Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்­லிம்­களும் அர­சியல் சூதாட்­டமும்!

Featured Replies

முஸ்­லிம்­களும் அர­சியல் சூதாட்­டமும்!

06-3667b50077d9c4649569ebc30b06913281eccaad.jpg

 

சஹாப்தீன் 

முஸ்லிம் கட்­சிகள் மற்­று­மொரு அர­சியல் சூதாட்­டத்­திற்கு தங்­களை தயார்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. அதா­வது, உள்­ளூ­ராட்சி சபை­களின் தேர்­த­லை­ய­டுத்து தற்­போது மாகாண சபைத் தேர்­த­லுக்­கு­ரிய முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொண்­டுள்­ளன. முஸ்லிம் கட்­சிகள் காலத்­திற்கு காலம் வரும் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கா­ன­தொரு கரு­வி­யாக மட்­டுமே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்­டி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு முஸ்லிம் தலை­வர்கள் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தில்லை. தேர்தல் காலங்­களில் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் வாக்­கு­று­திகள் தேர்தல் முடிந்­ததும் காற்­றோடு கலந்து விடு­கின்­றன. முஸ்­லிம்­களின் அர­சி­யலில் காணப்­படும் இந்த சூதாட்­டத்­திற்கு முடிவு காண வேண்­டிய கட்­டா­யத்தில் இன்று முஸ்லிம் மக்கள் உள்­ளனர் .

முஸ்­லிம்­க­ளுக்கும் சுய­நிர்­ணய உரிமை வேண்டும். அர­சியல் யாப்பில் முஸ்­லிம்­க­ளுக்கும் அர­சியல் அதி­காரம் வேண்டும். கரை­யோர மாவட்டம் தரப்­பட வேண்டும். முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட காணி­களை மீட்டுத் தருவோம். முஸ்லிம் பிர­தே­சங்­களை நவீன முறையில் அபி­வி­ருத்தி செய்வோம். இளை­ஞர்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்றுத் தருவோம் என்­றெல்லாம் எல்லா முஸ்லிம் கட்­சி­களும் தேர்தல் காலங்­களில் தெரி­விக்கின்­றன.

அத்­தோடு, வடக்கு, கிழக்கு இணைப்பை நிபந்­த­னை­யுடன் ஏற்றுக் கொள்­கின்றோம் என்று முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­விக்கும், வடக்கும், கிழக்கும் பிரிந்­தி­ருக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் தேசிய காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் தெரி­வித்துக் கொள்ளும். இவற்­றோடு காலத்­திற்கு காலம் ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளையும் முஸ்லிம் கட்­சிகள் இணைத்துக் கொண்­டுதான் முஸ்­லிம்­க­ளி­டையே அர­சியல் சூதாட்­டத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. தங்­களின் சூதாட்­டத்தில் நிறைந்த வெற்­றியைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக தேசிய கட்­சி­களின் தலை­வர்­களை அழைத்து வந்து அவர்­களின் ஊடா­கவும் தங்­களின் அர­சியல் சூதாட்­டத்தை ஆடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இப்­ப­டித்தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கல்­மு­னைக்கு அழைத்து வந்த முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அம்­பாறை மாவட்­டத்தில் சாய்ந்த­ம­ருது பிர­தே­சத்­திற்கு உள்­ளூ­ராட்சி சபையை பெற்றுத் தருவோம் என்று ரணிலின் வாயால் சொல்ல வைத்தார். பின்னர் சாய்ந்­த­ம­ருது உள்­ளூராட்சி சபை விவ­காரம் பூதா­கா­ர­மாக மாறிய போது, ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாங்கள் எழுதிக் கொடுத்­த­தையே வாசித்தார் என்று ரவூப் ஹக்­கீமே தெரி­வித்­தி­ருந்தார். முஸ்­லிம்­களின் அர­சியல் சூதாட்­டத்­திற்கு மிகச் சிறந்த உதா­ர­ண­மாக இதனை எடுத்துக் கொள்­ளலாம்.

இத்­த­கைய நிலையில் தான் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், அர­சியல் தலை­வர்­களும் மாகாண சபைத் தேர்­த­லுக்கு குறிப்­பாக கிழக்கு மாகாண சபையின் தேர்­த­லுக்கு தயா­ராகிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஒரு தேர்­த­லுக்­கு­ரிய திகதி அறி­விப்­ப­தற்கு முன்­னரே அதற்கு தயா­ராகும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள், முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கும், வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கும் தயா­ரா­வ­தில்லை. அர­சியல் விவ­கா­ரங்­களில் மற­திக்­கா­ரர்­க­ளா­கவும், அர­சியல் விட­யங்­களின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து கொள்­ளா­மலும் இருக்கும் வரை அர­சியல் தலை­வர்கள் முஸ்லிம் மக்­களை அட­மானம் வைத்து சூதாடிக் கொண்­டி­ருப்­ப­தனை தடுக்க முடி­யாது.

மாகாண சபைத் தேர்­தலில் வெற்றி கொள்ள வேண்­டு­மென்­ப­தற்­காக முஸ்லிம் காங்­கிரஸ் கிழக்கு மாகா­ணத்தில் தமது கட்­சியின் கட்­ட­மைப்­புக்­களை மீள கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ளது. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் முடி­வுகள் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு அதிர்ச்­சியைக் கொடுத்­துள்­ளது. மக்கள் காங்­கிரஸ் எதிர்­பார்க்­காத வகையில் வெற்றி பெற்­றுள்­ளது. இதனால், மக்கள் காங்­கி­ர­ஸிற்கு ஏற்­பட்­டுள்ள செல்­வாக்கை குறைக்க வேண்­டு­மென்று அக்­கட்சி திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக மக்கள் காங்­கி­ரஸின் பிர­தேச முக்­கி­யஸ்­தர்­களை மடக்கி தங்­களின் கட்­சி­யோடு இணைத்துக் கொள்­வ­தற்கும், அக்­கட்­சிக்குள் ஒற்­றர்­க­ளாகச் செயற்­ப­டு­வ­தற்கும் ஆட்­களை தயார்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தை முஸ்லிம் காங்­கி­ரஸின் கோட்டை என்று மாகாண சபைத் தேர்­தலில் நிரூ­பிக்க வேண்­டி­ய­தொரு கட்­டாயம் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு ஏற்­பட்­டுள்­ளது. இதனால், கட்­சிக்குள் தமக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளுடன் மந்­திர ஆலோ­ச­னை­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. மேலும், முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து சென்­ற­வர்­களை மீண்டும் கட்­சிக்குள் இணைத்துக் கொள்ளும் செயற்­திட்­டத்­தையும் ரவூப் ஹக்கீம் வகுத்­துள்ளார்.

இதே வேளை, முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் எம்.ரி.ஹஸன்­அலி தற்­போது ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ராக உள்ளார். இவர் தலை­மையில் அக்­கட்­சியின் கட்­ட­மைப்பை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரோடும், கட்­சி­யோடும் முரண்­பட்­டுள்­ள­வர்கள் கட்­சியின் பிர­தேச அமைப்­பா­ளர்­க­ளா­கவும், கொள்கை பரப்புச் செய­லா­ளர்­க­ளா­கவும் நிய­மிக்­கப்­பட்டு வரு­கின்­றார்கள்.

இவ்­வாறு கட்­சி­களை மட்டும் புன­ர­மைத்துக் கொள்­வ­தற்கு கடும் பிர­யத்­த­னங்­களை எடுத்துக் கொண்­டி­ருக்கும் முஸ்லிம் கட்­சி­களும், அர­சியல் தலை­வர்­களும் முஸ்­லிம்கள் சம­கா­லத்தில் சந்­தித்துக் கொண்­டி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை காண்­ப­தற்கோ அல்­லது அவை பற்றி பேசு­வ­தற்கோ தயா­ரில்லை என்­பது தான் கவ­லைக்­கு­ரி­ய­தாகும். 

முஸ்லிம் கட்­சிகள் அர­சாங்­கத்தில் அதி­கா­ரத்தைப் பெற்­றுள்­ளன. முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சர் பத­வி­களைப் பெற்­றுள்­ளார்கள். இப்­ப­த­விகள் தான் முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மைகள் என்று முஸ்­லிம்கள் நினைக்­கின்­றார்கள். அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொண்­ட­வர்­களை மாலை அணி­வித்து வர­வேற்கும் முஸ்­லிம்கள் அவர்கள் தமக்கு பெற்றுத் தந்த உரி­மைகள் யாவை என்று சிந்­திக்க வேண்டும்.

எல்லா அர­சாங்­கத்தின் காலத்­திலும் அமைச்சர் பத­வி­களில் இருந்த இவர்­களால் முஸ்லிம் பிர­தே­சங்கள் அடைந்த அபி­வி­ருத்­திகள் தான் என்­ன­வென்று கணிக்க வேண்டும். முஸ்லிம் பிர­தே­சங்­களில் எந்த அபி­வி­ருத்­தியும் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற உண்­மை­யையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாறி மாறி வந்த அர­சாங்­கங்­க­ளினால் பறிக்­கப்­பட்ட முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணிகள் மீளவும் முஸ்­லிம்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை. மாற்றுக் காணிகள் கூட வழங்­கப்­ப­ட­வில்லை. முஸ்­லிம்­களின் காணி­களில் படை­யி­னரின் முகாம்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை விட்டு படை­யி­னரை நகர்த்த முடி­ய­வில்லை. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் தமி­ழர்­களின் ஒரு தொகை காணிகள் மீளவும் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டன. ஆனால், முஸ்­லிம்­களின் ஒரு அங்­குல காணி கூட மீள வழங்­கப்­ப­ட­வில்லை. முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாக கொண்ட அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்ட காலம் முதல் மாவட்டச் செய­லா­ள­ராக பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்­களே நிய­மிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். மாவட்ட செய­லா­ள­ராக கட­மை­யாற்றக் கூடிய தகு­தி­களைக் கொண்ட நிர்­வாக உத்­தி­யோ­கத்­தர்கள் முஸ்­லிம்­க­ளி­டையே பலர் உள்­ளார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மாகாண சபை முறைமை ஏற்­ப­டுத்­தப்­பட்ட காலம் முதல் பாக்கீர் மாக்கார், அலவி மௌலானா போன்றோர் ஆளு­நர்­க­ளாக நிமி­ய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். ஆனால், இன்­றைய ஆட்­சியில் எந்­த வொரு முஸ்­லிமும் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

அர­சாங்­கத்­திடம் உண்­மை­களை பேசு­வ­தற்கு தயங்கிக் கொண்­டி­ருக்கும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அர­சாங்­கத்தின் திட்­டத்­திற்கு அமை­வாக பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்று முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பகுதி பகு­தி­யாக யாப்பில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த அனு­ம­திக்க மாட்­டோ­மென்று கூறு­கின்­றார்கள். முஸ்­லிம்­களைக் பொறுத்தவரை அர­சியல் யாப்பு மாற்றம் அவ­சி­யமா என்­ப­தற்கு விடை காண வேண்டும். புதிய அர­சியல் யாப்பு உரு­வாக வேண்டும். ஆனால், அதற்­குரிய ஆயத்த நிலையில் நாம் உள்­ளோமா என்று முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அர­சியல் யாப்­புக்­கு­ரிய இடைக்­கால அறிக்கை முழு­மை­யாக முஸ்­லிம்­க­ளுக்கு பாத­க­மா­கவே உள்­ளன. இதனை முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் ஏற்றுக் கொண்­டுள்­ளார்கள். ஆயினும், முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் புதிய அர­சியல் யாப்பு உரு­வாகும் போது முஸ்­லிம்­களின் உரி­மை­களும், அதி­கா­ரங்­களும் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்­ப­தற்கு வழங்­கிய ஒரு­மித்த ஆலோ­ச­னைகள் எது­வு­மில்லை. மொத்­தத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் அனைத்து அநி­யா­யங்­க­ளையும் பார்த்துக் கொண்­டி­ருக்கும் பொம்­மை­க­ளா­கவே முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் உள்­ளார்கள்.

முஸ்­லிம்கள் எதிர் கொள்ளும் பல்­வேறு பிரச்­சி­னைகள் குறித்து அச­மந்த போக்­காக இருக்கும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இன்­றைய நிலையில் மாகாண சபைத் தேர்­த­லுக்கு தயா­ராகிக் கொண்­டி­ருப்­ப­தனை ஏற்றுக் கொள்ள முடி­யாது. பொய் வாக்­கு­று­தி­களை வழங்கும் தேர்தல் கால சிந்தனையிலிருந்து முஸ்லிம் கட்சிகள் விடுபட வேண்டும். சமூக அரசியலுக்கு முஸ்லிம் கட்சிகள் தயாராக வேண்டும். அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கடந்த காலங்களில் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எதனையாவது நிறைவேற்றியுள்ளார்களா என்று முஸ்லிம் மக்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சமூ­கத்தை வைத்து சூதாடிக் கொண்­டி­ருப்­ப­தனை தடுக்க வேண்­டு­மாயின் முஸ்லிம் வாக்­கா­ளர்கள் கட்சி வெறி­யி­லி­ருந்து தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும். கட்சி என்­பது வேத­மல்ல என்ற உண்­மையை உணர்ந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் யாரும் உத்­த­மர்­க­ளில்லை என்­பதை எல்­லோரும் அறிந்து வைத்­துள்­ளார்கள். ஆனாலும், மாற்றுக் கட்­சி­யினர் முன் வைக்கும் அல்­லது புத்­தி­ஜீ­விகள் முன் வைக்கும் உண்­மை­களை ஏற்றுக் கொள்­வ­து­மில்லை. இதற்கு கட்­சியின் மீதும், தலைவர் மீதும் கொண்­டுள்ள வெறித்­த­ன­மான பற்­று­த­லாகும். கண்­மூ­டித்­த­ன­மான பற்­று­தல்­கள்தான் அர­சி­யல்­வா­தி­களை சமூக நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து தூர­மாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் தடம் புரள்வுக்கு முஸ்லிம் வாக்காளர்களும் ஒரு காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-05-20#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.