Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஆவாக்கள், விக்டர்கள், தனுறொக்கள் பற்றி இரகசியமாக தகவல் தெரிவியுங்கள்”

Featured Replies

“ஆவாக்கள், விக்டர்கள், தனுறொக்கள் பற்றி இரகசியமாக தகவல் தெரிவியுங்கள்”


அதிக வன்முறை சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் தகவல்களை இரகசிய தொலைபேசி ஊடாகவும் சிரேஸ்ட பிரதிக்காவல்துறை மாஅதிபரிடம் நேரடியாகவும் தெரிவிக்குமாறு வடமாகாண பிரதிக்காவல்துறை மாஅதிபர் றொசான் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

 

யாழ். தலைமைக் நிலையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இதனைக்குறிப்பிட்டுள்ள அவர் தற்போது யாழில் வன்முறைச் சம்பவங்கள் ஓரளவிற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஆவா குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்றையதினம் யாழ்ப்பாணம், கோப்பாய் சுன்னாகம் காவற்துறைப் பரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், காவல்துறையினரின் அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஐயாயிரம் விநியோகப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மானிப்பாய் , வட்டுக்கோட்டைப் பகுதிகிளலும் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், துண்டுப்பிரசுரம், விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுளளார்.

மேலும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் பொதுமக்கள் இவ்வாறு தம்துடன் இணைந்து செயற்படும் போது வன்முறைச்சம்பவங்களை இலகுவாக கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  எனவே, வன்முறைச் சம்பவங்கள், மற்றும் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்த தமக்கு கிடைக்கும் தகவல்களை பொது மக்கள் தொலைபேசி மூலமும், வட மாகாண பிரதிக்காவல்துறை அதிபரின் முகவரிக்கும் தனிப்பட்ட முறையில், தெரிவிக்குமாறும் இரகசியமாக தகவல்களை வழங்கினால், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த இலகுவாக இருக்குமெனவும் வடமாகாண பிரதிக்காவல்துறை மாஅதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்

http://globaltamilnews.net/2018/91876/

  • தொடங்கியவர்

ஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்

 

 

ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார்.

fernando.jpg

இந்தத் தகவலை வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்தவாரம் முதல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாகன பேரணி ஒன்று நடாத்தப்பட்டு தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வடமாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணாண்டொ தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் பின்னர் நடைபெற்ற முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை நடத்தினார். இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“தொலைபேசி இலக்கத்திற்கு யாழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கணிசமான முறைப்பாடுகளும் தகவல்களும் இதன் மூலம் எமக்கு கிடைத்துள்ளது.

குறிப்பாக தாய் ஒருவர் அண்மையில் தொடர்புகொண்டு தனது மகன் ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்தார்.

மகனைக் காப்பாற்ற தான் முயன்றும் முடியாது போனதாக அந்தத் தாயார் தெரிவித்தார். எப்படியாவது தனது மகனை அந்த குழுவிலிருந்து காப்பாற்றி தம்முடன் ஒப்படைக்குமாறும் அவர் முறைப்பாடு வழங்கினார்.

இது போன்ற பல தகவல்கள் எமக்கு கிடைத்து வருகின்றன. அவற்றை இரகசியமான முறையில் விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளோம்” என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.

http://www.virakesari.lk/article/38725

  • கருத்துக்கள உறவுகள்

போனில் கதைப்பவர் = "ஆவா ,விக்டர் ,தனுரா ஆட்கள் பற்றி என்னிடம் முக்கிய தகவல் உள்ளது ."

ரொஷான் பெர்ணான்டோ = "சொல்லுங்க சொல்லுங்க உங்கள் சேவை இந்த ஒருமித்த இலங்கை மாதாவுக்கு தேவை ."

போனில் கதைப்பவர்= "அவர்களின் தலைவர்கள் பற்றியும் தெரியும் "

ரொஷான் பெர்ணான்டோ= "கமான் தாமதிக்காமல் சொல்லுங்க ஒருமணி நேரத்தில் ஜெயிலில் போடுகிரன்  சொல்லுங்க பெயரை ."

போனில் கதைப்பவர்= "அவர்களுக்கு வழிகாட்டியாய் இருந்தவர் குருநாதர் எல்லாம் ஒரு சிங்களவர் பெயர் ரொஷான் பெர்ணான்டோ"

ரொஷான் பெர்ணான்டோ=.........................................????????????????? (சிறிது நேரத்தின் பின் போன் கட் ஆகிறது )

(யாவும் கற்பனை என்றால் கற்பனைதான் )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.