Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி

Featured Replies

கிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி

 

 
 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் தற்போது இன்மையால் கர்ப்பவதிகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

kilinochi.jpg

கிளிநொச்சி வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்களாக இருவர் கடமை புரிந்த நிலையில் ஒருவர் வருடாந்த இடமாற்றம் மூலம் வெளிமாவட்டத்திற்குச் சென்ற நிலையில் மற்றைய மகப்பேற்று நிபுணரும் தமது வெளிநாட்டுப் பயிற்சிநெறிக்காக விடுகைபெற்றுச் சென்றுவிட்டார். 

இந்நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பவதிகள் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

வழமையான நடைமுறைகளின் பிரகாரம் மாவட்டப் பொது வைத்தியசாலையான கிளிநொச்சியிலிருந்து அதனிலும் மேம்பட்ட வசதியுடைய வைத்தியசாலையான யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கே நோயாளர்கள் இடம்மாற்றப்பட வேண்டும். 

மாஞ்சோலை வைத்தியசாலையானது பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கும் நிலையில் கிளிநொச்சியிலிருந்து கர்ப்பவதிகளை மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலைக்கு மாற்றுவது இரண்டு உயிர்களுடன் விளையாடும் செயலென சுட்டிக்காட்டப்படுகிறது. 

அத்தோடு இவ்வாறு அனுப்படும் கர்ப்பவதி ஒருவருக்கு மேலதிக சிகிசை தேவைப்படும் போது அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையிலிருந்து யாழப்பாணம் வைத்தியசாலைக்கே அனுப்படுகின்றார்.

இதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலையில் அண்மையில் நியமிக்கப்பட்ட உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் நிரந்தர மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலையில் எவ்வாறு உரிய பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தம்மால்தான் வைத்திய நிபுணர்கள் வடக்கிற்கு நியமிக்கப்படுவதாக அறிக்கைகள் விடும் வடமாகாண வைத்திய மன்றமும், தமது வாகன அனுமதிப்பத்திரத்திற்காக வேலைநிறுத்தம் செய்யும் அரச வைத்தியர் சங்கமும், சிற்றுண்டிச் சாலையின் வருமானத்தில் மட்டும் கண்ணாயிருக்கும் நோயாளர் நலன்புரிச் சங்கமும் மிகவும் அடிப்படை விடயமான மகப்பேற்று நிபுணர் நியமனத்தில் அக்கறை காட்டாது இருப்பது ஏன் எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமாரவேல் அவர்களை தொடர்கொண்டு வினவிய போது 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  கடமையில் இருந்த இரண்டு  மகப்பேற்றியல் வைத்தியர்களில் ஒருவர்  ஒரு மாத சுகயீன விடுப்பில் இருப்பதாகவும், பிரிதொருவர் தனது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பதனாலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. 

வைத்திய விடுப்பில் இருப்பவர் மீண்டும் தனது கடமைக்கு திரும்பாது விடின் நெருக்கடி நிலை ஏற்படும் எனவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் தாம் நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்த அவர்   முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அனுப்பட்ட  கா்ப்பிணித்தாய்மார்கள் தற்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கே  அனுப்படுகின்றனர்  எனவும் தெரிவித்தார்.

 

 

பெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி

 

 

மகப்பேற்று வைத்தியர்கள் இன்மையால் கற்பிணி பெண்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.  மாற்றீடாக பெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் என அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ananthi_sasi_tharan.jpg

கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் வினவியபுாதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டிருந்தார். 

கிளிநொச்சி வைத்தியசாலையில் அண்மை காலமாக மகப்புற்று வைத்தியர்கள் இன்மையால் கற்பிணி பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். அது மாத்திரமல்லாது பெண் நோயியல் தொடர்பான பிரச்சினைகளிற்கும் முகம் கொடுத்தவரருகின்றனர்.

அவர்களுக்கான தீர்வு தொடர்பில் வடமாகாண மகளிர் அமைச்சர் என்ற வகையில் பெண்களின் இந்த பிரச்சினை தொடர்பில் உங்கள் கருத்த என்ன என ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் இவ்வாறான பிரச்சினை மன்னாரில் காணப்பட்டது. இதன் காரணமாக அவசர சிகிச்சைக்காக வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிற்கு நோயாளர்களும், கற்பிணி பெண்களும் அனுப்பப்பட்டனர். 

இது வடமாகாணம் தழுவி பாரிய பிரச்சினையாக உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்கு பின்னர் வேறு மாகாணங்களில் சேவையாற்றிவரும் வைத்தியர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். 

இவ்வாறு பல்வேறு மருத்துவம் சார் பிரச்சினைகள் வடக்கில் காணப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் நாம் மத்திய சுகாதார அமைச்சருக்கு எழுத்துமூலம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருகின்றோம்.

ஆனால் இன்றுவரை குறிதத் விடயம் தீர்ந்ததாக இல்லை. இந்நிலையில் மக்களின் நலன் கருதி பெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தற்காலிகமாக பணிக்கமர்த்தி, தற்காலிக தீர்வையேனும் பெற்று தாருங்கள் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

கிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி

என்ரை மோள், மோன்,மருமோள்,மருமோன் டாக்குத்தர் எண்டு பினாத்துற புலம்பெயர் தமிழுகளுக்கு இந்த சத்தம் கேக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.