Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட இரு விமான விபத்தில் 23 பேர் பலி

Featured Replies

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட இரு விமான விபத்தில் 23 பேர் பலி

 

 

சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி காட்டுக்குள் 2 விமானங்கள் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலியாகினர்.

ALPSD.jpg

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் நேற்று சென்று கொண்டு இருந்த ஒரு விமானமத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பயணம் செய்தனர்.

திடீரென அந்த  விமானத்தில் கோளாறு ஏற்பட்டு காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 4 பேரும் பலியானார்கள்.

இந்த விபத்து தொடர்பாக மீட்பு பணி இடம்பெற்றுக்கொண்டு இருந்தபோது அதே பகுதியில் சென்ற மற்றொரு விமானமும் திடீர் என்று தரையில் விழுந்து நொறுங்கியது.

அந்த விமானத்தில் 17 பயணிகள் 2 விமானிகள் உள்ளிட்ட அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உடல்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான விபத்தால் காட்டுப் பகுதிக்குள் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியை நடந்து வருகிறது.

விபத்து நடந்த மலைப் பகுதி 8,038 அடி உயரம் கொண்ட பனிப்பிரதேசம் ஆகும். இரு விமானங்களும் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சொந்தமானவை.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/37871

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடுகளில் இப்படியான விபத்துக்கள் அதிசயம் எதுக்கும் எங்கடை நெருப்பு மிதிக்கிற ஆட்களிடம் விசாரிக்கணும் எப்படி விழுந்தது என்று ...................?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய விமானம் விபத்துக்குள்ளாகி நான்கு பேர் பலி என்றுதானே நம்பகத்தன்மையான ஊடகங்கள் சொல்லுகின்றன. வீரகேசரி எப்படி இன்னொரு விமானத்தை வீழ்த்தியது??

 

https://news.sky.com/story/family-of-four-killed-as-small-plane-crashes-in-switzerland-forest-11460789

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

சிறிய விமானம் விபத்துக்குள்ளாகி நான்கு பேர் பலி என்றுதானே நம்பகத்தன்மையான ஊடகங்கள் சொல்லுகின்றன. வீரகேசரி எப்படி இன்னொரு விமானத்தை வீழ்த்தியது??

 

https://news.sky.com/story/family-of-four-killed-as-small-plane-crashes-in-switzerland-forest-11460789

அடடா சைக்கிள் கைப்புக்குள் இன்னொரு விமானத்தை கொண்டுவந்து விட்டாங்கள் போல் உள்ளது .

  • தொடங்கியவர்
7 minutes ago, கிருபன் said:

சிறிய விமானம் விபத்துக்குள்ளாகி நான்கு பேர் பலி என்றுதானே நம்பகத்தன்மையான ஊடகங்கள் சொல்லுகின்றன. வீரகேசரி எப்படி இன்னொரு விமானத்தை வீழ்த்தியது??

 

https://news.sky.com/story/family-of-four-killed-as-small-plane-crashes-in-switzerland-forest-11460789

http://www.fr.de/panorama/absturz-an-bergflanke-bis-zu-20-tote-bei-flugzeugunglueck-in-der-schweiz-a-1557269

https://rp-online.de/panorama/ausland/schweiz-bis-zu-20-tote-bei-absturz-von-tante-ju-flugzeug-befuerchtet_aid-24212311

https://www.reuters.com/article/us-swiss-crash/second-plane-crashes-in-swiss-alps-on-saturday-idUSKBN1KP0RC?il=0

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நவீனன் said:

இதிலை 20 எண்டுதானே சொல்றாங்கள் வீரகேசரி மூன்றை கூட்டி சொல்லுதே...........

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

சிறிய விமானம் விபத்துக்குள்ளாகி நான்கு பேர் பலி என்றுதானே நம்பகத்தன்மையான ஊடகங்கள் சொல்லுகின்றன. வீரகேசரி எப்படி இன்னொரு விமானத்தை வீழ்த்தியது??

 

https://news.sky.com/story/family-of-four-killed-as-small-plane-crashes-in-switzerland-forest-11460789

அண்மையில் கனடாவில் நடந்த துப்பாக்கிசூட்டில் ஒருவர் இறந்தார் சிலர் காயப்படுத்தப்பட்டனர்... வீரகேசரியின் இணையதளத்தில் 11 பேர் பலி என்று செய்தி போட்டிருந்தார்கள்,அப்புறம் அந்த செய்தியையே காணல.

ஊடகபோட்டிகளை சமாளிக்க உயிரிழப்பை அதிகரித்து காட்டி அதிர்ச்சி ஏற்படுத்தி வாசகர்களை கவரும் குரூர புத்தியா இருக்குமோ?

எல்லோரும் எமது தளத்திற்கு வாருங்கள் என்று கூவியழைக்கும் ஊடக வியாபாரத்திற்கு ,

 மனித உயிர்களையும் மூலதனமாக பயன்படுத்தலாம் என்பதை பாரம்பரிய ஊடகமான வீரகேசரி எமக்கு பாடமாய் சொல்கிறாதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய தகவல்களின்படி...செய்தி உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது

24 பேர் உயிரிழப்பு என்ற தகவலுடன்..

A vintage Ju-52 aircraft with 20 people aboard went down during a sightseeing flight in the Alps, Swiss officials said. Hours before the incident, a family of four was killed when their small plane crashed near Lucerne.

https://www.dw.com/en/switzerland-two-plane-crashes-claim-24-lives/a-44957457

புலம்பெயர்ந்த எம்மவர்க்கு வாழ்வுதந்த சுவிஸின் துயரத்தில் சுவிஸில் வாழாத நானும் பங்கு கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.bbc.co.uk/news/world-europe-45076060

 விபத்தில் 20 பேர் பலியானது உண்மையான செய்திதான். வீரகேசரி பிபிசியை விட வேகமாக வெளியிட்டுள்ளது.

  • தொடங்கியவர்

இரண்டாம் உலகப்போர் விமானம் விபத்து: சுவிட்சர்லாந்தில் 20 பேர் பலி

இரண்டாம் உலகபோரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணித்த 20 பேரும் கொல்லப்பட்டனர் என காவல் துறை தெரிவித்துள்ளது.

A Junker JU-52 HB-HOT in flightபடத்தின் காப்புரிமைJU-AIR Image captionஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இவ்விமானம் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்டது

ஜன்கர்ஸ் நிறுவனம் தயாரித்த விமானமான ஜெ.யு -52 ஹெச்.பி - ஹாட், 17 பயணிகள் மற்றும் மூன்று பேர் அடங்கிய ஊழியர் குழுவினருடன் சனிக்கிழமை மாலையில் பயணத்தை துவங்கியது.

இந்த விமானத்தை இயக்கிய ஜெ.யு - ஏர் இச்செய்தியால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களை தொடர்புகொள்ள தொலைபேசி சேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெ.யு ஏரின் விமான சேவைகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.

''விபத்து நடந்த இடத்தில் இருக்கும் நிலைமையை பார்க்கும்போது, விமானம் தரையில் மிக அதிக வேகத்தில் செங்குத்தாக மோதியது என்பதை சொல்லமுடியும். மற்றொரு விமானம் அல்லது கேபிள் போன்ற எதாவது தடை ஏற்படுத்தும் பொருட்களுடன் இவ்விமானம் மோதியிருக்கலாம்'' என சுவிட்சர்லாந்து போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை வாரியத்தை சேர்ந்த டேனியல் நெச்ட் தெரிவித்துள்ளார்.

ஸ்விஸ் மலையில் மோதிய விமானம்படத்தின் காப்புரிமைREUTERS Image captionஸ்விஸ் மலையில் மோதிய விமானம்

இவ்விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் 42 - 84 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தென் பகுதியான டிசினோவுக்கும் ஜூரிக் அருகேயுள்ள டுபென்டரோஃப் ராணுவ விமான தளத்துக்கும் இடையே இந்த விமானம் பயணித்தது. கடல்மட்டத்தில் இருந்து 8,333 அடி உயரத்தில் இவ்விமான விபத்து நிகழ்ந்துள்ளது.

ஜெர்மனில் தயாரிக்கப்பட்ட இப்பழைய ராணுவ விமானத்தை சுற்றுலாவுக்காக இயக்கி வந்தது ஜெயு - ஏர்.

மத்திய சுவிட்சர்லாந்தில் சனிக்கிழமை நடந்த மற்றொரு விமான விபத்தில் இரண்டு இளம் குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் கொல்லப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-45075366

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.