Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நினைவுச் சின்னங்களை அகற்றக் கோரும் விக்கியின் கடிதம் – மௌனம் காக்கும் மைத்திரி

Featured Replies

போர் நினைவுச் சின்னங்களை அகற்றக் கோரும் விக்கியின் கடிதம் – மௌனம் காக்கும் மைத்திரி

 

cm-colombo-press-2-300x171.jpgவடக்கில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர், கடந்த 17ஆம் நாள், சிறிலங்கா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளபோர் நினைவுச் சின்னங்கள், சிங்கள மேலாதிக்கத்தைக் காட்டுகின்றன.

நல்லிணக்கத்துக்கும், நிலையான அமைதிக்கும் இவை தடையாக இருக்கின்றன.

இந்த நினைவுச் சின்னங்களை பார்க்கின்ற போது தமிழ் மக்கள் கோபமும் முன்பமும் அடைகிறார்கள்.

தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள இந்த நினைவுச் சின்னங்கள், அவர்களுக்கு உள ரீதியாக தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், இந்த நினைவுச் சின்னங்களை அகற்றுவதன் மூலம், நல்லிணக்கத்துக்கான சூழலை ஏற்படுத்த முடியும்.

எனவே, வடக்கில் உள்ள போர் நினைவுச் சின்னங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்தக் கடிதத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.

எனினும், இந்தக் கடிதத்துக்கு சிறிலங்கா அதிபரிடம் இருந்து இன்னமும் பதில் ஏதும் வரவில்லை என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபர் இந்த விடயம் தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியாது, ஆனாலும், இந்த விடயங்களைச் சொல்ல வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.puthinappalakai.net/2018/08/21/news/32436

  • தொடங்கியவர்

மீண்டும்  யுத்தம் ஏற்படாத நாட்டை உருவாக்கும் காலமாகும் ; விக்கினேஸ்வரனுக்கு நினைவூட்டும் மங்கள

 

நினைவுத் தூபிகளை அகற்றுவதற்கோ நிர்மாணிப்பதற்கோ உரிய காலம் தற்போது இல்லை. மீண்டும்  யுத்தம் ஏற்படாத நாட்டை உருவாக்கும் காலமாகும் என்பதனை விக்கினேஸ்வரனின் அவதானத்திற்கு கொண்டு வருகின்றேன் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

vikkines-2-600x382.jpg

வடக்கில் நினைவுத் தூபிகளை நிர்மாணிப்பதாகவும் அகற்றுவதாகவும் கூறுவதற்கு விக்கினேஸ்வரனுக்கு உரிமை உள்ளது.

இதனால் நாடுபிளவுபடும் என கூற முடியாது. இவ்வாறான கருத்துகள் நாட்டை பிரிப்பவையல்ல. நினைவு தூபிகளை நிர்மாணிக்க அதிகாரம் உள்ளது. 

நாம் வெளிநாட்டவர்களுடன் யுத்தம் செய்யவில்லை. வெளிநாட்டு இராணுவத்தை தோற்கடித்த யுத்ததை செய்யவில்லை. எமது நாட்டின் சகோதரர்களுடனே யுத்தம் செய்தோம். 

mangala.jpg

தற்போது யுத்தம் நிறைவடைந்து விட்டது. தற்போது தூபிகளை நிர்மாணிக்கும் காலம் அல்ல. நாட்டை கட்டியெழுப்பும் காலமாகும் என்பதனை விக்கினேஸ்வரனுக்கு கூற விரும்புகின்றேன். 

தற்போது நினைவு தூபி நிர்மாணிப்பதோ அல்லது அகற்றவதோ பிரச்சினையில்லை. மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட்டை உருவாக்குவதே தேவையாகும் எனத் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள நிதி மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய “நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் தருவாயில் வடக்கில் நினைவு தூபிகளை அகற்ற வேண்டும் என சி.வி விக்கினேஸ்வரன் கோரியுள்ளாரே?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/38850

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

தற்போது யுத்தம் நிறைவடைந்து விட்டது. தற்போது தூபிகளை நிர்மாணிக்கும் காலம் அல்ல. நாட்டை கட்டியெழுப்பும் காலமாகும் என்பதனை விக்கினேஸ்வரனுக்கு கூற விரும்புகின்றேன். 

தற்போது நினைவு தூபி நிர்மாணிப்பதோ அல்லது அகற்றவதோ பிரச்சினையில்லை. மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட்டை உருவாக்குவதே தேவையாகும் எனத் தெரிவித்தார்.

 

செயலில் காட்டுவார்களா என்பது சந்தேகமே.. புத்தர் சிலைகள் வைப்பது, கடல் வளத்தை சூறையாடுவது என மிக திட்டமிட்டு செயற்படும் சிங்க|ள இனவாத அரசு தூபிகளை அமைத்து தமிழ் மக்களுக்கு வெறுப்பேற்றும் எனறே தோன்றுகிறது.
தவராசா என்பவர்  வடமாகாண சபையில் கூவுவதை விட்டு அரசின் நாசூக்கான செயற்பாடுகளை கண்டிக்க தவறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.