Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசு சமாதான உடன்படிக்கையை இரத்து

Featured Replies

இலங்கை அரசு சமாதான உடன்படிக்கையை இரத்துச்செய்ய முடிவு செய்திருப்பதாக

சண் செய்திகள் (இப்போது இலவசமா போகிறது ;) ) தெரிவிக்கிறது. இச்செய்தியை இணயத்தளங்களில் காணமுடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்துகிறார் மகிந்த: அரச ஊடகம்

ஜஞாயிற்றுக்கிழமைஇ 1 ஏப்ரல் 2007இ 20:16 ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசீலித்து வருவதாக சிறிலங்கா அரச ஊடகமான சண்டே ஓப்சர்வர் தெரிவித்துள்ளது.

சண்டே ஓப்சர்வரில் வெளியாகி உள்ள செய்தி:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து பொதுசன வாக்கெடுப்பு நடத்த மகிந்த ராஜபக்ச தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இதனை அரச தலைவர் செயலகத்தின் உயர் அதிகாரி நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் மக்களின் புதிய கருத்தை அறிய மகிந்த விரும்புகிறார் என்றும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஜனநாயகப் பூர்வமாக ஒழித்துக் கட்டுவதில் மகிந்த விருப்பம் கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வாக்கெடுப்பானது விரைவில் நடைபெற உள்ளதாகவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மக்கள் எதிர்த்தால் யுத்த நிறுத்தத்திலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்ளும் என்றும் அரச தலைவர் மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்டது.

ஒப்பந்தத்தின் சரத்து 4.4-இல்

"எந்தத் தரப்பினராலும் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக நோர்வே அரசாங்கத்திற்கு அறிவித்தல் கொடுக்கப்படும் வரை இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும். அத்தகைய முன்னறிவித்தல் முடிவிற்கு வரும் தினத்திற்கு 14 தினங்களிற்கு முன்னதாக கொடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்யும் மகிந்த அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடாத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலைத் தொடர்ந்து மகிந்தவை பதவி விலகக் கோரி தென்னிலங்கையில் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடியிலிருந்து தப்பும்விதமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள மகிந்த தீர்மானித்திருப்பதாகவும் அதற்காக வாக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும் தெரிகிறது

http://www.eelampage.com/?cn=31321

Edited by deepa

சன் டீவிலில் நானும் பார்த்தேன் இது உண்மையா

உண்மைதான்,பதின்நான்கு நாள் முன்னறிவிப்பு கொடுத்தால் சரிதானே!அதற்கும் கள்ளவோட்டெல்லாம் தள்ளி ஒரு சிங்களவன் ஏன் கொழும்புவாழ்தமிழர் கூட இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை என்று காட்டத்தான்.

எதற்குமொரு முடிவுண்டுதானே அது வரை ரயில் தண்டவாளமாகப்பயணிப்போம். :lol::o:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களும் உதைத் தானே சொல்லுகிறோம் அதாவது உந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்துபோட்டு துணிவிருந்தால் மோதிப் பார்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான உடன்படிக்கையா? இது என்ன புதுக்கதை அதெல்லாம் செத்து பல மாதங்களாச்சுது, இப்ப இந்த வான் புலித்தாக்குதலிற்குப் பிறகு புதுப்பிற்கப் பார்கிறீங்களோ? இனிமேல் உதெல்லாம் சரிவராது அடிதான் உனக்குச் சரியான பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் இணையத்தளத்திலும் இச்செய்தியினைக் காணலாம்

சன் டீவிலில் நானும் பார்த்தேன் இது உண்மையா

ஈழத்தமிழர்களின் தொலைக்காட்சிகள் உங்கட வீட்டில் இல்லையா?.

மகிந்த தன் தலையில் தானே மண்ணள்ளி போட போகிறார்.பொல்லை கொடுத்து அடிவாங்கினது என்னும் வசனத்தை உண்மையாக்கிகாட்ட போகும் மகிந்தசகோதரருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

கொழும்பில உள்ள தமிழ் மக்கள் மட்டும் இல்லை யாழ் மக்கழும் உடன் படிக்கைக்கு எதிராகவே வாக்களிப்பர். சுயாதீனமாக உரிய பாதுகாப்பு வழங்கப்படின்.

வான் புலிகளின் செய்தியை விட மிக அருமையான செய்தி....சீக்கிரம் நடக்கட்டும்.

இதை தான் எதிர்பார்த்தவண்ணம் இருக்கின்றோம் நாம் :lol: !

Edited by yarl_son

இது வரை வந்த இலங்கை ஜனாதிபதிகளில் ,மகிந்த மாதிரி ஒரு அரை லூசை நான் இன்னும் காணவில்லை :lol::lol::D

ஈழத்தமிழர்களின் தொலைக்காட்சிகள் உங்கட வீட்டில் இல்லையா?.

கந்தப்பு பார்த்தது உங்கள் வீட்டில இது தேவையா

:o:o

அன்றுதொட்டு இன்றுவரை சிங்கள அரசியல் வாதிகளின் கபட நாடகங்களிலொன்று தமிழருடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதுவாக இருந்தாலும் அதை இரண்டு தனிமனிதர்களின் ஒப்பந்தங்களாகவே சிருஸ்டித்துக் காட்டுவது. 2002 இல் உருவான போர்நிறுத்த ஒப்பந்தமும் இதுபோல் சிறிலங்கா அரசுக்கும் தமிழ் மக்களுக்குமாக இரண்டு இனங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தம். அதில் சிறிலங்காவின் சார்பில் அதன் அன்றைய பிரதமர் ரணிலும் தமிழீழமக்களின் சார்பாக தேசியத்தலைவர் வே. பிரபாகரனும் ஒப்பமிட்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மையாக வெளியே கூறப்படவேண்டிய விடயம். இவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மதித்து நடக்கும் கடப்பாடு சிறிலங்காவில் பிற்காலங்களில் வரும் எந்த ஒரு அரசாங்கத்துக்கும் உள்ளது என்பதை மறைத்து அதை தனிப்பட்ட இரு மனிதர்கள் தங்களுக்குள் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தமாகச் சோடித்துக் காட்டுகிறார்கள் மகிந்தனும் அவனது அடிவருடிகளும்.

Edited by Norwegian

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர போரில் குதிக்க ராஜபக் ஷே முடிவு: ரத்தாகிறது போர் நிறுத்தம்-மக்களிடம் கருத்துக்கணிப்பு

ஏப்ரல் 02, 2007

கொழும்பு: நார்வே மத்தியஸ்தத்தில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்து விட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவிரப் போரில் குதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே முடிவு செய்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்வது தொடர்பாக நாடு தழுவிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு நார்வே குழுவின் உதவியுடன், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. ராஜபக்ஷே அதிபர் பதவிக்கு வந்தது முதல் விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கையை மிகத் தீவிரமாக்கினார்.

சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியானது. இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையே முழு அளவிலான போர் வெடிக்கவில்லை. அதேசமயம், இரு தரப்பும் கடுமையாக மோதி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல், இலங்கை அரசை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் தமிழர் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, விடுதலைப் புலிகளுடனான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த வசதியாக, அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக கைவிட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது கருத்துக் கணிப்பு நடத்தி தீர்மானிக்க அவர் முடிவு செய்துள்ளோர். அதிபரின் இந்த முடிவுக்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக கைவிடப்பட்டால், பெரிய அளவிலான போர் வெடிக்கும், அது மிகப் பெரிய பேரழிவுக்கு வித்திடும், இலங்கையில் ரத்த ஆறு ஓடும் என விடுதலைப் புலிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/04/02/lanka.html

இப்ப மட்டும் என்ன செய்ய்கிறார்?????????????

:P :P

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போர் நிறுத்தம் ரத்து ஆகிறது!

கொழும்பு, ஏப்.2-: விடுதலைப்புலிகள் விமான தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இலங்கையில் போர் நிறுத்தம் ரத்து ஆகிறது. இதுதொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே இதுவரை நடந்த சண்டையில் பல்லாயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, நார்வே தூதுக்குழுவின் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்பிறகு இலங்கையில் சண்டை ஓய்ந்து ஓரளவு அமைதி நிலவியது.

இந்த நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு இலங்கையின் புதிய அதிபராக மகிந்தா ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு, போர் நிறுத்தம் சீர்குலைந்து விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. 2005-ம் ஆண்டுக்கு பிறகு மட்டும் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தமிழர்கள் பகுதியில் ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்ததை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விடுதலைப்புலிகள் முதன் முதலாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பு நகரில் உள்ள கட்டுநாயகா விமானப்படை தளத்தின் மீது விமான தாக்குதல் நடத்தினார்கள். இதில் விமானப்படை வீரர்கள் 3 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். விடுதலைப்புலிகள் போர் விமானங்கள் வைத்து இருப்பதும், கொழும்பு நகருக்குள் ஊடுருவி விமான தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்கள் பலம் பெற்று இருப்பதும் இலங்கை அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விமான தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு தமிழர்கள் பகுதியில் இலங்கை ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்கு விடுதலைப்புலிகளும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்து இருப்பதால், போர் நிறுத்தத்தை ரத்து செய்து விட்டு, விடுதலைப்புலிகளுக்கு எதிராக முழு அளவிலான போரை தொடங்குவதில் அதிபர் ராஜபக்சே ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. எனவே போர் நிறுத்தத்தை ரத்து செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தவும் அவர் முடிவு செய்து இருக்கிறார். இதுபற்றி அவர் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.

இந்த தகவலை அதிபர் செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இலங்கையில் இருந்து வெளியாகும் `சண்டே அப்சர்வர்' பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

போர் நிறுத்தத்தை ரத்து செய்வதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்து விட்டால், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு விலகிக்கொள்ளும் என்றும், ஆனால் மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரசு செயல்படாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து இருதரப்பில் யார் விலக முடிவு செய்தாலும், அதுபற்றி 2 வாரங்களுக்கு முன் நார்வே தூதுக்குழுவுக்கு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இலங்கையில், போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் மீண்டும் முழு அளவில் போர் வெடிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, அமைதி ஒப்பந்தத்தை இலங்கை அரசு சீர்குலைத்தால், மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விடும் என்று விடுதலைப்புலிகள் கூறி உள்ளனர்.

இதுபற்றி அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் பேட்டி அளிக்கையில்; இலங்கை அரசு பேச்சுவார்த்தைக்கு மறுத்தாலோ, போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல் படுத்த மறுத்தாலோ முழு அளவிலான போரை அறிவித்ததாக ஆகிவிடும் என்றார்.

போரை மேலும் தீவிரப்படுத்த இலங்கை அரசு முயற்சிப்பதாகவே தெரிகிறது என்றும், இதன் காரணமாக முழு அளவில் மோசமான போர் சூழ்நிலை உருவாகும் என்றும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இலங்கையில் மிகப் பெரிய அழிவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் தமிழ்ச்செல்வன் கூறினார்.

vikatan.com

இது க்கு சிரிக்க தான் முடியும் கருத்து எழுத முடியாது :P :P

சிங்கள அரசின் முட்டாள்தனமான நகர்வுகள் பள்ளம் நோக்கி...

மகிந்த மடையனுக்கு தவறுகள் விரைவில் உணர்த்துவிக்கப்படும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.