Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கியை மீண்டும் களத்தில் இறக்க முயற்சி

Featured Replies

விக்கியை மீண்டும் களத்தில் இறக்க முயற்சி

(ஆர்.ராம்)

வட மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதுள்ள முலமைச்சர் விக்னேஸ்வரனையே மீண்டும் களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

cv.jpg

அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் வெளியேறினால் வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரனின் அணியோ பொம்பான்மை பலத்தினை பெறமுடியாத நிலை ஏற்படுவதோடு, தமிழரின் பேரம்பேசும் பலமும் வெகுவாக குறைந்து விடும். 

அவ்வாறு குறைகின்றபோது உரிமைகளை வென்றெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் மோசமான நிலையை அடைந்து விடும் என்பது தமிழ்த் தேசிய அரசியல் அவதானிகளின் கருத்தாகவுள்ளது. 

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபைக்கு மீண்டும் விக்னேஸ்வரனை களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அதேநேரம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவதற்கு தயாராகவுள்ளேன் என அறிவித்துள்ள இலங்கை தமிழரசுக்  கட்சியின் தலைவர்  மாவை.சேனாதிராஜா அம் முடிவிலிருந்து பின்வாங்கி விடக்கூடாது என்று அவருக்கு ஆதரவாண அணி‍யொன்றும் அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/35813

கூட்­ட­மைப்பு சார்பில் விக்­கியை மீண்டும் கள­மி­றக்­கு­வ­தற்கு பல­மு­னை­களில் முயற்சி

ஆர்.ராம்

மாவை பின்­வாங்­கி­வி­டக்­கூ­டா­தென அவர் ஆத­ரவு அணியும் அழுத்தம்

வட­மா­கா­ண­ச­பைக்­கான தேர்­தலின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் தற்­போ­துள்ள முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னையே மீண்டும் கள­மி­றக்­கு­வ­தற்கு பல முனை­களில் முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அதே­நேரம் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­குவ­த­ற்கு தயா­ரா­க­வுள்ளேன் என அறி­வித்­துள்ள இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் ஆர்.ராம்  வட­மா­கா­ண­ச­பைக்­கான தேர்­தலின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் தற்­போ­துள்ள முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னையே மீண்டும் கள­மி­றக்­கு­வ­தற்கு பல முனை­களில் முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன.    

அதே­நேரம் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­குவ­த­ற்கு தயா­ரா­க­வுள்ளேன் என அறி­வித்­துள்ள இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா அம்­மு­டி­வி­லி­ருந்து பின்­வாங்கி விடக்­கூ­டாது என அவ­ருக்கு ஆத­ர­வான அணி­யொன்று 

அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க ஆரம்­பித்­துள்­ளது.  

வட­மா­காண சபைக்­கான ஆயுட்­காலம் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்­துடன் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்த மாகா­ண­ச­பைக்­கான தேர்தல் தொடர்பில் தற்­போதே நகர்­வுகள் ஆரம்­ப­மா­கி­விட்­டன. வட­மா­காண முத­ல­மைச்சர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி உள்­ளிட்ட பல்­வேறு தரப்­புக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்று அணி­யொன்றை அமைத்து அதன் ஊடாக கள­மி­றங்­கு­வ­தற்கு காய் நகர்த்­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்றார். 

இத்­த­கைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து விக்­னேஸ்­வரன் வெளி­யே­றினால் வட­மா­காண சபையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்போ அல்­லது விக்­னேஸ்­வரன் அணியோ பெரும்­பான்மை பலத்­தினை பெற­மு­டி­யாத நிலைமை ஏற்­ப­டு­வ­தோடு தமி­ழரின் பேரம்­பேசும் பலமும் வெகு­வாக குறைந்து விடும். அவ்­வாறு குறை­கின்­ற­போது உரி­மை­களை வென்­றெ­டுத்தல் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­களும் மோச­மான நிலையை அடைந்து விடும் என்­பது தமிழ்த் தேசிய அர­சியல் அவ­தா­னி­களின் கருத்­தா­க­வுள்­ளது.  

இவ்­வா­றான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் வட­ம­காண சபைக்கு மீண்டும் விக்­னேஸ்­வ­ரனே கள­மி­றக்­கப்­பட வேண்டும் என்ற தோர­ணையில் பல­முனை முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக, வட­மா­கா­ணத்தில் உள்ள நல்லை ஆதீனம் உள்­ளிட்ட இந்து அமைப்­புக்கள், ஆயர் இல்லம் உள்­ளிட்ட கிறிஸ்­தவ அமைப்­புக்கள் ஆகி­ய­வற்றை இணைத்து கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், விக்­னேஸ்­வரன் ஆகி­யோ­ரினை இணைந்து பய­ணிக்கச் செய்­வ­தற்­கான பரஸ்­பர பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் முயற்­சி­யொன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.  

அடுத்­த­தாக, சம்­பந்தன் மற்றும் விக்­னேஸ்­வரன் ஆகி­யோரை மனம் விட்­டுப்­பே­சு­வ­தற்கு ஏற்­க­னவே ஏற்­பாடு செய்து வெற்றி கண்­டி­ருந்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கன­க­ஈ­சு­வரன் ஊடாக மீண்டும் அது­போன்­ற­தொரு இரு­த­ரப்புப் பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுப்­ப­தற்கு கரி­சனை செய்­யு­மாறு கோரிக்­கைகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.  

இத­னை­வி­டவும் விக்­னேஸ்­வ­ரனின் நீதி­ய­ரசர் பேசு­கிறார் நூல்­வெ­ளி­யீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து கொள்­வ­தற்­காக வருகை தந்­தி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிரித்­தா­னியக் கிளைத்­த­லைவர் சட்­டத்­த­ரணி ஆர்.டி.இரத்­தி­ன­சிங்கம், சம்­பந்தன் விக்­னேஸ்­வ­ரனை தனித்­த­னி­யாக பேச்சு நடத்தி இணைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்வார் என எதிர்­பார்க்­கப்­பட்­ட­போதும் சந்­தர்ப்ப சூழ்­நி­லைகள் அதற்கு இட­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. இதன் கார­ணத்தால் அத்­த­கைய முயற்­சி­யொன்றை மேற்­கொள்­வ­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிரித்­தா­னியக் கிளை உள்­ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குச் சார்­பான புலம்­பெயர் அமைப்­புக்­களின் ஏகோ­பித்த தீர்­மா­னத்­திற்கு அமைய விசேட குழு­வொன்றை எதிர்­வ­ரும்­கா­லத்தில் இலங்­கைக்கு அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.  

இவ்­வாறு விக்­னேஸ்­வ­ரனை கூட்­ட­மைப்பின் வேட்­பா­ள­ராக மீண்டும் கள­மி­றக்­கு­வ­தற்­கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமகாலத்தில் ,கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தெரிவாக இருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவை இம்முறை களமிறக்கியாகவேண்டும் என்ற அடிப்படையில் வடமாகாண சபையின் முக்கியஸ்தர்களும் இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளிடங்கிய அணியொன்று பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வருகிறது.

  .   மாவை.சோ.சேனா­தி­ராஜா அம்­மு­டி­வி­லி­ருந்து பின்­வாங்கி விடக்­கூ­டாது என அவ­ருக்கு ஆத­ர­வான அணி­யொன்று

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-07-01#page-1

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தமிழ் அர­சுக் கட்சி நபரே – முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் – சிறி­த­ரன் எம்.பி.!!

625.500.560.350.160.300.053.800.900.160.

வடக்கு மாகாண சபைக்­கான தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் நிறுத்­தப்­ப­டு­கின்ற முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரா­கத்­தான் இருப்­பார். அதில் எந்த மாற்­ற­மும் இல்லை.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறித­ரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது அவர் இத­னைக் கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகாண சபைக்­கான முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் யார் என்று தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழு இன்­னும் முடிவு எடுக்­க­வில்லை. கட்­சி­யி­லுள்ள பெரும்­பா­லா­ன­வர்­கள், கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ரா­சா­வைக் கள­மி­றக்­க­வேண்­டும் என்று விரும்­பு­கின்­ற­னர்.

கடந்த தேர்­த­லி­லும் அவ­ருக்­குத்­தான் அந்­தச் சந்­தர்ப்­பம் இருந்­தது.மாற்­றத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்­காக கடந்த தடவை நீதி­ய­ர­சர் விக்­னேஸ்­வ­ர­னைக் கள­மி­றக்­கி­யி­ருந்­தோம்.

அப்­போ­தைய அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளி­னால் அவ­ரைத் தெரிவு செய்­தி­ருந்­தோம். கடந்த தேர்­த­லில் தன்­னு­டன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ரா­சா­வும் போட்­டி­யி­டட்­டும்.

இரண்டு ஆண்­டு­க­ளின் பின்­னர் அவர் ஆட்­சிப் பொறுப்­பேற்­கட்­டும் என்று விக்­னேஸ்­வ­ரன் அப்­போது கூறி­யி­ருந்­தார். ஆனால் மாவை அதனை நிரா­க­ரித்­தி­ருந்­தார்.

மாவை சேனா­தி­ராசா, தமிழ் மக்­க­ளு­டைய விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் 50ஆண்­டு­கள் அர­சி­யல் பணி­யாற்­றி­யி­ருக்­கி­றார். மக்­க­ளோடு இருந்­தி­ருக்­கின்­றார். அவ­ரு­டைய பய­ணத்­துக்கு ஒரு சந்­தர்ப்­பம் வழங்­க­வேண்­டும்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் இரண்டு பங்­கா­ளிக் கட்­சி­கள் இருக்­கின்­றன. இந்­தக் கட்­சி­க­ளி­னது விருப்­பங்­க­ளும் ஆரா­யப்­ப­டும். எல்­லோ­ரு­டைய விருப்­பங்­க­ளின் அடிப்­ப­டை­யில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வேட்­பா­ளர்­தான் நிறுத்­தப்­ப­டு­வார் என்­ப­தில் எந்­த­வித மாற்­ற­மும் இல்லை. முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­கின்­ற­வர் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரா­கத்­தான் இருப்­பார் – என்­றார்.

வட­மா­காண முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் அவ­ரது அமைச்­சுப் பொறுப்­பில் தொடர்­வ­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் இடைக்­கால உத்­த­ரவு வழங்­கி­யி­ருப்­பது குறித்­துக் கருத்­துத் தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ரன், ‘‘டெனீஸ்­வ­ர­னைப் பொறுத்­த­வ­ரை­யில் வெற்­றி­யாக இருக்­க­லாம்.

ஆனால் மாகாண சபை­யின் நடை­மு­றை­கள் தொடர்­பிலே அது ஒரு தோல்­வியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது’’ என்­றார்.

இடை­வெ­ளி­கள் இன்­னும் அதி­க­ரிப்­ப­தற்கு கார­ண­மாக இந்த விட­யம் அமை­கி­றது என்­றும் சுட்­டிக்­காட்­டி­னார். தமி­ழர்­க­ளின் உண்­மை­யான போராட்­டங்­க­ளில் இருந்து மக்­க­ளின் கவ­னத்­தைத் திசை திருப்­பு­வ­தாக இவை அமைந்­தி­ருக்­கின்­றன என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

http://newuthayan.com/story/09/தமிழ்-அர­சுக்-கட்சி-நபரே-முத­ல­மைச்­சர்-வேட்­பா­ளர்-சிறி­த­ரன்-எம்-பி.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

3_D0_B6_AE0-_CC00-43_A2-948_C-_BAF819376

Edited by Kavi arunasalam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.