Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் கைது

Featured Replies

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் கைது 

 

 

மட்டக்களப்பில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

arest.jpg

மட்டக்களப்பு பெரியபுல்லுமலையில் அமைக்கப்பட்டு வரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.  இதன்போது , ஹர்த்தாலையும் மீறி அன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் 

அத்துடன், வீதிகளில் டயர்களும் எரிக்கப்பட்ட. குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன இந்த சம்பவங்கள் தொடர்பாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அமைய தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனை பொலிஸ் நியைத்துக்கு விசாரணைக்கு வருமாறு பொலிஸார் தெரிவித்த நிலையில் க.மோன்; இன்றைய தினம் பகல் 12.30 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற போது அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

http://www.virakesari.lk/article/40051

  • தொடங்கியவர்

15 பஸ்கள் மீது கல் வீச்சு, இருவருக்கு காயம் வீதிகளில் டயர் எரிப்பு, இளைஞர்களை தேடுகிறது பொலீஸ்; அடுத்து நடக்கப்போவது என்ன?

 

 

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை மற்றும் 15 பஸ்கள் மீது கல் வீச்சு நடத்தியது அதனால் இருவருக்கு காயம் ஏற்பட்டமை மற்றும் வீதிகளில் டயர் போட்டு எரித்தமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இளைஞர்களை தேடும் பணியினை ஏறாவுபர் பொலீஸார் ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய தினம் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் ஞாயிற்றுக்கழமை (09) ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை (07) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

இந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபட்பட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் கல் வீச்சு தாக்குதலுக்குள்ளாகியதுடன் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்ச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளைகைது செய்யப்பட்டுள்னார்.

இவருடன் இணைந்து செய்பட்டவர்களை கைதுசெய்ய நடவடிக்கையெடுப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் இன்று இரவு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்களின் முயற்சியால் மோகன் அவர்கள் பிணையில் செல்ல ஏறாவூர் பொலீசர் அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல இளைஞர்களுக்கு பொலீசார் வலைவீசி தேடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/105904

ஜனநாயக விரோத செயலில் ஈடுபடும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளை உலகு பயங்கரவாத அரசாக அறிவிக்க வேண்டும். 
70 வருடங்களாக தமிழன படுகொலைகளை செய்த சகல அரச தலைவர்களையும் உடனடியாக கைது செய்து சர்வதேச நீதிமன்றின் முன்னால் நிறுத்த வேண்டும். 

5 hours ago, நவீனன் said:

இந்த நிலையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்ச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளைகைது செய்யப்பட்டுள்னார்.

நேற்றைய தினம் கனகராயன் குளத்தில் தமிழர் நிலத்தை அடாத்தாக ஆக்கிரமித்துள்ள முஸ்லீம் காடையர்களுடன் சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளும் இணைந்து நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் பாடசாலை சிறுவர் சிறுமிர் உடன்பட காணிச் சொந்தக்காரரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்காக இந்த சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளை இயக்கம் மைத்திரி-ரணில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.