Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சி தலைவர் யார் ? - இன்று தீர்மானம்

Featured Replies

எதிர்க்கட்சி தலைவர் யார் ? - இன்று தீர்மானம்

 

 
 

(ஆர்.யசி)

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கான பதிலை இன்று சபாநாயகர் அறி விக்கவுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை சம்பந்தன் வகிப்பாரா அல்லது அது பொது எதிரணி வசமாகுமா என்பது  குறித்த நிலைப் பாட்டை இன்று பாராளுமன்றத்தில் சபாநாய கர் கரு ஜயசூரிய தெரிவிப்பார். 

1.jpg

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளும் தரப்பில் இருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களில் 15 பேர்  பொது எதிரணியுடன் இணைந்து கொண்டனர்.  இதனையடுத்து  தாம் 70 பேர் எதிரணியில் அங்கம் வகிப்பதாகவும் ஆகவே தமக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை  கூட்டு எதிரணி தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றது. 

தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அங்கம் வகிக்கின்ற காரணத்தினால் பிரதான கட்சிகள் தவிர்ந்து மூன்றாவது பெரும்பான்மை கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றது.

 இந் நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுயாதீன அணியாக செயற்படும் பொது எதிரணியினர் தமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்து இது குறித்து எழுத்துமூல கடிதத்தை கடந்த வாரம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஒப்படைத்தனர். 

எனினும் பொது எதிரணியின் கோரிக்கை குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் பொது எதிரணி வழங்கிய கடிதத்தை சபாநாயகர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவுக்கு வழங்கியதுடன் அதற்கான பதிலை தமக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். 

அதற்கமைய சபாநாயகரின் கோரிக்கைக்கான  பதில் கடிதத்தை  ஐ.ம.சு.க செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று அனுப்பினார்.  இன்று பாராளுமன்ற அமர்வுகூடவுள்ள நிலையில் இந்த சர்ச்சைக்கான பதிலை சபாநாயகர் சபையில் முன்வைப் பார். 

எவ்வாறு இருப்பினும் பிரதான எதிர்க்கட்சி பதவி பொது எதிரணிக்கு வழங்கப்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கூறுகின்றதுடன் அரசாங்கத்தின் ஒரு சாராரும் அதே கருத்தை முன்வைத்து வருகின்றனர். 

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்கின்ற நிலையில் அரசாங்கமாகவும் எதிர்க்கட்சியாகவும் ஒரே கட்சி இருக்க முடியாது எனவும் அவ்வாறு பொது எதிரணியின் அழுத்தங் களின் காரணமாக அவர்களுக்கு எதிர்க்கட்சி பதவியை வழங்குவது ஜனநாயக பாராளுமன்றத்தின் தவறான ஒரு எடுத்துக்காட்டு எனவும் விமர்சிக்கின்றனர். 

பொது எதிரணியினர் எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும் என்றால் ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னணியாக பாராளுமன்றத்தில் செயற்பட முடியாது. அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 

வெளியேற வேண்டும். அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங் கத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/37955

  • தொடங்கியவர்

சம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு

 

 

எதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனே தொடர்ந்தும் பதவிவகிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களின் சந்திப்பில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

sampanthan2.jpg

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர கட்சியின் முடிவை நாடாளுமன்ற சபாநாயகரிற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/37960

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.