடிப்­ப­டையில் அவ­சியம். 

இரு­கட்­சிகள் இணைந்து உரு­வாக்­கிய அர­சாங்­கத்தின் கொள்கைப் பிர­க­டனம், ஜனா­தி­பதி தரப்­பினால் தனித்து தயா­ரிக்­கப்­பட்­ட­தாகத் தக­வல்கள் கசிந்­தி­ருக்­கின்­றன. ஐக்­கிய தேசிய கட்­சியும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்­ததே இன்­றைய அர­சாங்கம். ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரே பிர­த­ம­ராகப் பதவி வகிக்­கின்றார். சிறி­லங்கா சுதந்­தி­ர­ கட்­சியின் தலை­வரே ஜனா­தி­பதி. அர­சாங்­கத்தின் முன்­னெ­டுப்­புக்­களில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இணைந்து செல்ல வேண்டும். இணைந்து முடி­வெ­டுக்க வேண்டும். இணைந்து மேற்­கொள்­கின்ற தீர்­மா­னங்­களே முன்­னெ­டுப்­ப­தற்கு உகந்­த­வை­களாக இருக்க முடியும். 

ஆனால் அர­சாங்­கத்தின் கொள்கைப் பிர­கடனம் அரசின் பங்­காளிக் கட்சித் தலை­வ­ரா­கிய பிர­த­ம­ருடன் கலந்­தா­லோ­சிக்­காமல் ஜனா­தி­பதி தரப்­பினால் தனிப்­பட தயா­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. .இந்தப் பிர­க­டன உரை பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற போதிலும், பங்­கா­ளி­களின் பங்­க­ளிப்­பின்றி தயா­ரிக்­கப்­பட்­டி­ருப்­பது என்­பது ஏற்­க­னவே இடம்­பெற்­றுள்ள அதி­காரப் போட்­டியை மேலும் மோச­ம­டை­யவே செய்யும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஆளும் கட்­சி­களில் ஒன்­றா­கிய சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி படு­தோல்வி அடைந்­துள்­ளது. ஐக்­கிய தேசிய கட்­சியும் வெற்­றி­பெற்­றி­ருக்க வேண்­டிய அளவில் வெற்றி பெற­வில்லை. அதுவும் தோல்­வி­யையே தழு­வி­யி­ருக்­கின்­றது. இரு கட்­சி­க­ளுக்கும் பொது அர­சியல் எதி­ரி­யா­கிய பொது எதி­ரணி இந்தத் தேர்­தலில் அமோக வெற்றி ஈட்­டி­யுள்­ளது. அள­வுக்கு அதி­க­மாக அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்ட உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மக்கள் அரசு மீது கொண்­டுள்ள அவ­நம்­பிக்­கை­யையும், ஆளும் கட்­சிகள் மீதான அதி­ருப்­தி­யையும் முகத்தில் அறைந்­தாற்­போல வெளிப்­ப­டுத்தி இருக்­கின்­றார்கள். இந்தத் தேர்தல் தோல்­வியே ஐக்­கிய தேசிய கட்­சிக்கும், அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக உள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்த அணி­யி­ன­ருக்கும் இடையே அதி­காரப் போட்­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

இழு­பறி நிலையில் தொடர்­கின்ற இந்த அதி­காரப் போட்­டிக்கு மத்­தி­யி­லேயே பாரா­ளு­மன்­றத்தின் இரண்­டா­வது செய­ல­மர்வுத் தொடரை ஜனா­தி­பதி வைபவ ரீதி­யாக ஆரம்­பித்து வைத்து, பிர­க­டன உரை­யாற்­றி­யி­ருக்­கின்றார். அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள 15 விட­யங்­களில் முதன்மை பெற்­றி­ருக்க வேண்­டிய அர­சியல் ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்சி இறுதி விட­ய­மாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

முதல் மூன்று விட­யங்­களும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யுடன் தொடர்­பு­டை­யவை. அடுத்த இரண்டு விட­யங்­களும் அரச பணி­யா­ளர்­களும், பொலிஸார் உள்­ளிட்ட படை­யி­னரின் மன­நிலை சார்ந்த விட­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. சட்டம், அதி­காரம், ஜன­நா­யகம், மனித உரிமை விட­யங்கள் ஆறா­வது இடத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. 

ஏழு, எட்டு, ஒன்­ப­தா­வது இடங்­க­ளி­லேயே இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வுடன் தொடர்­பு­டைய விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கின்றன. ஆயினும், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் அந்த விட­யங்­களில் அழுத்தம் பெற­வில்லை. தமிழ் மக்­களின் சம உரி­மை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அபி­லா­சை­களை ஏற்­றுக்­கொள்ளல் என்றே குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இன,மதச்­சார்­பற்ற தேசிய

அடை­யா­ளமே தேவை

பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­க­ளுக்கு உள்­ளதைப் போன்ற உரி­மைகள் சம­மான முறையில் தங்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்டும்; உறுதி செய்­யப்­பட வேண்டும் என்­பதே தமிழ் மக்­களின் கோரிக்­கை­யாகும். இது, அவர்­களின் இந்தக் கோரிக்­கைக்கு அடிப்­ப­டை­யான அபி­லா­சை­களை ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற கட்­டத்தைக் கடந்­தது. உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும். அந்த உரி­மைகள் எவ­ராலும் பறிக்­கப்­பட முடி­யாத வகையில் அர­சியல் அமைப்பின் ஊடாக உறுதி செய்­யப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதே அவர்­களின் நீண்டகால வேண்­டுகோள். அதனை நிறை­வேற்­று­வது தொடர்பில் அரச தரப்பு தயா­ராக இல்லை என்­ப­தையே ஜனா­தி­ப­தியின் பிர­க­டனம் தொனி செய்­தி­ருக்­கின்­றது.

மத ரீதி­யான ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கு உள்­ளாகி வரு­கின்ற முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும் என்­றில்­லாமல், அவர்­களின் சமூக கலா­சார தேவை­களை உறுதி செய்­வது பற்­றியே பிர­க­ட­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

மலை­யக மக்­களைப் பொறுத்­த­மட்டில், அவர்­களின் அர­சியல் உரி­மை­களும் சமூக உரி­மை­களும் நிரந்­த­ர­மான கிரா­மிய வடி­வி­லான குடி­யி­ருப்பு சார்ந்து வழங்­கப்­பட வேண்டும். தமிழ் மக்­களைப் போலவே அவர்களுடைய பிரச்சினையும் அரசியலமைப்பின் ஊடாக திரும்பப் பெற முடியாத வகையில் நிரந்தரமாக அனுபவிக்கும் வகையில் உறுதி செய்யப்பட வேண்டும்;வழங்கப்பட வேண்டும். மாறாக அவர்களின் பொருளாதார சமூக மேம்பாடு பற்றியே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பத்தாவது விடயமாகக் குறிப்பிடப்பட்டுள்ள சிங்கள மக்கள் தொடர்பிலான விடயம் பேரினவாத சிந்தனையை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. பல்லின மக்கள் வாழ்கின்ற,பல சமயங்களைப் பின்பற்றுகின்ற, பல சமூகங்களைக் கொண்ட நாடு என்பதை மறுதலிக்கும் தொனி சார்ந்த வகையில் இது அமைந்திருக்கின்றது. பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் கலாசார உரிமைகளைப் பலப்படுத்தி, உறுதி செய்து, தேசத்தின் அடையாளத்தை வலுப்படுத்தல் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

சிங்கள மக்களுடைய கலாசாரமும், பௌத்த மதக் கோட்பாட்டு பயன்பாடும், எந்தவிதமான இடையூறுமின்றி இடம்பெற்று வருகின்றன. ஏனைய மதங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளையும் அடக்குமுறைகளையும் சிங்கள பௌத்தர்கள் எதிர்கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர்களுடைய கலாசார உரிமைகளைப் பலப்படுத்துவதும் உறுதி செய்வதும் ஏன் என்பது தெரியவில்லை. அவ்வாறு பலப்படுத்தி உறுதிப்படுத்துவதன் ஊடாகவே தேசத்தின் அடையாளம் வலுப்படுத்தப்படும் என இந்த பத்தாவது விடயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இலங்கை என்ற தேசத்தின் அடையாளம் பௌத்த சிங்கள தேசம் என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது. பல்லின மக்களும் பல மதங்களைப் பின்பற்றுகின்றவர்களும் இங்கு வாழ்கின்றார்கள். அவர்களின் சமய சமூக உரிமைகள் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசத்தின் அடையாளமே அவசியமாகின்றது. அதற்கு இனச்சார்பற்ற, மதச்சார்பற்ற கொள்கையே அவசியம். அதன் ஊடாக மட்டுமே இலங்கையர் என்ற தேச அடையாளத்தை உருவாக்க முடியும். 

மொத்தத்தில் இன ஐக்கியம், இன நல்லிணக்கத்துடன் கூடிய தேசிய இருப்புக்குரிய முக்கியமான விடயங்கள், அவற்றுக்குரிய தன்மைகளுடன் நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் இடம்பெறவில்லை என்பது கவலைக்குரியது. இது மிகுந்த ஏமாற்றத்திற்குரியது. அது மட்டுமல்ல. நாட்டின் வளமான எதிர்காலத்திற்கும் நல்லதாகத் தென்படவில்லை. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.