Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காயமடைந்தவர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் நிதியுதவி #Liveupdates

Featured Replies

காயமடைந்தவர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் நிதியுதவி #Liveupdates

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.

tuticorin_1_11379.jpg

 

ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 106 பேர்  காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களைத் துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், கமல்ஹாசன் ஆகியோர் சந்தித்துச் சென்றனர். 

இந்நிலையில், இன்று தூத்துக்குடி வந்துள்ள ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திக்கிறார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறுகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 10.40 மணிக்கு தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்ட ரஜினியைப் பாதுகாப்புடன் அழைத்துவந்தனர்.

பின்னர் காரில் ஏறிய ரஜினி, ரசிகர்களைப் பார்த்து கைகளைக் காட்டி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார். பின்னர், 100 கார்கள் புடைசூழ அரசு மருத்துவமனைக்குப் புறப்பட்டார். குறிப்பிட்ட தூரம் வந்தவுடன், 10 கார்களை மட்டுமே காவல்துறையினர் அனுமதித்தனர். போக்குவரத்தைக் காவல்துறையினர் சீர்படுத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் பொருள்களை வழங்க உள்ளார். 11.25 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த ரஜினியைத் தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி குமாரவேலு பாதுகாப்புடன்  உள்ளே அழைத்துச் சென்றார். சிகிச்சை பெற்று வரும் 48 பேர்களிடமும் ரஜினிகாந்த் நலம் விசாரித்துவருகிறார்.

பாதிக்கப்பட்டவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்ட ரஜினி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அவர்கள் புன்சிரிப்புடன் காணப்பட்டனர். அவர்களுக்கு ரஜினி நிதியுதவி வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ரஜினி, ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/126303-rajinikath-goes-to-thoothukudi-meets-injured-pepole.html

  • கருத்துக்கள உறவுகள்

இவரை கைது செய்யவில்லையா? கமல்காசனை கைது செய்து வழக்கு போட்டிச்சினம்....இவர் BJP யின் ஆளா?

Edited by putthan

  • தொடங்கியவர்

சமூக விரோதிகளே வன்முறைக்கு காரணம்! தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேட்டி #Liveupdates

 
 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.

tuticorin_1_11379.jpg

 

ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 106 பேர்  காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களைத் துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், கமல்ஹாசன் ஆகியோர் சந்தித்துச் சென்றனர்.

tuticorin_4_13151.jpg

இந்நிலையில், இன்று தூத்துக்குடி வந்துள்ள ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திக்கிறார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறுகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 10.40 மணிக்கு தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்ட ரஜினியைப் பாதுகாப்புடன் அழைத்துவந்தனர்.

tuticorin_3_13459.jpg

பின்னர் காரில் ஏறிய ரஜினி, ரசிகர்களைப் பார்த்து கைகளைக் காட்டி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார். பின்னர், 100 கார்கள் புடைசூழ அரசு மருத்துவமனைக்குப் புறப்பட்டார். குறிப்பிட்ட தூரம் வந்தவுடன், 10 கார்களை மட்டுமே காவல்துறையினர் அனுமதித்தனர். போக்குவரத்தைக் காவல்துறையினர் சீர்படுத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் பொருள்களை வழங்க உள்ளார். 11.25 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த ரஜினியைத் தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி குமாரவேலு பாதுகாப்புடன்  உள்ளே அழைத்துச் சென்றார். சிகிச்சை பெற்று வரும் 48 பேர்களிடமும் ரஜினிகாந்த் நலம் விசாரித்துவருகிறார்.

tuticorin_2_13334.jpg

பாதிக்கப்பட்டவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்ட ரஜினி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அவர்கள் புன்சிரிப்புடன் காணப்பட்டனர். அவர்களுக்கு ரஜினி நிதியுதவி வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ரஜினி, ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் என கூறினார்.

ஆலையை திறக்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் நீதிமன்றம் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது என்று கூறிய ரஜினி, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார். சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே" என்று குற்றம்சாட்டினார்.

https://www.vikatan.com/news/tamilnadu/126303-rajinikath-goes-to-thoothukudi-meets-injured-pepole.html

  • தொடங்கியவர்

ஆமா நீங்க யாருங்க? இளைஞரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வெளியேறிய ரஜினி!

 

 
Image

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் 'ஆமா நீங்க யாருங்க' என வெறுப்புடன் கேள்வி கேட்க, ரஜினிகாந்த் சிரித்துக் கொண்டே முகம் வெளிறியபடி நகரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக கடந்த 22ம் தேதி நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

அதில் இளைஞர் ஒருவரிடம் நடிகர் ரஜினி கலந்துரையாடும் காணொளி காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், ரஜினி வந்த போதும் எந்த பரபரப்பும் இல்லாமல் படுக்கையில் இருந்து எழும் இளைஞர், ஆமா நீங்க யாருங்க? என ரஜினியிடம் கேட்கிறார். அதற்கு ரஜினி, நான் ரஜினி சென்னைல இருந்து வந்திருக்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார்.

அதற்கு மீண்டும் அந்த இளைஞர், 100 நாளா நாங்க போராடும்போது சென்னை ரொம்ப தூரத்துல இருந்துச்சோ என கேள்வி கேட்க, பதிலேதும் சொல்லாமல் சிரித்த படி முகம் வெளிறிய நிலையில் ரஜினி வெளியேறுவதாக அந்த காணொளியில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

http://www.ibctamil.com/india/80/101321

  • தொடங்கியவர்

" யார் நீங்க " என்று ரஜினியை இதற்காகத்தான் கேட்டேன்... காரணம் சொல்கிறார் தூத்துக்குடி இளைஞர்

 
 

ரஜினி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், ``நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?" என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்களை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் படுகாயமடைந்தவர்களைச் சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (30-05-2018) தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.10, 000-ம் நிதி உதவி வழங்குவதாக ரஜினி அறிவித்தார். பின்னர், ஒவ்வொருவராகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

 

சிகிச்சை பெற்று வருபவர்களில் ஓர் இளைஞர் ரஜினியைப் பார்த்து, ``யார் நீங்க?" என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ ``நான் ரஜினிகாந்த்" என்று சொல்கிறார். ``ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், ``நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்று சொன்னதும், ``சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா?" என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.

new6_15086.jpgஅந்த இளைஞர் குறித்து விசாரித்ததில், அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்' என்பதும் தெரியவந்தது. போலீஸாரின் தாக்குதலில் பலத்தக் காயமடைந்து தலையில் பத்துத் தையல்கள் போடப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் போனில் தொடர்புகொண்டு பேசினோம். ``தூத்துக்குடியில் நாங்கள் நூறு நாள்களாகப் போராடினோம். அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் எங்களைச் சந்திக்கவோ, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ வரவில்லை. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். பலர் மரணத் தருவாயில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு எட்டு நாள்கள் ஆகின்றன. இத்தனை நாள்களாக, இந்தச் சம்பவம் பற்றி ரஜினிகாந்த் வாய்திறக்கவில்லை. பாதிப்புக்குள்ளானவர்களை வந்து சந்திக்கவும் இல்லை. இன்று எதற்காக வருகிறார்? அதுவும் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடவில்லை என்றால் ஒருவேளை அவர் வந்திருக்கமாட்டார். தற்போது அவர் வந்ததன் பின்னணியில் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. இன்னும், சில தினங்களில் `காலா' படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இனியும் மக்களைப் போய்ச் சந்திக்கவில்லை என்றால் அவருடைய படம் தமிழகத்தில் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களைச் சந்தித்து நிதி உதவி வழங்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் எனக்குக் கோபம் வந்து, அவரை அப்படிக் கேட்டேன். எங்களால் எப்படிப் போராடி வெற்றிபெறத் தெரிந்ததோ. அதுபோல எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் எங்களுக்குத் தெரியும்" என்றார் சந்தோஷ்.

``சில சமூக விரோதிகளால்தாம் கலவரம் ஏற்பட்டது" என ரஜினி பேட்டியளித்திருப்பது பற்றிக் சந்தோஷிடம் கேட்டபோது, "நாங்கள் சமூக விரோதி என்பதை இவர் பார்த்தாரா அல்லது போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துகொண்டார்கள் என்பதை ரஜினி தனது ஏழாவது அறிவை வைத்து உணர்ந்தாரா? நூறு நாள் போராட்டத்தில் ஒரு நாளாவது எங்களுடன் இணைந்து போராடியிருந்தால்தான் அவருக்குக் கருத்துச் சொல்ல தகுதி உண்டு. எனவே, எங்களைப் பற்றிப் பேச ரஜினிக்கு எந்தத் தகுதியும் கிடையாது" என்றார் ஆவேசமாக..

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும்... ' என்ற பாடல் ரஜினி நடித்த `ராஜா சின்ன ரோஜா' படத்தில் வரும். ஆனால், அந்த சூப்பர் ஸ்டாரை தூத்துக்குடியில் ஒருவர் ``யார் நீங்க?" எனக் கேட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரவி வைரலாகிக் கொண்டிருக்கிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/126323-who-are-you-a-youngster-asked-rajinikanth-in-thoothukudi.html

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

`சமூக விரோதிகள் போலீஸை அடித்ததாலேயே வன்முறை வெடித்தது!’ - ரஜினிகாந்த் ஆவேசம்

 

``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது சமூக விரோதிகள் காவலர்களை அடித்ததாலே கலவரமாக மாறியது'' என்று ரஜினிகாந்த் ஆவேசமாகக் கூறினார். 

ரஜினி

 

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பின் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம்' என்று தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்துக்கு தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தன.

மேலும், சமூக வலைதளங்களிலும் ரஜினிகாந்த் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியதால்தான் வன்முறை வெடித்தது.

காவல்துறைமீது தாக்குதல் நடத்தினால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல, ஸ்டெர்லைட் போராட்டத்திலும் கடைசி நாளில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதனால்தான் கலவரம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் மாறும்' என்று ஆவேசமாகத் தெரிவித்தார். 

https://www.vikatan.com/news/tamilnadu/126347-social-enemies-are-reason-for-thoothukudi-riot-says-rajinikanth.html

  • தொடங்கியவர்

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை இன்று நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் நுழைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும்,''நான் எல்லோரையும் பார்த்தேன். சில குடும்பங்களை மட்டுமே பார்க்கமுடியவில்லை. நிறைய பேர் சோகத்தில் இருக்கிறார்கள். • எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் - ரஜினிகாந்த் இந்த மாதிரி ஒரு சம்பவம் இனி நடக்கவே கூடாது. கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நடந்த தாக்குதல்கள், குடியிருப்புகளை எரித்தது நிச்சயமாக சாமானிய மக்கள் அல்ல. விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் இதில் நுழைந்திருக்கிறார்கள் அவர்களது வேலைதான் இது'' என்றார். ''போராட்டம் செய்யும்போது மிகவும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். தமிழகத்தில் சமூகவிரோதிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஜல்லிக்கட்டில் கூட அதுதான் நடந்தது. இந்த புனிதமான போராட்டம் கூட வெற்றி கிடைத்தாலும் ரத்தக்கரையோடு முடிந்திருக்கிறது'' ''இந்த சமூக விரோதிகளை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.அவ்விதத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன். விஷக்கிருமிகளை மற்றும் சமூக விரோதிகளை ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார். இவ்விஷயத்தில் ஜெயலலிதாவை இப்போதைய அரசு பின்பற்றவேண்டும்.இல்லையெனில் மிகவும் ஆபத்தாகும்'' ''அரசாங்கம் ஸ்டெர்லைட்டை மூடிய பிறகு அந்நிறுவனம் நீதிமன்றத்துக்குச் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது.நீதிமன்றத்தில் இருப்பவர்களும் மனிதர்கள்தான். அங்கே ஸ்டெர்லைட் வெற்றி பெறாது; வெற்றி பெறவும் கூடாது'' எனத் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

காவல்துறைமீது தாக்குதல் நடத்தினால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல, ஸ்டெர்லைட் போராட்டத்திலும் கடைசி நாளில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதனால்தான் கலவரம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் மாறும்' என்று ஆவேசமாகத் தெரிவித்தார். 

சமூக விரோதிகள் ஊடுருவல் ! ஓவியம்....

DedA3e7UQAA1TtZ.jpg

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: அந்த சமூக விரோதிகள் யார் ரஜினி?

 

 
npng

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில்  காயமடைந்தவர்களை இன்று (புதன்கிழமை) காணச் சென்ற நடிகர் ரஜினிகாந்த்தை இளைஞர் ஒருவர் நீங்கள் யார்? என்று கேட்பார்  அதற்கு ரஜினி நான்தான்பா ரஜினிகாந்த் என்று கூறியிருந்தார்.

மேலும் சமூக விரோதிகள்தான் தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் என்றும் ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.  இதனைத் தொடர்ந்து #நான்தான்பாரஜினிகாந்த் #ரஜினிகாந்த என்ற ஷாஸ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது. இதுகுறித்த நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

           
 

திரு

‏கட்சி ஆரம்பிக்கும் வரை அரசியல் பேச மாட்டேன்னு சொன்னாரு... அதை தாண்டி இப்படி உளறி கொட்டவச்சது போராட்டங்கள் மீதான பயம்... முதலாளிகள் மேல் உள்ள பற்று... ஆனா அவர் அரசியல் பாதை, கொள்கைகளை தெளிவாக்கியதற்கு நன்றி சொல்லணும்...

பாலா

#நான்தான்பாரஜினிகாந்த்

#யார்நீங்க என்று அந்த இளைஞர் கேட்டதில் பொதிந்திருந்தது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோபம். எங்கள் மண்ணில் நின்று கொண்டு எங்களையே சமூகவிரோதி என்று அழைக்கும்...

2png
 

Thamizh vanan

சினிமாவில் தலைவனை தேடியது போதும் இனியாவது படிச்சவனை தேடுங்க

இல்லனா நாளைக்கு உனக்கும் 10 இலட்சம் தான் !#நான்தான்பாரஜினிகாந்த்

7png
 

Vignesh Masilamani

‏"நீங்க யாரு"

இந்த கேள்வியை 40 வருசத்து முன்னாடி எம்.ஜி.ஆர்-ஐ பாத்து கேட்டிருந்தா நம்ம தமிழ்நாடு இந்நேரம் எங்கயோ போயிருக்கும்...

Dr.Strange

‏இதுக்கு அப்புறமும் அவர் பின்னால பாஜக இல்ல சொந்தமா யோசிக்குறாரு ஆன்மீக அரசியல்ன்னு முட்டு குடுக்கப்போற ரசிகாச நெனச்சா தான் பாவமா இருக்கு

6png
 

Black Panther

‏அந்த சமூக விரோதிகள் யார்?

13 பேரை சுட்டுக்கொன்ற ஏவலாளிகள் மீது நடவடிக்கை இல்லையா?

அதிகார வர்க்கத்தின் ஊது குழலே ரஜினி

Liandar Dass(தமிழன்)

‏#நான்தான்பாரஜினிகாந்த்

யாருயா நீ . . .

நான் தான் பா ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் . . .

இருந்திட்டு போ 100 நாளா எங்கயா போன . . .

5png
 

Thamizh vanan

‏ரஜினி கருத்துக்கு தமிழிசை ஆதரவு !

புரிஞ்சிக்கோ பிழைச்சக்கோ

கார்த்திக்

‏#நான்தான்பாரஜினிகாந்த்

நான் மாது வந்திருக்கேன் is a word

நான் தான் பா ரசினிகாந்த் Is emotion

பிலால் அகமது

‏நா இமயமலைக்கே போயிருப்பேன் என்னைய இங்க வர வச்சி

bnpng
 

இட்லி

‏ஜல்லிக்கட்டு, தூத்துக்குடின்னு எல்லா மக்கள் போராட்டமும் சமூக விரோதிகளால தான் வன்முறையா மாறுது! ஆனா இதுவரை அந்த வன்முறைல ஒரே ஒரு உண்மையான சமூக விரோதி கைதாகுறதில்ல! குண்டடிபடுறதில்ல!

பவிரக்‌ஷா

‏யாரவது ஒரு பத்திரிக்கையாளராவது "சமூக விரோத கும்பல்" என்றால் என்ன, அதன் வரையறை என்ன என்று கேட்டுத்தொலையுங்களேன். ஊழல் குற்றச்சாட்டின் முதன்மை குற்றவாளி இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் என்று சொல்லிவிட்டு ஊழலுக்கு எதிராக ஏன்  பேசவேண்டும் ?

இராவணன்

‏அட சமூகவிரோதிக ஊடுருவினதாவே இருக்கட்டுமப்பா ஊடுருவின சமூக விரோதிகள விட்டுட்டு அப்பாவிகள சுட்டுக்கொன்னுருக்க காவல்துறையை, அரச எதாவது கண்டிச்சிருக்கானா பார் சங்கி மெண்டல் ரஜினி.  போராட்டம் பண்ணினதுக்கு உங்களுக்கு அடிபட்டது தேவதாண்டா இந்தா ஆப்பிள் சாப்புட்டு மூடிட்டு இருனு சொல்றான்

KASSIM. Mohamed

‏#நான்தான்பாரஜினிகாந்த்

தங்களுக்காகவும், தங்கள் குல கொழுந்துகளுக்காகவும் போராடி உயிர் நீத்த எம் தமிழ் குல சகோதரர்களையும், சகோதரிகளையும் சமூக விரோதிகள் என்று சொல்லும் இந்த கன்னட நடிகனை வரவேற்க இத்தனை கூட்டமா?

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை எண்ணி!!!

ஆரூர் உதயசங்கர்

‏1980 ல சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும். 

2018 - #நான்தான்பாரஜினிகாந்த்                      

உத்தமன்

‏ஆமா நீங்க யாரு.?

எல்லாருக்கும் சத்தம்போட்டு சொல்லுறேன்.. அட #நான்தான்பாரஜினிகாந்த்

லொல்லு-மன்னன்

‏மக்கள் ஓரளவு விழித்து விட்டார்கள் என்பதற்க்கான முதல் பதிவு அந்த பையன் கேட்ட இந்த வார்த்தை...

lpng
 

SHRiNY

‏#நான்தான்பாரஜினிகாந்த் ரஜினியின் தெள்ளத்தெளிவான ஆன்மிக அரசியல் பேட்டி

கேள்வி-துப்பாக்கிச் சூடு நடத்தியது ?

ரஜினி-அதைத்தான் தவறு என்று சொல்லி விட்டேனே.

கேள்வி-அப்போ விஷமிகள் ஊடுருவியது ?

ரஜினி-அதை தடுக்கணும்

கேள்வி-ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியா ?

ரஜினி-ஆலையை திறக்கக்கூடாது

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.