Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கச்சேரிக்குள் மாறி அழுத்தியதால் பெரும் வில்லங்கம்: மோட்டார் சைக்கிள்களை இழந்த பெண் உத்தியோகத்தர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கச்சேரிக்குள் மாறி அழுத்தியதால் பெரும் வில்லங்கம்: மோட்டார் சைக்கிள்களை இழந்த பெண் உத்தியோகத்தர்கள்!

June 19, 2018
e1908055225dd206d3b41d1bb15024e9.0-696x4

பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக அச்சிலேற்றரை சாரதியின் தவறாக அழுத்தியதால் யாழ்.மாவட்ட செயலகத்திற்குள் இன்று பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஹன்டர் வாகனம் தறிகெட்டு பாய்ந்ததால் மாவட்ட செயலக வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன.

இந்தச் சம்பவம் இன்று (19) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

 

யாழ்.மாவட்ட செயலகத்துக்கு ஹன்டர் வாகனம் ஒன்றில் பொருள்கள் ஏற்றிவரப்பட்டன.

உத்தியோகத்தர்களின் வாகனத்தரிப்பிடத்துக்கு அருகின் ஹன்டர் வாகனத்தை நிறுத்த சாரதி திட்டமிட்டுள்ளார்.

வாகனத்தின் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக அச்சிலேற்றரை சாரதி மாற்றி அழுத்தியதால் வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து உத்தியோகத்தர்களின் வாகனத் தரிபிடத்துக்குள் புகுந்தது.

சாரதியின் கவயீனத்தால் இந்த விபத்து ஏற்பட்டது. உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன.

அவற்றில் பல பெண் உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

 

http://www.pagetamil.com/8882/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திக்கு 
மேலே இருக்கும் தலைப்பு ..... 

இவர்கள் இப்போதான் தமிழ் பழகுகிறார்கள் போல. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Maruthankerny said:

இந்த செய்திக்கு 
மேலே இருக்கும் தலைப்பு ..... 

இவர்கள் இப்போதான் தமிழ் பழகுகிறார்கள் போல. 

செய்திகளுக்கு தலைப்பு வைப்பதே ஒரு கலை. தமிழ் ஊடகங்கள், இணையத் தளங்கள் இதில் அரிவரியில்தான் நிற்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

அவற்றில் பல பெண் உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

உந்த வரிதான் எனக்கு கன டவுட்டை குடுக்குது.

நான் நினைக்கிறன் றைவர் வேணுமெண்டு கொண்டு போய் இடிச்சிருக்கிறான்.tw_glasses:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.