Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் திரைப்படங்களை சாடுகின்றார் சட்டமொழுங்கு அமைச்சர்

Featured Replies

தமிழ் திரைப்படங்களை சாடுகின்றார் சட்டமொழுங்கு அமைச்சர்

 

 

தமிழ் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளே ஆவா குழுவினரின் வன்முறைக்கு காரணம் என இலங்கையின் சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

தமிழ்திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளில் பின்பற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும்  ஆவா குழுவினர் பின்னர் கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் அங்குள்ள நிலைமை குறித்து தனக்கு எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ள  அமைச்சர் ஆவா குழுவினர் வாள்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

ranjith_ji.jpg

எனினும் ஊடகங்களும் அரசியல் எதிராளிகளும் தெரிவிப்பது போன்று நிலைமை அவ்வளவு மோசமானதாகயில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மாத்திரம் வடபகுதியில் 3000 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/36587

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படங்களில் சண்டைக்காட்சிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்துள்ளது. கஞ்சா கடத்தலையும் தமிழ் படங்களில் காட்டுகிறார்களா??
யாழ் மாநகரசபை உறுப்பினர் சொன்னது போல்(cmr.fm) இராணுவ புலநாய்வினர் சில தமிழ் இளைஞர்களை பிழையாக  வழி நடாத்துகிறார்கள்.பொலிசார் வன்முறைகளை நிறுத்தாமல் கண்டும் காணாதது போல் நடக்கிறார்கள் என்பது தன உண்மை.

  • தொடங்கியவர்

ஊடகங்கள் கூறுவது போல வடக்கில் மோசமான நிலை இல்லை – ரஞ்சித் மத்தும பண்டார

 

ranjith-madduma-bandara-300x200.jpgஊடகங்களாலும், அரசியல் எதிரிகளாலும் கூறப்படுவது போன்று, வடக்கில் ஒன்றும் மோசமான நிலை இல்லை என்று, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதியிலும், இந்த மாத தொடங்கத்திலும், யாழ்ப்பாணத்தில் திடீரென குற்றச்செயல்களும், சமூக விரோத செயல்களும் அதிகரித்திருந்த நிலையில், நிலைமைகளை நேரில் ஆராய்வதற்கு, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்றுமுன்தினம் அங்கு சென்றிருந்தார்.

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுடன், யாழ்ப்பாணம் சென்றிருந்த அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து, அரச அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண ஆளுனர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

இதுகுறித்து, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,

“தென்னிந்திய தமிழ் திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களாலேயே ஆவா குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக் காட்சிகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பயமுறுத்துவதற்காக, கொள்ளைகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மக்களை அச்சுறுத்துவதற்கு வாள்களை வீசுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள களநிலைமைகள் குறித்து, அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் விளக்கமாக கூறினர்.

ஊடகங்களாலும், அரசியல் எதிரிகளாலும், சித்திரிக்கப்படுவது போல, யாழ்ப்பாணத்தில் ஒன்றும் நிலைமைகள் மோசமாக இல்லை.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வடக்கில் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும், சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்றைய சந்திப்பின் போது, சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் தெரிவித்திருந்தார்.

அதனை, சிறிலங்கா காவல்துறை மா அதிபரும் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/07/14/news/31886

தமிழர் பகுதியில் நடைபெறும் 99% ஆன சமூக விரோத செயல்கள் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் நிதியுதவியில் இயங்கும் சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் முப்படை பயங்கரவாதிகளின் நெறிப்படுத்தலில் நடைபெறுகிறது. இதை அண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பகிரங்கமாக இந்தப் பயங்கரவாதிகளை இயக்குபவர்களிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

எனவே பழியை காலத்துக்கு காலம் அங்கு-இங்கு போட்டு பிழைப்பு நடத்தும் போக்கு சிங்கள அரச பயங்கரவாதிகளின் நீதித்துறை கும்பலிடமும் காணப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/14/2018 at 10:10 AM, nunavilan said:

தமிழ் படங்களில் சண்டைக்காட்சிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்துள்ளது. கஞ்சா கடத்தலையும் தமிழ் படங்களில் காட்டுகிறார்களா??
யாழ் மாநகரசபை உறுப்பினர் சொன்னது போல்(cmr.fm) இராணுவ புலநாய்வினர் சில தமிழ் இளைஞர்களை பிழையாக  வழி நடாத்துகிறார்கள்.பொலிசார் வன்முறைகளை நிறுத்தாமல் கண்டும் காணாதது போல் நடக்கிறார்கள் என்பது தன உண்மை.

இளம் பிள்ளைகளின் மனதை பாதிக்க கூடாது என்பதற்காக எல்லா நாடுகளிலும் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. சில நாடுகளில் தணிக்கை அரசியல் காரனங்ககுக்காக செய்யப்படுகிறது.

வெளிவரும் செய்திகளின் படி, திரைப்படங்களில் உள்ள வாள்வெட்டு காட்சிகளை ஒத்த வகையிலேயே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் ஈடுபடுபவர்கள் சிறந்த பாடசாலைகளில் பயின்ற இளம் பிள்ளைகள். இவர்கள் வசதியான குடும்பங்களில் பிறந்தவர்களும் கூட. வாள்வெட்டு காட்சிகளை தணிக்கை செய்து அதனால் பயன்கிடைக்குமா என்று பார்ப்பதால் என்ன பாதிப்பு வரும்?

கஞ்சா இன்று முன்னேற்றம் அடைந்த நாடுகளில் சட்டரீதியானதற்கு காரணம் கஞ்சா வன்முறையை தூண்டும் போதை பொருள் அல்ல. மாறாக கஞ்சா அமைதியையும், கனவு நிலையையும் தோற்றுவிக்கும் போதைப்பொருள். கஞ்சாவில் இருந்து நோவை குறைக்கும் மருந்துகள், மற்றும் மன நோய்க்கான மருந்துகள் பல பத்து ஆண்டுகளாக தயாரிக்க படுகின்றன. கஞ்சா சட்ட்டவிரோதமாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்களை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்:

  1. அமெரிக்கா வெளிநாட்டரை விரும்பி ஏற்றுக்கொள்ளாத காலத்தில் கஞ்சா புகைக்கும் ஹிப்பிகள் வெளிநாட்டரை விரும்பி ஏற்றுக்கொண்டு, கிறீஸ்தவ குடும்ப வாழ்வை விட்டு, கூட்டு வாழ்க்கையை வாழவும், ஹரே கிருஷ்ணா ஹரே ராமா பிரச்சரத்த்தின் மூலம் இந்து சமய வாழ்க்கையை ஏற்படுத்த முயன்றதையும் அமெரிக்க மக்கள் விரும்பவில்லை. கஞ்சா அனவைரையும் விரும்பும் சமாதான, அமைதி மற்றும் மகிழ்வான மனநிலையை தோற்றுவிக்கும் போதைப்பொருள்.
  2. மக்கள் கஞ்சாவை நேரடியாக பயன்படுத்தினால் அவர்களுக்கு மனநோயும் நோவுகளும் குணமாகி விட்டால் இவற்றிற்கு மக்களுக்கு மருந்து தேவை படாது. தாம் மருந்து தயாரிக்க சட்டரீதியாக மலிவாக கஞ்சாவை வாங்கி மருந்தாக அதி உயர் விலையில் விற்க முடியாது என்று மருந்து தயாரிக்கும் நிருவனங்கள் கருதி  கஞ்சாவை சட்ட விரோதமானதாக வைத்து இருக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு பெரும்தொகை பணத்தை வழங்கின.

இந்த வன்முறைகளுக்கு கஞ்சா காரணம் என்று உளவியல் மருத்த்துவர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள்.

6 hours ago, போல் said:

தமிழர் பகுதியில் நடைபெறும் 99% ஆன சமூக விரோத செயல்கள் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் நிதியுதவியில் இயங்கும் சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் முப்படை பயங்கரவாதிகளின் நெறிப்படுத்தலில் நடைபெறுகிறது. இதை அண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பகிரங்கமாக இந்தப் பயங்கரவாதிகளை இயக்குபவர்களிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

எனவே பழியை காலத்துக்கு காலம் அங்கு-இங்கு போட்டு பிழைப்பு நடத்தும் போக்கு சிங்கள அரச பயங்கரவாதிகளின் நீதித்துறை கும்பலிடமும் காணப்படுகிறது.

 உண்மையில் சிங்களவர்களில் எல்லாவற்றிற்கும் குற்றம் சாட்டிக்கொண்டு எமது மக்கள் தாமாகவே தமக்குள் அதி மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் சக்திகளை  வளர்த்து வருகிறார்கள்.

  1. உள்ளிருந்து தமக்குள் அழிவை ஒரு புறம் ஏற்பத்திக்கொண்டு,
  2. மறு புறம் சிங்களவர்களாலும்,
  3. இன்னும் ஒரு புறம்  சர்வதேச சக்திகளான இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவினாலும் அழிக்கப்படுவதால்

       ஈழத்தமிழ் இனம் இன்னும் சில பத்து ஆண்டுகள் கூட ஒரு தனி இனமாக நிலைக்கும் என்பது சந்தேகத்துக்கு உரியதாகிறது.

இந்த மக்கள் முதலில் வெற்றிகரமாக செய்யக்கூடியது தமக்குள் இருந்து தம்மை அழிக்கும் சக்திகளை அடையாளம் கண்டு அதற்க்கு நிவாரணம் காண்பதே. சர்வதேச சக்திகளை வெற்றி கொள்ளவோ, சிங்கள இராணுவம் மற்றும் அரசியல்வாதிகளை வெற்றி கொள்ளவோ இன்று ஈழத்தமிழரால் முடியாது. ஆகவே உள்ளருந்து வரும் அழிவையாவது தடுக்க பார்க்க வேண்டும். அதையும் சிங்களவர் செய்கிறார்கள் என்று பாராமுகமாக இருந்தால் அழிவு வேகமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.