Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலிய செல்ல முயன்ற 88 இலங்கையர்கள் கைது

Featured Replies

மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலிய செல்ல முயன்ற 88 இலங்கையர்கள் கைது

 

 
 

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேர் சர்வதேச கடற் பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ship.jpg

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து விமானமூலம் மாலைதீவிற்கு சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் கடலில் சென்ற இவர்களை நேற்று திங்கட்கிழமை, அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. 

http://www.virakesari.lk/article/40181

  • தொடங்கியவர்

கடலில் வைத்து கைதுசெய்யப்பட்ட 90 பேரும் ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக சென்றவர்கள்

 

 
 

நீர் கொழும்பு வென்னப்புவ கடல்பகுதியில் இருந்து ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் உட்பட 90 இலங்கையர்களை நீர்கொழும்பு மேற்கு கடற்பகுதியில்  இலங்கை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். 

5.jpg

இதில் கைதுசெய்யப்பட்டவர்களை கொழும்பு ரங்கல கடற்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதில் மட்டக்களப்பு, தொடவாவ, உடப்பு ,அம்பாறை, மன்னார் , சிலாபம் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் 66 தமிழர்கள், 22 சிங்களவர்கள், 2 முஸ்லீம் உட்பட 90 பேர் படகில் பயணம் செய்துள்ளனர்.

3__1_.jpg

இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்காக தலா 3 இலட்சம் ரூபா பணத்தை முகவர் ஒருவரிடம் வழங்கியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை இன்று புதன்கிழமை கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை ரீயூனியன் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40258

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

கடலில் வைத்து கைதுசெய்யப்பட்ட 90 பேரும் ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக சென்றவர்கள்

 

இதேவேளை ரீயூனியன் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40258

 

இந்த செய்தியை படிக்க வியப்பாக இருந்தது. முன்பு இதே வென்னப்புவயில் இருந்து படகு மூலம் பலர் இத்தாலிக்கு செல்வார்கள். 90களில் எனக்கு வழமையாக முடி வெட்டும் சலூன் நண்பரும் இவ்வாறே சென்றார். 

இந்தக்கூட்டத்த‌தை பார்த்தால் பெரியளவு படிக்காதவர்கள் என்றே தெரிகின்றது. 
இவர்களுக்கு எப்படி தெரியும் தமிழர்கள் வாழும் ரியூனின் தீவு ப்ரான்ஸ்ஸிற்கு சொந்தமானதென்று? இங்கு சென்று அகதி அந்தஸ்து கோரினால் அதை ப்ரான்ஸ் அரசாங்கமே கையாளும், இறுதியில் ப்ரான்ஸ் குடியுரிமை கிடைக்கும்.

ஆகவே நிச்சயமாக இவர்களுக்கு பின்னால் படித்த பல்வேறு சட்டத்தில் உள்ள் ஓட்டைகள் தெரிந்த மாபியா கும்பல்கள் இயங்குகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.