Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்போராளிகள் சாதியக் குறியீடு அல்ல இனத்தின் விடுதலைக் குறியீடு- ”ஜனநாயக போராளிகள் கட்சி” விக்கி மேல் ஆவேச பாய்ச்சல்!

Featured Replies

விடுதலைப்போராளிகள் சாதியக் குறியீடு அல்ல இனத்தின் விடுதலைக் குறியீடு- ”ஜனநாயக போராளிகள் கட்சி” விக்கி மேல் ஆவேச பாய்ச்சல்!

 

 

 

அரசுக்குப் புலனாய்வு பணி செய்வதற்கு முதலமைச்சர் போன்ற அரசியல்வாதிகளே போதுமானவர்களாக இருக்கும் போது விடுதலைக்காக போராடிய போராளிகள் தேவையில்லை என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து அக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாயகவிடுதலைக்காக தமது உள்ளம் உயிர் உடல் உடமை அனைத்தையும் ஈய்ந்து போராடியவர்கள். முள்ளிவாய்க்கால் போர் ஓய்வின் பின்னர் ஏதுமற்றவர்களாக வாழ்துவரும் இடர்பாடு மிக்க துர்பாக்கிய சூழ்நிலையில் தாயக அரசியல் பரப்பில் எமை ஓரங்கட்டும் நிகழ்சி நிரலில் தமிழரசு கட்சியின் தலைமை வேட்பாளரும் தமிழ்தேசியகூட்டமைப்பின் முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் எம்மை பெரிதும் விசனத்துக்குள்ளாக்கி இருக்கின்றது.

எமது அமைப்பில் போராடி உயிர்நீத்தவர் போக இறுதியில் கைதாகிய 12000க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் அடைக்கப்பட்டு சொல்லொணா வலிகளையும் துயரங்களையும் சந்தித்திருக்கின்றோம். அதனையும் எமது போராளிகள் விடுதலைக்கு செலுத்திய விலையாகவே கருதுகின்றோம்.

ஒரு நாட்டில் யுத்தம் நடைபெறுகின்றபோதான புலனாய்வுத்தகவல் தேவைக்கும் யுத்தம் முடிந்ததன் பின்னரான புலனாய்வுத்தகவல் தேவைக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. அந்த தேவைகளை போராளிகள் மேற்கொள்ள வேண்டியதேவையில்லை. அதற்கு எப்போதும் போராளிகள் தயாராகுவதுமில்லை. அதற்கு உங்களைப்போன்ற அரசியல்வாதிகளின் தயவு அவர்களுக்கு போதுமானது.

கடந்த காலங்களில் அதுதான் நடந்தேறியுள்ளது. போராளிகள் தொடர்பான முதலமைசரின் கருத்துக்கள் தொடர்பிலும் அது தொடர்பான ஆதாரத்தையும் முதல்வர் பகிரங்கப்படுத்தவேண்டும்.

அதே போன்று முதல்வர் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியகூட்டமைப்பும் இது தொடர்பில் பதிலளிக்கவேண்டும். போராளிகள் ஒரு இனத்தின் சாதியகுறியீடுகள் அல்லர் அவர்கள் இனத்தின் விடுதலைக்குறியீடுகள் என்பதனை அனைவருக்கும் புரிந்துகொள்ள வேண்டும்எனவும் ஜனநாயக போராளி கட்சி தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/politics/80/105116

8 hours ago, நவீனன் said:

அக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசியினால்

துளசி என்ற ***** சில வருடங்களாகவே சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுடன் இணைந்து செய்யும் ஒட்டுண்ணி வேலைகளை வன்னி மக்கள் மிகவும் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.  

 

ஜனநாயக போராளி கட்சியினது உருவாக்கத்தின் பின்னணியில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் மிலேச்ச இந்தியப் பயங்கரவாதிகள் இருந்தமையும் உலகறிந்த இரகசியம்.

 

Edited by நியானி
தணிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.