Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

ஒரு நிமிடக் கதைகள்

 
white_spacer.jpg
   
title_horline.jpg
 
white_spacer.jpg
 
p146.jpg விசாரிப்பு

பத்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக ஊழியர்கோபாலனைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவதற்காக, மாணிக்கம் தன் மனைவியுடன் சென்றிருந்தார். அலுவலகச் செய்திகள், ஊர் வம்பு, சினிமா, அரசியல் என உற்சாகமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டு இருந்துவிட்டுத் திரும்பி வருகையில் மனைவி கேட்டாள்...

‘‘ஏங்க, கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்துபோன கதையா, என்னென்னவோ அரட்டை அடிச்சுட்டுக் கடைசியில அவருடைய உடம்பைப் பத்தி விசாரிக்கவும், ஆறுதல் சொல்லவும் மறந்துட்டீங்களே... அவர் என்ன நினைச்சுப்பார்?’’

மாணிக்கம் சிரித்தவாறே சொன்னார்... ‘‘ஒண்ணும் நினைக்க மாட்டான்! சந்தோஷம் தான் படுவான். நான் வேணும்னுதான் அவன் நோயைப் பத்திப் பேசலை. இந்தப் பத்து நாளில் எத்தனை பேரின் கேள்விகளுக்கு உடம்பைப் பத்தி, சிகிச்சைகள் பத்தி சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிருப்பான்? அந்த நிலையில் என் பேச்சு அவனுக்கு நிச்சயம் புத்துணர்வும் தெம்பும் கொடுத்திருக்கும்!’’

- சொ.ஞானசம்பந்தன்

முதல் இடம்!

சு ந்தரியின் மகள் கவிதா பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவதாக வந்திருக்க, முதல் இடத்தைப் பிடித்தது, வேலைக்காரியின் மகள் அமிர்தா! இதை ஏதோ தனக்கு ஏற்பட்ட மானக்கேடாகவே எண்ணி, அன்றைக்கே வேலைக்காரியை நிறுத்திவிட்டாள் சுந்தரி.

‘‘என்னம்மா நீங்க, பாடங்கள்ல எனக்குத் தெரியாத சந்தேகங்களை எல்லாம் நான் அமிர்தாகிட்டேதான் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். அவ மட்டும் இல்லேன்னா, ஸ்கூல்ல நான் பத்தாவதாவோ பதினஞ்சா வதாவோதான் வந்திருப்பேன். இப்ப அவ அம்மாவை நீங்க வேலையை விட்டு நிறுத் திட்டீங்கன்னதும், அமிர்தா என்கிட்டே முகம் கொடுத்தே பேச மாட்டேங்கறா!’’ என்று கவிதா சிணுங்கவும், ‘அப்படியா விஷயம்’ என, மீண்டும் தேவியை வேலைக்கு வரச் சொன்னாள் சுந்தரி.

மறுநாள் ஸ்கூலில்... ‘‘நடந்ததெல்லாம் அம்மா சொன்னாங்க கவிதா! உனக்கு நான் எதுவுமே சொல்லிக்கொடுக்கலே! இருந் தாலும், எங்க கஷ்டம் புரிஞ்சு, எனக்காகப் பொய் சொல்லி, மறுபடியும் அம்மாவை வேலைக்கு எடுத்துக்க வெச்சிருக்கே. ரொம்பத் தேங்க்ஸ்!’’- கவிதாவின் கை பற்றி, நெகிழ்ந்தாள் அமிர்தா.

- ஆர்.ஜெசிந்தா

 

 

 
p145.jpg எதிர்பாராத உதவி

ஊரெல்லாம் கொலை, கொள்ளைகள். காவல்துறை இரவு நேர ரோந்துக்காவலை அதிகப்படுத்தி இருந்தது. நைட் ஷிஃப்ட் முடிந்து வீடு திரும்பிய ராஜுவை மறித்து, ‘ஐ.டி. கார்ட் இருக்கா? செல்போன் இருக்கா? ஆபீஸ் போன் நம்பர் இருக்கா?’ என்றுஎன் னென்னவோ கேட்டுக் குடைந்துவிட்டனர். ராஜு என்ன எடுத்துச் சொல்லியும், அவர் கள் சமாதானம் ஆகவில்லை.

குழுமியிருந்த காவலர்களில் ஒருத்தர், தான் கடந்த மூன்று வருடங்களாக அந்தப் பகுதியிலேயேதான் சுற்றி வருவதாகவும், அவனை ஒருநாள்கூடப் பார்த்ததே இல்லை என்றும் சொல்லி வயிற்றில் புளியைக்கரைத்தார். அந்த நேரம், திடுதிடுவென ஏழெட்டுதெரு நாய்கள் ஓடிவந்தன. ராஜுவைச் சுற்றி நின்று வாலை ஆட்டிக் குழைந்தன.

பேட்ரோல் வண்டியில் அமர்ந்திருந்த காவல் அதிகாரி மற்ற காவலர்களுக்குஉத்தர விட்டார்... ‘‘அந்த ஆளை விடுய்யா! அவர் இந்தப் பக்கத்து ஆள் மாதிரிதான் தெரியுது!’’

- ஆர்.ஜெகந்நாதன்

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருநிமிட கதைகள் நல்ல கதைகளாய் இருக்கு......!  tw_blush:

----ஆஸ்பத்திரிக்கு போனால் நோயாளியிடம் நோய் பற்றி விசாரிக்கக் கூடாது......!

---- சிறு வயதிலேயே பெண்பிள்ளைகள் சமயோசித்தமாய் பொய் சொல்லி பழகிறார்கள்.....!

----  நாய்கள் நன்றியுள்ளவை......!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.