Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமுதினிப்படுகொலை 33ஆவது வருட நினைவுநாள் இன்று

Featured Replies

குமுதினிப்படுகொலை 33ஆவது வருட நினைவுநாள் இன்று

kumuthini2.jpg?resize=600%2C395

குளோபல் தமிழ் செய்தியாளர்
1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப்  படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 33 வருடங்கள் ஆகும்.

நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழி மறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

 

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்.

சாட்சியங்கள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் பதியப்பட்டன. பொது வேலைகள் திணைக்களத்திடம் இருந்து தற்போதைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழிருந்த குமுதினி 1960களில் இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது.

இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.

இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

kumuthini.jpg?resize=800%2C450
 
நேரில் கண்ட ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.: 
 
“எனது தலையில் அடித்தார்கள். நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது.”

 

சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பன்னாட்டு மன்னிப்பு அவை இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது.71 பேர் உயிருடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

பன்னாட்டு மன்னிப்பு அவையினர் இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை இலங்கை அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தியது.

இப்படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் “ “இக்குற்றத்தை யார் புரிந்தார்கள் என அறிவதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை,” ” இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நவம்பர் 22, 2006 விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது.

நெடுந்தீவு மக்களின் வாழ்வில் குமுதினிப்படுகொலை மறக்க முடியாதது. ஆண்டுதோறும் இந்தப் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் இனப்படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத வடுவாக நிலைத்துள்ள குமுதினிப்படுகொலையை நெடுந்தீவு மக்கள் மாத்திரமின்றி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களும் நினைவுகூறுகின்றனர்.

http://globaltamilnews.net/2018/79157/

  • தொடங்கியவர்

நெஞ்சை பதறவைக்கும் குமுதினி கடற்படுகொலை - படகு ஓட்டுநனரின் பதிவுகள்!

 

 
Image

நெடுங்கடல் இரத்தமாகி நெருப்பென ஆன நாள்!

2009 ஆண்டு மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் சாரை சாரையாக மக்கள் கொல்லப்பட்ட நினைவு நாள். ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களை ஸ்ரீலங்கா அரசு இனப்படுகொலை செய்தது. மே மாதம் 15 ஆம் திகதி மற்றொரு படுகொலை மக்கள் நேயம் உள்ளவர்களை உலுக்கிப்பார்த்தது.

ஆம் அதுதான் குமுதினி படகு படுகொலை.......

வாழ்வோடும் வறுமையோடும் கடல் அலையோடும் போராடியோர் மீது நடந்த தாக்குதல்.தானுண்டு தன் வேலையுண்டு என இருந்த அப்பாவி ஜீவன்கள் மிருகத்தனமாக வெறியோடு கொல்லப்பட்டனர். ஏன் நடந்து இந்தக் கொடுமை? அப்பாவி தமிழர்களின் செங்குருதியால் குமுதினி குளிப்பாட்டப்பட்டாள்.

குமுதினி 1960களில் ஸ்ரீலங்கா அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும்.

மாவலிதுறை நெடுந்தீவு கிழக்கில் இருந்தது. அங்கிருந்து நயினாதீவின் கிழக்கு கரை நோக்கி பயணித்து புங்குடுதீவின் கரையில் குறிகட்டுவான் துறைமுகத்தில் பயணிகளையும் பண்டங்களையும் கரை சேர்ப்பதும் அதேபோல் மீண்டும் மக்களையும் பொருட்களையும் நெடுந்தீவிற்கு எடுத்துப் போவதும் குமுதினிப் படகின் நாளாந்த கடமை.நெடுந்தீவிற்கு கிடைத்த அற்புதமான சகாரப் பறவை என்பதே சரியானதாகும்.

அதிகாலை 6 மணிக்கு நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் கரையை அடைந்து பின் 8.30 மணியளவில் நெடுந்தீவிற்குச் செல்வதும் பிற்பகலில் 2 மணிக்கு புறப்பட்டு 3 மணிக்கு புங்குடுதீவு கரையை அடைந்தும் மீண்டும் மாவலிதுறைக்குச் செல்வதும் வழமை.அன்று ஜூன் மாதம் 15 ஆம் திகதி 1985 ஆம் ஆண்டு வழமை போல் தான் விடிந்தது. குமுதினியின் காலை பயணமும் வழமை போல் தான் சுமுகமாக முடிந்திருந்தது.

சில வேளைகளில் குமுதினியை 'நேவி'சுற்றி வட்டமடிக்கும் அப்படித்தான் அந்த மே மாதம் 15 ஆம் திகதியும் அந்தப் பயணிகள் நினைத்திருப்பர்.

இரண்டு மணிக்கு புறப்பட்ட குமுதினி வழமையான கலகலப்போடு நயினாதீவு முனை வரை அமைதியாகவே பயணித்திருப்பாள். அன்று வேகமாக வந்த கடற்படைப் படகுகள் சுற்றிச் சுற்றி வட்டமடிக்கும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த கொச்சை தமிழ் பேசிய இனந்தெரியாதோரால் வழிமறிக்கப்பட்டது.

ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர்.

பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.

இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர்.அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு.

கடுமையாக தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர்.

பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

குமுதினியாள் நொண்டியாக்கப்பட்டாள். குறையுயிரும் குற்றுயிருமாக அவள் தீவகத்தின் கடலில் பார்ப்பார் மேய்ப்பார் இன்றி அலங்கோலப்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல அலையோடு அலையாகி அடித்துச் செல்லப்பட்டாள்.மனித ஓலங்கள் கடலோடு கரைந்தன.

இனவாதமும் பேரினவாதமும் நெடுந்தீவான் மீது கோர முகத்தை தன்முறையாக காட்டி இருந்தது.இறந்தவர்களின் பெயர்கள் நெடுந்தீவின் நினைவாலயத்தில் இன்றும் அழியா சுவடாய் எழுதப்பட்டுள்ளது.

எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இந்த முதற் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.விசாரணைகளற்ற மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும்.

33 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் மனங்களில் பதிவாகிய மனது நினைக்க மறுக்கும் அன்றைய நாளினை ஒரு தடவை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்.

33 ஆண்டுகள் கடந்து விட்டாலும் நெஞ்சை பதறவைக்கும் இனவெறி தாக்குதலின் உச்சம்.எழுத்தாளரால் எழுத முடியாத துயரம் கவிஞரால் வடிக்க முடியாத கவலை எழுத்துக்களில் அடக்க முடியாத கொடுமை குமுதினி படகின் துன்ப காவியம்!

33 ஆண்டுகளுக்கு முன்னர் தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாகி உயர்ந்து நின்ற குமுதினி 33 ஆண்டு கடந்தும் இன்னும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியாக உயர்ந்து நிற்கிறது.

ஆறாத வடுவாய் 33 ஆம் ஆண்டு நினைவு நாளில்....

https://www.ibctamil.com/history/80/100524?ref=imp-news

  • தொடங்கியவர்
  • குமுதினிப் படுகொலையின் ஞாபகப்பதிவுகள்!!
 
 

குமுதினிப் படுகொலையின் ஞாபகப்பதிவுகள்!!

33 ஆண்­டு­க­ளின் முன்­னர் இதே நாளில் அர­ச­ப­டை­கள் நிகழ்த்­திய கோரத்­தாண்­ட­வம். யாழ்ப்­பா­ணக் குடா­வின் நிலப் பரப்­பி­லி­ருந்து நீண்ட தூரத்தே நீண்ட நெடும் பரப்­பாய் நிமிர்ந்து நிற்­பது நெடுந்­தீவு.

ஆழக்­க­ட­லின் அதி­கா­ரத் தோர­ணை­க­ளுக்­கும், இயற்­கை­யின் இறு­மாப்­புக்­க­ளுக்­கும் இசைந்து போகா­மல் தனக்கே உரித்­தான கம்­பீ­ரத்­து­டன் கல்­வே­லி­க­ளும் பனை, தென்னை, பூவ­ரசு, ஈச்­ச­ம­ரங்­கள் என அழகு செய்ய, நாற்­பு­ற­மும் காவற் தெய்­வங்களின் கண்­கா­ணிப்­பு­டன் தனித்­து­வ­மாய் நிற்­கி­றது அது.

நீண்ட கடல் வெளி­யால் பிரிக்­கப்­பட்டு பய­ணத்­துக்­காக பட­கு­களை நம்­பிக் காத்­துக்­கி­டப்­பி­னும், எம்­ம­வ­ரின் சிந்­த­னை­க­ளும் செயல் வடி­வங்­க­ளும் ஓங்கி ஒலித்த படி­தான் என்­றும் இருக்­கும். ஆழிப் பேரலை­யால் கூட அசைக்க முடி­யா­மற் போன எம் சொந்­தங்­கள் மீது 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் மிகப்­பெ­ரிய வர­லாற்­றுக் கொடுமை நிகழ்த்­தப்­பட்­டது. அது கேட்டு நெடுந்­தீ­வின் குடி­மக்­கள் மட்­டு­மன்றி உல­கமே ஒரு கணம் உறைந்து போனது. அன்­றைய விடு­தலை வேட்கை வீறு கொண்டு வியா­பித்து வளர வழ்­வ­குத்த வர­லாற்­றுச் சம்­ப­வ­மா­க­வும் அது அமைந்­த­தெ­ன­லாம்.

சாதா­ரண பய­ணம்
அரச பணி­யா­ளர்­கள், பெரி­ய­வர்­கள், வியா­பா­ரி­கள், குழந்­தை­கள், பெண்­கள் என அறு­ப­துக்­கும் மேற்­பட்­டோர் நாளாந்த கட­மை­க­ளின் பொருட்டு அன்­றும் தமது பய­ணத்தைக் குமு­தி­னிப் படகு மூலம் மேற்­கொண்­ட­னர். கட­லன்னை தாலாட்ட குமு­தி­னி­யார் நீரைக்­கி­ழித்து அசைந்­தா­டிச் செல்­லும் அந்த ஒரு மணித்­தி­யா­ல­ய­மும் மன­துக்கு மகிழ்வு தரும் பய­ணம்­தான். திரும்­பி­வ­ரும் போது மட்­டும் வைகாசி, ஆனி மாதங்­க­ளில் சிறு அசௌ­க­ரி­யங்­க­ளைப் பொறுத்­துக்­கொள்ள வேண்­டி­ய­தா­யி­ருக்­கும். மன மகிழ்­வோடு புறப்­பட்ட பய­ணி­க­ளுக்கு பய­ணத்­தின் இடை­ந­டு­வில் இடி விழு­மென எவர் தான் எண்­ணி­யி­ருப்­பர்?

கடற்­ப­டை­யி­ன­ரால் படகு நிறுத்­தப்­பட்­டது. சிறி­ய­ ப­ட­கில் வந்­த­வர்­கள் குமு­தி­னி­யில் ஏறிக் கொள்ள வழ­மை­யான வெருட்­டும், அச்­சு­றுத்­தும் செயற்­பா­டு­தான் என எண்­ணி­ய­வர்­க­ளாய் பய­ணி­கள் பட­கி­னுள் மன­துக்­குள் ஒரு அச்ச உணர்­வு­டன் காணப்­பட்­ட­னர். உங்­க­ளை­யெல்­லாம் சோதனை இட வேண்­டும் எனக் கூறி எல்­லோ­ரை­யும் ஒரு­சேர பட­கின் பின்­பக்­க அறைக்­குள் அனுப்பி விட்டு, பின்­னர் ஒவ்­வொ­ரு­வ­ராய் முன் அறைக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு கத்தி, கோடாரி, கொட்­டன்­கள் என்­ப­வற்­றால் வெட்­டி­யும், கொத்­தி­யும் சித்­தி­ர­வதை செய்­தும் படு­கொலை செய்­தமை என்பன கடந்து போனவை.

கட­மையே கண்­ணென வாழ்ந்து காட்­டிய அதி­பர் திரு­மதி பிர­தானி வேலுப்­பிள்ளை, ஆசி­ரி­யர்.சதா­சி­வம் குமு­தி­னி­யின் பிர­தானி தேவ­ச­கா­யம்­பிள்ளை, ஊழி­யர்­க­ளான ந.கந்­தையா, ச.கோவிந்­தன் மற்­றும் க.கார்த்­தி­கேசு என பல அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளு­டன் பெரி­ய­வர்­கள் குழந்­தை­கள் கர்ப்­பி­ணிப் பெண் உட்­பட ஈவி­ரக்­க­மின்றி பல­ரும் குத்­தி­யும் வெட்­டி­யும் குத­றப்­பட்­ட­னர். குருதி வெள்­ளத்­தில் தத்­த­ளித்த இவர்­க­ளில் முப்­பத்­தாறு பேர் (36) கடற்­ப­டை­யி­ன­ரது கொலை­வெ­றிக்கு இரை­யாகி உயி­ரி­ழந்­த­னர். ஏனை­ய­வர்­கள் உயிர் ­தப்­பி­னா­லும் நீண்­ட­கால நோயா­ளி­க­ளா­கவே அவர்­க­ளால் வாழ முடிந்­தது.

சிங்­கள இன­வாத அர­சி­ய­லின் கொடூ­ர­மு­க­மும் கோழைத்­த­ன­மும் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட இந்த சம்­ப­வம் தமிழ் இன விடி­ய­லுக்­காக இளை­ஞர்­களை வீறு­கொள்ள வைத்த வர­லாற்­றுத் தடங்­க­ளில் முதன்­மை­யான தென­லாம். சுமூ­க­ மான சூழ்நிலை நில­வும் போது குடும்ப உற­வு­க­ளோடு இணைந்­தி­ருக்க வேண்­டி­ய­வர்­கள் இன்று இல்லை என்­பதை எண்­ணிப்­பார்க்­கை­யில் இது எத்­தனை கொடு­மை­யா­னது என்­பது புரி­யும்.

வெட்­டு­வ­தும் கொத்­து­வ­தும் வேரோடு சாய்ப்­ப­து­வும் சிங்­கள இன­வாத சக்­தி­க­ளுக்கு ஒன்­றும் புதி­ய­தல்ல. குமு­தி­னி­யில் மட்­டு­மல்­லாது குரு­ந­க­ரி­லும் இதே வெறி­யாட்­டம் இடம்­பெற்­றதை இலே­சில் மறந்து விட இய­லுமா?

கவி­ஞர்­கள் பார்­வை­யில் குமு­தினி
சம­கால கவி­ஞர்­க­ளால் குமு­தி­னிப்­ப­டு­கொலை கவி­வ­ரி­க­ளில் வெளிக்­கொண்டு வரப்­பட்­டன. கவி­ஞர் புது­வை ­ரத்­தி­னத்­துரை ‘’குமு­தி­னிப் பட­கில் யார் வெட்­டி­னார்­கள்…. குரு நகர் கட­லில் ஏன் கொத்­தி­னார்­கள்… என்றும், நயி­னைக்­கவி குலத்­தின் ‘’கார்த்­தி­கேசு என்­ன­வா­னான்….’’என்று நீளும் கவி அவ­ல­மும் புங்கை நகர் கவிக்கோ சு.வில்­வ­ரத்­தி­னத்­தின் காலத்­து­யர் கவி­தை­யூ­டாக

‘’முட்­டை­களை வெட்ட ஏந்­திய வாள்­கள் மலர்­களை, தளிர்­களை, பிஞ்­சு­களை  கனிய நின்ற தோப்­பு­களை, என்ற வரி­க­ளும் குமு­தி­னிப் பட­கில் பேரி­ன­வாத கடற்­ப­டை­யி­ன­ரது கத்­திக்­கும் கோடா­ரிக்­கும் வாளுக்­கும் இரை­யாகி அவ­ல­மாக உயிர் நீத்த உறவு­க­ளின் நினைவை மனக்­கண்­முன் நிறுத்­து­கின்­றன.­ வெட்டி எறிந்த குரு­திக்­காட்­டில் எது பூக்­கும்? என்ற ஏக்­க­மும் என்­றும் எம் தீவு மக்­க­ளின் நாடித்­து­டிப்­பின் அடை­யா­ளங்­க­ளாய் நீண்டு செல்­லும்.

திருப்­பு­முனை நோக்கி
செல்­ல­ரித்­துப் போன தேச கட்­டு­மா­னங்­க­ளில் எம்­ம­வ­ரின் இழப்­புக்­கள் நிலை­யா­னவை. இன­வாத அர­சு­களை ஆட்­டங்­காண வைத்த வர­லாற்­றுப் பதி­வு­க­ளில் ஒரு முக்­கிய திருப்பு முனை. ஈழ விடு­தலை வர­லாற்­றில் என்றும் ஈரம் காயாத வரி­க­ளாய் நிலைத்து நிற்­பது குமு­தி­னிப் படு கொலை. அன்று அரச படை­க­ளின் கோரத் தாண்­ட­வத்­தால் குத­றப்­பட்­டோரை ஒன்­று­பட்ட ‘’இளை­ஞர் அணி­க­ளும்’’ பொது மக்­க­ளும் காப்­பாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­தால் அனே­க­மா­னோர் காப்­பாற்­றப்பட்டுள்ளனர்.

நினைவு தின­மும் நினை­வா­ல­ய­மும்
இறந்­தோ­ரின் நினை­வாக சமய வழி­பா­டு­க­ளு­டன் ஊர்­வ­லங்­க­ளும் நினை­வுக் கூட்­டங்­க­ளும் நடத்­தப்­பட்­டன. ‘’இளம் பற­வை­கள் கலா­மன்­றம்’ எனும் அமைப்பு நினை­வா­ல­யம் அமைப்­ப­தற்­கான முதல் முயற்­சியை செய்­தி­ருந்­தது. காலப் போக்­கில் பிர­ஜை­கள் குழு, பிர­தே­ச­சபை போன்­றவை தற்­போ­தைய நினை­வா­ல­யம் வரை­யான ஆக்­க­பூர்வ பணி­களை மேற்­கொண்­டி­ருந்­தன என­லாம். குமு­ தி­னிப்­ப­ட­கில் அரச படை­யி­னர் ஆடிய ஊழிக் கூத்­தின் முப்­பத்து மூன்று வரு­டங்­கள்; நிறை­வ­டை­யும் இன்­றைய நாள்­வரை எம்­ம­வர் மத்­தி­யில் குமு­தினி பேசு பொரு­ளாக அமைந்­தி­ருக்­கி­றது.

குமு­தி­னி­யின் சேவை­யும், தேவை­யும்
குமு­தி­னிப்­ப­டகு இற்­றைக்கு சுமார் எண்­பது வரு­டங்­க­ளுக்கு முன் கட்­டப்­பட்­டது. இன்று வரை அது சேவை செய்து வரு­கின்­றது. இடை­யில் பழு­த­டைந்­தால் பத்­தி­ரி­கை­கள் சோக கீதம் பாடு­வ­தைக் கேட்­க­லாம். அத்­தனை முக்­கி­யத்­த­து­வம் குமு­தி­னிக்கு உண்டு.

காற்­றும் மழை­யும் வெயி­லும் கொடும் மழை­யும்
ஏற்று எமைச் சுமக்­கும் குமு­தி­னித்­தாய்
கூற்­று­வ­ரின் கூட்­டக்
கொடுங்­கத்தி வாள்­மு­னை­யில்
வீழ்ந்­தாள் கடல் முனை­யில்
உப்­பு­தி­ருங் காற்­றின் உத­வி­யு­டன் கரை­சேர
செத்­த­வ­ராய்ப் போனோம் – நாம்
அவளோ…
சாகா வர­மெ­டுத்­தாள்
மீண்­டும் எமைச்­சு­மக்க

குமு­தி­னி­யின் வயது என்­ப­தைத் தாண்­டி­யுள்­ளது. இந்­தத் துன்­பி­யல் இன்­று­டன் முப்­பத்­தி­ரண்டு ஆண்­டு­க­ளைக்­க­டந்து நிற்­கின்­றது. எமது வாழ்­வின் நெருக்­கீ­டு­க­ளை­யும், தடை­க­ளை­யும் உணர்ந்து கொள்­ளும் ஒரு நாளாக இன்­றைய நாள் அமை­யும். குமு­தி­னிக்­குள் நடந்த இந்த சோகங்­க­ளைப் போல், குமு­தி­னி­யும் பல சோகங்­களைச் சுமந்­தும் நெடுந்­தீவு மக்­களை சுமந்து கரை சேர்க்­கும் தாயாக பாரிய பொறுப்பை இன்­றும் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கின்­றாள்.
ஈர­மின்றி இறுகிப்­போன மனித மனங்­க­ளுக்கு வாழ்­வின் வலி­யை­யும், வழி­யை­யும், வனப்­புக்­க­ளை­யும் சொல்­லும் வள­மான ஆசா­னாய் இன்­றும் எம்­மு­டனே வலம் வருகிறாள் குமு­தி­னி­யாள். என்­றும் அவளே துணை என்ற நினைப்­புக்­க­ளு­ டன் எம்­ம­ வ­ரின் கடல்­வ­ழிப் பய­ணம் தொடர்­கின்­றது.

குற்­ற­வா­ளி­கள் யார்?
அன்­றைய அர­சின் கட்­ட­ளைக்கு அமைய செய்­யப்­பட்­ட­தாகக் கரு­தப்­ப­டும் இந்­தச் சரித்­திர அவ நிகழ்வு காலங்­கா­ல­மாக உற­வு­க­ளா­லும் ஊர­வ­ரா­லும் பேசப்­பட்­டா­லும் ‘’அர­சி­யல்­வா­தி­கள்’’ இன்­ன­மும் சிறு­பிள்­ளை­க­ளா­கவே இருப்­ப­தாய் எண்­ணத் தோன்­று­கின்­றது. குற்­ற­வா­ளி­யா­கக் கொள்­ளத்­தக்­க­வர்­க­ளுக்கு பாத­பூசை செய்­ப­வர்­க­ளாக எம்­ம­வர்­கள் மாறி­விட்­டார்­களே. இன ஐக்­கி­யம், மத நல்­லி­ணக்­கம் என்­ப­வற்­றின் பேரால் இந்த இழப்­புக்­க­ளை­யும் மறப்­ப­தைத் தவிர வேறு வழி என்ன இருக்­கி­றது எமக்கு? அமை­தி­யாய் அமை­திக்­காய் மௌனிப்­போம்.

http://newuthayan.com/story/92945.html

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் எமது நீங்காத நினைவுகளில் நீங்கள் !

கண்ணீர் அஞ்சலிகள்...!

  • தொடங்கியவர்
  • குமுதினிப் படுகொலை- நினைவிடத்தில் அஞ்சலி!!
 
 

குமுதினிப் படுகொலை- நினைவிடத்தில் அஞ்சலி!!

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து  64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது. படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இதனை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் முரளி தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Capture-119-300x159.jpgUntitled-3-copy-2-300x175.jpgCapture-120-300x150.jpgUntitled-2-copy-2-300x175.jpgUntitled-7-copy-300x166.jpg

http://newuthayan.com/story/92977.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.