Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராவணன் புகழ்பாடும் சம்பந்தன்

Featured Replies

இராவணன் புகழ்பாடும் சம்பந்தன்

 

 

சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தி எமது வரலாற்றை ஆவணப்படுத்தி வெளியிடுவது இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான தேவையாகவுள்ளது என தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

என்.கே.எஸ்.திருச்செல்வம் எழுதிய 'யார் இராவணன்' என்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

sampanthan.jpg

1624 ஆம் ஆண்டு போத்துக்கேயரால் திருக்கோணேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டபோது இவ் ஆலயத்தில் ஒரு பகுதியாக இருந்த 1000 கால் மண்டபத்தை உடைத்தே தற்போதுள்ள பிரட்ரிஸ் கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் சமுத்திரத்தின் அடியில் ஆலயத்தின் பல சிதைவுகளும் வரலாற்று உண்மைகளும் புதையுண்டு உள்ளது. எனவே இந்த ஆராய்ச்சி சட்டபூர்வமாக இடம்பெறவேண்டும்.

இராவணன் இலங்காபுரியை ஆண்ட பலம் வாய்ந்த தமிழ் மன்னன் அவர் சிவபொருமானின் தீவிர பக்தனாக இருந்துள்ளார். அதற்கான பல ஆதாரங்கள் உள்ளது. திருக்கோணேஸ்வரத்தின் வலது புறத்தில் உள்ள இராவணன் வெட்டு அதற்கு ஒரு சான்றாகும் என்றார்.

இராவணன் இலங்கையில் பல சிவாலயங்களை கட்டியது மற்றுமல்லாது இந்தியா இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் சிவாலயங்களை அமைத்துள்ளார். இந்தியா மற்றும் ஏனைய பல நாடுகளில் அவரை கடவுளாக வழிபடும் வழக்கமும் காணப்படுகின்றது.

இராவணன் ஆயுள்வேத வைத்தியத்திலும் கை தேர்ந்தவர் என்றும் வரலாறு கூறப்படுகின்றது. இராமாயணத்தில் ராமன் பற்றி அதிகமாக கூறப்பட்ட போதும் இராவணன் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை அந்த குறையை போக்க யார் இந்த இராவணன் என்ற நூல்வெளி வந்துள்ளது என்று நான் கருதுகின்றேன்.

எனவே சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளியிட வேண்டியது அவசியம்  இவ்வாறான ஒரு சரித்திர ரீதியான ஆய்வு நூலை வெளிட்ட நூலாசிரியர் என.கே.எஸ்.திருச்செல்வத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

http://www.virakesari.lk/article/37431

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் சரித்திரம் நோக்கி திரும்பியிட்டுது ஒரு கை பார்க்காமல் ஓயமாட்டார் போல் இருக்கு .?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 4:39 PM, பெருமாள் said:

சிங்கம் சரித்திரம் நோக்கி திரும்பியிட்டுது ஒரு கை பார்க்காமல் ஓயமாட்டார் போல் இருக்கு .?

மகிந்த:  அங்கை.... என்ன சத்தம்?
சம்பந்தன்:  சும்மா... பேசிக்கிட்டு இருக்கிறம் மாமா....  :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.