Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கப்பூர் உச்சிமாநாடு: டிரம்ப், கிம் என்ன பேசுவார்கள்? - உற்றுநோக்கும் உலகம்

Featured Replies

சிங்கப்பூர் உச்சிமாநாடு: டிரம்ப், கிம் என்ன பேசுவார்கள்? - உற்றுநோக்கும் உலகம்

செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஒரு ''நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை'' குறித்து விவாதிக்கவுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உச்சிமாநாடுபடத்தின் காப்புரிமைAFP

மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சந்திப்பிற்காக கிம் ஜாங்-உன் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூர் வந்தடைந்தனர்.

''ஒட்டுமொத்த உலகமும் இதனை உற்று கவனித்து கொண்டிருக்கிறது'' என இந்த சந்திப்பு குறித்து கிம் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த உச்சி மாநாடு குறித்து தனக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் வருகைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வட கொரியா அணுஆயுதங்களை கைவிட வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. அதே வேளையில், இதற்கு பதிலாக அமெரிக்காவிடம் வட கொரியா எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

 

 

கிம் மற்றும் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் சிங்கப்பூரில் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கி இருந்த போதிலும், அவ்விரு இடங்களும் வெகு தொலைவில் இல்லை.

செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.

வட கொரியாவின் எதிர்பார்ப்பு என்ன?

வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இரு தலைவர்களும் ஒரு ''நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை'' குறித்து விவாதிப்பர் என்றும், கொரிய பிராந்தியத்தை ''அணுஆயுதமற்ற'' பிரதேசமாக மாற்றுவது, இருதரப்புக்கும் இடையேயான பரஸ்பர கவலைதரும் அம்சங்கள் ஆகியவை இந்த உச்சி மாநாட்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது இரு தரப்புக்கும் இடையேயான அணுகுமுறையில் மாற்றம் வந்துவிட்டதாக கேசிஎன்ஏ மேலும் கூறியுள்ளது.

முன்னதாக, இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சிங்கப்பூர் சென்றடைந்தார்.

சிங்கப்பூர் உச்சிமாநாடுபடத்தின் காப்புரிமைREUTERS/GETTY IMAGES

விமானத்தில் இருந்து டிரம்ப் இறங்கியவுடன் அவரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இதனிடையே, வட கொரியாவின் வெளியுறவுதுறை அமைச்சர் , பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் தனது சகோதரியான கிம்-யோ-ஜாங் ஆகியோருடன் சிங்கப்பூருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிம் சிங்கப்பூர் வந்தடைந்தார்.

https://www.bbc.com/tamil/global-44434526

  • தொடங்கியவர்

சிங்கப்பூரில் ட்ரெம்ப் - கிம் சந்திப்பு ; ஊடகங்களில் வெளியாகும் ஆய்வுகள் 

 

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரிய ஜனாதிபதி கிம் யொங் உன்னும் உச்சி மகாநாட்டுக்காக சிங்கப்பூர் வந்து சேர்ந்திருக்கும் நிலையில் சர்வதேச அரங்கில் இடம்பெற்றிருக்கக்கூடிய சர்ச்சைக்குரிய உச்சிமகாநாடுகள் குறித்து ஊடகங்களில் பெருவாரியான ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

kim.jpg

நாளை ட்ரம்புக்கும் கிம்முக்கும் இடையேயான சந்திப்பு வடகொரிய தலைவர் ஒருவருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் இடையிலான முதல் முதலான உச்சிமகாநாடு என்ற வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டதாக விளங்கப்போகிறது.

உலகில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட  நாடாக இருக்கும் வடகொரியாவுடன் கடந்த காலத்தில் நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தைகளின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது  ட்ரம்ப் - கிம் சந்திப்பு அமெரிக்க வரலாற்றில் மிகவும் சிக்கலானவையாக அமைந்த உச்சிமகாநாடுகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று சர்வதேச அரசியல் அவதானிகள் வர்ணிக்கிறார்கள்.

donald-trump-angela-merkel-g7-summit.jpg

உச்சிமகாநாடுகள் முற்றுமுழுதாக வெற்றிகரமானவையாக அமையாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு  முன்னேற்றத்தைக்காண்பதற்கு தலைவர்களுக்கிடையிலான தனிப்பட்ட வேதியியல் மிகவும் எப்போதுமே முக்கியமான ஒரு காரணியாகும். அதன் அடிப்படையில் பார்க்கும்போது ட்ரம்பையும் கிம்மையும் விட உலகில் இன்று  மிகவும் வேறுபட்ட உணர்வுநிலையில் இருக்கக்கூடிய வேறு இரு தலைவர்களைக் காணமுடியாது.

 35058165_10209677970580766_2591377271184

உச்சிமகாநாடுகள் குறித்து றொபின் றைட் என்ற அமெரிக்கப் பெண் பத்திரிகையாளர் நேற்றைய தினம் ' த நியூயோக் ' பத்திரிகைக்காக எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும்  ' எனக்கு புதியதாகத் தெரிகின்ற ' தகவல் ஒன்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்.

 

அதாவது ' அமெரிக்காவின் முதல் 26 ஜனாதிபதிகள் - அவர்கள் பதவியில் இருந்த 120 வருடகாலத்தில் - ஒருபோதும் உச்சிமகாநாடுகளை நடத்தியதில்லை. பதவியில் இருந்த காலத்தில் அவர்களில் எவருமே் ஐரோப்பாக்குக்கூட பயணம் செய்ததில்லை.முதலாவது உலகமகா யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு  பாரிஸுக்குச் செனற வூட்ரோ வில்சன்தான் அத்திலாந்திக்கைக் கடந்து ஐரோப்பாவுக்குச் சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி.' எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/34808

  • தொடங்கியவர்

டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து சிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

 

லிட்டில் இந்தியா - இந்த பதமே அதில் பொதிந்துள்ள அனைத்து தகவல்களையும் விவரித்துவிடுகிறது. இரண்டு கிலோமீட்டர் பரப்பில் விரிந்துள்ள இந்தப் பகுதியில் பெரும்பாலானோர்கள் இந்தியர்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள்.

டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து சிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் வந்த பிரகாஷ் இந்தப் பகுதியில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். அவர், "இரண்டு கிலோமீட்டர் பரப்பில் உள்ள இந்த பகுதியில் மட்டும் ஏறத்தாழ 300 உணவகங்களுக்கு மேல் உள்ளன. இந்தியாவுக்கு வெளியே ஒரு சிறிய பரப்பில் இத்தனை உணவகங்களை வேறு எங்கும் காண முடியாது."

'எங்கு காணினும் தமிழ்'

லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள சந்தையில் எங்கும் மக்கள் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள். இந்திய சந்தைகளை போல அங்கு வழிகளை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.

டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து சிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

சந்தையின் இருபக்கமும் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் தமிழே பிரதானமாக காணப்படுகின்றன. சிங்கப்பூரின் மக்கள் தொகையில் ஏழு சதவீதம் பேர் லிட்டில் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள்.

சீனர்கள் மற்றும் மலாய் மக்களுக்கு அடுத்து தமிழர்கள்தான் சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். சிங்கப்பூரை கட்டியெழுப்பியதில் தமிழர்களுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது.

தமிழும் சிங்கப்பூரின் அலுவல் மொழிகளில் ஒன்று.

சிங்கப்பூர் அமைச்சகத்தில் பல அமைச்சர்கள் தமிழர்கள். குறிப்பாக, வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலக்கிருஷ்ணன்.

தமிழர்களுக்கு அடுத்து தெலுங்கு, பஞ்சாபி மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

லிட்டில் இந்தியாவும், லாஜ்பட் நகரும்

லிட்டில் இந்தியா பகுதி ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லி லாஜ்பட் நகர் போலவே இருக்கிறது. எங்கு காணினும் மக்கள் கூட்டம். வணிக வளாகங்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுகிறார்கள். பிரபலமான உணவகங்களில் உணவு அருந்துவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்.

கடைகள் மட்டுமல்ல இந்த லிட்டில் இந்தியாவில் குடியிருப்புகளும் இருக்கிறது. அந்நாட்டின் பிறபகுதிகளில் உள்ள வீடுகளின் தோற்றத்தில் இல்லாமல், வேறு வடிவத்தில் இருக்கின்றன இங்குள்ள வீடுகள்.

டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து சிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பலர் சிங்கப்பூர் அமைச்சரவையில் இருக்கிறார்கள். அதே நேரம் அவர்கள் தங்கள் துறைகளை தாண்டி பிற அரசியல் நிகழ்வுகளில் அதிகம் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

அதனால்தான், செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க, அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜோங் - உன் சந்திப்பில் அதிகம் கவனம் செலுத்தாமல் அவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள் சிங்கப்பூர் மக்கள்.

டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து சிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இந்த சந்திப்பினால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறுகிறார் ஒரு டாக்சி ஓட்டுநர். அவர், "இந்த மாநாட்டின் காரணமாக, நகரெங்கும் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது மாற்று பாதைகளில் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடுகிறது." என்கிறார்.

'ஆர்வம் இல்லை, பெருமிதம் இருக்கிறது'

நான் பார்த்தவரை டிரம்ப் - கிம் சந்திப்பில் சிங்கப்பூர் மக்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. அதேநேரம், தங்கள் நாட்டில் இந்த சந்திப்பு நடப்பது குறித்த பெருமிதம் சிங்கப்பூர் மக்களுக்கு இருக்கிறது என்பதை அங்கு சிலரிடம் உரையாடிய போது உணர முடிந்தது.

 
 
 
 

நம்மிடம் பேசிய ஒருவர் பெருமிதத்துடன், "சிங்கப்பூர் மதிக்கப்படும்" என்றார்.

ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த கிம் ஜோங் - உன், "இந்த மாநாடு வெற்றி அடைந்தால், அதற்கு சிங்கப்பூரும் ஒரு காரணம்" என்றார்.

'2500 செய்தியாளர்கள்'

இந்த மாநாட்டிற்காக அரசாங்கம் பெரிய அளவில் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து ஏறத்தாழ 2500 செய்தியாளர்கள் இந்த மாநாடு குறித்து செய்தி சேகரிக்க வந்திருக்கிறார்கள்.

அங்கு எந்த செய்திதாளை வாங்கி படித்தாலும், எந்த தொலைக்காட்சி சேனலை மாற்றினாலும் இந்த சந்திப்பு குறித்த செய்திதான் முதன்மையாக இருக்கிறது.

அரை கி.மீ தொலைவில் இரு தலைவர்கள்

டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து சிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன்னும் அரை கிலோமீட்டர் தொலைவில் இரு வேறு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கிறார்கள்.

இருநாட்டு தலைவர்களும் செவ்வாய்க்கிழமை மாலை சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் சந்திக்கிறார்கள். அமெரிக்க அதிபரை சந்திக்கும் முதல் வட கொரிய தலைவராக கிம் ஜோங் உன் இருப்பார்.

வட கொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாற அமெரிக்கா விரும்புகிறது.

வடக்கு மற்றும் தென் கொரியா இடையே சண்டை நிறுத்தம் 1952 ஆம் ஆண்டு முதல் உள்ளது. ஆனால், அமைதி ஒப்பந்தம் ஏதும் இல்லை.

எப்படி அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மேற்பார்வையில் 1993ஆம் ஆண்டு பாலத்தீன தலைவர் யாசர் அராபத், இஸ்ரேல் பிரதமர் ராபின் இடையே நடந்த சந்திப்பு வரலாற்றில் முக்கிய இடம் பிடித்ததோ, சிங்கப்பூர் மாநாடு வெற்றிப் பெற்றால் இந்த சந்திப்பும் வரலாற்றில் அழுத்தமான இடத்தை பிடிக்கும்.

https://www.bbc.com/tamil/global-44435038

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.