Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல!

Featured Replies

முள்ளிவாய்க்கால் பாடம்

14-ce07bb247765a9c50cb5b4d887c78c38bd4b15b1.jpg

 

கடந்த ஆண்டு, மாவீரர் நாளை ஒழுங்­க­மைத்து நடத்­து­வது யார் என்று கிளம்­பிய பிரச்­சினை, இப்­போது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் விவ­கா­ரத்­திலும் வந்து நிற்­கி­றது.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வுக்கு இன்­னமும் சில நாட்­களே எஞ்­சி­யி­ருக்­கின்ற நிலையில், பேர­வலம் நிகழ்ந்த அந்த மண்ணில் நிகழ்­வு­களை ஒழுங்­க­மைப்­பது யார் என்ற குழப்பம், மோதல்­களும் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன.

நினை­வேந்தல் நிகழ்­வு­களை ஒழுங்­க­மைப்­பது தாமே என்று வடக்கு மாகா­ண­ச­பையும், பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யமும் மல்­லுக்­கட்டத் தொடங்­கி­யி­ருக்கும் நிலையில், தமிழ் மக்கள் என்ன செய்­வ­தென்று தெரி­யாமல் விழி­பி­துங்கி நிற்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு எதிர்­வரும் 18ஆம் திகதி யாரு­டைய ஒழுங்­க­மைப்பில் நடக்கப் போகி­றது? இதில் அனைத்து தரப்­பி­னரும் ஒன்­றாகப் பங்­கேற்கும் சூழல் உரு­வா­குமா என்ற கேள்­விக்கு இந்தப் பத்தி எழு­தப்­படும் வரையில் விடை காணப்­ப­ட­வில்லை.

ஆனால், மாவீரர் நாள், முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் உள்­ளிட்ட தமிழ் மக்­களின் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த நினைவு நாள் ஒழுங்­க­மைப்­புகள் என்­பது சிக்­க­லுக்­கு­ரி­ய­தாக மாறி வரு­கி­றது என்­பது மாத்­திரம் உறுதி.

விடு­தலைப் புலி­க­ளுக்குப் பின்னர் இது­போன்ற நினைவு நாட்­களை ஒழுங்­க­மைப்­பதில் புலம்­பெயர் தேசங்­களில் பிள­வுகள், குழப்­பங்கள் ஏற்­பட்­டன. இன்­னமும் கூட, அங்கு தனித்­த­னி­யாக நிகழ்­வுகள் நடத்­தப்­படும் அவ­லங்கள் காணப்­ப­டு­கின்­றன.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் நினைவு நாட்­களை நடத்தும் சூழல் வடக்கு, கிழக்கில் இருக்­க­வில்லை. அதனால், யாரும் அப்­போது அதற்கு முயற்­சிக்­க­வில்லை.

எனினும், கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக வடக்கு மாகா­ண­ச­பையின் ஒழுங்­க­மைப்பில், முள்­ளி­வாய்க்­காலில் நினை­வேந்தல் நிகழ்வு நடத்­தப்­பட்டு வந்­தது. கடந்த ஆண்டு அதில் சில குழப்ப முயற்­சி­களும் நடந்­தே­றின.

ஆனால் இம்­முறை முள்­ளி­வாய்க்­காலில் தாமே நினை­வேந்தல் நிகழ்வை ஒழுங்­க­மைத்து நடத்தப் போவ­தா­கவும் அதற்கு அனைத்துத் தரப்­பி­னரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என்றும் பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் கிளம்­பி­யது.

மாணவர் ஒன்­றி­யத்தின் இந்த முயற்­சிக்கு பொது அமைப்­புகள், புலம்­பெயர் அமைப்­புகள் சில­வற்றின் ஆத­ரவும் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

மாணவர் ஒன்­றியம், சில விதி­மு­றை­க­ளையும் கட்­டுப்­பா­டு­க­ளையும் அறி­வித்­தி­ருந்­தது.

யாரும் அர­சியல் செய்ய இட­ம­ளிக்­கப்­ப­டாது. தனியே நினை­வேந்தல் நிகழ்வு மாத்­திரம் நடக்கும், அனைத்து தரப்­பு­களும் ஒன்­றி­ணைந்து பங்­கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்­தி­ருந்­தனர் மாண­வர்கள்.

அனைத்து தரப்­பி­னரும் ஒரே நிகழ்­வாக ஒன்­றி­ணைந்து பங்­கேற்க வேண்டும் என்று கடந்த பல ஆண்­டு­க­ளாக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்த போதும், அதற்கு யாரும் செவி­ம­டுக்­க­வில்லை.

சப்பைக் கார­ணங்­களைக் கூறி நழுவிக் கொள்­வதில் தான் ஒவ்­வொரு தரப்பும் கவனம் செலுத்­தி­யது.  ஆனால் இம்­முறை சற்று முன்­கூட்­டியே முள்­ளி­வாய்க்­காலில் துப்­பு­ரவுப் பணி­களை ஆரம்­பித்த மாணவர் ஒன்­றி­யத்­தினர், அனை­வ­ரையும் பங்­கேற்க வேண்டும் என்று அழைத்­தனர். அது வர­வேற்­கப்­படும் வகை­யி­லேயே இருந்­தது. பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தாம் இதனைப் பொறுப்­பேற்­ப­தற்கு முன்னர், ஏற்­க­னவே நிகழ்­வு­களை ஒழுங்­க­மைத்து வரும் வடக்கு மாகா­ண­ச­பை­யுடன் கலந்­தா­லோ­சனை நடத்­தி­யி­ருக்க வேண்டும். 

ஆனால் மாணவர் ஒன்­றி­யத்­தினர், தாம் நினைத்­த­வாறு, மற்றத் தரப்­பினர் தமக்குக் கீழ் செயற்­பட வேண்டும் என்ற எண்­ணத்­துடன் ஏற்­பா­டு­களில் இறங்­கிய நிலையில் தான் பிரச்­சினை உரு­வா­னது.

வடக்கு மாகா­ண­சபை வழக்கம் போலவே நிகழ்­வு­களை ஒழுங்­க­மைப்­பது என்று முடிவு செய்து அதற்­கான கலந்­து­ரை­யா­டல்கள் முத­ல­மைச்­சரின் தலை­மையில் நடத்­திய போது, மாணவர் ஒன்­றி­யத்­தினர் அதனைப் புறக்­க­ணித்­தனர்.

வடக்கு மாகா­ண­ச­பையே தமது முடிவில் உறு­தி­யாக இருக்க, பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யமோ தமது நிலையில் விடாப்­பி­டி­யாக நிற்க மீண்டும் முள்­ளி­வாய்க்கால். நினை­வேந்தல் நிகழ்வு பிள­வு­பட்டு நிற்­கி­றது.

ஒற்­று­மை­யாக நிகழ்வை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்த மாணவர் ஒன்­றி­யத்­தினர், வடக்கு மாகாண முத­ல­மைச்­சரின் கூட்­டத்தில் பங்­கேற்று தமது கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி, தமது யோச­னை­களை ஏற்க வைத்­தி­ருக்க வேண்டும்.

அதற்கு மாறாக, கூட்­டத்தில் பங்­கேற்­காமல், விட்­ட­துடன், தாமும் தனி­யாக நிகழ்வை ஒழுங்­க­மைக்கப் போவ­தாக அறி­வித்­துள்­ளனர். இந்த அறி­விப்­பா­னது, உண்­மை­யி­லேயே அனைத்து தரப்பும் இணைந்து நிகழ்­வு­களை  ஒழுங்­க­மைக்கும் எண்­ணத்தை பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்­தினர் கொண்­டி­ருந்­தார்­களா அல்­லது வேறேதும் நிகழ்ச்சி நிரல் அவர்­க­ளிடம் இருந்­ததா என்ற சந்­தே­கத்தை எழுப்­பி­யி­ருக்­கி­றது. 

வடக்கு மாகா­ண­ச­பையின் ஆயுள் காலம் இந்த ஆண்­டுடன் முடியப் போகி­றது அதற்குப் பின்னர் யார் ஒழுங்­க­மைப்­பது என்று மாணவர் ஒன்­றி­யத்­தி­னரும், மாணவர் ஒன்­றி­யமும் கூட கலைக்­கப்­பட்டு விடக் கூடுமே என்று மாகா­ண­ச­பை­யி­னரும் கேள்­வி­களை எழுப்­பு­கின்­றனர்.

உண்­மையில் இது சிக்­க­லான ஒரு விவ­காரம். ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளுக்கும் உரிய இந்த நிகழ்­வு­களை சுதந்­தி­ர­மாக ஒழுங்­க­மைக்கும் கட்­ட­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் இப்­போது வலு­வாக உண­ரப்­ப­டு­கி­றது.

வடக்கு மாகா­ண­சபை முன்­வந்து முள்­ளி­வாய்க்­காலில் அஞ்­சலி செலுத்தத் தொடங்­கி­யதால் தான் இன்றும் அங்கு நிகழ்­வு­களை நடத்தக் கூடிய நிலை ஏற்­பட்­டது.

அது­போ­லவே கிளி­நொச்சி, முழங்­காவில் உள்­ளிட்ட துயி­லு­மில்­லங்­களில் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுடர் ஏற்றத் தொடங்­கி­யதால் தான், அங்கு மாவீரர் நாளுக்கு மக்கள் அணி திரளும் நிலையும் ஏற்­பட்­டது. இதனை யாரும் மறுக்க முடி­யாது.

இதனை செய்­யாமல் விட்­டி­ருந்தால், நிச்­ச­ய­மாக முள்­ளி­வாய்க்­கா­லிலும், துயி­லு­மில்­லங்­க­ளிலும் இன்­னமும் பற்­றைகள் தான் மண்டிக் கிடந்­தி­ருக்கும்.

எந்தச் செய­லுக்கும் ஓர் ஊக்கி தேவை. அதனைத் தமிழ் அர­சி­யல்­வா­திகள் தான் ஏற்­ப­டுத்திக் கொடுத்­தனர் என்­பதை மறந்து விட முடி­யாது.

அதே­வேளை, ஆரம்­பித்து வைத்­தார்கள் என்­ப­தற்­காக அவர்­களே முழு­மை­யாக எதற்கும் உரிமை கோரி விட முடி­யாது. நியா­ய­மான சில விட்டுக் கொடுப்­பு­க­ளுடன், செயற்­படத் தயா­ராக வேண்டும்.  வடக்கு மாகா­ண­ச­பையின் நிர்­வாகம் அடுத்து யாரு­டைய கையில் செல்லும் என்று யாராலும் கூற முடி­யாது. அப்­ப­டி­யான ஒரு நிலை வந்தால், என்ன செய்­வது என்ற கேள்வி நியா­ய­மா­னது.  

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை நடத்த விரும்­பாத தரப்­பு­களில் ஏதும் ஆட்­சிக்கு வந்தால், அல்­லது அதனை அர­சி­ய­லாக்க முனையும் தரப்­பு­க­ளிடம் சிக்­கினால் என்ன செய்­வது என்ற கேள்­வி­யிலும் நியாயம் உள்­ளது.

அது­போ­லவே, யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்­திலும் இதே பிரச்­சினை உள்­ளது என்­பதை யாராலும் மறுக்க முடி­யாது.

தமி­ழரின் விடு­தலைப் போராட்­டத்தில் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கும், மாண­வர்­க­ளுக்கும் கணி­ச­மான பங்கு இருந்து வந்­தது. பல்­வேறு கால­கட்­டங்­களில் தமிழ் மக்­களை வழி நடத்தும் அள­வுக்கு மாணவர் ஒன்­றியம் செயற்­பட்­டது. பல முக்­கி­ய­மான போராட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­தது.

ஆனாலும், கடந்த பத்து ஆண்­டு­களில் நிலை­மைகள் அவ்­வாறு இல்லை. இரா­ணுவ நெருக்­கு­வா­ரங்கள் மற்றும் பல்­வேறு கார­ணங்­களால், மாணவர் ஒன்­றி­யத்­தி­னரின் செயற்­பா­டுகள் பெரிதும் மாறிப் போயி­ருந்­தது.

பல்­க­லைக்­க­ழக வள­வுக்குள் சில நினை­வேந்தல் நிகழ்­வு­க­ளுக்கு அப்பால் வேறு எதையும் செய்ய முடி­யாத நிலைக்கு அவர்கள் உள்­ளா­கி­யி­ருந்­தனர்.

திடீ­ரென இப்­போது, மாணவர் ஒன்­றி­யத்­தினர் மீண்டும் அந்த நிலையைக் கைப்­பற்ற முனை­கின்ற போது பல்­வேறு கேள்­விகள் எழவே செய்­கி­றது.

வடக்கு மாகா­ண­சபை கலைந்து போனதும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை யார் நடத்­து­வது என்று கேள்வி எழுப்பும் மாணவர் ஒன்­றி­யத்­தினர், அதே நிலை தமக்கும் ஏற்­படும் என்­பதை மறந்து விடு­கின்­றனர்.

அதுவும் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் சிங்­கள, முஸ்லிம் மாண­வர்­களின் ஆதிக்கம் அதி­க­ரித்து வரு­கின்ற சூழலில், மாணவர் ஒன்­றி­யத்தில் தமிழ் மாண­வர்­களின் ஆதிக்கம் கேள்­விக்­குள்­ளாகி வரு­கி­றது.

அதை­விட, தற்­போது மாணவர் ஒன்­றி­யத்தின் போராட்­டங்­களின் தீவிரத் தன்மை எந்­த­ள­வுக்கு இருக்கும் என்­பதும் கேள்­விக்­கு­ரிய விடயம் தான்.

ஏனென்றால், பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்­தினர் அண்­மையில் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­காக 10 இலட்சம் பேரின் கையெ­ழுத்தை திரட்டி, அனுப்பப் போவ­தாக ஒரு போராட்­டத்தை ஆரம்­பித்­தனர்.

வடக்கு, கிழக்கு தழு­விய ரீதி­யாக வீடு­வீ­டாகச் சென்று கையெ­ழுத்துப் பெறப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது, அந்த அறி­விப்­புக்குப் பின்னர், என்ன நடந்­தது என்று யாருக்கும் தெரி­யாது. அப்­ப­டியே முடங்கிப் போனது.

இது­போன்ற நிகழ்­வு­களால், பல வேளை­களில் மாண­வர்­களின் போராட்­டத்தை தமிழ்ச் சமூகம் கண்­டு­கொள்­ளாமல் விட்­டு­விடும் நிலையே ஏற்­பட்­டது.

முள்­ளி­வாய்க்கால் விட­யத்­திலும் இதே கேள்வி உள்­ளது. இப்­போது உள்ள மாணவர் ஒன்­றியப் பிர­தி­நி­திகள் அடுத்த ஆண்டும் இருக்கப் போவ­தில்லை. அப்­போது தெரிவு செய்­யப்­படும் நிர்­வாகம் அதனை எதிர்க்­கலாம்.

இப்­ப­டி­யான சூழலில் தான், தமி­ழரின் பொது நினை­வேந்தல் நிகழ்­வு­களை ஒழுங்­க­மைப்­ப­தற்­கான ஒரு சுதந்­தி­ர­மான குழு உரு­வாக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் எழு­கி­றது.

எல்­லாத தரப்­பி­ன­ரையும் உள்­ள­டக்­கிய- அர­சியல் சார்­பற்ற ஒரு கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டி­யது முக்­கியம்.

அத்­த­கைய கட்­ட­மைப்பு, முள்­ளி­வாய்க்கால் உள்­ளிட்ட நினை­வேந்தல் நிகழ்­வு­களை பொறுப்­பேற்கும் ஒழுங்­குகள் விரைவாக செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையே இப்போதைய நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன.

முள்ளிவாய்க்கால் என்பது தமிழ்ச் சமூகத்தின் அவலங்களை நினைவு கூருகின்ற ஓர் இடம் மாத்திரமல்ல- அது தமிழினத்துக்கு வரலாற்றுப் பாடம் கற்பித்த இடமும் கூட.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழர்கள் தமக்குள் அடித்துக் கொள்ளும் நிலையில் தான் இருக்கிறார்கள்.

இது இனஅழிப்பை மேற்கொண்ட சக்திகள் அனைத்துக்கும் மகிழ்வைத் தரக் கூடிய செய்தி.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஒன்றிணைய விடாமல் தடுப்பதில் இத்தகைய சக்திகள் இதுவரை வெற்றியைப் பெற்று வருகின்றன என்பதையே இந்தப் பிளவுகளும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தநிலையில் இருந்து மீளாத வரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வெறும் சம்பிரதாயச் சடங்காகத் தான் முடிந்து போகுமே தவிர, அடுத்த கட்டத்துக்கு முன்னகர்வதற்கான ஒரு படிக்கல்லாக பாடமாக அமையப் போவதில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-05-13#page-1

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல!
 
 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில் வடக்கு மாகாண சபைக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் முட்டல் மோதல்கள் உருவாகியிருக்கின்றன. அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுக்கப்போவதாக  தெரிவித்து சில வாரங்களுக்கு முன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டது. அத்தோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகளிலும் இறங்கியது.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கூடிய வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் நிகழ்வினை வழக்கம்போல, மாகாண சபையே ஒழுங்குபடுத்தி நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்த முடிவினை, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை நேரடியாக அழைத்து முதலமைச்சர் அறிவித்தார். அத்தோடு, நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குபடுத்தலின் போது, பொறுப்பொன்றை ஏற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனாலும், அதனை ஏற்றுக்கொள்ளாத பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அன்று மாலையே கட்டமான அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது.  

கடந்த சில வருடங்களாக வடக்கு மாகாண சபையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை ஒழுங்குபடுத்தி நடத்தி வருகின்றது. ஆனாலும், அந்த நிகழ்வில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க முடியவில்லை. கடந்த வருடம் மாகாண சபை ஒழுங்குபடுத்திய நினைவேந்தல் நிகழ்வு முற்பகல் நடைபெற்றது. அதனைப் புறக்கணித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அன்று மதியம் இன்னொரு இடத்தில் அஞ்சலி நிகழ்வினை நடத்தியது. சிவில் சமூக அமைப்பொன்று, அன்று மாலை அஞ்சலி நிகழ்வினை நடத்தியது. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கான ஏகபோகத்தினை எந்தவொரு தரப்பும் எடுத்துக் கொள்ள முடியாது என்கிற அடிப்படைகளை ஏற்றுக்கொண்டு இந்தப் பத்தி சில விடயங்களைப் பேச விளைகின்றது. 

காலநிலை மாற்றங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு சமூகமும் தமக்கான பருவகால கொண்டாட்ட நிகழ்வுகளை வழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. கோடையோ, குளிரோ குறித்த பருவகாலத்துக்குத் தகுந்த மாதிரியான விளையாட்டுக்களையும், நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தி நடத்துகின்றன. ஒவ்வொரு பருவகாலத்துக்குமான தயார்ப்படுத்தல்களையும் சில சமூகங்கள் பெரும் ஆரவாரத்தோடு முன்னெடுக்கும். அந்தச் சீசன் (பருவகாலம்)  முடிந்ததும் வழக்கமான பணிகளுக்கு திரும்பிவிடுவார்கள்.  பூகோள மயமாக்கல் அனைத்துச் சமூகங்களையும் ஆட்கொண்டு விட்டாலும், பெரிய பாதிப்புக்கள் இன்றி பருவகால நிகழ்வுகள் இன்னமும் சில சமூகத்திடம் கோலொச்சிக் கொண்டிருக்கின்றன. 

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலும் பருவகாலத்துக்கு (சீசனுக்கு) தகுந்த மாதிரியாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு விட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரை முன்னிறுத்திய ‘ஜெனீவா’ சீசனும், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை’ முன்னிறுத்திய சீசனும் முக்கியமானவை. புலம்பெயர் தேசங்களில் மாவீரர் தினத்தை முன்னிறுத்திய சீசன் ஒன்றும் வருடாந்தாம் திறக்கும். 

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவை என்றைக்குமே வீழ்ந்துவிடாமல் பேணுவதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், மாவீரர் தினமும், (ஜெனீவா அமர்வுகளும்) அவசியமானவை. நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்ற சமூகமாக இவற்றின் வழி, அடுத்த தலைமுறைக்கு போராட்டத்தின் பின்னாலுள்ள நியாயப்பாட்டையும் உறுதிப்பாட்டையும் நாம் கடத்த முடியும். எமக்காக மாண்டவர்களின் தியாகங்களை உயர்நிலையில் வைத்துப் பேண முடியும். அஞ்சலிக்க முடியும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உண்மையில் நடப்பது என்ன என்கிற கேள்வி மக்களை அலைக்கழிக்கின்றது. 

தேர்தல் அரசியல் என்கிற ஒற்றைவழியில் பயணிக்க ஆரம்பித்துவிட்ட தமிழ்த் தேசிய அரசியல், இவ்வாறான நிகழ்வுகளிலிருந்து தமக்கான ஆதாயங்களை எவ்வாறு அடைவது என்றே சிந்திக்கின்றன. “கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மற்றவர்களை தோலுரிக்க வேண்டும். தன்மை புனிதராக்கி மக்களின் அபிமானத்தைப் பெற்றுவிட வேண்டும்” என்பதற்காக எந்தவிதமான பொறுப்புணர்வும் இன்றி கீழ்த்தரமான வேலைகளையெல்லாம் செய்ய எத்தணிக்கின்றன. அவை, அம்பலப்படும் போது, சமாளிப்புகளைச் சொல்லி  அந்தத் தரப்புக்கள் தப்பியோடுகின்றன.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான நாட்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முள்ளிவாய்க்காலிலேயே நடத்துவதற்கான கட்டத்திற்கு மாகாண சபை வந்தது. அதற்கு, பல்வேறு தரப்புக்களும் ஆரம்பத்தில் ஆதரவளித்தன. ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, மக்களின் அபிமானத்தை அடைவதற்கான ஒரு சந்தர்ப்பமாக கையாள முடியும் என்கிற சிந்தனை பல தரப்புக்களை வேறு முடிவுகளை எடுக்க வைத்தது. சீசன் கால நிகழ்வுக்கு ஒப்பான கட்டமொன்றை அடைவதற்கு அதுவே அடிப்படையாகவும் அமைந்தது. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது சில மணி நேரங்களில் முடிந்துபோகும் அஞ்சலி நிகழ்வு மாத்திரமல்ல. அது, 70 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நியாயப்படுகளை இந்த உலகம் எவ்வாறெல்லாம் தட்டிக்கழித்து, பௌத்த சிங்கள மேலாதிக்கத்தைக் கொண்டு, தமிழ் மக்களுக்கான இழப்புகளை ஏற்படுத்திய களம். தமிழ்த் தேசிய அரசியலை தேர்தல் அரசியலைத் தாண்டியும் பெரும் நியாயப்படுகளோடு முன்னெடுப்பதற்கான தார்மீகங்களை முள்ளிவாய்க்காலின் ஒவ்வொரு தருணமும் உணர்த்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், அதனை உண்மையிலேயே உள்வாங்கி, அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றோமா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. 

முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபியொன்றை அமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் சில ஆண்டுகளுக்கு முன்னரேயே தீர்மானமொன்று நினைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன என்கிற விடயம் தொடர்பில் யாருக்கும் தெளிவில்லை. மத்திய அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என்கிற பதிலை, முதலமைச்சரும், மாகாண சபையும் ஒப்புவிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமுண்டு. எனினும், பொது நிதியமொன்றினூடு காணியைக் கொள்வனது செய்து நினைவுத் தூபியை அமைப்பதற்கு தடைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கான ஆலோசனைகள் கடந்த சில வருடங்களாக பல தரப்பினராலும் முதலமைச்சரையும், வடக்கு மாகாண சபையையும் நோக்கி வைக்கப்பட்டும் விட்டது. ஆனால், நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 

வழக்கம்போல, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினக்குக்கு சில நாட்களே இருக்கின்ற நிலையில், நிலைவேந்தல் நிகழ்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக மாகாண சபை கூடிய முடிவெடுத்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒழுங்குபடுத்துவதற்கும், நினைவுத்தூபி அமைப்பதற்குமாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்களை இணைந்து புதிய அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டது. அவ்வாறான அமைப்பினால், வடக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஒரு வகையில் சமநிலையுடன் பேணி விடயங்களை எந்தவித விட்டுக்கொடுப்பும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கும் உதவும். 

சி.வி.விக்னேஸ்வரனுக்குப் பின்னரான வடக்கு மாகாண சபையினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது என்கிற சந்தேகத்தை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இப்போது எழுப்பியிருக்கின்றது. அதன்பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்குபடுத்தல் பொறுப்பை தம்மிடம் வழங்குமாறு கோரியிருக்கின்றது. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முள்ளிவாய்க்கால்-நினைவேந்தல்-பருவகால-விளையாட்டல்ல/91-215795

  • தொடங்கியவர்

நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக? நிலாந்தன்…

மாவீரர் துயிலுமில்லமும் – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும் …

  • தொடங்கியவர்

இலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’

'இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்'

இலங்கையில் இறந்தவர்களின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும்,இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பதில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இலங்கையின் மூத்த செய்தியாளர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையை பொறுத்தவரை, மே மாதம் இங்கு போர் முடிவுக்கு வந்த காலம். தமிழ் மக்களை பொறுத்தவரை மே 18 ஆம் தேதியை அவர்கள் முள்ளிவாய்க்கால் தினம் என்ற பெயரில், இறுதிப்போரில் இறந்த தமது உறவுகளை நினைவுகூர பயன்படுத்துகிறார்கள்.

போரில் இறந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தமிழ் மக்கள் என அனைவரையும் நினைவுகூரும் தினமாக அது அனுசரிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால்

கடந்த அரசாங்கம் இந்த தினத்தை அனுசரித்த நிலையில், அன்றைய தினத்தில் நினைவு விளக்குகளை ஏற்ற அனுமதி மறுத்தது. ராணுவத்தினர் அதனை தடுத்து வந்தனர். ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அந்தத் தினத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது அனுசரிக்க அனுமதி வழங்கப்படுகின்றது.

ஆனால், அதற்குப் பிறகுதான் பிரச்சனையே ஆரம்பமாகியிருக்கின்றது. அதாவது தமிழர் பகுதிகளில் இந்த நிகழ்வுகளை யார் நடத்துவது அல்லது ஏற்பாடு செய்வது என்பது ஒரு சர்ச்சையாகவே மாறிவிட்டது.

இப்படியான நினைவு நிகழ்வுகளில் தமிழ் அரசியல்வாதிகள் கலந்துகொண்டு பேசமுற்பட்டபோது, அதனை மக்கள் தடுத்த நிகழ்வுகள் எல்லாம் கடந்த காலங்களில் நடந்தேறியிருக்கின்றன.

இதனைப் பயன்படுத்தி தமிழ் தேசியம் பேசும் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் ஆதாயம் தேட முனைவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

இந்தத் தடவை முள்ளிவாய்க்கால் நிகழ்வை தாமே நடத்துவோம் என்றும், வடமாகாண சபைக்கே அதற்கான அதிகாரம் இருக்கிறது என்றும் வடமாகண முதல்வர் விக்கினேஸ்வரன் அறிவித்திருந்தார்.

அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது

ஆனால், அவருடன் முரண்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், தாம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் சேர்ந்து அதனை அனுசரிக்கப்போவதாகவும், இதில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என்றும் கூறியிருந்தார்கள்.

அரசியல்வாதிகள் இதனைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களின்(மாவீரர்) தந்தைமார், 'அரசியல்வாதிகள் இந்த நிகழ்வில் தலையிட்டு இதனை சர்ச்சையாக்கக் கூடாது' என்று கூறியுள்ளனர்.

பசீர் காக்கா, திருகோணமலை ரூபன் மற்றும் மட்டக்களப்பு யோகன் பாதர் ஆகியோர் இந்தக் கருத்தை கூறியுள்ளனர்.

"இது இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு. இதனை அவர்களது உறவினர்களே நடத்தட்டும், அரசியல்வாதிகள் இதில் தலையிட்டு சர்ச்சையாக்க வேண்டாம்" என்று அவர்கள் கேட்டிருந்தனர்.

வீ. தனபாலசிங்கம் Image captionவீ. தனபாலசிங்கம்

அநாகரீகமான அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டவேண்டும்

கடந்த ஆட்சிக்காலத்தில் இல்லாவிட்டாலும், தற்போதைய ஆட்சியிலாவது ஏற்பட்டிருக்கும் ஒரு ஜனநாயக இடைவெளியை பயன்படுத்தி, பொதுமக்கள் போரில் இறந்த தமது உறவுகளை நினைவுகூர்வதற்கான கண்ணியமான வாய்ப்பை அரசியல்வாதிகள் தட்டிப்பறிக்ககூடாது என்கிறார் மூத்த செய்தியாளரும், எழுத்தாளருமான வீ. தனபாலசிங்கம்.

"தமிழ் தேசியம்" என்னும் அடையாளத்தை தம்வசம் வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அவர்களுக்கு போட்டியான ஏனைய அமைப்புக்களும் குறைந்தபட்சம் மக்கள் ஐக்கியத்துடன் கண்ணியமாக தமது உறவுகளை நினைவுகூரவாவது அனுமதிக்க வேண்டும் என்கிறார்.

"மக்களை இறக்கவிட்டு அரசியல் செய்தது போக, இனிமேல் இறந்தவர்களின் ஆவிகளை வைத்து அரசியல் செய்வதை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும்" என்றும் அவர் கூறுகிறார்.

இந்த அநாகரீகமான அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டவேண்டும் என்கிறார் அவர்.

"அரசியல்வாதிகளே நீங்கள் இதில் தலையிடாதீர்கள், முடிந்தால் நியாயமான ஒரு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தர உதவுங்கள்" என்று அவர் கண்டிப்பாக கூறுகிறார்.

சிவராசா கருணாகரன் Image captionசிவராசா கருணாகரன்

இறுதிநேரப் போரின்போது வன்னியில் இருந்தவர் சிவராசா கருணாகரன். விடுதலைப்புலிகள் அமைப்பின் கடந்த மாவீரர் தின நிகழ்விலும், இதேபோன்ற பிரச்சினை எழுந்ததை சுட்டிக்காட்டும் கருணாகரன், அது மீண்டும் இந்தத் தடவை அரங்கேறியிருப்பதை குறிப்பிடுகிறார். எல்லாத் தமிழ் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஏதோ ஒரு வகையில் போட்டி போடுவதாக குற்றஞ்சாட்டும் அவர், இறந்தவர்களை முன்வைத்து அரசியல் செய்யும் இந்தக் கலாசாரம் மிகவும் மோசமான ஒரு முன்மாதிரி என்கிறார்.

போரை வைத்து அரசியல் செய்தவர்கள் இப்போது போரில் இறந்தவர்களை வைத்து அரசியல் லாபம் தேடுகிறார்கள் என்று கூறும் அவர், அவரவர் தமது உறவுகளுக்கு நிம்மதியாக அஞ்சலி செலுத்த அரசியல்வாதிகள் அனுமதிக்க வேண்டும் என்கிறார்.

நவமணி பத்திரிகையின் ஆசிரியரான என். எம் அமீன் ஒரு மூத்த செய்தியாளர். முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் கூட. இறந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவது யதார்த்தமே என்று கூறும் அவர், அரசியல்வாதிகள் இதில் தலையிடக் கூடாது என்கிறார்.

இதில் அரசியல் நுழைந்து தீவிரமாக பேசப்படும்போது, அதுபற்றிய தவறான சமிக்ஞைகளே சிங்கள பெரும்பான்மை மக்களிடம் போய்ச் சேரும் என்று அவர் கூறுகிறார்.

என். எம் அமீன், மூத்த செய்தியாளர் Image captionஎன். எம் அமீன், மூத்த செய்தியாளர்

மிதவாத அரசியல் கருத்துக்களை வளர்த்து, அதன் மூலம் ஒரு நல்ல செய்தியை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்று, தமிழ் மக்களுக்கு நல்ல நிரந்தர தீர்வை அடைய வேண்டிய முயற்சிகளுக்கான தருணத்தில், சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகளும், இனவாதம் கக்கும் ஊடகங்களும் தவறான தகவல்களை அவர்களிடம் கொண்டு செல்ல அரசியல்வாதிகளின் இந்த சர்ச்சையாக்கும் நடவடிக்கை வழி செய்துவிடும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.

தமிழ் அரசியல்வாதிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு சில தமிழ் செய்தி ஊடகங்களும் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டு தீனி போடுவதாகவும் இந்த மூன்று மூத்த செய்தியாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர். உண்மையில் ஊடகங்கள் இந்த விஷயத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து உணர்ச்சியை தூண்டும் வகையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதுமட்டுமின்றி, அரசியல் கட்சிகள் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வை ஏற்படுத்தி தருவதில், நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தருவதில் அதிகம் அக்கறை காட்ட வேண்டும் என்றும் இந்த மூவரும் வலியுறுத்துகிறார்கள்.

ஜனாதிபதி மைத்திரி கவலை

இதற்கிடையிலே, போரில் இறந்தவர்களை வைத்து பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் சில, அரசியல் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், சில அரசியல் கட்சிகள் போரில் சாதித்த கதாநாயகர்களை (இலங்கை இராணுவத்தினர்) வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைவதாக குற்றஞ்சாட்டினார்.

அண்மையில் சில ராணுவத்தினர் சட்ட மீறல்களுக்காக கைது செய்யப்பட்டனர். அதற்கு உடனடியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சியினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்திருந்தன. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்‌ஷவும் அதனை கண்டித்திருந்தார்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதியிடம் இருந்து இந்தக் கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-44098637

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது?

உலகத் தமிழ் இனமே எண்ணிப்பார்

 

  • தொடங்கியவர்

ஒன்றுபட்டு அஞ்சலி செலுத்தவேண்டிய முள்ளியவாய்கால் மண்!

ஒன்றுபட்டு அஞ்சலி செலுத்தவேண்டிய முள்ளியவாய்கால் மண்!

நரேன்-

ஒட்டுமொத்தத்தில் மானிடத்தை நேசிக்கும் எந்தவொரு மனிதனாலும் இலகுவில் மறந்து விட முடியாத மண்ணே முள்ளியவாய்கால். இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாகிய தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30 வருட அகிம்சைப் போராட்டத்தில் தமிழ் தேசிய இனத்தின் மிதவாத தலைவர்கள் ஈடுபட்ட போது தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிரதான அரசியல் கட்சிகளும் அதனை கண்டு கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனம் உரிமைக்காக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். 30 வருடமாக தமது உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய தமிழ் தேசிய இனம் பிராந்திய நாடுகளே அச்சம் கொள்ளும் வகையில் வலுவான இராணுவ படைக் கட்டமைப்பை கொண்டதாக வளர்ச்சியடைந்தது. இந்நிலையில் சர்வதேச நாடுகளின் துணையுடன் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான முன்னைய அரசாங்கம் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி போர்குற்றங்களுடனும், மனிதவுரிமை மீறல்களுடன் தமிழினத்திற்கு ஏதிராக போர் தொடுத்து முள்ளியவாய்கால் மண்ணில் 2009 மே 18 ஆம் திகதி பாரிய மனிதப்பேரவலத்துடன் உரிமைப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இதனால் இந்த முள்ளியவாய்கால் மண் என்பது எல்லோராலும் இலகுவில் மறந்து விடமுடியாத வரலாற்று மண். இன்று தமிழ் மக்கள் தொடர்பில் ஐ.நாவை பேச வைத்த மண்ணும் இது தான்.

வன்னியின் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் இராணுவத்தின் கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதல்களுக்கும், விமான தாக்குதல்களுக்குள்ளும், துப்பாக்கி சூட்டுக்களுக்குள்ளும் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள இறுதியாக அடைக்கலம் தேடிய முள்ளியவாய்கால் மண்ணில் கூட பலர் ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். அந்த மண்ணே குருதியால் தோய்ந்தது. ஆயுதம் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் மேய்ப்பார் அற்ற மந்தைகள் போல் இருந்த தமிழ் தேசிய இனம் தமக்கான ஒரு தலைமையாக விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பேயே நம்பியிருந்தனர். ஆனால் உரிமைக்காக மடிந்த அந்த மக்களின் நினைவேந்தல் நிகழ்வில் கூட அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக நினைவேந்தலை செய்ய முடியாதவர்களாகவே உள்ளனர்.

60 வருடத்திற்கும் மேலாக உரிமைக்காக போராடிய தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக அமைப்பாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் 8 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டே முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் பங்கு பற்றியிருக்கிறார். தேர்தல் காலங்களில் முள்ளியவாய்கால் அவலத்தையும், அந்த மக்களின் நியாயமான அபிலாசைகளையும் முன்வைத்து வாக்கு பெற்று விட்டு அந்த மக்களின் நினைவு நாளில் கூட கலந்து கொள்ளாத நிலையே 2017 மே 18 வரை நீடித்தது. இலங்கை சுதந்திர தினத்தில் பங்கு பற்றியிருந்த போதும் இந்த நிகழ்வுகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் ஏம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புறக்கணித்தே வந்திருந்தனர். ஆனால் கடந்தமுறை அவர்கள் இருவரும் முள்ளியவாய்கால் மண்ணில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்டமைக்கும் காரணங்கள் உண்டு.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என நீதி கேட்டும், தாம் வாழ்ந்த காணிகளை விடுவிக்கக் கோரியும் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், இப்போராட்டங்கள் தொடர்பில் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்ளவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் எழுந்திருந்தது. இப்படியாக பரவலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரான கருத்துக்களும், விமர்சனங்களும் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருந்த நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாய நிலை கூட்டமைப்பு தலைமைக்கு ஏற்பட்டிந்தது.

இது தவிர, தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு நபராக மாறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகளை தன்னை சந்திக்கின்ற இராஜதந்திரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் காத்திரமாக முன்வைத்து வருகின்றார். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கைக்குரியவராக அவர் மாறியிருக்கிறார். இந்நிலையில் வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் மூன்றாவது முறையாகவும் முள்ளியவாய்கால் நினைவேந்தல் நடைபெற்ற போது அது மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கை மேலும் அதிகரித்து விடும். இதனால் கூட்டமைப்பின் தலைவரும் தனது நிலையை தக்க வைக்க விரும்பியோ விரும்பாமலோ முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டிய ஒரு நிலமை உருவாகியிருந்தது. இந்த நிலையில் தான் அவர்களின் வருகை இடம்பெற்றது.

இம்முறையும் 9 ஆவது ஆண்டு நினைவேந்தலுக்கு முள்ளியவாய்கால் மண் தயாராகி வருகின்றது. இந்த நிகழ்வுகளிலும் கூட்டமைப்பு தலைமைகள் பங்குபற்றக் கூடிய நிலையே உள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தமிழ் தேசியகட கூட்டமைப்பு அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டிய தேவையுள்ளது. அதனால் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் முன் காட்சி கொடுக்க தொடங்கிவிட்டனர். யாழில் நடைபெற்ற கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கூட எஸ்.ரி.எப் பாதுகாப்புடன் அந்த நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையில் விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டிருந்தது. அரசாங்கம் தீர்வைத் வழங்காவிடின் நிர்வாக முடக்கல் போராட்டத்தை நடத்தப் போவதாக அண்மையில் சுமந்திரன் எம்.பி அவர்கள் அறிவித்து இருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்தநிலையில் தேர்தல் அரசியலுக்காக இம்முறையும் முள்ளிவாய்கால் மண் அரசியல்வாதிகளினால் நிறையத்தான் போகிறது.

அண்மையில் முள்ளியவாய்கால் நினைவேந்தல் தொடர்பில் வெளிவந்த அறிக்கைகள் சில கூட சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. உண்மையில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் என்பது ஒரு விழாவோ அல்லது அரசியல் நிகழ்வோ அல்ல. இது தமிழ தேசிய இனம் ஒன்றித்து அனுஸ்டிக்க வேண்டிய துயரநாள். இந்த நாளைக் கூட தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒன்றாக நினைவு கூட முடியாத நிலையே இன்றும் தொடர்கிறது. வடமாகாண சபை, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஜனநாயக போராளிகள் கட்சி, பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் என பிரிந்து சென்று அனுஸ்டிப்பதற்கான முன்னேற்பாடுகளே ஆரம்பத்தில் இருந்து நடைபெற்று வந்தது. ஆனாலும் தற்போது இதில் சில தரப்புக்கள் இணைந்து அஞ்சலி செலுத்த தயாராக இருக்கின்றன. இருப்பினும் ஒரு இடத்தில் அனைத்து தரப்புக்களையும் இணைக்க முடியுமா என்பது கேள்வியாகவே உள்ளது. முள்ளிவாய்கால் நினைவுத் தூபி அமைக்கப்படும் என வடமாகாணசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்த போதும் அத்தகையதொரு நினைவுத்தூபி உரிய வகையில் இன்றுவரை அமைக்கப்படாமை வடமாகாணசபையின் பலவீனமே. நினைவுத்தூபி ஒன்று பொதுவாக அமைக்கப்படும் இடத்தில் அதனை அரசியல் நிகழ்வு இல்லாது பொது அமைப்புக்களின் தலைமையில் கீழ் ஒரு நினைவு அஞ்சலிக் கூட்டமாக அனைத்து அரசியல் தலைமைகளையும் ஒன்றிணைத்து நினைவு கூரக்கூடிய ஒரு நிலை உருவாகும். ஆனால் அத்தகையதொரு ஏற்பாட்டை செய்வதற்கு எந்தவொரு பொது அமைப்புக்களுமாக இருந்தாலும் சரி அல்லது மக்கள் இயக்கமாக தன்னை பிரகடனப்படுத்தியிருக்கும் தமிழ் மக்கள் பேரவையாக இருந்தாலும் சரி முன்வராமை துரதிஸ்டமே. ஒரு நினைவேந்தலைக் கூட ஒற்றுமையாக செய்ய முடியாத நிலை என்பது உரிமைக்காக போராடிய இனத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. அது அந்த மண்ணில் மடிந்த ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகமும் கூட. தனிப்பட்ட கட்சி அரசியலைத் தவிர்த்து தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்காகவும், விடிவுக்காகவும் இந்தப் போரில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய அந்த ஆத்மாக்களின் இலட்சியத்திற்காகவும், அவர்களின் ஆத்மாசாந்திக்காகவும் அனைத்து கட்சிகளும், பொது அமைப்புக்களும், தமிழ் மக்களும் இணைந்து ஒரு பொது நிகழ்வாக இதனை செய்ய வேண்டும். அதுவே அந்த ஆத்மாக்களுக்கு ஒவ்வொருவரும் கொடுக்கும் மரியாதையாகவிருக்கும்.

http://www.samakalam.com/செய்திகள்/ஒன்றுபட்டு-அஞ்சலி-செலுத்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.