Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூவினத்தவர்களும் ஒன்று பட்டு புலிகளின் தங்கத்தை தேடினர்…..

Featured Replies

மூவினத்தவர்களும் ஒன்று பட்டு புலிகளின் தங்கத்தை தேடினர்…..


இறுதி யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரின் காணியில், விடுதைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி எம் டி சரத் சந்திரபால தலைமையிலான அணியினர் இந்த வீட்டின் பின்புறமாக உள்ள காட்டில் இருந்து கடந்த 7 நாட்களாக இவர்களது நடவடிக்கைகளை அவதானித்து, தங்கம் இருப்பதாக கருதப்பட்ட இடத்தை தோண்டும் போது, அந் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பெயரும் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் புதைத்த நகைகள் ஒரு பெட்டியில் இந்த இடத்தில் இருப்பதாக தெரிவித்தே அகழ்வில் ஈடுபட்டதாக கைதான நபர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் மாத்தறை, சிலாபம், மன்னார் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களும் உள்ளதாக புதுக்குடியிருப்பு காவற்துறை தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு காவற்துறையினர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/94202/

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய புரிந்துணர்வு.

  • தொடங்கியவர்

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் தங்கம் வேட்டை பொலிஸார் பதுங்கித் தாக்குதல்!

 

 

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் முடிவடைந்ததிலிருந்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபடுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது

இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.டி சரத் சந்திரபாலவின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் அல்விஸ் பொலிஸ் அதிகாரிகளான கமகே(48759), சம்பத்(19136) விஜயகாந்த்(7230), முத்துனாஜக்க(60600) உள்ளிட்ட அணியினர் குறித்த வீட்டின் பின்புறமாக உள்ள காட்டில் இருந்து கடந்த 7 நாட்களாக இவர்களது நடவடிக்கைகளை அவதானித்து இன்று குறித்த இடத்தை தோண்டும் நடவடிக்கை இடம்பெறும் போது பொலிசாரால் அதிரடியாக 7 பேரும் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்குட்படுத்திய போது விடுதலைப்புலிகள் புதைத்த நகைகள் ஒரு பெட்டியில் இந்த இடத்தில் இருப்பதாக தெரிவித்தே அகழ்வில் ஈடுபட்டதாக குறித்த நபர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நபர்கள் மாத்தறை, சிலாபம், மன்னார் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களும் உள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்ப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/105648

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.