Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இராணுவத்தின் operation Psychologyயும் வெற்றிகர தாக்குதல்களும்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இராணுவத்தின் operation  Psychologyயும்  வெற்றிகர தாக்குதல்களும்…

June 17, 2018

யார்  இந்த கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு? அப்படி என்னதான் செய்தார்?  மு.தமிழ்ச்செல்வன்…

RAT04.jpg?resize=800%2C450

எந்த இராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டதோஇ எந்த இராணுவம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என குற்றச்சாட்டப்படுகின்றதோஇ எந்த இராணுவத்தினரால்  தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என விரல் நீட்டப்படுகிறதோ அதே இராணுவத்தின் கேர்ணல் அதிகாரியபன கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு  இடமாற்றம் பெற்றுச் செல்லும்  போது ஏன் இவ்வாறு ஒரு பிரியர்விடை?! அப்படி அவர் என்ன செய்தார்? ஏன் முன்னாள் போராளிகள் அவரை தூக்கிச் சென்றனர்? பெண்கள் ஏன்  கதறி அழுது விடைகொடுத்தார்கள்?  போன்ற   பல கேள்விகள் எழுவதோடு வாதப்பிரதிவாதங்களும் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

யார் இந்த கேர்ணல் ரட்ணபிரிய பண்டு?  அவர் அப்படி என்னதான் செய்தார்?

1971 ஆம் ஆண்டு மாத்தளையில் பிறந்த ரட்ணப்பிரிய தனது ஜந்தாம் ஆண்டு வரையான ஆரம்ப கல்வியை ஹலேவெல வித்தியாலயத்திலும்இ  க.பொ.த. உயரதரம் வரை மாத்தளை சென்.தோமஸ் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார். பின்னர் 1990 இல் இலங்கை இராணுவத்தில்  இணைந்துகொண்ட ரட்ணப்பிரிய 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவு மாவட்டங்களின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இணைந்த கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கின்றார். அன்று முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை வன்னியில் தனது பணிகளை மேற்கொண்டிருக்கின்றார்.

இந்தக் காலப்பகுதியில்தான் ரட்ணப்பிரிய முன்னாள் போராளிகள்இ உட்பட பொது மக்களின் மனங்களை  வென்றெடுக்கும் வகையில் தனது பணிகளை மேற்கொண்டிருக்கின்றார். சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் 3500 பேர் பணியாற்றுகின்றனர்இ இதில் 261 முன் பள்ளிகளை சேர்ந்த் 530 முன்பள்ளி ஆசிரியர்களும் காணப்படுகின்றனர், இதனை தவிர முன்னாள் போராளிகள் உட்பட 15000 பேர் வரை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்குள் இணைந்துகொள்வதற்காக விண்ணப்பங்களை வழங்கிவிட்டு காத்திரு;ககின்றனர். இது ஒரு புறமிருக்க

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடக சந்திப்பு ஒன்றுக்காக ஒரு நாள் நாம் விசுவமடுவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி  முல்லைத்தீவு இணைந்த கட்டளை  பணியகத்திற்கு சென்றிருந்தோம்இ அப்போதுதான் முதல் முதலாக கேணல் ரட்ணப்பிரிய பண்டுவை நேரில் சந்தித்தோம் சில நிமிடங்கள் உரையாடலின் பின் சொன்னார் என்னிடம் ஒரு கைதுப்பாக்கியும் இல்லைஇ எனது அலுவலகத்திலும் எந்தவொரு ஆயுதத்தையும் காணமாட்டீர்கள்.  ஆனால் என்னுடன் இருப்பத்து நான்கு மணிநேரமும் இருப்பவர்கள் முன்னாள் போராளிகள் என்றார்.

தொடர்ந்தும் அவர் சொன்னார் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் அதில் இடம்பெற்ற சரிபிழைகளை  நான் ஆராயவோஇ விமர்சனம்  செய்யவோ வரவில்லை, என்னுடைய பணி இப்போது என்னை நம்பி வந்துள்ள முன்னாள் போராளிகள் உட்பட  ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் முன்னேற்றத்திற்காக   ஏதாவது செய்ய வேண்டும் என்பதே. நிற்க

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவருக்கான பிரியாவிடை  நிகழ்வில்   கேணல் ரட்ணபிரியவை சந்தித்தேன் அப்போது அவர் சொன்னார் நான் என்னுடைய மக்களை மிஸ் பண்ணுகிறேன் (i அளைள அல pநழிடந) என்றார். எனவே நான் எண்ணுகிறேன் இதுதான் கேணல் ரட்ணபிரியவின் பிரியாவிடையின் போது  அவரின் கழுத்தை மறைத்து நிரம்பி வழிந்த மாலைகளும்இ அவரை நனைத்த கண்ணீரும். அவரை தங்களின் தோளில் சுமந்து வந்து வழிய அனுப்பிய முன்ளனாள் போராளிகளும்.

RAT09.jpg?resize=800%2C600

RAT07.jpg?resize=800%2C600

அரசியல் நெருக்கடிகள் நிர்வாக சிக்கல்கள் என எண்ணிலடங்கா பிரச்சனைகளிற்கு முகம்கொடுத்து எம்மையெல்லாம் அன்புடன் ஆதரித்த அதிகாரி இடமாற்றம் பெற்று மீண்டும் இராணுவத்திற்கு செல்கிறார். பணியாளர்கள் ஒவ்வெருவரையும் தனித்தனியே நிலையறிந்து உதவிகள் பல செய்து தாயாய் தந்தையாய் அண்ணனாய் நண்பனாய் எம் மனங்களில் உயர்ந்திட்டார்.

நாம் தமிழராய் எதிரியாய் 30 வருடங்களுக்கு மேலாக இருந்தும் எவ்வித வேற்றுமையும் இன்றி எம்மை அன்போடு அரவனைத்த  உள்ளம் பிரியும் வேளை எவ்வாறு கண்ணீர் சிந்தாமல் இருப்பது. எனத் தனது பதிவை மேற்கொண்டிருகின்றார் இது உண்மையும் கூட. ரட்ணப்பிரிய சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுகின்றவர்களை ஒரு குடும்பத்தை போலவே பார்த்துக்கொண்டதாக பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

பணியாளர்களின் குடும்பங்களில் இடம்பெறுகின்ற நல்லது கெட்டது நிகழ்வுகளில் பங்கெடுத்தல், அவரவர் குமும்ப நிலைமைகளுக்கு ஏற்ப உதவுதல், தட்டிக்கொடுத்தல் போன்ற மனங்களை வெல்லக்கூடிய செயற்பாடுகளை ரட்ணப்பிரிய மேற்கொண்டிருக்கின்றார். இதனைத் தவிர சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற ஒரு பணியாளர் மாதம் ஒன்பதாயிரம் ரூபாவை திணைக்களத்திற்கு செலுத்திவிட்டு  வெளியில் சென்று  வேறு  பணிகளிலும் ஈடுப்படலாம்.  இதனை  அவர்கள் எந்த அடிப்படையில்  மேற்கொண்டார்கள் எனத் தெரியவில்லை,  மாதம் முப்பதாயிரம் ரூபா சம்பளம் பெறும் ஒரு சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர் ஒருவர் ஒன்பதாயிரம் ரூபாவை செலுத்திவிட்டு வெளியில் நாளாந்த கூலித் தொழில் ஒன்று சென்றால் அவருக்கு இரண்டு வருமானங்கள் கிடைக்கிறது. இது மாதிரி சலுகைகளை ரட்ணப்பிரிய ஏற்படுத்தி கொடுத்திருந்தார். இதனைத்தவிர அவ்வவ்போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில்  இடம்பெறுகின்ற விழாக்கள் கொண்டாட்டங்கள் மற்றும் வருட இறுதி விருந்துபசாரங்கள் என்பன ரட்ணப்பிரியவுக்கும் பணியாளர்களுக்கும் இடையேயான நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தியது.

இதனைத் தவிர திணைக்களத்திற்கு வெளியே அவர் மேற்கொண்ட கல்விஇ வாழ்வாதாரம் உள்ளிட்ட மனிதநேயப் பணிகள் திணைக்களத்திற்கு வெளியேயும் ரட்ணப்பிரியவுக்கு உறவை ஏற்படுத்தியது

யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் தலைவர்கள் அவர்களின் பிரதிநிதிகள் மக்களுக்கு  செய்யாத ஒன்றை  ஒரு இராணுவ கேணல் செய்திருக்கின்றார் அதனால்தான் அவருக்கான இடமாற்றம் வந்த போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற  முன்னாள் போராளிகள் மற்றும் பணியாளர்கள் வடமாகாண ஆளுநரிடமும்இ கொழும்புக்கு சென்று அமைச்சர் மனோகணேசன் அவர்களையும்இ  சந்தித்து அவரை இடமாற்றம் செய்ய  வேண்டாம் என்று கோரியதும்இ ஆர்ப்பாட்டங்கள் செய்ததும் காணப்படுகிறது.

இனமத மொழிக்கு அப்பால் கேணல் ரட்ணப்பிரியவிடம் மனிதநேயம் காணப்பட்டுள்ளது  அதனால்தான் அவரின் பிரியாவிடையின் போது மனிதர்களின் கூட்டமும் கண்ணீருடன்  வழியனுப்பினார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

rat03.jpg?resize=722%2C543

இது ஒரு புறமிருக்க  1996  இல் விடுதலைப்புலிகள் யாழ் குடாநாட்டைவிட்டு வெளியேறி பின்னர் வடமராட்சியில் எப்படி லறி விஜேவர்தன மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டாரோ அவ்வாறே ரட்ணப்பிரியுவும் செயற்பட்டிருகின்றார்.   அக்காலப்பகுதியில் குடாநாட்டில் கடத்தல்கள், காணால் போனல், பாலியல் வன்புனர்வுகள், கொலைகள்,  என  ஒரு புறம் தொடர பயங்கரவாத தடைச்சட்டம் அவசரகால  தடைச்சட்டத்தின் கீழான நடவடிக்கைகள் என மிகமிக நெருக்கடியான சூழ்நிலையில்  பிரிகேடியர் லறி விஜேவர்தன வடமாராட்சி மக்களின் மனங்களை வென்றிருந்தார். அந்த  நெருக்கடியான சூழ்நிலையில் வடமராட்சியில் இளைஞர்கள் அச்சமின்றி நடமாடவும், சோதனை நிலையகளில் கடுமையான சோதனைகள் கைது எதுவும் இன்றிய நிலையை உருவாக்கியது,  பொது மக்களுடன் நெருங்கி பழகி நட்பை உருவாக்கி  அவர்கள் அந்நியப்பட்டு செல்லாது நெருங்கி வர வைத்து   தனது இராணுவ  நோக்கை அடைந்துகொள்வதில் லறி விஜேவர்த்தன வெற்றிப்பெறிருந்தார்

இதனால்தான் அவர் மாற்றலாகி செல்லும் போது அவருக்கு விடுதலைப்புலிகள் இருந்த அக்காலத்திலேயே பருத்திதுறையில் பிரியைாவிடை செய்யும் அளவுக்கு மக்களின் மனதை வென்றிருந்தார். பின்னர் அந்த  பிரியாவிடை முடிந்து செல்லும் போது கரும்புலி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இதற்கு பின்னர்  சில இராணுவ  அதிகாரிகள் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது வெற்றிக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் 2009 க்கு பின்னர் விடுதலைப்புலிகள் இல்லாத இந்தசூழலில் கேர்ணல் ரட்ணப்பிரியுவும் அதனை மேற்கொண்டிருக்கின்றார். ரட்ணப்பிரியவின் இந்த  நடவடிக்கைகள் அரசினதும்,   இராணுவத்தினதும் நிகழச்சி நிரலுக்கு அமைவாக இடம்பெற்றிருந்தாலும்,  அதற்கப்பால்  ரட்ணப்பிரியவின் தனிப்பட்ட அனுகுமுறைகளும் இதற்கு காரணம். துப்பாக்கியால் யுத்தத்தை வென்றி  இராணுவம் இப்போது செயற்பாடுகளால் தமிழ் மக்களின் மனதை வெல்வதற்கான யுத்தத்தை 2009 க்கு பின்னர் ஆரம்பித்து விட்டார்கள். அதில் ஏற்பட்ட ஒரு பாரிய வெற்றிதான் ரட்ணப்பிரியவின் பிரியாவிடை.

தற்போது  இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற  operation  Psychology வெற்றிகரமாக தொடர்ந்தால் இலங்கை அரசுக்கு உள் நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பல வெற்றிகளை பெற்றுத்தர வழிவகுக்கும்.

எனவே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மக்களை பிரதேசவாதங்களாலும், சாதிவாதங்களாலும் வேறுப்படுத்தி  அவர்களிடமிருந்து அந்நியப்பட்டும், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார வெற்றிடங்களை நிரப்பாமலும் விட்டுச்செல்கின்ற போது நேற்று பருத்துறையில் பிரிகேடியர் லறி விஜேயவர்த்னவுக்கும் இன்று கேர்ணல் ரட்ணப்பிரியவுக்கும் நடந்த பிரியாவிடை நாளை லெப் கேர்ணல், மேஜர், கப்டன் என தொடங்கி சிப்பாய் வரை சென்று முடியும்.

http://globaltamilnews.net/2018/84016/

மேஜர் ஜெனரல் சுசந்த மெண்டிஸையும் விட்டுவிட்டீர்கள் சேர்த்துக்கொள்ளவும். 

  • கருத்துக்கள உறவுகள்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற ஒரு பணியாளர் மாதம் ஒன்பதாயிரம் ரூபாவை திணைக்களத்திற்கு செலுத்திவிட்டு  வெளியில் சென்று  வேறு  பணிகளிலும் ஈடுப்படலாம்.  இதனை  அவர்கள் எந்த அடிப்படையில்  மேற்கொண்டார்கள் எனத் தெரியவில்லைஇ  மாதம் முப்பதாயிரம் ரூபா சம்பளம் பெறும் ஒரு சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர் ஒருவர் ஒன்பதாயிரம் ரூபாவை செலுத்திவிட்டு வெளியில் நாளாந்த கூலித் தொழில் ஒன்று சென்றால் அவருக்கு இரண்டு வருமானங்கள் கிடைக்கிறது. இது மாதிரி சலுகைகளை ரட்ணப்பிரிய ஏற்படுத்தி கொடுத்திருந்தார். 

இவர் பலவருடமாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் தனக்குகீழ் தொழில்புரிந்த போராளிகளின் சம்பளத்திலிருந்து  ஆளுக்கு  மாதம் 10000 ரூபாவை ஆட்டையை போட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே இவரின் இடமாற்றம் நடக்கிறது என்பதை ஊடகங்கள்வாயிலாக அறியமுடிகிறது. இதில்தான் தில்லுமுல்லு இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.