Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எலும்­புக்­கூ­டு­க­ளும் – தமி­ழர் தாய­க­மும்!!

Featured Replies

எலும்­புக்­கூ­டு­க­ளும் – தமி­ழர் தாய­க­மும்!!

 

 

 

mannar_puthaikuli-750x430.jpg
 
 
 
 

இப்­போ­தெல்­லாம் வடக்கு – கிழக்­கில் புதை­யல் தோண்­டும் நட­வ­டிக்கைகள் தனி­யார் தரப்­பி­ன­ரா­லும், கொள்ளைக்காரர்­க­ளா­லும், ஏன் இரா­ணு­வத்­தி­ன­ரா­லும்கூட மேற்கொள்ளப்படு கின்றன. இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளில் இற‌ங்­கி­யி­ருப்­ப­தன் மூல­மான கைது­கள் , புதை­யல் இருக்கும் இடத்தைக் கண்டறியும் அதி நவீன உப­கர‌ண பறி­மு­தல் உத்தரவுகள் என எல்­லாமே பர­ப­ரப்­புச் செய்­தி­க­ளாக ஊட­கங்­க­ளில் வெளி­யாகி வரு­கின்­றன.

இவற்­றுக்­கெல்­லாம் மேல­தி­க­மாக, இப்­போது வடக்கு கிழக்­கில் புதை­யல் தோண்­டும்போது புதை­யல் கிடைக்­கி­றதோ இல்­லையோ, ஆனால் மனித உடல் எச்­சங்­க­ளும், எலும்­பு­கூ­டு­க­ளும் அதிக அள­வில் வெளியே தலை­காட்­டு­கின்­றன.

அண்­மை­யில் மன்­னார், கூட்­டு­றவு மொத்த விற்­பனை நிறு­வன வளா­கத்­தில் (ச.தொ.ச) கட்­டட விரி­வாக்­கத்­திற்­காக நிலம் தோண்­டப்­பட்­ட­போது, மனித எலும்­புக்­கூ­டு­கள் வெளி­வர ஆரம்­பித்­தன. அது நீதித்­து­றைக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்டு நீதி­மன்­றத்­தின் மேற்­பார்­வை­யில் தொடர்ந்­தும் அதே இடத்­தில் அகழ்­வுப் பணி­கள் இடம் பெற்று வரு­கின்­றன. இன்­னும் மனித உடல் எச்­சங்­கள் வெளி­வ­ரு­வது நின்­ற­பா­டா­கத் தெரி­ய­வில்லை.

 
 
 

பகுப்பாய்வுக்காக அனுப்பப்படவுள்ள
மன்­னார் புதை­குழி எச்­சங்­கள்
கட்­டம் கட்­ட­மாக மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரும் அகழ்­வுப் பணி­க­ளின் போது, பல மனித எலும்­புக்­கூ­டு­கள் தென்­பட்­டுக் கொண்டே இருக்­கின்­றன. இந்தக் கட்­டுரை எழு­தப்­பட்­ட­வேளை வரை, மன்­னார் நீதி­மன்­றத்­தில் 52 பெட்­ட­கங்­க­ளில் மனித உடல் எச்­சங்­கள் பாது­காக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரிய வரு­கி­றது.இது சர்வசாதா­ர­ண­மா­கக் கரு­திக் கைவிட்­டுக் கடந்து போகக்­கூ­டி­ய­தொரு விட­ய­மு­மல்ல.

இந்த உடல் எச்­சங்­கள் பகுப்­பாய்­வுக்­காக கொழும்பு பல­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனுப்­பப்­பட இருக்­கின்­றன. அந்­தப் பகுப்­பாய்வு முடி­வு­கள் கிடைத்­த­தன் பின்­னரே இந்த எலும்புக்­கூ­டு­கள் பற்­றிய மர்ம முடிச்­சுக்­கள் அவி­ழும்.

குறித்­த­ம­னித உடல் எச்­சங்­களை ஆய்­வு­செய்வ­தன்­மூ­லம் அவற்­றின் வயது , அவை புதைக்­கப்­பட்ட காலம், நிகழ்ந்த சம்­ப­வம், இறந்த அல்லது கொல்­லப்­பட்ட‌ கார­ணங்­கள் எல்­லாம் வெளிச்­சத்­துக்கு வரும். சில நேரங்­க­ளில் இந்த எச்­சங்­கள் குறித்த விவ­ரங்­கள் வெளிச்­சத்­துக்கு வராது தடுக்­கப்­ப­ட­வும் கூடும். பகுப்­பாய்வு அறிக்கை வெளி­வர முன்­னரே, அந்த எச்­சங்­கள் சம்பந்­த­மாக என்ன நிகழ்ந்­தி­ருக்­க­ லாம் என அலசி ஆராய்­வதே இந்­தக்­கட்­டு­ரை­யின் நோக்­க­மா­கும்.

மன்­னார் எனப்­ப­டு­வது வடக்­கின் தமி­ழர் தாயகப் பரப்­பா­கும்.இந்த மாவட்­ட­மும், கடந்த போர் இடம்­பெற்ற காலத்­தில் பல வடுக்­க­ளை­யும், நேரடி, மறை­முக போர்­க­ளுக்கு முகம் கொடுத்த பகு­தி­யா­கும். எனவே அதன் விளை­வு­க­ளின் அறு­வ­டை­யா­கக் கூட இந்த மனித உடல் எச்­சங்­கள் அமை­ய­லாம்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் போராட்­டம் இன்று 500 நாள்­க­ளை­யும் கடந்து சென்று கொண்­டி­ருக்­கும் சமாந்­தர காலப்­ப­கு­தி­யில், இந்த மனி­தப் புதை­குழி எச்­சங்­கள் வெளி­வந்­தி­ருப்­பது, காலத்­தின் தன்­னாக்க வெளிப்­ப­டுத்­து­கையோ அல்­லது காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­க­ளின் கண்­ணீ­ருக்­கான நீதி­யின் விடை­யா­கவோ கூட அமை­ய­லாம்.

போர் இடம்­பெற்ற காலத்­தில் பல தமிழ் இளை­ஞர்­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­டி­ருந்­தி­ருக்­கி­றார்­கள், போர் முடி­வ­டைந்த காலப்­ப­கு­தி­யில்­கூட, பலர் காணா­மல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்று காணா­மல் ஆக்­கப்­ப­டோரைக் கண்­ட­றி­யும் ஆணைக்­குழு கூடத் தக­வல் வெளி­யிட்­டி­ருக்­கி­றது, அத்­தோடு காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான போராட்­டங்­க­ளில் கலந்­து­கொள்­கின்ற உற­வி­னர்­க­ளி­னால் காண்­பிக்­கப்­ப­டு­கின்ற ஒளிப்­ப­டங்­கள் கூட ஏரா­ள­மா­ன­வர்­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­துக்கு சான்­றாக அல்­லது சிற‌ந்த மாதி­ரி­யொன்­றா­க (சாம்­பி­ளாக) அமை­கி­றது. இந்த அகழ்­வுப் பணி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்ட எலும்­பு­கூ­டு­கள் அதற்­கான விடை­களை அல்­லது அது யாராக இருக்­கும் என்ற விடையை மர­ப­ணுச் சோத­னை­கள் மூலம் தந்­து­வி­ட­லாம்.

இரு மனித எலும்­புக்­கூ­டு­கள்
ஒன்­றை­யொன்று பற்­றிப்
பிடித்த நிலை­யில்…
அத்­தோடு மட்­டு­மல்­லாது, கடை­சி­யாக மன்­னார் அகழ்­வின் போது ஒரு குழிக்­குள் இரு மனித எலும்­புக்­கூ­டு­கள் ஒன்றை ஒன்று பற்றிப் பிடித்த நிலை­யில் தோற்­ற­ம­ளித்­த­தாக ஒளிப்­பட ஆதா­ரங்­க­ளு­டன் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அந்த எலும்­புக்­கூட்டை நிதா­ன­மாக ஆழ­மாக அவ­தா­னித்­தால் அதி­லும் ஏதோ ஒரு விட­யம் புலப்­பட்டு வெளிப்­ப­டு­கி­றது., அந்த எலும்­புக்­கூட்­டின் தலைப்­ப­குதி ஏதோ ஒன்றை வெளி­யு­லக்­குக்­குச் சொல்ல எத்­த­னிக்­கி­றது போலி­ருக்­கி­றது.

அந்த எலும்­புக்­கூட்டை உற்­றுப்­பார்க்­கும்­போது, தலைப்­ப­கு­தி­யா­னது ஒரு கோணத்­தி­னூ­டாக பார்த்து குர­லெ­டுத்­துக் கத­று­வது போல தோற்­ற­ம­ளிக்­கி­றது. அது­வும் அது இன்­னொ­ரு­வ­ரோடு இணைக்­கப்­பட்­டும் காணப்­ப­டு­கி­றது,

மன்­னார் புதை­குழி விவ­கா­ரத்­தில்
வெளி­யா­கும் பல­த­ரப்­பட்ட ஊகங்­கள்
இதன் மர்­மம் என்­ன­வென வெளிப்­ப­டுத்­தப்­பட்டே ஆக வேண்­டும், ஒரு­வேளை துன்­பு­றுத்­தப்­பட்டு கத­றிய நிலை­யில் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம், அல்­லது பலர் கைகள் கயி­று­க­ளால் பிணைக்­கப்­பட்டு கூட்­டா­கக் கொல்­லப்­பட்­டி­ருக்­கக்­கூட வாய்ப்­பி­ருக்­க­லாம், அல்­லது குற்­று­யி­ரு­டன் புதைக்­கப்­பட்­டி­ருக்­க­லாம், என ஊகங்­களை அடுக்­கிக் கொண்டே போக­லாம்.

இது மனிதப் படு­கொ­லை­யின் உச்ச விளிம்பு நிகழ்­வு­க­ளாகக்கூட அமைந்­தி­ருக்­க­லாம். அல்­லது அவற்­றின் பகுப்­பாய்வு முடி­வு­கள் அண்­மைய காலச் சம்­ப­வ­மாக அல்­லாது 200 முதல் 500 வரை­யான வரு­டங்­க­ளுக்கு முற்­பட்­ட­தா­கக் கூட இருக்­க­லாம் என்­ப­தும் வியப்­புக்கு உரி­ய­தொன்­றல்ல.

ஏனெ­னில், இலங்கை தீவு அந்­நி­யர்­க­ளான போர்த்­துக்­கீ­சர், ஒல்­லாந்­தர், ஆங்­கி­லே­யர் என்­போர் ஆளு­கைக்கு உள்­ளா­கி­யிருந்தபோது கரை­யோரப் பிர­தே­சங்­களே அந்த அன்­னி­யர்­க­ளது முத­லா­ளு­கைக்­கும், இராச்­சிய நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் உள்­ளா­கி­யி­ருந்­தமை வர­லாற்­றுப் பதி­வு­கள்.

மன்­னார் பகு­தி­யா­னது, இந்து சமுத்­தி­ரத்­தின் கேந்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த துறை­மு­கங்­க­ளை­யும் கோட்­டை­க­ளை­யும் கொண்­டி­ருந்­தது, இந்த ஆளுகை போராட்ட சூழல்­க­ளில் கைதி­கள், புரட்சி செய்­தோர், படை­யெ­டுப்­புக்­க­ளில் கொல்­லப்­பட்­டோர், குற்­றச் செயல்­க­ளுக்­காக கொல்­லப்­பட்­டோர் இவ்­வாறு புதைக்­கப்­ப ட்­டு­மி­ருக்­க­லாம். அவற்­றின் எச்­சங்­க­ளா­கக்­கூட இவை அமை­ய­லாம், இத்­த­கைய ஊட­கங்­க­ளுக்­கெல்­லாம், அந்த உடல் எச்­சங்­க­ளின் பகுப்­பாய்­வின் மூலம், எலும்­புக்­கூ­டு­கள் மண்­ணில் புதை­யுண்­டி­ருந்த கால இடை­வெ­ளியே விடை­ய­ளிக்கப் போகி­றது.

இது போன்­ற­தொரு நிகழ்­வாக அண்­மை­யில் உக்­ரைன் நாட்­டில் கல்­ல­றை­யொன்­றில் கண்­டெ­டுக்­கப்­பட்ட இணைந்த நிலை­யான மனித எலும்­புக்­கூ­டொன்று உல­கத்­தின் கவ­னத்தைப் பெரு­ம­ள­வில் ஈர்த்­தி­ருந்­தது.

சட­லங்­கள் புதைக்­கப்­பட்ட காலத்தை
பகுப்­பாய்வு முடி­வு­கள் உறு­தி­செய்­தால்
பல மர்­மங்­க­ளுக்கு விடை கிட்­டும்
அந்த எலும்­புக்­கூ­டு­கள் ஆணும் பெண்­ணும் இணைந்­த­வா­றான‌ நிலை­யில் காணப்­பட்­டன, அது 3000 ஆண்­டு­கள் பழ­மை­யான எலும்­புக்­கூ­டு­கள். அதில் ஆண் எலும்­புக்­கூ­டொன்­று­டன் பெண் மிக பாச­மாக, இயல்­பாக இருப்­பது போலத் தோன்­று­கி­றது.

அந்த எலும்­புக்­கூ­டு­களை ஆராய்ச்சி செய்த உக்­ரைன் நாட்டு தொல்­லி­யல் ஆராய்­சி­யா­ளர்­க­ளது கருத்­துப்­படி, எலும்­புக்­கூ­டு­கள் இருக்­கும் நிலையை நோக்­கும்­போது, கண­வன் மனை­வி­யு­டைய எலும்­புக்­கூ­டு­கள் என்­றும், இரண்­டும் இறந்த பின்­னர் ஒன்­றா­கப் புதைக்­கப்­ப­ட­வில்லை என்­றும், அதில் சாவின் பின் இயல்­பாக புதைப்ப‌து போன்று புதைக்­கப்­ப­ட­ வில்லை என்று தோன்­று­வ­தா­க­வும், கண­வன் இறந்த பின் உயிர்வாழ மன­மில்­லாத நிலை­யில் கண­வன் மீது கொண்ட அன்பு கார­ண­மாக மனை­வி­யா­ன­வள் அடுத்த பிற­வி­யில் தனது அந்தக் கணவனுடன் சேர்ந்து வாழ­லாம் என்ற எண்­ணத்­தி­ல், மெல்­லச் சாக­டிக்­கும் விசத்தை அருந்­திய பின்­னர் கண­வ­னின் உட­லுக்கு அரு­கில் படுத்து, அவ­ரது தலைக்கு கீழாக வலது கையை வைத்து கட்­டி­ய­ணத்து, கண­வ­னின் முகத்­து­டன் தனது முகத்­தைச் சாய்த்து தனது கால்­க­ளி­ரண்டையும் கண­வன் கால்­க­ளின் மீது போட்டு, இடது கையை அவ­ரது மார்பு மீது வைத்­த­வாறு , இயல்­பாக, விசத்­தின் வீரி­யத்­தால் மயக்­க­ம­டைந்து உயிர் துறந்­தி­ருக்­கி­றார் என்ற முடி­வுக்கு ஆய்­வா­ளர்­கள் வந்­தி­ருந்­த­னர்.

அந்த பெண்ணே இத்­த­கைய முடிவை விரும்பி மேற்­கொண்­டுள்­ளார் என்­றும், இறப்­பின் பின்­னர் இப்­ப­டி­யான இயல்­பான உடல்­க­ளின் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­திப் புதைப்­பது இய­லாத காரி­யம் என்­றும் உக்­ரைன் நாட்டு தொல்­லி­யல் ஆய்­வா­ளர்­கள் கூறு­வ­தோடு, குறித்த அந்­தப் பெண் தனது கண­வன்மீது கொண்­டி­ருந்த பாசத்தை எண்­ணித் தாம் மெய்­சி­லிர்ப்­ப­தா­க­வும் கூறி­ யுள்­ள­னர். இந்­தச்­சம்­ப­வம், உண்­மைக் காத­லுக்கு ஒரு சான்­றாக இருப்­பி­னும், இங்கு ஏன் இது குறித்து குறிப்­பிட நேர்­கிற தென்­றால் , ஒரு எலும்­புக்­கூடு இருக்­கும் நிலையை வைத்து குறித்த அந்த ஆணி­னதோ அல்­லது பெண்­ணி­னதோ இறப்­புப் பற்­றி­யும், இற‌க்­கும் போதான சூழல் அமை­வு­கள் பற்­றி­யும், குறித்த எலும்­புக்­கூட்­டுக்­கு­ரிய நபரோ, பெண்­ம­ணியோ இறந்த காலம், நேரம், வயது, ஆணா அல்லது பெண்ணா அல்­லது கர்ப்­ப­வ­தியா, கன்­னியா , என்ன இனம் , என்ன மொழி பேசி­னார்­கள் என்­ப­ன­வற்­றைக் கண்­ட­றி­யும் நவீன விஞ்­ஞான யுகத்­தில் தான் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம்.

மர்­மங்­கள் என்றோ ஒரு நாள்
துலங்­கியே ஆகும்
இதை ஏன் இங்கு குறிப்­பிட வேண்­டி­யுள்­ள­தெ­னில், மன்­னார் புதை­கு­ழி­யில் சிக்­கிய எலும்­புக்­கூட்­டின் முக­பா­வம் பல செய்­தி­க­ளைச் சொல்­கி­றது, அத­னு­டன் இன்­னொரு எலும்­புக்­கூடு இயல்­பாக பிணைந்­தி­ருக்­கி­றது அல்­லது பற்­றிப்­பி­டித்­தி­ருக்­கி­றது, இந்­நி­லை­களை வைத்து முடி­வு­களை நாம் எடுக்­க­லாம். அவை பல்­வேறு வகைப்­பட்ட ஊட­கங்­க­ளின் முடி­வில் மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டும். ஆனால் இந்த எலும்­பு­கூ­டு­கள் உண்­மை­யான பகுப்­பாய்­வுக்கு உட்­பத்­தப்­ப­டும்­போது அது எந்த ஆண்­டுக்­கு­ரி­யது? அவற்­றுக்­கு­ரிய ஆண் அல்­லது பெண், இறந்த ஆண்டு, இறக்­கும் போது அவர்­க­ளது வயது, குண்­டடி பட்டு இறந்­துள்­ளனரா? எலும்­பு­க­ளில் உடை­வு­கள் உள்­ளனவா? உடை­வு­கள், இறப்­புக்கு சற்று முன் சித்­தி­ர­வ­தை­யின்­போது ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­வையா? சம்­ப­வம் எவ­ரு­டைய ஆட்­சிக் காலத்­தில் இடம்­பெற்­றுள்­ளது? அதன் மர­பணுச் சோதனை மூலத்தை அறிந்­தால், அவை எவரு­டைய, எவர்­க­ளு­டைய உறவினர் அல்லது மகன் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உற­வு­க­ளின் மர­பணு மாதி­ரி­க­ளு­டன் ஒப்­பிட்டு தீர்க்­க­மான விஞ்­ஞான உண்­மை­க­ளின் அடிப்­ப­டை­யில் முடி­வு­களை எட்ட முடி­யும்.

இத்­த­கை­ய­தொரு முடிவை எட்­டு­வ­தற்கு முத­லில் பகுப்­பாய்வு முடி­வு­கள் உண்­மை­யாக இருக்க வேண்­டும், உண்­மை­யாக இருந்­தா­லும், அது அர­சி­யல் அல்­லது வேறு தலை­யீ­டு­கள், தடை­க­ளின்றி வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

எனவே புதை­கு­ழி­க­ளில் இத்­தனை கால­மும் மறைந்து போயி­ருந்த மர்­மங்­கள் துலங்­கும்­கா­லம் வெகு தொலை­வில் இல்லை. ஆனால் உண்மை உறு­திப்­ப­டுத்தப்படவேண்­டி­யி­ருந்­தால், குறித்த மனித உடல் எச்­சங்­கள் குறித்த பகுப்­பாய்­வு­கள் நேர்­மை­யா­ன­வி­தத்­தில், பக்­கச்சார்­பற்ற வகை­யில், அர­சி­யல் தலை­யீ­டு­கள் எது­வு­மின்றி இடம்­பெற்­றாக வேண்­டும்.
அத்­த­கை­ய­தொரு நீதி­யும் நேர்­மை­யு­மான பகுப்­பாய்­வு­கள் பல உண்­மை­களை வெளிக்­கொ­ண­ரும் வகை­யில் அமைய இட­முண்டு.

 

 

http://newuthayan.com/story/10/எலும்­புக்­கூ­டு­க­ளும்-தமி­ழர்-தாய­க­மும்.html

 

  • தொடங்கியவர்

யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவரை- நாட்டுக்கு விமோசனமில்லை!!

 

IMG_5844-1-800x450-750x430.jpg

 
 

 

 

1983ஆம் ஆண்­டின் ஜூலை மாதத்தை தமி­ழி­னம் இருக்­கும் வரை­யில் மறந்­து­விட முடி­யாது. இந்த நாட்­டின் இன­வா­தத்­தை­யும், தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான காழ்ப்­பு­ணர்­வை­யும் உல­குக்கு வௌிச்­சம் போட்­டுக் காண்­பித்­தது அந்த ஜூலை மாதம்­தான்.

தமி­ழர் பகு­தி­க­ளில் தோண்­டும்
இடங்­க­ளி­லெல்­லாம் மனித எலும்­புக்­கூ­டு­கள்

தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் தோண்­டும் இடங்­க­ளி­ல்­இருந்­தெல்­லாம் மனித எலும்­புக்­கூ­டு­கள் வௌி வந்து கொண்­டி­ருக்­கின்­றன. இவை தமி­ழர்­க­ளுடைய வையாக இருக்­க­லா­மென்­பது பல­ரது கணிப் பா­கும். அவ்­வா­றா­யின் இந்த எலும்­புக் கூடு­க­ளுக் குச் சொந்­தக்­கா­ரர்­கள் யார்? என்ற வினா தானா­கவே எழு­கின்­றது.

 

புத்­த­பி­ரான் அன்பு, அகிம்சை, கொல்­லாமை ஆகிய­ வற்­றைத் தமது போத­னை­க­ளில் முதன்மையாகக் குறிப்­பிட்­டி­ருந்­தார். அவ­ரது போத­னை­க­ளைக் கடைப்­பி­டிப்­ப­தா­கக் கூறிக்­கொள்­ளும் இந்த நாட்­டில் படு­கொ­லை­கள் குறை­வின்றி இடம்­பெற்­று­வ­ரு­வ­தைக் காண­மு­டி­கின்­றது.
இந்த ஆண்­டின் கடந்த ஆறு மாதங்­க­ளில் இரு­நூற்றி ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட மனி­தப் படு­கொ­லை­கள் நாட்­டில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் தரப்­பி­லி­ருந்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் கடந்த பல தசாப்தங்களாக பல்­வேறு சம்­ப­வங்­க­ளி­லும் கொலை செய்­யப்­பட்ட தமி­ழர்­க­ளின் சரி­யான எண்­ணிக்கை எவ­ருக்­குமே தெரி­யாது.

பேரி­ன­வா­தி­க­ளைத்
தலை­கு­னிய வைக்­கும்
மனி­தப் புதை­கு­ழி­கள்

இலங்­கையை ஒரு மர­க­தத்­தீவு என­வும், இந்து சமுத்­தி­ரத்­தின் முத்து என­வும் வர்­ணிக்­கின்­றோம். வௌிநாட்­ட­வர்­கள் இதன் அழ­கில் மயங்கி ஆண்­டு­தோ­றும் சுற்­று­லாப் பய­ணி ­க­ளாக இங்கு படை­யெ­டுக்­கின்­ற­னர். ஆனால் வெவ்­வேறு சம்­ப­வங்­க­ளில் தமி­ழர்­கள் சிந்­திய குருதி இந்த நாட்­டின் மண்­ணு­டன் கலந்­தி­ருப்­பதை அவர்­க­ளால் காண­மு­டி­வ­தில்லை. தமி­ழர்­க­ளின் துய­ரம் தோய்ந்த வர­லா­றும் அவர்­க­ளுக்­குத் தெரி­வ­து­மில்லை.

தமி­ழர்­க­ளுக்கு உரிமை எது­வும் வழங்­கப்­ப­டக் கூ­டாது என்­பது இந்த நாட்­டின் எழு­தாத விதி­யா­கும். எதை­யும் போரா­டித்­தான் பெற­வேண்­டும் என்ற நிலை­யில்­தான் தமி­ழர்­கள் உள்­ள­னர். தமது உரி­மை­கள் தொடர்­பாக அவர்­கள் வாயைத் திறந்­தால் இன­வா­தம் பேசு­வ­தா­கவே அது கரு­தப்­ப­டு­கின்­றது. பேரி­ன­வா­தக் கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக் கட்சி வட­ப­கு­தி­யில் காலூன்றி நிற்­ப ­தற்­குக் கார­ண­மாக இருந்­த­வர் மறைந்த தி.மகேஸ்­வ­ரன் எனத் துணிந்து கூற­லாம்.

விடு­த­லைப் புலி­க­ளது நிர்­வா­கம் குறித்து
கருத்து வௌியிட்ட விஜ­ய­க­லா­வுக்கு
எதி­ரா­கத் துள்­ளிக் கிளம்­பும் பேரி­ன­வா­தி­கள்

அவ­ரது அகால மறை­வுக்­குப் பின்­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் கட்­சிப்­பொ­றுப்­புக்­களை ஏற்­றுக்­கொண்­டார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்ட அவர், பின்­னர் இரா­ஜாங்க அமைச்­சர் பொறுப்­பை­யும் ஏற்­றுக்­கொண்­டார். புலி­கள் தொடர்­பாக அவர் கூறிய சில வார்த்­தை­கள் தென்­னி­லங்கை இன­வா­தி­க­ளி­டையே பெரும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. அவ­ரது அமைச்­சுப் பதவி பறிக்­கப்­பட்­டது. இதை ஏற்­றுக்­கொள்­ளாத இன­வா­தி­கள் அவ­ரது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யை­யும் பறிக்க வேண்­டு­மெ­ன­வும், அவ­ருக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்­குத் தொடர்ந்து தண்­ட­னைக்கு உள்­ளாக்க வேண்­டு­மெ­ன­வும் வற்­பு­றுத்திக் கூறு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்­தி­ருந்­தார். அவர் பங்­கேற்ற நிகழ்­வு­க­ளில் விஜ­ய­க­லா­வுக்கு முக்­கி­ய­மான இடம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. தலைமை அமைச்­ச­ரின் சிங்­கள மொழி மூல­மான உரையை விஜ­ய­க­லாவே தமி­ழில் மொழி பெயர்த்­தார். விஜ­ய­க­லா­வைப் புற­மொ­துக்­கி­விட்டு தமது கட்­சிப் பணி­களை யாழ்ப்­பா­ணத்­தில் முன்­னெ­ டுத்­துச் செல்­ல­மு­டி­யாது என்­பது ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வுக்கு நன்கு தெரி­யும். இதன் கார­ண­மா­கவே இன­வா­தி­க­ளைத் திருப்­திப் படுத்­து­வ­தற்­காக விஜ­ய­க­லா­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கப் பாவனை காட்­டிக் கொண்டு அவரை அரவ ணைத்துச் செல்­வ­தி­லும் ஈடு­பட்­டுள்­ளார்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சிக்கு
எதிர்ப்பு வௌியி­டும் இன­வா­தி­கள்

புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் தொடர்­பான சர்ச்சை தற்­போது நாட்­டில் முக்­கிய இடத்­தைப் பிடித்­துள்­ளது. அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டால் நாடு ஒன்­பது துண்­டு­க­ளாக உடைந்து விடு­மென கடும் கோட்­பாட்­டா­ளர்­கள் அர­சுக்கு எச்­ச­ரிக்கை விடுக் கின்­ற­னர். மாகா­ணங்­க­ளுக்கு அர­ச­மைப்­பின் ஊடாக அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டால், இந்த நிலை தோன்­றி­வி­டும் என்­பதே இவர்­க­ளது அச்­ச­மா­கும்.

எமது அண்டை நாடான இந்­தி­யா­வில் மாநி­லங்­க­ளுக்கு அதிக அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. காணி பொலிஸ் அதி­கா­ரங்­க­ளை­யும் மாநில அர­சு­களே கொண்­டுள்­ளன. இந்த நாட்­டில்­தான் மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்­கக் கூடா­தென்ற கூக்­கு­ரல்கள் கேட்­கின்­றன.

இந்த நாட்­டைப் பிடித்­துள்ள இன­வா­தம் என்ற பேய் விரட்­டி­ய­டிக்­கப்­ப­டும் வரை­யில் இனங்­க­ளுக்­கி­டை­யில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தவே முடி­யாது. அது மட்­டு­மல்­லாது, தமி­ழர்­கள் மீதான சந்­தே­கங்­க­ளும் முற்­றாக அகற்­றப்­பட வேண்­டும். பெரும்­பான்­மை­யி­னத் தலை­வர்­கள் இனி­யா­வது யதார்த்­தத்­தைப் புரிந்து கொண்டு நடந்­தால் மட்­டுமே நாட் டுக்கு விமோ­ச­னம் கிடைக்­கும்.

http://newuthayan.com/story/12/யதார்த்தத்தை-புரிந்து-கொள்ளாதவரை-நாட்டுக்கு-விமோசனமில்லை.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இறுதி வாக்குமூலத்தை சுமந்து வரும் ஈழத்தின் புதை குழிகளும், எலும்புக் கூடுகளும் –

 

கண்களற்ற எலும்புக்கூடுகள் கண்களால் எதனையோ சொல்கின்றன…..

 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

 

IMG_7003.jpg

1996இல் இலங்கை இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றியபோது ஊர் பாக்கவும் பஞ்சத்தில் வயிறு வளர்க்கவும் கிளிநொச்சிக்கு வந்தவர்களை இலங்கை இராணுவம் கொன்று புதைத்தது. மிகவும் கொடூரமாக அவர்கள் சித்திரவதை புரிந்து கொல்லப்பட்டார்கள். அதில் காயங்களுடன் இராணுவத்தினரிடமிருந்து சாதுரியமாக தப்பியவர்களும் உண்டு. திரும்பி வருவார் என்று ஊருக்குச் சென்றவர்கள் பலரும் காணாமல் போயினர். இதன் விளைவாக 2000ஆம் ஆண்டில் ஆனையிறவு மீட்புடன் கிளிநொச்சி திரும்பியபோது பலரது வீட்டு கிணறுகளிலும் மலசல கூடங்களிலும் எலும்புக்கூடுகளே காத்திருந்தன.

அந்தக் காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. கந்தபுரம் தமிழீழ காவல்துறை அலுவலகத்தில் பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரிசையாக படுக்க வைக்கப்பட்டிருந்தன. தம் உறவுகளின் எலும்புக்கூடுகளின் நாடி பிடித்து பார்ப்பதற்காக மக்கள் வந்திருந்தார்கள். அதற்குள் ஏதேதோ அடையாளங்களை வைத்தெல்லாம் பல எலும்புக்கூடுகளை அடையாளம் காண்டுகொண்டனர். இவர் என் கணவர். இது என் பிள்ளை, இது என் தந்தை என்று அடையாளம் காண்டுகொண்டனர். எலும்புக்கூடுகள் பார்க்க அச்சமூட்டும் வடிவத்தை கொண்டிருந்தாலும் ஈழத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் அந்த அச்சத்தை எவரும் உணர்வதில்லை.

எலும்புக்கூடுகள் ஏதோ இறுதி வாக்குமூலத்தை சுமந்திருப்பதைப்போல அவர்களின் உறவினர்கள் உணர்வதுண்டு. கண்களற்ற அந்த எலும்புக்கூடுகள் கண்களால் எதனையோ சொல்வதைப்போல அவர்கள் உணர்வதுண்டு. தமிழில் கலிங்கத்துப் பரணியில் இடம்பெற்ற போரில் பார்த்ததைப்போலவே ஈழமும் ஒரு கோலத்தை கண்டிருக்கிறது. கிளிநொச்சிக்கு 2000ஆம் ஆண்டு மீளத் திரும்பியபோது அப்படித்தான் எங்கும் மண்டை ஓடுகளும் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் நித்ரசனம் பிரிவில் இருந்த கஜானி என்ற போராளி ஒளிப்படக் கலைஞர் ஒருவரது அக்கால கட்டத்தின் எலும்புக்கூடுகள் குறித்த புகைப்படம் எண்ணற்ற வார்த்தைகளின் சித்திரத்தை வரைந்திருந்ததது.

ஈழ மக்களை மீண்டும் மன்னார் புதைகுழி நடுக்கமுற வைக்கிறது. அண்மையிலும் மன்னார் புதை குழியில் தாயும் ஓர் குழந்தையும் அருகருகாக புதைக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. சின்னக் குழந்தைகளுக்கான சவப்பெட்டிகள் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஈழத்தில் சின்னக் குழந்தைகளின் பிஞ்செலும்புக் கூடுகள் மீட்கப்படுவதும் எத்தினை துயரமானது?. மன்னார் மனிதப் புதைகுழியில் மேலும் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அவற்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டமைக்கான முறிவுக் காயங்கள் இருப்பதாகவும் மீட்புப் பணியில் முன் நிற்பவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மன்னார் புதை குழி பற்றிய செய்திகள் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பெரும் கலவரமடைய செய்திருக்கிறது. போரின்போதும், போர்க்களத்தின் முடிவிலும் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், போர்க்களங்களுக்கு வெளியிலும் பலர் தனியாகவும் குடும்பமாகவும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தமது உறவுகள் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்படும் என்றும் தமது உறவுகள் உயிருடன் உள்ளனர், மீண்டு வருவார்கள் என்றும் காத்திருக்கும் பலரது உறக்கத்தை கலைத்து மனதை துன்பக் கலக்கத்தில் தள்ளியுள்ளது மன்னார் புழைகுழி.

மன்னார் புதைகுழி, மன்னாரில் கடந்த 2013ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடம், மன்னாரின் மாந்தை சந்தியிலிருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் உள்ள திருக்கேதீச்சரம் பகுதியில் இருக்கிறது. குடி நீர் திட்டத்திற்காக மண்ணை அகழ்ந்தபோது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுடன் மண்ணை அகழ்ந்தபோது பத்து மண்டை ஓடுகளும் மனித எச்சங்களும் முதல்நாளில் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் துன்புறுத்தி கொலை செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டதுடன் தொடர்ந்து நடத்திய சோதனையில் 80 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.

இதேவேளை இலங்கையின் முன்னைய அரசின் காலத்தில் மன்னார் மனிதப் புதைகுழியை மயானம் என கூறப்பட்டது. எனினும் அப் பகுதியில் கிணறு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நாற்பது நாட்களை கடந்து புதை குழி அகழ்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது மாத்திரம் 53 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. உண்மையில் இது ஒரு பாரிய மனிதப் புதைகுழி என்றே நம்பப்படுகிறது. இப் பகுதி 1990முதல் 2009 வரையான காலப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

இந்தப் புதை குழியில் மீட்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளைக் கொண்டு அவர்கள் யார்? யாரால் எக் காலத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட முடியும். எனினும் இந்த விடயங்களை எலும்புக்கூடுகளை மீட்கும் ஆய்வாளர்கள் சொல்லத் தயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
000

ஒரு காலத்தில் மண்ணை அகழந்தால் பொன்னும் பொருளுமாய் புதையல்கள் கிடைக்கும். முன்னோர்கள் தமது சந்ததிகளுக்காக பொன்னையும் பொருளையும் மண்ணில் புதைத்து வைப்பவர்கள். அல்லது எம் மூதாதையர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் மண்ணில் புதையுண்டு இருக்கும். ஆனால் ஈழத்தில் இன்றோ மண்ணில் நமது தலைமுறைகள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். கணவனை, பிள்ளைகளை தேடும் மனைவிமாரும் தாய்மார்களும் இத் தீவின் மண்ணில் எங்கு தம் உறவு உயிருடன் இருக்கிறது என்று மண்ணை தேடி அலைகின்றனர். ஈழத்தில் அகழும் இடங்களில் எல்லாம் புதைக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் மேல் வருகின்றன.

அண்மையில் யாழ்ப்பாணம் செம்மணியிலும் எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி ஈழத் தமிழர்கள் எவராலும் மறக்க முடியாத மனிதப் புதைகுழி. 1996 – 1998 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் இளையதலைமுறை கொன்று புதைக்கப்பட்ட இடம். இளைய தலைமுறையை அழிப்பதன் மூலம் அவர்களின் போராட்டக் குணத்தையும் சமூக சிந்தனையையும் அழிக்க முடியும் என்ற இன அழிப்பு நோக்கத்தில் இலங்கை அரச படைகளினால் கொல்லப்பட்ட இளைஞர் யுவதிகள் புதைக்கப்பட்ட இடம் செம்மணி.

இன்றைக்கும் செம்மணியை கடந்து செல்லும் எவரும் அங்கு காணப்படும் பிரமாண்ட பாலத்தையும் யாழ் வளைவையும் பல்தேசி்ய நிறுவனங்களின் விளம்பர பலகைகளையும் கடந்து அந்த செம்மணி மண்ணில் புதைக்கப்பட்டவர்களை ஒருமுறை நினைத்தே செல்வார்கள். 1996 காலப் பகுதியில் சுமார் 600 இளைஞர்கள் இங்கே புதைக்கப்பட்டார்கள். யாழ் சுண்டுக்குழி மகளீர் கல்லூரியை சேர்ந்த மாணவி கிருசாந்தி குமாரசுவாமியை இராணுவத்தினர் வன்புணர்ந்து படுகொலை செய்ததுடன் செம்மணிப் புதைகுழி வெளிச்சத்திற்கு வந்தது.

கிருசாந்தியின் படுகொலையுடன் தொடர்புடையவராக கைதுசெய்யப்பட்ட கொலையாளி சோமரத்தின ராஜபக்ச செம்மணிப் படுகொலை தொடர்பான பல விடயங்களை அம்பலப்படுத்தினார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் அதாவது 1998 இதேபோல் ஒரு காலத்தில் அதாவது ஜூலை 3ஆம் திகதி நடந்த வழக்கிலேயே அவர் உண்மைகளை அம்பலப்படுத்தினார். 1998- 2018 இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அப் பகுதியில் மீண்டும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செம்மணிப்படுகொலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் அரசிற்கு பெரும் அகௌரவத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. தேர்ந்த திட்டமிட்ட ஒரு இன அழிப்புச் செயற்பாட்டை செய்த குற்றச்சாட்டையும் சுமத்தியது. அதன் பின்னர் ராஜபக்சவின் காலத்திலும் செம்மணி பெரும் அபாயம் கொண்ட வலயமாகவே காணப்பட்டது. அப் பகுதி இராணுத்தின் முழுச் செயற்பாட்டு வலயமாகவும் காணப்பட்டது. அங்கு பாரிய இராணுவ முகாம் அமைந்திருந்தது. யாழ்ப்பாண நகரத்திற்கு தென்மராட்சியிலிருந்து வருபவர்கள் அந்த அபாய வலயத்தை தாண்டி வருவது பெரும் சிக்கல் நிறைந்ததாக 2008- 2009 காலப் பகுதி இருந்தது.

குறித்த காலத்தில் அதாவது நான்காம் ஈழ யுத்தம் தொடங்கிய கால்த்திலும் பலர் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொன்றழிக்கப்பட்டதுடன் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். தினமும் பத்துக்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்ட செய்திகளுடன் யாழ்ப்பாணம் இருந்த காலம் இதுவாகும். அத்துடன் ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகளும் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இலங்கை இராணுவத்தாலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் துணை இராணுவக் குழுக்களாலும் தமது பிள்ளைகள் கடத்திச் செல்லப்பட்டதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல பெற்றோர்கள் பகிரங்கமாக வாக்குமூலத்தை அளித்துள்ளார்கள்.

செம்மணியில் நீர் குழாய் நிர்மாணப் பணிகளின்போது இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் செய்தி ஈழ மக்களை பெரும் அதிர்ச்சி கொள்ளச் செய்துள்ளது. இவைகள்தான் எங்கள் புதையல்கள். இப் படுகொலைகள் நிகழும் காலத்துடன் மாத்திரம் இதன் வாதைகள் முடிந்துபோவதில்லை. இவை பற்றிய உண்மைகளை வெளிக் கொணரும் காலம் வரையும் இந்த வாதைகள் நீடிக்கின்றன. இவை பற்றிய பெறுப்பேற்புகளும் மன்னிப்புக் கோரல்களும் நிகழும்காலம் வரை இந்த வாதைகள் நீளும். உண்மையில் இந்தப் படுகொலைகளுக்கான நீதி கிடைக்கும் வரையில் இந்த வாதைகள் நீளும். இந்தக் குற்றங்களிலிருந்து அரசு ஒருபோதும் தப்பிக்கொள்ள முடியாது. ஒரு போராட்டமாக நீதிக்கான தவிப்பாகவே இந்த எலும்புக்கூடுகள் எம் மண்ணிலிருந்து மேல் எழுகின்றன.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/2018/90259/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.