Jump to content

கிரந்த எழுத்துக்களைத் தவிர்ப்போம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரிச்சுவடி சொல்லித் தந்த வாத்தியார் "அ" முதல் "ஃ" வரையும் "க" முதல் "ன" வரையும் சொல்லித் தந்தார். உயிரெழுத்து, மெய்யெழுத்து உயிர் மெய்யெழுத்து என இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்களையும் எழுத வாசிக்கக் கற்றுத் தந்தார். அதற்கு மேல் சில எழுத்துக்கள் சிலரது பெயர்களில் இருந்ததை விளக்க அவர் சொன்னது அப்போது புரியவில்லை. அதாவது வடமொழி எழுத்துக்கள் என்றார் கிரந்தம் என்றார், ஒன்றும் புரியவில்லை ஆனால் தமிழல்லாத எழுத்துக்கள் தமிழில் பாவனையில் இருக்கின்றனஎன்பது புரிந்தது.

சிறு வயதிலிருந்தே இது என்னை உறுத்தியது. தமிழுக்குள் ஏன் தமிழல்லாத எழுத்து புகுந்துள்ளது? புகுந்தது தவிர்க்க முடியாதது தான் கூடுதல் விளக்கத்திற்கு தேவையானது தான் என்றால் அந்த எழுத்துக்களை ஏன் தமிழோடு இணைக்கவில்லை? அரிச்சுவடிக்குள் புகுத்த முடியாவிட்டால் அதற்கு என்ன தனிச் சுவடி வேண்டிக் கிடக்கு?

சுருங்கி வரும் அகண்ட உலகைத் தமிழுக்குள் அடக்கக் கிரந்தம் தேவை தானா? தமிழ் வளைந்து கொடுக்க வேண்டுமா? அல்லது வளர்ந்து கொடுக்க வேண்டுமா? தமிழை வளைத்து தரமிழக்க வைக்காமல், அதை வளர்த்து தமிழனுக்குக் கொடுக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே ஏன்னுள் மேலோங்குகிறது.

தற்கால ஆங்கில மொழியில் புதுப் புதுச் சொற்களை ஆண்டு தோறும் அறிமுகப் படுத்தி அகராதியில் உத்தியோக பூர்வமாக இணைத்து விடுகிறார்கள். இப் புதிய சொற்கள் ஆங்கிலத்தில் புதிதாகத் தோன்றியவையும் பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு வந்தவையும் ஆகும். பிற மொழியில் இருந்து வரும் சொற்களை ஆங்கிலமாகத் தான் சேர்த்துக் கொள்கிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணம், தமிழ் என்ற சொல். தமிழ் என்ற சொல்லில் உள்ள "ழ்" என்ற எழுத்தை ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா? முடியாது. அதற்காக அவர்கள் "ழ்" ஐ ஆங்கிலத்தில் உள் வாங்கிக் கொள்ளவில்லை. "ல்" ஐப் பயன் படுத்தி விட்டார்கள். "த" வைக் கூட சரியாகச் சேர்க்கவில்லை. ஆங்கிலத்தை வளைக்காமல் ஒரு புதுச் சொல்லை உருவாக்கி விட்டார்கள்.

இது தான் தமிழுக்கும் தேவை. கோடிக் கணக்கில் சொற்கள் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வரட்டும். அதை தமிழாக்கித் தமிழை வளர்ப்போம்.

இந்த நோக்கில், இங்கே கிரந்தம் கலந்து வரும் சொற்களைத் தமிழ்ப் படுத்தி ஒரு அகராதியைத் தொடங்குவோம். அந்தச் சொற்கள் தமிழல்லாதவையெனினும் பாவனையில் இருப்பவையாகையால் அவ்ற்றைத் தமிழுக்குள் கொண்டு வந்து தமிழை வளர்ப்போம்.

செயபால்

(செயபாலின் இணையத்தளம் செல்ல அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனா என்பதைச் சைனா என்று வெள்ளையர்கள் எவ்வாறு மாற்றி உச்சரிக்கின்றார்களோ, அவ்வாறே தமிழிலும் நாமும் கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து உரையாடுவோம். முதலில் கடினமாக இருந்தாலும், பழகிக் கொள்வதால் அது இலகுவாக மாற்றத்தை எமக்குள் ஏற்படுத்தும்.

இதற்கு செயபாலின் இணையத்தில் இருந்து பெற்ற சில உதாரணங்கள்.

அவுத்திரேலியா - அவுஸ்திரேலியா

அகத்தியர் - அகஸ்தியர்

அவத்தை - அவஸ்தை

அராசகம் - அராஜகம்

அபிசேகம் - அபிஷேகம்

Link to comment
Share on other sites

கிரந்த எழுத்துக்கள் என்று குறிப்பிடப்படும் எழுத்துக்கள் தமிழ் மொழியிலே தானே பாவிக்கின்றோம். இவை வேறு எந்த மொழிகளுக்குமுரிய எழுத்துக்கள் இல்லையே. இவற்றை மிகக்குறைந்தளவிலேயே தமிழில் பாவிக்கின்றோம். இவ்வெழுத்துக்களை ஒதுக்குவதால் என்ன பெரிய நன்மை பெற்று விடப் போகின்றோம். ஒரு மொழி வளர வேண்டுமென்றால் பல விடயங்களை உள்வாங்கியே வளர வேண்டும். ஆங்கிலமொழியிலும் பல இலத்தீன் சொற்கள் உள் வாங்கப்பட்டுள்ளன.

உதாரணமாக ஜவகர்லால்நேரு என்ற பெயரை எப்படி தமிழ்ப்படுத்தி எழுத முடியும்.

Link to comment
Share on other sites

மொழியில் க்காலத்திற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வருவதுதான் அதன் வழர்ச்சிக்கு உகந்தது. சங்க காலத்துக் கல்வெட்டுக்களிலுள்ள தமிழை நாம் இப்போது சாதாரணமாக வாசித்து அறிந்துவிட முடியாது. அதேபோல இப்போதும் கணணியின் அறிமுகத்தால் னை, லை போன்ற எழுத்துக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் ஆங்கில கிரேக்க சொற்கள் அதிகமாக உள்ளன. தமிழில் இவற்றை வடமொழி எழுத்துக்களைத் தவிர்த்து எழுதுவது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. உதாரணமாக பைதகரஸ் என்பதை பைதகரச் என்று எழுதினால் வேடிக்கையாக இருக்கும்.

ஆங்லிலத்தில் 26 எழுத்துக்களைக் கொண்டு எல்லா விதமான உச்சரிப்புக்களையும் கொண்டுவர முடியாது என்றால், 247 எழுத்துக்களைக் கொண்ட தமிழில் மாற்றங்களைக் கொண்டு வருவது இன்றியமையாததாகும். பிரெஞ்சு மொழியில் 26 எமுத்துக்கள் தான் உண்டு. ஆனால் சில சொற்களை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதற்காக é, è, à, ñ, ô,.... போன்ற எழுத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

தமிழில் சில கிரந்த சொற்களை தவிர்க்கக்கூடியதாக இருக்கின்றது, உதாரணமாக...

அதிர்ஷ்டம் - அதிட்டம்

ஆனால், எல்லாச் சொற்களையும் தவிர்க்க முடியவில்லை, உதாரணமாக....

மேலே நண்பர் ஒருவர் கூறியதைப்போல் ..

ஜவகர்லால் நேரு - சவகர்லால் நேரு

ரஜீவ் காந்தி - ரசீவ் காந்தி

ஸ்பெயின் - ச்பெயின்

கஸ்தூரி - கத்தூரி

ஜோன்சன் - சோன்சன்

இதைவிட இன்னொரு பிரச்சனை, நாம் எழுதும் சொல் தமிழ்ச் சொல்தானா என்பது....

அப்படியாயின் இவ்வாறும் கூற முடியும் தமிழ்ச் சொற்களை எழுதும்போது கிரந்த எழுத்துகளை பாவிக்கவேண்டிய தேவை இல்லை, ஆனால், வேற்றுமொழிச் சொற்களை பயன்படுத்தும்போது பிறமொழி எழுத்துக்கள் தேவைப்படுகின்றது...

மற்றும், இன்னொரு விடயத்தையும் இங்கு கூற வேண்டும், அதாவது ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் இருந்தாலும் ஒவ்வொரு தனிப்பட்ட எழுத்தையும் வித்தியாசமான முறைகளில் உச்சரிக்கும் ஒலிவடிவம் இருகின்றது. ஆங்கில Short Hand - சுருக்கெழுத்தாளர்களிற்கு இது தெரியும்..ஆனால் தமிழில் இவ்வாறான ஒரு முறை - ஒரு எழுத்திற்கு வெவ்வேறு ஒலிவடிவம் இருக்கின்றதா தெரியவில்லை..அவ்வாறு வெவ்வேறு ஒலிவடிவம் உருவாக்கப்படுமாயின் நாம் கிரந்த எழுத்துக்களை எதிர்காலத்தில் முற்றிலுமாக தவிர்க்க முடியும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிரந்த எழுத்துக்கள் என்று குறிப்பிடப்படும் எழுத்துக்கள் தமிழ் மொழியிலே தானே பாவிக்கின்றோம். இவை வேறு எந்த மொழிகளுக்குமுரிய எழுத்துக்கள் இல்லையே. இவற்றை மிகக்குறைந்தளவிலேயே தமிழில் பாவிக்கின்றோம். இவ்வெழுத்துக்களை ஒதுக்குவதால் என்ன பெரிய நன்மை பெற்று விடப் போகின்றோம். ஒரு மொழி வளர வேண்டுமென்றால் பல விடயங்களை உள்வாங்கியே வளர வேண்டும். ஆங்கிலமொழியிலும் பல இலத்தீன் சொற்கள் உள் வாங்கப்பட்டுள்ளன.

உதாரணமாக ஜவகர்லால்நேரு என்ற பெயரை எப்படி தமிழ்ப்படுத்தி எழுத முடியும்.

எவ்வாறு வடமொழியில் தேவாரம் ஓதுவது தவறு என்று நாம் சிந்திக்கின்றோமோ, அவ்வாறு தான் கிரந்தமொழியைப் பாவிப்பதும் தவறு. நன்மை தீமை பற்றிப் பேசுவதாக இருந்தால் விபச்சாரம் செய்து பிழைப்பதால் என்ன கெட்டுவிடப் போகின்றது என்று கேட்கின்றது போலிருக்கின்றது.

ஆங்கிலமொழி என்பது, அனைத்து மொழிகளையும் உள்வாங்கித் தொகுக்கப்பட்ட ஒன்று. ஆனால், தமிழ்மொழியின் பெருமை அவ்வாறனது அல்ல. ஆங்கிலம் போல தமிழ்மொழி நூற்றுக் கணிப்புக்களில் இல்லை. இருக்க, ஆங்கிலமொழியில் கூட கிரந்தமொழிகளைப் பாவிப்பது என்பது முடியாத காரியம். அவ்வாறே, தமிழில் உள்ள ல,ழ,ள உச்சரிப்பையோ, ர,ற, உச்சரிப்பையோ, வேறு பிரித்து அதனால் சொல்ல முடியாது.

தமிழ் என்ற பதத்தை ஆங்கிலத்தில் எழுதி உச்சரித்தால், ரமில் என்று தான் வருகின்றது என்பதற்காக, தமிழில் உள்ள "த"வை ஆங்கிலம் ஒரு போதும் உள்வாங்காது. "த" வை உள்வாங்கி ஆங்கிலத்தை வளர(?) வைக்க வேண்டும் என்று அது சிந்திப்பதில்லை. இருக்கின்ற 26 எழுத்துக்களை வைத்துத் தான் தன்மொழி நடையை உருவாக்கிக் கொள்ளும்.

வளர்ச்சியடைய வைக்கின்றோம் என்று, இன்மொரு சொல்பதத்தை இதற்காக அவை உள்வாங்கவில்லையே. உண்மையில் எல்லாமொழி நடையிலும், ஒரு விடயத்தைத் தெளிவாக உச்சரிக்க முடியாது. அது தங்களுக்கு ஏற்றவிதத்தில் மாற்றித் தான் பழகிக் கொள்ள வேண்டும்.

இப்போது, புலத்தில் இருக்கின்ற எத்தனை பேரின் பெயரை, வேலைத்தள மேலாளரோ, அல்லது பிறரோ சரியாக உச்சரித்திருக்கின்றார்கள். சரியாக அவர்கள் உச்சரிக்க வேண்டும் என்பதற்காக, தங்களை மாற்றிக் கொண்டார்களா?

நீங்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கின்றீர்கள்?

ஜவரகால்நேரு என்றால், சவரகால்நேரு என்று தான் உச்சரிக்க வேண்டும். அதில் தவறில்லை.

மொழியில் க்காலத்திற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வருவதுதான் அதன் வழர்ச்சிக்கு உகந்தது. சங்க காலத்துக் கல்வெட்டுக்களிலுள்ள தமிழை நாம் இப்போது சாதாரணமாக வாசித்து அறிந்துவிட முடியாது. அதேபோல இப்போதும் கணணியின் அறிமுகத்தால் னை, லை போன்ற எழுத்துக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் ஆங்கில கிரேக்க சொற்கள் அதிகமாக உள்ளன. தமிழில் இவற்றை வடமொழி எழுத்துக்களைத் தவிர்த்து எழுதுவது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. உதாரணமாக பைதகரஸ் என்பதை பைதகரச் என்று எழுதினால் வேடிக்கையாக இருக்கும்.

ஆங்லிலத்தில் 26 எழுத்துக்களைக் கொண்டு எல்லா விதமான உச்சரிப்புக்களையும் கொண்டுவர முடியாது என்றால், 247 எழுத்துக்களைக் கொண்ட தமிழில் மாற்றங்களைக் கொண்டு வருவது இன்றியமையாததாகும். பிரெஞ்சு மொழியில் 26 எமுத்துக்கள் தான் உண்டு. ஆனால் சில சொற்களை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதற்காக é, è, à, ñ, ô,.... போன்ற எழுத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நிச்சயமாக இக்கால வழக்கிற்கு மொழியமைப்பு கொண்டு வந்ததில் நிறையவே தவறு இருக்கின்றது. தமிழ்மொழி அவ்வாறு பிரிந்து வந்ததால் தான், தமிழில் இருந்து வேற்றுமொழிகள் உருவாகி தனிப்பிரிவாகச் சிதைந்து சென்றனர் என்ற சோகத்தை மறுக்க முடியாது. உண்மையில் அது வேதனையான ஒன்றே.

பிரெஞ்சு மொழியில் மேலதிக உச்சரிப்பிற்காக, இணைக்கப்பட்டது போல, ஏன் ஆங்கிலத்தில் உள்வாங்கல் செய்யப்படவில்லை?

Link to comment
Share on other sites

கிரந்த எழுத்துக்கள் என்று குறிப்பிடப்படும் எழுத்துக்கள் தமிழ் மொழியிலே தானே பாவிக்கின்றோம். இவை வேறு எந்த மொழிகளுக்குமுரிய எழுத்துக்கள் இல்லையே. இவற்றை மிகக்குறைந்தளவிலேயே தமிழில் பாவிக்கின்றோம். இவ்வெழுத்துக்களை ஒதுக்குவதால் என்ன பெரிய நன்மை பெற்று விடப் போகின்றோம். ஒரு மொழி வளர வேண்டுமென்றால் பல விடயங்களை உள்வாங்கியே வளர வேண்டும். ஆங்கிலமொழியிலும் பல இலத்தீன் சொற்கள் உள் வாங்கப்பட்டுள்ளன.

உதாரணமாக ஜவகர்லால்நேரு என்ற பெயரை எப்படி தமிழ்ப்படுத்தி எழுத முடியும்.

வசம்புவின் கருத்துடன் ஒத்துபோகிறேன். இன்று தனித்தமிழில் எழுதுவதே கடினமாக இருக்கும்போது ஏன் கிரந்த எழுத்துக்களை ஒதுக்கவேண்டும். அவற்றை இணைப்பதால் தமிழின் தன்மை அழிந்துவிடுமா?

மொழி ஒரு கருவி ஒரு ஊடகம். காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களைள செய்வது நல்லதுதான்.

Link to comment
Share on other sites

ஜவரகால்நேரு என்றால், சவரகால்நேரு என்று தான் உச்சரிக்க வேண்டும். அதில் தவறில்லை.

மொழி ஒரு ஊடகமல்ல, மொழி ஒரு சமுகத்தின் அடையாலம், அதிலும் தமிழ் மொழி 2500 ஆண்டுகளுக்கும் மேலான எழுத்திழக்கனத்தினை கொண்டது. மொழியின் உருவம் மாறினால், அதன் தொண்மையும், வழமையும் மறைந்துவிடும். :angry: :angry:

எனது பெயரை வெங்கடெஷ் என்பதை விட வெங்கட் என அழைப்பதையெ சரியென நினைக்கிறேன்.

:o:rolleyes:

Link to comment
Share on other sites

மொழி ஒரு ஊடகமல்ல, மொழி ஒரு சமுகத்தின் அடையாலம், அதிலும் தமிழ் மொழி 2500 ஆண்டுகளுக்கும் மேலான எழுத்திழக்கனத்தினை கொண்டது. மொழியின் உருவம் மாறினால், அதன் தொண்மையும், வழமையும் மறைந்துவிடும். :angry: :angry:

எனது பெயரை வெங்கடெஷ் என்பதை விட வெங்கட் என அழைப்பதையெ சரியென நினைக்கிறேன்.

:o:rolleyes:

வெங்கட் என்பதுகூட தமிழ்ச் சொல்லாகத் தெரியவில்லை.

2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழை இப்போது ஆராச்சியாளர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். மக்களால் உருவாக்கப்பட்டதுதான் மொழி. 2500 ஆண்டுகள்ளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு இப்போது நாம் எப்படி வாழ்கிறோம் என்று கற்பனை செய்திருக்க முடியாது. அனுபவத்தால் திரிபடைந்து புதுமைகள் புகுத்தப்பட்டு வளர்ந்து செல்லும் மொழியே காலத்தால் அழியாதிருக்கும்.

திருக்குறள் கூட இப்போதுள்ள எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டிருக்க முடியாது. மொழிக்கு காலத்திற்கேற்ற வளர்ச்சி நிச்சயம் தேவை. இல்லையேல் அது சமஸ்கிருதம்போல் மந்திரங்களுடன் நின்றுவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:

இன்றைய கால கட்டத்தில் தமிழ் தமிழாக இருப்பதுதான் நன்று.

தேவாரம்,திருவாசகம் பாடிய --- சமயகுரவர்கள்,

நாலாயிரத்திவ்யப்பிரபந்தம் பாடிய --- திரு ஆழ்வார்கள், மற்றும்

நாயன்மார்கள் போன்ற இன்னும்பலர் இப் பதிகங்களை தமிழ்மூலம் தமிழில்தான் பாடியுள்ளார்கள். இவர்களில் ஒருசிலரைத் தவிர்ந்த ஏனையோர்சமஃச்கிருத பண்டிதர்களாவர். மேலும் சிலகாலம் முன் வாழ்ந்த ஆறுமுகநாவலர், ஞானப்பிரகாசர்,சின்னத்தம்பிய

Link to comment
Share on other sites

:rolleyes:

...

உ-ம்: இயவகர்லால்நேரு, (இ-- சத்தமில்லை) ராமன்--இராமன்.

இராயீவ்காந்தி., ஃச்பெயின், கஃச்தூரி, யோன்சன்.

இவற்றுள் சிறிது சந்தங்கள் சறுக்கினாலும் பழக்கத்தில் சரியாயிடும். :o:o

"சிறியேனின் குறைகளைப் பொறுத்தருளவும்.

உங்களது கருத்திற்கு நன்றி.

அதேபோல் 'ஷ்' என்பதை எப்படி தமிழில் எழுதுவது என்பதையும் அறியத் தருவீர்களா ?

Link to comment
Share on other sites

அனுபவத்தால் திரிபடைந்து புதுமைகள் புகுத்தப்பட்டு வளர்ந்து செல்லும் மொழியே காலத்தால் அழியாதிருக்கும்.

திருக்குறள் கூட இப்போதுள்ள எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டிருக்க முடியாது. மொழிக்கு காலத்திற்கேற்ற வளர்ச்சி நிச்சயம் தேவை. இல்லையேல் அது சமஸ்கிருதம்போல் மந்திரங்களுடன் நின்றுவிடும்.

நன்றி விசால்,

புதுமையும் வளர்ச்சியும் மொழிகளுக்கு தேவை, மறுக்க முடியாத உண்மை. எமது என்னமெல்லாம் அப்படி நடக்கும் மாற்றங்களால் பல தமிழ் மொழிகள் ஏற்படாமல் தவிர்ப்பதே. உதாரணத்திற்க்கு ஆங்கில மொழியில் "ழ்" என்ற எழுத்து இல்லாவிட்டாலும் அவர்களால் தமிழை "Tamil" என்றும் கட்டுமரத்தை "Katumarn" என்றும் எழுத முடியும். ஆங்கிலம் தெரிந்த அனைவராலும் படித்து பொருள் உணர முடியும். மாறாக "தmiழ்" என்று இருந்தால் என்னவாகும் என்பதை எத்தனை பேரால் படிக்க முடியும்?

ச் = ஷ் எனக்கு தெரிந்த தமிழ்.

Link to comment
Share on other sites

இங்கு பலர் கிரந்த எழுத்துக்கள் என்றால் அவை வேறு மொழிக்குரியவை என்பது போன்று விளங்கிக் கொண்டு பதிலெழுதுகின்றார்கள். அந்த எழுத்துக்கள் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டவை என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளாமல், அது போல் சிலர் எது கிரந்த எழுத்துக்கள் என்று தெரியாமலேயே பதிலெழுதுகின்றார்கள். இதனால் இவர்கள் தாங்களும் குழம்பி மற்றையவர்களையும் குழப்புகின்றார்கள். மொத்தத்தில் குழப்பத்திற்கு மேலும் குழப்பமாக பதிலெழுதுவதை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

என் உண்மையான பெயரில் ஷ இருக்கும் இதை எப்படி மாத்தலாம் மாத்தினால் [ச] அந்த பெயரில் இருக்கும் உச்சரிப்பு முற்றிலும் மாறிவிடும் இப்படி பெயரை ஏன் பெற்றோர்கள் வைத்தார்களோ நானறியேன் ஆனால் தெரிந்தோ தெரியாமலோ எம்மிடம் இவ் மொழிகலப்பு ஏற்பட்டுவிட்டது ஆனால் அதனை முற்றாக திடிரேன களையெடு எண்டால் என்னெண்டு

Link to comment
Share on other sites

கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்தல் என்னும் போது கூடுதலாக அவை வடமொழி எழுத்துக்களைத்தான் குறிக்கும். வடமொழிச் சொற்களை தமிழோடிணைத்து எப்போது பாவிக்கின்றோமோ அப்போதுதான் அதனது தேவை ஏற்படுகின்றது. வடமொழிச் சொற்களைத் தவிர்க்கும்போது கிரந்த எழுத்துக்களுக்கு அங்கு இடமில்லை. ஆனால் சிலர் மேலே குறிப்பிடுவதுபோல் ஆங்கிலப் பெயர்கள் தமிழில் எழுதப்படும்போது என்ன செய்வது.? துயதமிழில்எழுதும்போது மட்டும் இதனைத் தவிர்க்கலாம். என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

ஒரு மொழியுணர்வு என்பது சொந்தமாக வரவேண்டியது. அது தானாக வராமல், ஒன்றுமே செய்யமுடியாது. விவாதத்துக்காக என்ன வேண்டுமானாலும் கதைக்கலாம். ஆனால், மனச்சாட்சியைத் தொட்டு நாங்கள் கேட்கின்ற விதம் நியாயமா என்று கேட்டால் அதை உணர்ந்து கொள்வீர்கள்.

இன்றைய திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக, முதன்மை மொழிகள் தவிர்ந்த இதர மொழிகள் அடிபட்டுப் போகின்ற நிலைமையை எட்டியிருக்கின்றது. ஒரு நாட்டின் முதன்மைமொழியைத் தவிர, இதர மொழிகள் அழிந்து போலாம். ஏனென்றால் இன்றைக்கு உலக நடப்பு அவ்வாறே இருக்கின்றது.

இந்தியாவில் இந்தியின் முக்கியத்துவமும், உலகமட்டத்தில் ஆங்கிலம், பிரஞ்சுவின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது என்பதில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதைவிடவும், ஐரோப்பாவைப் பொறுத்தவரைக்கும், பல நாடுகள் தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும், என்பதற்காகவும், மொழிச்சிதைவில் இருந்து காப்பாற்றுவதற்காகவும், தங்களின் மொழிகளில் புதிய சொற்களை சேர்க்கின்றார்கள்.(ஆங்கிலத்த

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.