Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக ஊடகமான 'விடுதலை' யில் வந்த 'முதன் முதலாக விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல்!'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஊடகமான 'விடுதலை' யில் வந்த 'முதன் முதலாக விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல்!'

முதன் முதலாக விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல்!

ருசியாவின் `மிக்’ ரக சண்டை விமானங்களும்

இசுரேலின் `கிபிர்’ ரக விமானங்களும் கடும் சேதம்

அதிர்ச்சியில் உறைந்தது சிங்கள இராணுவம்!

கொழும்பு, மார்ச் 26- விடுதலைப்புலிகள் முதன்முதலாக விமானத் தாக்குதலைத் தொடுத்து சிங்கள இராணுவத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.

சிங்களர்களின் விமானப்படைத் தாக்குதல் அத்துமீறிப் போய்க் கொண்டிருப்பதால், விடுதலைப்புலிகள் மிகப்பெரிய பதிலடி கொடுப்பார்கள் என்று உளவுத் துறையினர் கூறிவந்தனர். புலி வருகிறது, புலி வருகிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், உண்மையிலேயே புலி வந்து கிலியை ஏற்படுத்திவிட்டது.

இன்று அதிகாலை விடுதலைப்புலிகள் முதன்முதலாக தங்கள் விமானப்படையைப் பயன்படுத்தி அதிரடித் தாக்குதலை நடத்தினர். கொழும்பு அருகே காட்டுநாயக்காவில் உள்ள சிங்கள விமானப்படை தலைமைத் தளம் மீது இந்த தாக்குதல் நடந்தது.

நள்ளிரவு 12.45 மணிக்கு விடுதலைப்புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தின. தாக்கப்பட்ட தளத்தில் இரண்டு விமானங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. ஈழத் தமிழர்கள்மீது குண்டு வீச இந்த விமானங்களைத்தான் இலங்கை பயன்படுத்தி வருகிறது. அந்த விமானங்களை குறிவைத்து விடுதலைப்புலிகள் விமானங்களில் இருந்து குண்டுகளை வீசினர். மூவர் பலி 16 பேர் படுகாயம்!

இதில் மிக், கிபிர் சண்டை விமானங்கள் கடும் சேதம் அடைந்தன. இந்தத் தாக்குதலின்போது விமானப் படை வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வான் புலிகளின் எதிர்பாராத தாக்குதலால் இலங்கை விமானப்படை வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மற்றொரு பகுதியில்தான் கொழும்பு பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. வான் புலிகள் மீண்டும் தாக்கக் கூடும் என்ற பயத்தில் உடனடியாக கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டது.

இன்று காலை 8.30 மணி-வரை விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இதனால் கொழும்புவுக்கு வந்த மூன்று வெளிநாட்டு விமானங்கள் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டன. 8.30 மணிக்குப் பிறகு கொழும்பு விமான நிலையம் திறக்கப்பட்டாலும், அதிகாரிகளும், பணியாளர்-களும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

கதி கலங்கிய இலங்கை விமானப்படை

வான்புலிகளின் அதிரடித் தாக்குதல் காரணமாக கட்டுநாயக்க பகுதி முழுவதும் இன்று காலை வரை புகை மண்டலமாகக் காட்சி அளித்-தது. இதனால் கொழும்புவில் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இலங்கை விமானப்-படையினர் கதிகலங்கி விட்டனர்.

வான்புலிகள் தாக்குதல் நடத்தியதை சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தமிழ்ச்செல்வன் உறுதிப்படுத்தினார். காட்டுநாயக்க விமானப்படை தளத்-தில் பார்க்கிங் பகுதியில் நான்கு குண்டுகள் வீசப்பட்டதாகத் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள்

விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராசையா இளந்திரையன் கூறியதாவது: வான்புலிகளின் இரண்டு விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. கட்டுநாயக்க தலைமை முகாமை அழித்துவிட்டு இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக வன்னிபடை தளத்துக்குத் திரும்பி வந்துவிட்டன.

வான்புலிகள் தாக்குதலில் கிபிர்’, மிக்’ ரக விமானங்களுக்குப் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும். வான்புலிகள் முதன்முதலாக இன்றுதான் தாக்குதலை தொடங்கி உள்ளனர். எம் மக்களைக் காப்பாற்றுவதற்காக, இலங்கை விமானப்-படையை அழிக்கவே இன்றைய வான்தாக்குதல் நடத்-தப்பட்டது. இவ்வாறு ராசையா இளந்திரையன் கூறினார்.

வான்புலிகள் தாக்குதலை ராணுவ செய்தித் தொடர்பாளர் அஜந்தா சில்வா ஒப்புக் கொண்டார். அவர் கூறியதாவது: வான்புலிகள் தாக்குதல் நடத்தியதும், வான் எதிர்ப்புச் சாதனங்கள் இயங்கின. உடனே விடுதலைப்புலிகளின் இரண்டு விமானங்களும் தப்பிச் சென்றுவிட்டன. எங்களது வான்படை மூலம் புலிகளின் விமானங்களைத் தேடி வருகிறோம்.

அவர்கள் நடத்திய குண்டுவீச்சு குறி தப்பிவிட்டது. எனவே, எங்களுக்கு அதிக சேதம் இல்லை. விமானப்படைத் தளத்துக்குள் எரிந்த தீயை உடனே அணைத்துவிட்டோம். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வான்தாக்குதல் நடத்தப்-பட்டதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வான் தாக்குதல்கள் தொடரும் என விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், கொழும்புவின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின் விளக்குகளை எரிய விட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு அஜந்தாசில்வா கூறினார்.

-விடுதலை

************************************************************

ஜயா இதில் இன்னுமொரு உண்மையை இவர்கள் தெளிவாக கூறியிருக்கவேண்டும், அதாவது ஸ்ரீலங்கா அரசு பயங்கரவாதிகள் தமிழ்ப் பொது மக்களை மட்டுமே குறிபார்த்து குண்டு வீசி அழித்துக் கொண்டீருக்கும் வேளை, விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் இயக்கம், எதிரியினால் நிர்வகித்துக் கொண்டு வரும் அவர்களின் இன மக்களின் உயிர்களை இயன்றளவு பாதுகாத்தே போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை.

இந்த விடுதலை ஏடு தந்தை பெரியாரால் நிவாகிக்கப்பட்டதா???எங்கயோ வாசித்திருகிறேன் போராளி குழுக்கள் தமிழகம் சென்று போராட்டத்தை அரசியல் வாதிகளிடம் விளக்குகையில் சின்னப்பிள்ளைகள் போய் படியுங்கள் என பெரும்பாலானோர் அறிவுறை சொன்னதாகவும் ஆனால் பெரியார் அதை புரிந்து கொண்டு ஈழ போராட்டம் சார்பாக கட்டுரை எழுதி தரும்படி கேட்டு அதனை விடுதலை நாளேட்டில் போட்டதாகவும்

ஆம் விடுதலை, பெரியாரால் ஆரம்பிக்கப்பட்டது.

இரவு நேரங்களில் மின் விளக்குகளை எரிய விட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு அஜந்தாசில்வா கூறினார்

இது போதும் இப்போதைக்கு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடுதலை ஏடு தந்தை பெரியாரால் நிவாகிக்கப்பட்டதா???எங்கயோ வாசித்திருகிறேன் போராளி குழுக்கள் தமிழகம் சென்று போராட்டத்தை அரசியல் வாதிகளிடம் விளக்குகையில் சின்னப்பிள்ளைகள் போய் படியுங்கள் என பெரும்பாலானோர் அறிவுறை சொன்னதாகவும் ஆனால் பெரியார் அதை புரிந்து கொண்டு ஈழ போராட்டம் சார்பாக கட்டுரை எழுதி தரும்படி கேட்டு அதனை விடுதலை நாளேட்டில் போட்டதாகவும்

யாழ்கள சாத்திரியின் ஆக்கத்தினை வாசித்துப் பாருங்கள். அதில் இப்படி வருகிறது

சத்தியசீலன் மகாஉத்தமன் மற்றும் ஞானம் ஆகியோர் 1971ம் அண்ட ஆவவணி மாதமளவில் இந்தியா சென்று தமிழ் நாட்டில் சுயமரியாதை கொள்கையின் தந்தையும் திராவிடர் கழக தலைவருமான ஈ.வே.ரா. பெரியார் இந்தியாவின் விஞ்ஞானியும் அறிஞருமான ஜு.டி நாயுடு மற்றும் மா.பொ.சி ஆகியொரை சந்தித்து சிங்கள அரசின் ஏமாற்று வேலைகளை விளக்கி தங்கள் கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் என்பனவற்றை விளக்கியும் அதற்கான முன்னெடுப்புகளிற்கு அவர்களின் உதவியை வேண்டி நின்றனர்.அதற்கு அவர்களும் தங்களால் முடிந்த உதவிகள் வழங்குவதாக கூறி வாழ்த்தி வழியனுப்பி வைத்ததுடன் ஈ. வே.ரா. பெரியார் சத்திய சீலனிடம் சுருக்கமாக ஒரு கட்டுரையும் எழுதிவாங்கி தனது விடுதலை பத்திரிகையில் வெளியிட்டார்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=205580

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.