Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடுக்குநாறிமலையின் ஆலயம் 400 மீற்றருக்கு அப்பால் அமைக்க அனுமதி

Featured Replies

வெடுக்குநாறிமலையின் ஆலயம் 400 மீற்றருக்கு அப்பால் அமைக்க அனுமதி

 

 
 

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பலே ஆலயம் அமைத்து வழிபடமுடியும் என தொல்லியல் திணைக்களம் பதில் வழங்கியிருப்பதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினரை அழைத்த நெடுங்கேணிப் பொலிஸார் இவ்வாறு தெரிவித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்வீக பிரதேசமான வெடுக்குநாரி மலை அமைந்துள்ளது.

download__2_.jpg

குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய லிங்கம் காணப்படுவதுடன், தமிழ் மக்கள் வரலாற்றுடன் தொடர்புடைய நாகர்களின் புராதான பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன. கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி பொலிஸார் நீக்கி வழிபாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன், ஆலயத்தினை புனரமைப்பு செய்வதற்கும் புதிய கட்டட நிர்மாணப்பணிகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆலயத்தினை முழுமையாக மீட்டுத் தருமாறும், தமது மத வழிபாடுகளுக்கு அனுமதி வழங்க கோரியும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த 21 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டமும் இடம் பெற்றிருந்தது. அத்துடன் எதிர்வரும் 7, 8, 9 ஆம் திகதிகளில் திருவிழா நடத்துவதற்கும் ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

இந்நிலையில், நேற்றைய தினம் ஆலய நிர்வாகத்தினரை அழைத்த நெடுங்கேணி பொலிஸார்,  வெடுக்குநாறிமலை தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடம் எனவும் அங்கு ஆலயம் அமைத்து வழிபடமுடியாது எனவும் மலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பால் ஆலயம் அமைத்து வழிபடமுடியும் எனவும் தொல்லியல் திணைக்களம் பதில் வழங்கியிருப்பதாக தெரிவித்ததுடன், 

திருவிழா தொடர்பில் ஓலிபெருக்கியில் அறிவிக்க தடை விதித்ததுடன் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி பெற்று திருவிழா மற்றும் வழிபாடுகளை நடத்துமாறும் மீறிச் செயற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/39777

  • கருத்துக்கள உறவுகள்

News

திணைக்களங்கள் ஊடாக தமிழரின் நிலங்கள் பறிப்பு- சாள்ஸ்

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் இரா­ணு­வம் நிலங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­து­வது நிறுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் திணைக்­க­ளம் ஊடாக நிலங்­கள் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வி­டம் சுட்­டிக்­காட்­டி­னேன் என்று தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்று நாடா­ளு­மன்­றில் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய­போதே இந்த விட­யம் பேசப்­பட்­டது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தெரி­வித்­தார்.
இது தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப் பி­னர் தெரி­வித்­ததாவது:-

வடக்­கில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் அரை­வா­சிப் பிர­தே­சம் மகா­வலி அதி­கார சபை­யின் கீழ் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. மாவட்ட செய­ல­கம் அமைந்­துள்ள பிர­தே­சம் மகா­வலி அதி­கார சபை­யின் கீழ் சென்­றுள்­ளது. 1085ஆம் ஆண முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் பெரும்­ப­குதி மகா­வ­லித் திட்­டத்­தின் கீழ் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றது என்று கூறப்­பட்­டது.

இன்று வரை ஒரு சொட்டு மகா­வலி நீர் கூட முல்­லைத்­தீ­வுக்கு வர­வில்லை. அதை அங்­குள்ள மக்­கள் எதிர்­பார்க்­க­வும் இல்லை. அங்கு நீர் வந்­தால் ஏற்­ப­டும் நன்­மை­களை விட அங்கு ஏற்­ப­டும் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­களை நினைத்து அந்த மக்­கள் அச்­சப்­ப­டு­கின்­ற­னர்.

30 ஆண்­டு­க­ளில் பெரும்­பதி நிலம் சிங்­கள் குடி­யேற்­றத்­துக்­கும், வாழ்­வா­தா­ரத்­துக்­கும் என்று கப­ளீ­க­ரம் செய்­யப்­பட்­டுள்­ளது. மகா­வலி அதி­கார சபை ஒரு தமி­ழ­னுக்­குக் காணி அனு­ம­திப் பத்­தி­ரம் வழங்­கி­யது என்­றும் நாம் இது­வரை அறி­ய­வில்லை.

வன ஜீவ­ரா­சி­கள் திணைக்­க­ளம் ஒரு பக்­கத்­தால் தமி­ழ­ரின் நிலங்­களை ஆக்­கி­ர­மித்­துக் கொண்­டி­ருந்த நிலை­யில் தற்­புாது தொல்­லி­யல் திணைக்­க­ள­மும் அந்த நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யுள்­ளது.

தொல்­லி­யல் திணைக்­க­ளம் முல்­லைத்­தீவு, கொக்­கு­ளா­யில் உள்ள பிள்­ளை­யார் ஆல­யம் தொல்­லி­யல் என்­றது, பின்­னர் அங்கே விகாரை அமைக்­கப்­ப­டு­கின்­றது. மன்­னார், திருக்­கே­தீஸ்­வ­ரம் தொல்­லி­யல் என்­ற­னர், அங்கு விகாரை அமைக்­கப்­ப­டு­கின்­றது. தற்­போது வவு­னியா, ஆதி­லிங்­கேஸ்­வ­ரர் ஆல­யப் பகுதி தொல்­லி­யல் என்­கி­றார்­கள். அங்­கும் விகா­ரை­தான் அமைக்­கப்­ப­டும்.

நாம் விகா­ரைக்கு எதி­ரா­ன­வர்­களோ, அல்­லது நாட்­டில் அமைக்­கப்­ப­டும் விகா­ரை­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­களுா அல்­லர். ஒரு பௌத்­தன் கூட வாழாத எமது பிர­தே­சத்தை ஆக்­கி­ர­மித்து விகாரை அமைப்­ப­தையே எதிர்க்­கின்­றோம். நாம் உங்­க­ளி­டம் இது தொடர்­பில் கூறி­னால், அதி­கா­ரி­க­ளிம் கூறக் சொல்­கின்­றீர்­கள், அதி­கா­ரி­க­ளி­டம் பேசி­னால் அவர்­கள் உங்­க­ளைக் கைகாட்­டு­கின்­ற­னர். இது­தான் நீண்ட நாள்­க­ளாக நடக்­கின்­றது.

நாம் இது தொடர்­பில் தொடர்ந்­தும் அமை­தி­யாக இருக்க முடி­யாது. இவற்றை மக்­கள் முன் பகி­ரங்­க­மா­கக் கூற வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலைமை தொடர்ந்­தால் அது போராட்­டங்­க­ளுக்கு இட்­டுச் செல்­லும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வி­டம் சுட்­டிக்­காட்­டி­னேன்.
அர­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது அமைச்­சின் இரா­ஜாங்க அமைச்­சரை அழைத்து இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண வேண்­டும் என்று கூறி­னார்.- என்­றார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.