Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அடைமழை! 9 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை

Featured Replies

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அடைமழை! 9 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பாகங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என திணைக்களம் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, பதுளை, நுவரெலியா, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மலைக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை மாலை 3 வரை அமுலில் இருக்கும் என கட்டடம் ஆராய்ச்சி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மலைகளுக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் திடீரென நிலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம், மரங்கள் விழுதல், மின்சார தூண்களில் மின்சார கசிவு போன்ற ஆபத்துக்கள் இருப்பின் உடனடியாக அவ்விடத்தை விட்டு செல்லுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/weather/01/183126?ref=imp-news

  • தொடங்கியவர்

வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி நகரம்

மலையகத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக நாவலப்பிட்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

New-Layout-_1_.jpg

இன்று ஞாயிற்றுகிழமை பெய்த கடும் மழையின் காரணமாக நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதியின் அஞ்சல் நிலைத்தில் இருந்து நாவலப்பிட்டி நகரம் வரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நாவலப்பிட்டி நகரத்தில் வர்த்தக நிலையங்களுக்கு அண்மையில் காணப்படுகின்ற கால்வாய்களில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதனால் வீதிகளில் வெள்ள நீர் நிறைந்து நாவலப்பிட்டி நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/33669

  • தொடங்கியவர்

களனி கங்கையின் நீர் மட்டம் உயர்கிறது : கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை !

 

நாட்டில் பெய்து வரும் அடை மழையையடுத்து பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது களனி கங்கையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

kalani.jpg

இதனால் களனி கங்கையை அண்டிய தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு, களனி, கடுவெல, கொலன்னாவ, ஹங்வெல்ல, தொம்பே, பியகம, தெஹியோவிட்ட , ருவான்வெல்ல ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பான திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில் அங்கு பெய்துவரும் கடும் மழையையடுத்து தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றதெனவும் இதனால் தாழ் நிலப் பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொடர்ச்சியான மழை காரணமாக மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் கங்கை மற்றும் அத்தனகல ஆறு ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றதால் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

களுகங்கை மில்லகந்த பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் மதுராவல , ஹொரணை , புளத்சிங்கள,இங்கிரிய மற்றும் பாலிந்த நுவர போன்ற பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் , ஜின்கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் பத்தேகம , போபே -போத்தல , நாகொடை , நியாகம , தவலம மற்றும் நெலுவ போன்ற பிரதேச மக்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் , அத்தனகலை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் , நீர்கொழும்பு , ஜா- எல , மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேசங்களை சேர்ந்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் மழை ஓயாது  பெய்துவருவதால் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக  களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல், பதுளை போன்ற மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் கூட்ட கட்டமைப்பு காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

காற்றின் வேகம் உடனடியாக அதிரிக்கக்கூடும் என்பதனால், கடல் பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும். இந்தப் பிரதேச கடல் கொந்தளிப்பாக காணப்படும். 

இதனால் மீன்பிடியில் ஈடுபடுவோர் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறுவளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையின் போது நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக இரத்தினபுரி , எலபாத , கிரியெல்ல , அயகம, களுத்துறை மற்றும் காலி போன்ற பிரதேசங்களில் 17 கடற்படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/33671

  • தொடங்கியவர்

இலங்கை: 'கடும் மழை பெய்யக்கூடும்' - சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

இலங்கையின் பல பகுதிகளில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றிரவு கடும்மழை பெய்யக்கூடும் - மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப் படம்

இதன்படி, மேல், வடமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவும் என திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திற்கு 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும். அதேவேளை, ஏனைய சில மாகாணங்களுக்கு 100 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலையினால், 7 மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம் Image captionகோப்புப் படம்

இதன்படி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய 7 மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிடம் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

மண்சரிவு அபாயம் ஏற்படும் இடங்கள்

150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் மாவட்டங்களுக்காகவே இந்த சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினர்.

இதன்படி, ரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட குருவிட்ட, எலபாத்த ஆகிய பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கும் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, தவலம, கடவஸ்அத்தர மற்றும் நாகொடை ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வது சிறந்ததாக அமையும் என தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி கூறினார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால், வெள்ள பெருக்கு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்து, மில்லகந்த பகுதியில் ஆற்று நீர் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், மதுராவல, ஹொரணை, புலத்சிங்கல, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அத்தனகல்லஓய பெருக்கெடுத்துள்ளமையினால், வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதனால், நீர்கொழும்பு, ஜா-எல, மினுவங்கொடை மற்றும் கம்பகா ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், உடனடி உதவிகளை வழங்குவதற்காக தமது படையினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

இதற்கமைய, மேல் மாகாண பாதுகாப்பு படை பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிடிகேடியர் சுமித் அத்தப்பத்து குறிப்பிட்டார்.

மேலும், அனர்த்தங்கள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற பகுதிகளிலுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக படகுடன், 17 குழுக்கள் தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும், காலி மாவட்டத்திற்கும் இந்த குழுவினர் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அதிக மழை வீழ்ச்சியுடனான வானிலையினால் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இன்றிரவு கடும்மழை பெய்யக்கூடும் - மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு Image captionகோப்புப் படம்

இதன்படி, காலி, மத்துகம மற்றும் அகலவத்தை ஆகிய பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளன.

மத்துகம, காலி மற்றும் அகலவத்தை ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழையினால் மின்சார சபையின் பிரதான மின் கட்டமைப்பு மின் ஆழி செயலிழந்துள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன கூறினார்.

மேலும், மரம் முறிந்து வீழ்ந்தமையினால், தடைப்பட்டிருந்த கேகாலை நகருக்கான மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ள பகுதிகளுக்கான விநியோகத்தை வழமை போன்று வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுப்பட்டு வருவதாகவும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன கூறினார்.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள அதிக மழையுடனான வானிலையினால், அதிவேக வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதிவேக வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள், மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு அதிவேக வீதி கட்டுப்பாட்டு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டிலுள்ள சட்டத்திற்கு அமைய, மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்த வேண்டியுள்ள போதிலும், தற்போதுள்ள நிலைமையின் கீழ் வீதி வலுக்கும் அபாயம் காணப்படுவதாக அந்த பிரிவின் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டினார்.

இன்றிரவு கடும்மழை பெய்யக்கூடும் - மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வீதி விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடனேயே தாம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதிவேகத்தில் வாகனங்களை செலுத்தாத சாரதிகளுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என, அதிவேக வீதியிலுள்ள அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, அதிவேக வீதிகளில் இன்று 6 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, தெற்கு அதிவேக வீதியில் 4 வாகன விபத்துக்களும், கட்டுநாயக்க அதிவேக வீதியில் 2 வாகன விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரத் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறுமியொருவரும், பெண்ணொருவரும் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீரற்ற வானிலையினாலேயே இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய சீரற்ற வானிலையினால் காலி நகருக்குள் பிரவேசிக்கும் பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்து பெய்த கடும் மழையுடன் கூடிய வானிலையினால் இன்று காலை இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது

காலி - பத்தேகம வீதியும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் வாகன போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் தென் மாகாணத்தின் கடல் பிராந்தியங்களில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.

இதனால் காலி மற்றும் அதனை அண்மித்த கடல்சார் தொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு செல்லவில்லை..

மேலும், கிங் கங்கையின் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை: இன்றிரவு கடும்மழை பெய்யக்கூடும் - மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு Image captionகோப்புப் படம்

இதேவேளை, மாத்தறை - தெனியாய பிரதான வீதியின் நெலுவ பகுதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளமையினால், போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நெலுவ - மொரவக்க பிரதான வீதியில் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கி நிற்கின்றன.

மேலும், குறித்த பகுதியிலுள்ள தாழ் நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளன.

இதேவேளை, மத்திய மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழையுடன் கூடிய வானிலையினால் லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

அத்துடன், காசல்ரீ, கெனியன் மற்றும் விமல சுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும் கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்றன.

https://www.bbc.com/tamil/sri-lanka-44191372

  • தொடங்கியவர்

கடும் மழை­யினால் 8690 பேர் பாதிப்பு

06-9e3416ce399949c15f8e4c3208dd5f45c560a8c1.jpg

 

நான்கு பேர் பலி; முப்­படையினர், பொலிஸார் தயார் நிலையில

(எம்.எப்.எம்.பஸீர்)

தென் மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை கார­ண­மாக நாட்டில் பெய்துவரும் கடும் மழையால் 10 மாவட்­டங்­களைச் சேர்ந்த 8690 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­விக்­கின்­றது.

2194 குடும்­பங்­களைச் சேர்ந்­தோரே இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் காலி மாவட்­டத்தைச் சேர்ந்­தோரே பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த நிலையம் தெரி­வித்­தது. அத்­துடன் கடும் மழை கார­ண­மாக ஏற்­பட்ட இடி, மின்னல் தாக்­கத்தால் மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் மர­மொன்று முறிந்து விழுந்­ததன்  ஊடாக இன்­னு­மொ­ருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­தது. 

இந்த நிலையில் தொடர்ச்­சி­யாக பெய்து வரும் கடும் மழை­யினால், வெள்ளம் அல்­லது வேறு அனர்த்­தங்கள் ஏற்­ப­டு­மாயின் உட­ன­டி­யாக அன்ர்த்த மீட்பு, நிவா­ரண பணி­களில் ஈடு­பட முப்­படை மற்றும் பொலிஸார் தயார் நிலையில் உள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த சில நாட்­க­ளாக பெய்து வரும் அடை மழை கார­ண­மாக, அனு­ரா­த­புரம், முல்லை தீவு, திரு­கோ­ண­மலை, மாத்­தளை, நுவ­ரெ­லியா, பதுளை, கேகாலை, இரத்­தி­ன­புரி, காலி மற்றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­களைச் சேர்ந்தோர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இத­னை­விட தலை நகர் கொழும்பு, குரு­ணாகல், புத்­தளம், கம்­பஹா உள்­ளிட்ட பகு­தி­களில் தொர்ச்­சி­யாக பெய்த மழை கார­ண­மாக பொது மக்­களின் அன்­றாட நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்­தது. 

கடற் பரப்பில் கடும் காற்று; அலைகள் சீற்றம் 

நாட்டைச் சூழ­வுள்ள கடற்­ப­ரப்­பு­களில், காற்­றுடன் கூடிய நிலை­மையும் மழை நிலை­மையும் நேற்று காலை முதல் அதி­க­ரித்­தி­ருந்­தது. குறிப்­பாக புத்­த­ளத்­தி­லி­ருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்­பாந்­தோட்டை வரை­யான கரை­யோ­ரங்­களில் இடி­யுடன் கூடிய மழை காணப்­பட்­ட­துடன் இக் கடற்­ப­ரப்­பு­களில் சில இடங்­களில் பலத்த மழை­வீழ்ச்சி பதி­வ­கை­யுள்­ளது. 

இத­னை­விட நாட்டைச் சூழ­வுள்ள கடற்­ப­ரப்­பு­களில் காற்­றா­னது மேற்கு முதல் தென்­மேற்கு வரை­யான திசை­க­ளி­லி­ருந்து வீசு­வ­துடன் காற்றின் வேக­மா­னது நேற்று மணித்­தி­யா­லத்­துக்கு 30 - 40 கிலோ மீற்றர் வரை காணப்­பட்­டது.

புத்­த­ளத்­தி­லி­ருந்து மன்னார் ஊடாக காங்­கே­சன்­துறை வரை­யான மற்றும் மாத்­த­றை­யி­லி­ருந்து அம்­பாந்­தோட்டை ஊடாக பொத்­துவில் வரை­யான கடற்­ப­ரப்­பு­களில் காற்றின் வேக­மா­னது அவ்­வப்­போது மணித்­தி­யா­லத்­துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதி­க­ரித்து வீசி­யி­ருந்­தது. இந் நிலையில் அப்­ப­கு­தி­களில் கடற்­றொ­லிலில் முன்­னெ­டுப்போர் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்­டி­ருந்­தனர்.

2194 குடும்­பங்கள் பாதிப்பு 

இந் நிலையில் பெய்­து­வரும் அடை மழைக் கார­ண­மாக இது­வரை பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்­ப­டாத போதும் பல தாழ் நிலப்­ப­கு­திகள் நீரில் மூழ்­கி­யுள்­ளன. இதனால் பொது மக்­களின் அன்­றாட நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக 10 மாவட்­டங்­களைச் சேர்ந்த 2194 குடும்­பங்கள் மழையால் பாதிக்­கப்ப்ட்­டுள்­ள­துடன் அவர்­களில் 64 குடும்­பங்­களைச் சேர்ந்த 252 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். அத்­துடன் 6 வீடுகள் முற்­றா­கவும் 282 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­தது.

மின்னல் தாக்கி இருவர் உயி­ரி­ழப்பு:

தொடர்ச்­சி­யாக பதி­வாகும் இடி­யுடன் கூடிய மழை கார­ண­மாக இது­வரை மூன்று உயி­ரி­ழப்­புக்கள் பதி­வ­கை­யுள்­ளன. மழை­யுடன் ஏற்­பட்ட இடி மின்னல் தாக்கம் மற்றும், கடும் காற்றால் மரம் விழுந்­தமை அகை­ய­வற்றால் இம்­மூன்று உயி­ரி­ழப்­புக்­களும் வெலிக்­கந்த, பதுளை பகு­தி­களில் பதி­வா­கி­யுள்­ளன.

நேற்று முன் தினம் மாலை 5.00 மணி­ய­ளவில் வெலி கந்த பொலிஸ் பிரிவில் எப்.5 கால்வாய்ப் பகு­தியில் வயல் வேலையில் ஈடு­பட்­டி­ருந்த போது மின்னல் தாக்­கி­யதில் இருவர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.  நிமந்த டில்ருக் டி சொய்ஸா எனும் 33 வய­தான நபரும் பரண விதா­ர­ணகே லக்ஷான் எனும் 17 வய­தான இளை­ஞ­னுமே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளனர். 

இந் நிலை­யி­லேயே பதுளை- மொன­ரா­கலை, படல் கும்­பர பகு­தியைச் சேர்ந்த பெண் ஒருவர் மரம் முறிந்து விழுந்­ததில் உயி­ரி­ழந்­துள்ளார். 30 வய­தான முன் பள்ளி ஆசி­ரியர் ஒரு­வரே இதன்­போது உயி­ரி­ழந்­துள்ளார். 

அதிக பாதிப்பு காலிக்கு:

மழைக் கார­ண­மாக காலி மாவட்­டத்­தி­லேயே அதிக பாதிப்­புக்கள் இது­வரை பதி­வ­கை­யுள்­ளன. மாவட்­டத்தில் 1960 குடும்­பங்­களைச் சேர்ந்த 7742 பேர் மழையால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் காலி மாவட்­டத்தின் பல வீதிகள் மழை கார­ண­மாக நீரில் மூழ்­கி­யுள்­ளன.

அதி­வேக பாதையில் வேகத்­துக்கு கட்­டுப்­பாடு: 

 

இத­னி­டையே நேற்று சீரற்ற கால நிலை கார­ண­மாக, தெற்கு, கட்­டு­நா­யக்க அதி­வேகப் பாதை­களில் மட்டும் 5 விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். இதில் 5 விபத்­துக்கள் தென் அதி­வேக வீதி­யிலும் இரண்டு கட்­டு­நா­யக்க அதி­வேக வீதி­யிலும் இடம்­பெற்­றுள்­ளன. இந் நிலையில் தென் அதி­வேக வீதியில் நேற்று முற்­பகல் 11.50 மணி­ய­ளவில் ஜீப் ஒன்று பாதையை விட்டு விலகி ஏற்­பட்ட விபத்தில் 4 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் இதில் தாய் மற்றும் மகள் ஆகி­யோரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். 

இந் நிலையில் அதி­வேக பாதையை பயன்­ப­டுத்­துவோர், மிகக் கவ­ன­மாக பய­ணிக்­கும்­மாறு பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இத­னி­டையே அடை மழை கார­ண­மாக தெற்கு அதி­வேக பாதையில் வேகக் கட்­டுப்­பா­டா­னது மணித்­தி­யா­லத்­துக்கு 60 கிலோ மீற்­றர்கள் என மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதற்­கான அறி­வு­றுத்­தல்­களை அதி­வேக பாதை நிர்­வாகம் நேற்று காலை முதல் உள் நுழையும் அனைத்து வாகன சார­தி­க­ளுக்கும் வழங்­கி­யி­ருந்­தது.

நீர்த்­தேக்­கங்கள், நதி­களில் நீர் மட்டம் உயர்வு:

நாட­ளா­விய ரீதியில் பல நீர்த்­தேக்­கங்­களில் நீர் மட்டம் சடு­தி­யாக உயர்­வ­டைந்­துள்­ளது. மலை­ய­கத்தில் ரந்­தெ­னி­கல நீர்த்­தேக்­கத்தின் நீர் மட்டம் 83.9 வீதத்­தி­னாலும் கொத்­மலை நீர்த்­தேக்­கத்தின் நீர் மட்டம் 73.1 வீதத்­தாலும் உயர்­வ­டைந்­துள்­ளது.

இந் நிலையில் தெதுரு ஓயவின் 4 வான் கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்ள நிலையில் உட­வ­ளவ நீர்த்­தேக்­கத்தின் ஒரு வான் கதவு திறக்­கப்­பட்­டுள்­ள­தாக நீர்ப்­பா­சன திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.

எவ்­வா­றா­யினும் இலங்­கையில் எந்த ஒரு ஆறும் வெள்ள அபாய மட்­டத்தை இது வரை எட்­ட­வில்லை எனவும், எனினும் படிப்­ப­டி­யான நீர் மட்ட அதி­க­ரிப்பை அவ­தா­னிக்க முடி­வ­தா­கவும், அதனால் ஆறு­களின் கரைகள், தாழ் நிலங்­களில் உள்ளோர் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறும் நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளமும் அனர்த்த நிவா­ரண மத்­திய நிலை­யமும் பொது மக்­களைக் கோரி­யுள்­ளன.

கொழும்பின் நிலைமை: 

நேற்றும் கொழும்பில் 100 மில்­லி­மீற்றர் வரை­யி­லான மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. தொடர்ச்­சி­யாக கொழும்பில் பெய்­து­வரும் மழையால் தலை நகரை அண்­டிய பகு­தி­களில் வெள்ள நிலைமை ஏற்­படும் என பலரும் அச்சம் கொண்­டுள்­ளனர்.

எனினும் கொழும்­புக்கு வெள்ளம் ஏற்­பட முக்­கிய கார­ண­மாக அமையும் களனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­துள்ள போதும் அது இன்னும் வெள்ள அபாய அளவை அடை­ய­வில்லை என நீர்ப்­பா­சன திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.

களனி கங்­கையின் நீர் மட்­ட­மா­னது ஹங்­வெல்­லையில் நீர் அள­வீட்டு மானியில் 2.25 மீற்­ற­ரா­கவும், கிராண்பாஸ் - நாக­லகம் வீதி நீர் அள­வீட்டு மாணியில் 1.1 மீற்­ற­ரா­கவும் நேற்று காலை அள­வி­டப்­பட்­டுள்­ளது. களனி கங்கை வெள்ள அபா­யத்தை எட்ட வேண்­டு­மாயின் ஹங்­வெல்லை நீர் அள­வீட்டு மானியில் 7 மீற்­றர்­க­ளா­கவும் நாக­லகம் வீதி நீர் அள­வீட்டு மாணியில் 4 மீற்­றர்­க­ளா­கவும் நீர் மட்டம் உயர வேண்டும் என நீர்ப்­பா­சனத் திணைக்­களம் தெரி­வித்­தது.

இந் நிலையில் தற்­போ­தைக்கு வெள்ள அபாயம் விடுக்­கப்­ப­டாத போதும் நீர் மட்டம் உயர்­வ­டைதல் தொடர்பில் தாழ் நில பிர­தேச மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும் என அத்­தி­ணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

முப்­படை பொலிஸ் தயார் நிலையில்: 

இதனிடையே அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுத்து மீட்பு, நிவாரண சேவைகளை முன்னெடுக்க முப்படை தயார் நிலையில் உள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

 இது தொடர்பில் இராணுவத்தின் மேல் கட்டளை தலைமையகத்தில் இரு படைப் பிரிவுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய ஆலோசனை கிடைத்த மறுகணம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அனர்த்த நிலைமைகளை எதிர்க்கொள்ள தேவையான ஆலோசனைகளை பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் பொலிஸார் விரைந்து அது குறித்த மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் பங்கேற்பர் எனவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-21#page-1

  • தொடங்கியவர்

இலங்கையில் மழை வெள்ளம்: ஏழு பேர் பலி, மீட்புப் பணிகளில் முப்படையினர்

இலங்கையில் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் இன்று பிற்பகல் வரை 7 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 6 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கையில் மழை வெள்ளம் : ஏழு பேர் பலி : மீட்புப் பணிகளில் முப்படையினர்

பலத்த மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகளில், முப்படையினரை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் செயல்திட்டம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும், அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதிலும் துரிதமாக செயல்படுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையில் மழை வெள்ளம்: ஏழு பேர் பலி, மீட்புப் பணிகளில் முப்படையினர்

ஆறுகளில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால், ஆறுகளுக்கு அண்மித்த தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

இலங்கையில் மழை வெள்ளம் : ஏழு பேர் பலி : மீட்புப் பணிகளில் முப்படையினர்

நாட்டின் வெள்ள அனர்த்தம் குறித்து அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியை தொடர்புகொண்டுகேட்டோம்.

இலங்கையில் மழை வெள்ளம்: ஏழு பேர் பலி, மீட்புப் பணிகளில் முப்படையினர்

மழை, வெள்ள, மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை தொடர்வதால் மக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

இலங்கையில் மழை வெள்ளம் : ஏழு பேர் பலி : மீட்புப் பணிகளில் முப்படையினர்

''ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இரத்தினபுரி, களுத்துறை பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். களனி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கிங் கங்கை, தவலம பிரதேசத்தில் அதிகரித்துள்ளது.'' 

இலங்கையில் மழை வெள்ளம்: ஏழு பேர் பலி, மீட்புப் பணிகளில் முப்படையினர்

''மண்சரிவு குறித்த எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது. இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் அவதானமாக செயல்பட வேண்டும்.'' என்று அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் மேலும் கூறினார்.

இயற்கை அனர்த்தங்களினால் இதுவரை 13,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,024 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. 

https://www.bbc.com/tamil/sri-lanka-44199389

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கண்ணீர் விடும்போது, தெற்கு தண்ணீரில் மூழ்கியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனவிடுதலைகளை / சுய மரியாதையுடன் வாழ விரும்பும் இனங்களை அடக்க ஒடுக்க அழிக்க நவீன ஆயுதங்களை வாங்க / உருவாக்கத் தெரிந்தவர்களுக்கு .........

இயற்கையின் அழிவுகளை தடுக்க முடியாமல் திண்டாடுகின்றார்கள்.

  • தொடங்கியவர்

சிறிலங்காவில் கொட்டித் தீர்த்த மழை- 300 மி.மீற்றருக்கும் அதிகம்

 

sri-lanka-flood-41-300x198.jpgசிறிலங்காவின் பல இடங்களில் நேற்று 300 மி.மீ இற்கும் அதிகமான கனமழை பெய்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுக்காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ பகுதியில், 353.8மி.மீ மழை பெய்தது. அடிகம பகுதியில் 339 மி.மீற்றரும், கமல்ஸ்ரம் பகுதியில் 302 மி.மீற்றரும் மழை  கொட்டித் தீர்த்தது.

மாத்தளையில், 267 மி.மீ, இரத்தினபுரியில் 236.6 மி.மீ, குளியாப்பிட்டியில் 232 மி.மீ, குகுலேகங்கவில் 227 மி.மீ, மழை பெய்துள்ளது.

ஆனமடுவவில் நேற்று பெய்த 353.8 மி.மீ மழையே, அங்கு வரவாற்றில் அதிகளவில் பெய்த மழையளவாகும்.

தெனியாயவில், பெய்த 700 மி.மீ  மழையே சிறிலங்காவில் ஒரே நாளில் பெய்த அதிகளவு மழைப் பொழிவாகும். கடந்த ஆண்டு களுத்துறையில் ஒரே நாளில் 500 மி.மீ மழை பதிவாகியதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/05/22/news/30992

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.