Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Featured Replies

டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறும், அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சந்திப்பு, சிங்கப்பூரின் சென்டோசா தீவில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

சந்திப்பு நடைபெறும் ஹோட்டல்படத்தின் காப்புரிமைREUTERS/CAPELLA SINGAPORE

ஜூன் மாதம் 12ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த சந்திப்பு 2 வாரங்களுக்கு முன்னால் அதிபர் டிரம்பால் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், அப்போது முதல் இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர்புகளாலும், முயற்சிகளாலும் இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

திட்டங்கள் மிகவும் நன்றாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக செவ்வாய்க்கிழமை அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அணு ஆயுத திட்டத்தை கைவிடப்போவதை உறுதி அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

ஆனால், சிங்கப்பூரில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையின்போது எவற்றை பற்றி விவாதிக்க போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

"வட கொரிய நிலைமையை அறிந்துகொள்ள உதவுகிற சந்திப்பு" என்று இந்த சந்திப்பை குறிப்பிட்டுள்ள அதிபர் டிரம்ப், "இந்த முதல் சந்திப்பு நீண்ட கால தொடர் பேச்சுவார்த்தைகளின் தொடக்கமாக அமையும்" என்று தெரிவித்திருக்கிறார்.

"அதிக தொடர்புகள் உருவாகியுள்ளன. இந்தப் பயணத்திற்கு முன்னால் பல பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இவை மிகவும் முக்கியமானவை" என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் இந்த சந்திப்பு, வட கொரிய தலைவருக்கும், தற்போதைய அமெரிக்க அதிபருக்கும் நடைபெறுகின்ற முதல் சந்திப்பாக அமையும்.

 
 

UPDATE: The venue for the Singapore summit between @POTUS and Leader Kim Jong Un will be the Capella Hotel on Sentosa Island. We thank our great Singaporean hosts for their hospitality.

 

டிரம்ப்-கிம் இடையிலான இந்த சந்திப்பு கேபெல்லா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் சாரா சான்டர்ஸ் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த இரண்டு தலைவர்களும் வெவ்வேறு இடங்களில் தங்குவர் என்று தோன்றுகிறது.

அமெரிக்க அதிபர்கள் முன்னதாக தங்கிய ஷாங்கரி-லா ஹோட்டலில் அதிபர் டிரம்ப் தங்கலாம். ஆனால், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூரின் செயின்ட் ரெஜிஸில் தங்கலாம் என்று ஸ்டெட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

இவ்விரு ஹோட்டல்களும் பிரபலமான ஆர்ச்சர்ட் சாலையின் வணிகப்பாதையில் சென்டோசா தீவின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளன.

சிங்கப்பூரை உருவாக்குகின்ற 63 தீவுகளில் சென்டோசாவும் ஒன்று.

500 ஹெக்டேர் பரப்பளவுடைய சென்டோசா தீவு, தீவின் பெருநிலத்தின் குறுகிய தொலைவில்தான் அமைந்துள்ளது. இது ஆடம்பர உல்லாச விடுதிகள், தனியார் கப்பல் தொகுதிகள் மற்றும் ஆடம்பர கோல்ஃப் கிளப்கள் இருக்கின்ற இடமாகும்.

ஆனால், கடற்கொள்ளை, இரத்தம் சிந்தியது மற்றும் போர் பற்றிய இருண்ட வரலாறும் இந்த தீவுக்கு உண்டு.

கடற்கொள்ளையர் கூடாரம்

19ம் நூற்றாண்டு பிரிட்டிஷாரின் வணிக நிலையமாக சிங்கப்பூர் நிறுவப்பட்டது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான கடல்வழிப் பாதையில் சிங்கப்பூரின் முக்கிய இடம் சிறந்ததொரு தேர்வாக அமைந்தது.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்னதாகவும், சிங்கப்பூர் வளர்ந்து வந்த வணிக மையமாக திகழ்ந்தது. வணிகர்களும், வர்த்தகர்களும், கடற்கொள்ளையரும் கூட அடிக்கடி சந்திக்கிற இடமாக இது திகழ்ந்தது.

அக்காலத்தில் சென்டோசா தீவு "புலாவ் பிலாகாங் மாதி" என்று அறியப்பட்டது. இதற்கு "இறப்புக்கு பிந்தைய தீவு" என்று பொருள். அதிக கடற்கொள்ளையர் இருந்ததை இந்த பெயர் குறித்து காட்டுகிறது.

மலாய், சீனர் மற்றும் சுலாவெசி என்கிற இந்தோனீஷிய தீவை பூர்வீகமாக கொண்ட மாலுமிகளான புகிஸ் மக்கள் பெரும்பாலும் இந்த தீவில் வாழ்கின்றனர்.

கடற்கரைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

படுகொலை நடைபெற்ற இடம்

1942ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனிய படைப்பிரிவுகள் சரணடைந்தபோது, சிங்கப்பூர் ஜப்பானிடம் தோல்வியடைந்தது.

"தெற்கின் விளக்கு" என்று பொருள்படுகின்ற "சயோனாம்" என்ற ஜப்பானிய பெயர் இந்த தீவுக்கு வழங்கப்பட்டது.

ஜப்பானிய எதிர்ப்பு கூறுகளை அழிக்கும் நடவடிக்கையின் பேரில், சீன சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அடுத்த சில ஆண்டுகளில் படுகொலை செய்யப்பட்டனர்.

18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட சீன ஆண்கள் வெவ்வேறான இடங்களுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டனர் அல்லது கடலில் எறியப்பட்டனர்.

இந்தப் படுகொலை இடங்களில் அடங்குகின்ற செனடோசாவின் கடற்கரைகள் தற்போது கேபெல்லா ஹோட்டலால் பராமரிக்கப்படுகின்றன. இந்த ஹோட்டலில்தான் அதிபர் டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் சந்திக்கவுள்ளனர்.

கூட்டணி படைகள் மற்றும் துப்பாக்கி சுடும் வீர்ர்கள் பங்கேற்ற போர் கைதி முகாம் ஒன்றையும் செனடோசா நடத்தியுள்ளது.

சுற்றுலா வளர்ச்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சுற்றுலா வளர்ச்சி மற்றும் அபாயகரமான விபத்துகள்

1970ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு செனடோசா தீவின் பெயரை "அமைதி மற்றும் சாந்தம்" என்று பொருள்தரும் வகையில் மாற்றி, சுற்றுலா தளமாக வளர்ச்சியடைய செய்தது.

ஆனால், இந்த தீவின் பிரச்சனைகள் தொடர்ந்தன.

1983ம் ஆண்டு எண்ணெய் எடுக்கும் கப்பல் ஒன்று சுற்றுலா கேபிள் பாதையில் மோதி, அந்த கேபிள் பாதையில் ஓடிக்கொண்டிருந்த கார்களில் இரண்டு கடலில் விழுந்தன.

"ஃபேன்டஸி தீவு" என்ற நீர் கேளிக்கை பூங்கா திறக்கப்பட்டது. ஆனால், இது பற்றிய பாதுகாப்பு குறைபாடுகளால் புகார்கள் குவிந்தன.

 

 

2000ம் ஆண்டு தோனி கவிழ்ந்து 8 வது சிறுமி உயிரிழந்தார், 2002ம் ஆண்டு இந்த கேளிக்கை பூங்கா மூடப்பட்டது.

அதுமுதல் செனடோசா தீவு தனக்கு "வேடிக்கைகான இடம்" என்ற தோற்றத்தை உருவாக்கி கொண்டது.

இப்போது இங்குள்ள யூனிவர்சல் ஸ்டுடியோ கேளிக்கை பூங்கா, புதியதொரு நீர் கேளிக்கை பூங்கா மற்றும் வேல்டு கேசினோ உல்லாச ஓய்விடங்கள் (ரிசார்ட்ஸ்) ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.

ஹோட்டல்படத்தின் காப்புரிமைROBERT RECK/CAPELLA SINGAPORE

பேச்சுவார்த்தைகளுக்கு ஆடம்பர பின்னணி

30 ஏக்கர், 112 அறைகளுள்ள இந்த கேபெல்லா உல்லாச விடுதி (ரிசார்ட்) வெப்பமண்டல மழைகாட்டில் கட்டப்பட்டுள்ளது.

பிரபலமான பிரிட்டிஷ் கட்டடக்கலைஞர் நோர்மான் ஃபோஸ்டரால் வடிவமைக்கப்பட்ட இது, காலனிய கால கட்டடங்களின் பல்வேறு சிறப்புகளை கொண்டு விளங்குகிறது.

பழமையும், புதுமையும் பின்னிப்பிணையும் ஆடம்பர இடமென இந்த ஹோட்டல் தன்னை விவரிக்கிறது.

பிரிமியர் கார்டன் கிங் அறைக்கு ஓர் இரவுக்கு 500 டாலரிலிருந்து, 3 படுக்கையறை மற்றும் தனி நீச்சல் குளம் உள்ள கர்னெல் மனோர் அறைக்கு ஓர் இரவுக்கு 7, 500 டாலர் வரை இந்த ஹோட்டலின் அறைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

இந்த சந்திப்பு பற்றிய விவரங்களை உறுதி செய்து வருகையில், செயல்பாட்டு ஊழியர்களின் துணை தலைவர் ஜோ ஹகின் மற்றும் பிற அதிகாரிகளுடன் இந்த ஹோட்டலில் தங்கி, இந்த இடத்தை பற்றிய முன்னோட்டத்தை ஏற்கெனவே வெள்ளை மாளிகை பெற்றிருக்கிறது.

இப்போதிலிருந்து ஜூன் 15ம் தேதி வரை இந்த ஹோட்டலில் எந்த அறைகளில் தங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இங்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் சற்று ஏமாற்றம் அடைவே செய்வார்கள்.

ஆடம்பரம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பணக்கார மற்றும் பிரபலங்களின் மைதானம்

படகு தங்குதளங்களோடு கூடிய பல மில்லியன் டாலர் வீடுகள் இருக்கின்ற, சிங்கப்பூரின் மிகவும் கௌரவமிக்க குடியிருப்பு இடங்களான செனடோசா கோவ் இங்குதான் அமைந்துள்ளன.

அதிக கோல்ஃப் இடங்களும், சிங்கப்பூரின் மிகவும் ஆடம்பரமான ஹோட்டல்களும் சில மிச்சிலின் நட்சத்திர ரெஸ்ரான்ட்டுகளும் இங்கு உள்ளன.

ஏன் செனடோசா?

இந்த செனடோசா தீவு, பெருநிலப்பகுதியை விட்டு சற்று தொலைவில் இருப்பதால் பாதுகாப்பான இடமாக உள்ளது.

இந்த தீவுக்கு வருவோரை எளிதாக கட்டுப்படுத்திவிட முடியும்.

இங்கு வர ஒரு கேபிள் கார், ஒரு மோனோ ரயில், பாதசாரிகள் கடக்கும் பாதை மற்றும் வாகன போக்குவரத்து குகைப்பாதை மட்டுமே உள்ளன.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்தப் பேச்சுவார்த்தையின்போது சற்று இளைப்பாற இந்த நாடுகளின் தலைவர்கள் நினைத்தால், கோல்ஃப் விளையாட்டு மைதானங்கள் இருக்கவே செய்கின்றன.

https://www.bbc.com/tamil/global-44385219

  • கருத்துக்கள உறவுகள்

ஹà¯à®à¯à®à®²à¯

பரபரப்புக்கும் கிம்-டிரம்ப் சந்திப்பு.. வித்தியாசமான விதிகளை அறிமுகப்படுத்திய சிங்கப்பூர் அரசு.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்திக்க இருப்பதை தொடர்ந்து, சிங்கப்பூரில் வித்தியாசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கிறார்கள். இரண்டு அதிபர்களும் சிங்கப்பூரில் சந்திக்க இருக்கிறார்கள்.

வரும் ஜூன் 12ம் தேதி இருவரும் சிங்கப்பூரில் சந்திக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்காக அந்த நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இவர்கள் இருவரும் சிங்கப்பூரின் ஷங்கிரி லா ஹோட்டலில் சந்திக்க உள்ளனர். இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு நாட்டு அதிபர்களும் தங்களது தனிப்பட்ட பாதுகாவலர்களை அழைத்து வருகிறார்கள். இந்த ஹோட்டலில்தான் பொதுவாக வெளிநாட்டு அதிபர்கள் தங்குவது வழக்கம். சிங்கப்பூர் சென்று இருந்த பிரதமர் மோடியும் இங்குதான் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகம்:  உலகிலேயே இல்லாதா அளவிற்கு இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பை பற்றி செய்தி வெளியிட, பல நாட்டு ஊடகவியலாளர்கள் சிங்கப்பூர் விரைந்து இருக்கிறார்கள். மொத்தம், 2500 பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் இந்த நிகழ்வை குறித்து செய்தி வெளியிட சிங்கப்பூர் வந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் 12ம் தேதி, ஹோட்டல் வாசலில் கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விமான போக்குவரத்து: இந்த சந்திப்பும் முக்கிய கட்டமாக அங்கு பெரிய அளவில் பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு படை தவிர யாரும் ஆயுதங்களை பயன்படுத்த கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிங்கப்பூர் விமான போக்குவரத்தும் 24 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 11ம் தேதி இரவில் இருந்து ஜூன் 12 இரவு வரை விமான போக்குவரத்து இருக்காது. எந்த நாட்டில் இருந்து விமானம் உள்ளே நுழைய முடியாது.

போஸ்டர்கள்: அனுமதி இல்லாமல் நுழையும் விமானங்களை சுட்டு வீழ்த்த வடகொரியா ராக்கெட்டுகள் உதவிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஜூன் 7 ம் தேதியில் இருந்து, சிங்கப்பூரில் பெரிய போஸ்டர்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிபர்களுக்கு எதிராக வாசகம் எழுத வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெயிண்ட் விற்பனை 2 நாட்களுக்கு முன் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சுவற்றில் வரைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/trump-kim-summit-no-fly-zone-no-paint-no-poster-certains-new-no-rules-in-singapore-321788.html
 

  • தொடங்கியவர்

கேபெல்லா ஹோட்டலில் சந்திக்கும் கிம் - ட்ரம்ப்

 

 
jklpng

ட்ரம்ப் - கிம் சந்திப்பு நடைபெறவுள்ள கேபெல்லா ஓட்டல்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்புப் சிங்கப்பூரிலுள்ள கேபெல்லா ஹோட்டலில் நடக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சந்தித்து அணுஆயுத ஒழிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டனர். அதன்படி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் இருவரும் சந்தித்து பேச உள்ளனர்.

 
 

இந்தச் சந்திப்பு காலை 9 மணியளவில்  நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டது.  இந்த நிலையில் இந்தச் சந்திபுக்கான இடத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறும்போது, "அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு சென் டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. சிங்கப்பூர் அரசின் விருந்தோம்பல் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதற்கு அமெரிக்கா உதவியதாக கூறப்படுகிறது.

ட்ரம்ப் - கிம் இடையே இச்சந்திப்பு நடைபெறவுள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பை உலக நாடுகளுக்கிடையே ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/world/article24102171.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

“அமெரிக்கா- வட கொரியா மாநாடு நடைபெற வேண்டுமென கிம் கெஞ்சினார்”

கிம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்கா - வடகொரியா உச்சிமாநாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்ததையடுத்து, அதனை மீண்டும் நடத்தக்கோரி வட கொரிய தலைவர் கிம் கெஞ்சியதாக டிரம்பின் வழக்கறிஞர் ரூடி ஜூலியானி தெரிவித்தார்.

இஸ்ரேலில் உச்சிமாநாடு ஒன்றில் பேசிய அவர், அதிபர் டிரம்பின் கடுமையான நிலைப்பாடு வட கொரியாவை இந்த நிலைமைக்கு தள்ளியதாக கூறினார்.

ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த சந்திப்பு 2 வாரங்களுக்கு முன்னால் அதிபர் டிரம்பால் ரத்து செய்யப்பட்டது

ஆனால், அப்போது முதல் இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர்புகளாலும், முயற்சிகளாலும் இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

Presentational grey line

மே 10: சிங்கப்பூரில் ஜூன் 12ஆம் தேதி கிம்மை சந்திப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

மே 12: அணுஆயுத சோதனை தளத்தை தகர்த்த உள்ளதாக வட கொரியா அறிவித்தது.

மே 16: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் உச்சிமாநாடை ரத்து செய்வதாக வட கொரியா எச்சரித்தது.

மே 18: ஜான் போல்டனின் கருத்துகளில் இருந்து தாம் மாறுபடுவதாக டிரம்ப் தெரிவித்தார்.

மே 22: " சில நிபந்தனைகள் ஒப்புக் கொள்ளப்படாத வரையில்", சந்திப்பு நடைபெறாது என டிரம்ப் வற்புறுத்தினார்.

மே 24: "கடும் கோபம் மற்றும் திறந்த விரோத போக்கினை" வட கொரியா கடைபிடிப்பதாகக்கூறி மாநாட்டை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்.

ஜூன் 1: வட கொரியா அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடைபெறும் என டிரம்ப் அறிவித்தார்.

Presentational grey line

"கிம் ஜாங்-உன் மண்டியிட்டு கெஞ்சினார். அந்த நிலையில்தான் அவரை வைக்க வேண்டும்" என்று ரூடி ஜூலியானி தெரிவித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வட கொரியா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கிம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்நிலையில், உச்சிமாநாட்டுக்கான திட்டங்கள் "நல்ல விதமாக நடைபெற்று வருவதாக" டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்த "லிபியா மாதிரியை" பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தது வட கொரியாவில் எச்சரிக்கையை தூண்டியது.

"லிபியா மாதிரி" என்றால் என்ன? கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாஃபி, அணுசக்தி ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2011ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் கடாஃபி கொல்லப்பட்டார்.

பின்பு, "லிபியா மாதிரி" போன்ற ஒன்று, வட கொரியாவில் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

https://www.bbc.com/tamil/global-44395261

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக வல்லரசுகள் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை எண்டு பேய்ப்பட்டம் கட்டி அழிவுகளை உருவாக்கினதுதான் மிச்சம்.

  • தொடங்கியவர்

ட்ரம்ப் - கிம் சந்திக்க ஏற்பாடுகள் தயார்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் பெருமிதம்

 
FILES-SINGAPORE-NKOREA-US-TRUMP-KIM

விவியன் பாலகிருஷ்ணன்   -  AFP

‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன ’’ என்று சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் கூறினார்.

ஒருவர் நாட்டை ஒருவர் அழித்துவிடுவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து அணுஆயுத ஒழிப்பு குறித்து பேச ஒப்புக் கொண்டனர். இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் செய்து வருகிறது. இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் கூறியதாவது:

 

அதிபர்கள் ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்தச் சந்திப்பில் நல்லதொரு முடிவு கிட்டும் என்று நம்புகிறோம். அதேநேரத்தில் ஒரே சந்திப்பில் கொரிய தீபகற்பத்தில் நிலவும் எல்லா சிக்கல்களும் அவிழ்ந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்தச் சந்திப்புக்காக நாங்களாக யாரையும் அழைக்கவில்லை. முதலில் அவர்கள்தான் எங்களைத் தொடர்பு கொண்டார்கள். முதலில் அமெரிக்காதான் எங்களைத் தொடர்பு கொண்டது. சிங்கப்பூர்தான் சிறந்த இடம் என்று அமெரிக்காவும் வடகொரியாவும் முடிவு செய்துள்ளன. இதற்காக சிங்கப்பூர் மக்கள் பெருமை கொள்ள வேண்டும்.

நாங்கள் நடுநிலையானவர்கள், நம்பிக்கையானவர்கள், பாதுகாப்பான நாடு என்பதால் சிங்கப்பூரை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். நாங்களும் உலக அமைதிக்காக எங்கள் பங்கை செய்ய தயாராக இருக்கிறோம். அதற்காக ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துள்ளோம். அமெரிக்க அதிகாரிகளுடன் சிங்கப்பூர் அதிகாரிகள் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இவ்வாறு சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

அதிபர்கள் ட்ரம்ப் - கிம் இருவரும் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் சந்திக்க உள்ளனர். இந்தத் தீவு பிரபலமான சுற்றுலா தலமாகும்.

இந்தத் தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மேலும், சிங்கப்பூரில் உள்ள ஷாங்கிரி-லா ஓட்டலில் ட்ரம்ப்பும் செயின்ட் ரெஜிஸ் ஓட்டலில் கிம் ஜாங் உன்னும் தங்குகின்றனர். இந்த 3 இடங்களிலும் ராணுவ வீரர்கள் உட்பட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சிங்கப்பூர் செய்துள்ளது.

முன்னதாக சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அமெரிக்கா சென்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி திரும்பினர். இந் நிலையில், வடகொரியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். அங்கு வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோவைச் சந்தித்து ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்து கிறார்.

இரு நாட்டு அதிபர்கள் சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடைபெறுவதால் உலகின் பல நாடுகளில் இருந்தும் 2,500-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் சிங்கப்பூர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.- பிடிஐ

http://tamil.thehindu.com/world/article24110677.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.