Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….

Featured Replies

யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….

வடமாகாணத்தில் அபிவிருத்திக்கான எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை…

ஆளுநர் றெஜினோல்ட் குரே..

 

regi-at-jaffna.jpg?resize=800%2C533

வடமாகாணத்தில் அரசியல்வாதிகளும் பொது மக்களும் அபிவிருத்திக்காக போராட்டம் நடத்துவது கிடையாது. என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் நேற்றையதினம் (09-08-2018) ஆளுநர் அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்தென்னிலங்கையில் நீங்கள் பார்த்தீர்களானால் மக்கள் தமக்கு அபிவிருத்தி வேண்டி கல்வி வசதி வேண்டி நீர் வசதி வேண்டி வீதி செப்பனிட வேண்டும் என வேண்டி பல போராட்டங்களை நடாத்துகின்றார்கள்.ஆனால் இங்கே யாழ்ப்பாணத்தில் அடையாளம் வேண்டும் அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர்இப்போது சாந்தியும் சமாதானமும் நிலவுகின்றது ஜனநாயகம் வளர்ந்திருக்கின்றது ஜனநாயகம் கிடைத்திருக்கின்றது ஆனால் அபிவிருத்திப்பணிகள் குறைவாக இருக்கின்றது.

மக்கள் ஒரு நிமிடத்தில் அளிக்கும் வாக்கு அரசியல்வாதிகளுக்கு ஐந்து வருடத்திற்கு அதிகாரம் அளிக்கிறது மக்கள் வாக்களித்துவிட்டு வீட்டிலேயே சும்மா இருக்கின்றார்கள் அரசியல்வாதிகள் வாக்கினை பெற்றுக் கொண்டு ஐந்து வருடங்கள் சும்மா இருக்கிறார்கள். எனவும் குறிப்பிட்ட அவர்இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களுக்கான அபிவிருத்தியை அடைவதற்கான முயற்சியை எந்த நேரமும் எடுக்க வேண்டும் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலமே மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும் ஆளுநரிடம் சுயேச்சைக்குழு பிரதேச சபை உறுப்பினர்கள்..

Regi-at-jaffna1.jpg?resize=800%2C533

விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதன் மூலமே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமே தவிர பிரதேச சபைகளின் நிதியினை கொண்டு பணிகளை முன்னெடுக்க முடியாது என கிளிநொச்சி சுயேச்சைக் குழு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.நேற்று(09.08.2018) மாலை 5 மணி அளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிளிநொச்சி கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் உள்ளிட்ட பிரதேச சபைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.குறித்த சபைகளில் நிதிப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனால் அப்பிரதேச மக்களுக்கு தகுந்த சேவைகளை வழங்குவது தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்த சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் கழிவகற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு போதிய வாகன வசதிகள் இல்லை எனவும் தெரிவித்தனர். அத்தோடு அதனைப் பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்காக ஆளுநர் மத்திய அரசின் ஊடாக உதவியினை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.இச் சந்திப்பில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் சிரோஸ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டன

http://globaltamilnews.net/2018/91105/

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் அபிவிருத்தித் திட்டங்களே முதன்மை பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை எந்த இடத்திலும் சிறுபான்மையான / சிறுபான்மையாக்கப்பட்ட சமூகம் அடையாள அழிப்புக்கும் அதிகாரத் தாக்குதலுக்கும் உள்ளாகையில் அவற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருக்கும். தென்னிலங்கையில் அபிவிருத்திக்காக மட்டுமே போராடுகிறார்களாக்கும் என்று ஆளுநர் சிலாகிப்பது வேடிக்கை. தென்னிலங்கையில் என்ன அடையாளப் பிரச்சினை ? போராட்டத்தைப் புறந்தள்ள ஆளும் வர்க்கம் கையிலெடுக்கும் விடயம் அபிவிருத்தி . அபிவிருத்திக்காக தானே திட்டமிட வேண்டிய ஆளும் வர்க்கம் அதற்காகப் போராடுங்கள் என அறைகூவல் விடுப்பது போகாத ஊருக்கு வழி சொல்வது.

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.