Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“வடக்கின் கில்லாடி யார்”

Featured Replies

“வடக்கின் கில்லாடி யார்”

Football-5-696x464.jpg
 

கடந்த 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளில் யாழ் மாவட்ட அணிகளை உள்ளடக்கிய “யாழின் கில்லாடி யார்?” கால்பந்து போட்டித்தொடர் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. எனினும், தமது அமைப்பின் நூற்றாண்டு விழாவினையொட்டி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையமானது, யாழ் உதைபந்தாட்ட இரசிகர்கள் மத்தியில் பிரபலமான இத்தொடரினை இம்முறை வடமாகாணத்தின் 08 கால்பந்து லீக்குகளை உள்ளடக்கியதாக வடக்கின் கில்லாடியினை தெரிவு செய்யும் தொடராக விஸ்தரித்துள்ளது.   

 

எனவே, பிரமாண்டமாக இடம்பெறும்வடக்கின் கில்லாடி யார்?” போட்டித் தொடரின் ஊடக அனுசரணையாளர்களாக இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான Thepapare.com  பெருமிதத்துடன் இணைந்துள்ளது.

கடந்த 2016இல் சென். மேரிஸ் விளையாட்டுக் கழக அணியினை தண்ட உதை மூலமாகவும், 2017இல் ஞானமுருகன் விளையாட்டுக் கழக அணியினை ஒரு கோலாலும் வெற்றிகொண்ட குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணி யாழின் கில்லாடி கிண்ணத்தினை தொடர்ந்து இரண்டு முறை தம்வசப்படுத்திய பெருமையுடன், தொடரின் நடப்புச் சம்பியன்களாக இம்முறை களங்காணுகின்றது.

இவ்வருட போட்டித் தொடரிற்கு கடந்த வருடம் அரையிறுதியில் தடம்பதித்திருந்த குருநகர் பாடும்மீன், மயிலங்காடு ஞானமுருகன், ஊரெழு றோயல் மற்றும் முதலாவது பருவத்தின் இறுதிப் போட்டியில் தடம்பதித்த நாவாந்துறை சென். மேரிஸ் ஆகிய அணிகள் உள்ளடங்கலாக யாழ்ப்பாண கால்பந்து லீக்கில் இருந்து 17 அணிகள் களங்காணுகின்றன.

அதேபோன்று, வடமராட்சி லீக்கிலிருந்து நான்கு அணிகளும், கிளிநொச்சி, தீவக லீக்குகளிலிருந்து தலா மூன்று அணிகள், கடந்த வருடம் அரையிறுதியில் தடம்பதித்திருந்த இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் அணி உள்ளடங்கலாக வலிகாமம் லீக்கிலிருந்து இரண்டு அணிகள், மன்னார் லீக்கில் இருந்து 2 அணிகள் மற்றும் முல்லைத்தீவு லீக்கிலிருந்து ஒரு அணியென இவ்வருட போட்டித்தொடரிற்கு மொத்தமாக 32 அணிகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.    

தொடரின் போட்டிகள் அனைத்தும், யாழ்ப்பாணம் அரியாலை கால்பந்து பயிற்சி மைதானத்தில் இடம்பெறும். இம்மாதம் 15ஆம் திகதி (சனிக்கிழமை) மாலை 2.30 மணிக்கு நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் குருநகர் சென்.றொக்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியுடன்வடக்கின் கில்லாடி யார்?” தொடர் ஆரம்பமாகவுள்ளது

 

முதலாவது சுற்றுப் போட்டிகள் 15ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. விசேடமாக 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஆறு போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஏனைய 05 நாட்களிலும் நாளொன்றிற்கு இரண்டு போட்டிகள் வீதம் மோதல்கள்  இடம்பெறும்.  தொடரின் இடண்டாவது சுற்று ஆட்டங்கள் இம்மாதம் 22, 23 ஆம் திகதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) இடம்பெறவுள்ளன.  தொடர்ந்து அடுத்த அடுத்த வார இறுதிகளில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறும்.

 

தொடரில் பங்கு கொள்ளும் அணிகளின் விபரம் 

  • யாழ்ப்பாணம் கால்பந்து லீக்

குருநகர் பாடும்மீன், மயிலங்காடு ஞானமுருகன், நாவாந்துறை சென்.மேரீஸ், ஊரெழு றோயல், பாஷையூர் சென்.அன்ரனீஸ், ஆனைக்கோட்டை யூனியன், நாவற்க்குழி அன்னை, அச்செழு வளர்மதி, குருநகர் சென்.றோக்ஸ், அரியாலை ஜக்கியம், குப்பிளான் ஞானகலா, கொட்டடி முத்தமிழ், நாவாந்துறை கலைவாணி, மணியந்தோட்டம் ஜக்கியம், உரும்பிராய் திருக்குமரன், கொக்குவில் பொற்பதி, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 

  • வடமராட்சி கால்பந்து லீக்

வதிரி டைமன்ஸ்கொற்றாவத்தை றேஞ்சர்ஸ், கரணவாய் கொலின்ஸ், நவிண்டில் கலைமதி 

  • தீவக கால்பந்து லீக்

துறையூர் ஜயனார், மெலிஞ்சிமுனை இருதயராஜா, புங்குடுதீவு நகரேத் 

  • கிளிநொச்சி கால்பந்து லீக்

கிளிநொச்சி உருத்திரபுரம், வலைப்பாடு மேசியா, இரணைமாதாநகர் மேரீஸ்

  • வலிகாமம் கால்பந்து லீக்

இளவாலை யங்கென்றீஸ், குப்பிளான் குறிஞ்சிகுமரன்

  • மன்னார் கால்பந்து லீக்

மன்னார் கில்லறி, ஜோசவாஸ்நகர் ஜக்கியம் 

  • முல்லைத்தீவு கால்பந்து லீக்

புதுக்குடியிருப்பு சுப்பர்றாங் 

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

முதல் நாளில் வெற்றியைப் பதிவு செய்த நாவாந்துறை சென். மேரிஸ், யாழ் பல்கலைக்கழக அணிகள்

Vadakkin-killadi-696x460.jpg

 

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மாலை 2.30 மணியளவில் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் ஆரம்பமானது.

நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் குருநகர் சென். றொக்ஸ் விளையாட்டுக் கழகம்

விலகல் (Knock Out) முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற “வடக்கின் கில்லாடி” தொடரின் முதலாவது ஆட்டத்தில் முதலாவது யாழின் கில்லாடி தொடரின் இறுதிப்போட்டியாளர்களான நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து யாழின் வளர்ந்துவரும் அணியான குருநகர் சென்.றொக்ஸ் அணி மோதியது.

 

போட்டியின் 11ஆவது நிமிடத்தில் மேரிஸ் அணியின் மதிவதனன் பெற்றுக்கொடுத்த கோலுடன் சென். மேரிஸ் முன்னிலையில் முதலாவது பாதி நிறைவிற்கு வந்தது.

இரண்டாவது பாதியிலும் தமது ஆதிக்கத்தினைத் தொடர்ந்த சென். மேரிஸ் அணிக்கு தேசிய அணிவீரர் மரியதாஸ் நிதர்சன் 47 ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றுக்கொடுத்து அணியை இரண்டு கோல்களால் முன்னிலைப்படுத்தினார்.

போட்டியின் இறுதி நிமிடங்களில் சுபோதரன் ஒரு கோலைப் பெற்றுக்கொடுக்க 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற சென். மேரிஸ் அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

முழு நேரம்: நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் 3 – 0 குருநகர் சென். றோக்ஸ் விளையாட்டுக் கழகம்

ஆட்டநாயகன் – மரியதாஸ் நிதர்சன்

கோல் பெற்றவர்கள்

நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் – மதிவதனன் 11′, மரியதாஸ் நிதர்சன் 47’, சுபோதரன் 57′


வதிரி டைமன்ட்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் யாழ் பல்கலைக்கழக அணி

யாழின் முன்னணி கழக அணியான வதிரி டைமன்ட்ஸ் அணியினை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக அணி மோதியது.

போட்டியின் போது கோல் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை இரு அணியினரும் தவறவிட, கோல் ஏதுமின்றி போட்டி நிறைவிற்கு வந்தது.

முழு நேரம்: வதிரி டைமன்ட்ஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 யாழ் பல்கலைக்கழக அணி

தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் 3 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழக அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆட்டநாயகன் – ரோசாரியோ (கோல் காப்பாளர் – யாழ் பல்கலைக்கழகம்)

 

தொடரின் முதலாவது சுற்றில் நாளைய தினமும் 06 முக்கிய ஆட்டங்கள் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றன.

  • கிளிநொச்சி உதயதாரகை  எதிர் நாவாந்துறை கலைவாணி – காலை 10.00 மணி
  • குப்பிளான் குறிஞ்சிக்குமரன் வி.க எதிர் நவிண்டில் கலைமதி வி.க – காலை 11.15 மணி
  • புங்குடுதீவு நசரத் எதிர் அச்செளு வளர்மதி வி.க – பகல் 12.30 மணி
  • மணியந்தோட்டம் ஐக்கிய வி.க எதிர் முல்லைத்தீவு சுப்பர் றாங் வி.க – பகல் 2.00 மணி
  • மெலிஞ்சிமுனை இருதயாராஜா வி.க எதிர் அரியாலை ஐக்கிய வி.க – மாலை 3.15 மணி
  • ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய வி.க எதிர் பொற்பதி வி.க – மாலை 4.30 மணி
 

 

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“வடக்கின் கில்லாடி” இரண்டாம் நாள் போட்டி முடிவுகள்

1-0339-696x464.jpg
 

 அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாட” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது சுற்றின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் இன்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகம்  எதிர் நாவாந்துறை கலைவாணி விளையாட்டுக் கழகம்

போட்டியின் முதல் பாதியாட்டம் கோல்கள் ஏதுமின்றி நிறைவிற்கு வந்தது. இரண்டாவது பாதியில் தமது ஆட்டத்தினை வேகப்படுத்திய உதயதாரகை அணிக்கு, போட்டியின் 45 ஆவது நிமிடத்தில் ஜெயந்தரூபன் கோலொன்றை பெற்றுக்கொடுத்தார்.

 

ஜெயந்தரூபன் பெற்றுக்கொடுத்த ஓரே கோலுடன் ஆட்ட நேரம் நிறைவிற்கு வர போட்டியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி உதயதாரகை அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

முழு நேரம்: கிளிநொச்சி உதயதாரகை வி.க  1 – 0  நாவாந்துறை கலைவாணி வி.க

ஆட்டநாயகன் –  ஜெயந்தரூபன்

கோல் பெற்றவர்கள்

கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகம் – ஜெயந்தரூபன் 45′

குப்பிளான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் எதிர் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம்

இரு இளம் அணிகளுக்கிடையிலான மோதலாக அமைந்திருந்த இந்தபோட்டியில், கோல் ஏதுமின்றி முதலாவது பாதியாட்டம் நிறைவிற்கு வந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் ஒன்றினைப் பெறுவதற்காக மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக போட்டி நிறைவடைவதற்கு வேறுமனே 12 நிமிடங்கள் மீதமிருக்கையில், போட்டியின் முதலாவது கோலை கலைமதி அணியின் விஜேந்திரன் போட்டார்.

தொடர்ந்தும் வினித் இரைட்டைக் கோலை பெற்றுக்கொடுக்க, ஆட்டநேர நிறைவில் மூன்று கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கலைமதி அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

முழு நேரம்: குப்பிளான் குறிஞ்சிக்குமரன் வி. க 0 – 3 நவிண்டில் கலைமதி வி. க

ஆட்டநாயகன் – வினித்

கோல் பெற்றவர்கள்

நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் – விஜேந்திரன் 48’, வினித் 52′ & 59′

புங்குடுதீவு நசரத் விளையாட்டுக் கழகம் எதிர் அச்செளு வளர்மதி விளையாட்டுக் கழகம்

ஆட்ட நேர நிறைவில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாது போட்டியை நிறைவு செய்ய, தோடர்ந்து பெனால்டி உதை இடம்பெற்றது.  பெனால்டி உதையில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்ற அச்செளு வளர்மதி அணி, நாவாந்துறை சென். மேரிஸ் அணியுடன் மோதவுள்ளது .

முழு நேரம்: புங்குடுதீவு நசரத் வி.க 00:00  அச்செளு வளர்மதி வி.க

ஆட்டநாயகன் – வசந்தன் (கோல் காப்பாளர் – அச்செளு வளர்மதி வி.க)

மணியந்தோட்டம் ஐக்கிய விளையாட்டுக் கழகம் எதிர் முல்லைத்தீவு சுப்பர் றாங் விளையாட்டுக் கழகம்

இரு அணிகளும் முதலாவது கோல் பெறுவதற்காக எத்தணித்துக் கொண்டிருக்கையில் விறுவிறுப்பாக இடம்பெற்ற முதலாவது பாதி ஆட்டத்தின் இறுதி நேரத்தில் சுப்பர் றாங் அணிக்காக உதயவர்மன் கோல் ஒன்றைப் பெற்றுக்கொடுத்தார்.

 

கோல்கள் ஏதுமின்றி இரண்டாவது பாதியாட்டம் நிறைவிற்கு வர, போட்டியில் வெற்றிபெற்ற மூல்லைத்தீவு லீக்கின் ஓரே பிரதிநிதியான சுப்பர் றாங் அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

முழு நேரம்: மணியந்தோட்டம் ஐக்கிய வி.க 0 – 1 முல்லைத்தீவு சுப்பர் றாங் வி.க

ஆட்டநாயகன் – உதயவர்மன்

கோல் பெற்றவர்கள்

முல்லைத்தீவு சுப்பர் றாங் விளையாட்டுக் கழகம் – உதயவர்மன் 28′

மெலிஞ்சிமுனை இருதயாராஜா விளையாட்டுக் கழகம் எதிர் அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகம்

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணியினருக்கும் கிடைத்த இலகுவான கோல் பெறும் வாய்ப்புக்களை முன்கள வீரர்கள் நழுவ விட கோல்கள் ஏதுமின்றி போட்டி சமநிலையில் நிறைவிற்கு வந்தது.

பெனால்டி உதையில் 3 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற மெலிஞ்சிமுனை இருதயராஜா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

முழு நேரம்: மெலிஞ்சிமுனை இருதயாராஜா வி.க 0 – 0 அரியாலை ஐக்கிய வி.க

ஆட்டநாயகன் – அருள்ராஜ்

ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம் எதிர் பொற்பதி விளையாட்டுக் கழகம்

மன்னார் லீக்கின் முன்னணி அணியான ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணி போட்டியின் ஆரம்பம் முதலே தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டினர். 15ஆவது நிமிடத்தில் டினோசன் கோல் கணக்கை ஆரம்பித்தார். டெசில் மேலும்  ஒரு கோலைப் பெற்றுக்கொடுக்க முதல் பாதியாட்டம் ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணி முன்னிலையில் நிறைவிற்கு வந்தது.

 

 

இரண்டாவது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணிக்கு டெசில் மேலும் இரண்டு கோல்களைப் பெற்று போட்டியில் ஹெட்றிக் கோலை பதிவு செய்தார். ஜோன்சனினதும் இரட்டைக் கோல்களின் துணையுடன் இரண்டாவது பாதியில் 4 கோல்களை பதிவு செய்த ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணி 6 கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.  

முழு நேரம்: ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய வி.க 6 – 0 பொற்பதி வி.க

ஆட்டநாயகன் – டினோசன்

கோல் பெற்றவர்கள்

ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம் – டினோசன் 15′, டெசில் டேவ் 25’, 45’ & 55’, ஜோன்சன் 42’ & 50’

வடக்கின் கில்லாடி தொடரின் முதலாவது சுற்றின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது போட்டிகள் இடம்பெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழக அணியும், அடுத்து 4.45 மணிக்கு இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் ஊரெளு றோயல் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து குப்பிளான் ஞானகலா விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“வடக்கின் கில்லாடி யார்?” மூன்றாம் நாள் போட்டிகளின் முடிவுகள்

Vadakkin Killaadi
 

 அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது சுற்றின் மூன்றாம் நாள் ஆட்டங்கள் இன்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.

மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் எதிர் குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகம்

யாழின் முன்னணி அணிகளுள் ஒன்றான மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து வடமராட்சி லீக்கின் வளர்ந்துவரும் அணியான குஞ்சர்கடை கொலின்ஸ் அணி மோதியது.

போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் பிரதாப் ஒரு கோலைப் போட்டு கொலின்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்தும் ஒரு கோலைப் பெறுவதற்கு இரு அணியினரும் முயற்சி செய்தபோதும், அம்முயற்சிகள் தோல்வியில் நிறைவடைய கொலின்ஸ் அணி முன்னிலையுடன் முதல் பாதி நிறைவிற்கு வந்தது.

 

இரண்டாவது பாதியின் 7 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றினைப் பதிவு செய்த வகின்சன் கோல் கணக்கை சமன் செய்தார். இறுதியில் மேலதிக கோலேதுமின்றி போட்டி சமநிலையில் நிறைவிற்கு வந்தது.

முழு நேரம்: மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் 1 – 1 குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகம்

ஆட்டநாயகன் – வனஜன்

கோல் பெற்றவர்கள்

  • குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் – பிரதாப் 12′
  • மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் – வகின்சன் 37′

தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் 5 – 3 என்ற கோல்கள் கணக்கில் குஞ்சர்கடை கொலின்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற, அதிர்ச்சித் தோல்வியுடன் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து, கடந்த ஆண்டு யாழின் கில்லாடி தொடரின் இறுதிப்போட்டியாளர்களான மயிலங்காடு ஞானமுருகன் அணியினர் தொடரிலிருந்து வெளியேறுகின்றனர்.


ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் எதிர் குப்பிளான் ஞானகலா விளையாட்டுக் கழகம்

யாழ்ப்பாணத்தின் பிரபல கழகமான ஊரெழு றோயல் அணியினை எதிர்த்து பல இளைய வீரர்களை உள்ளடக்கிய குப்பிளான் ஞானகலா அணி மோதியது.

போட்டியின் 6 ஆவது நிமிடத்தில் றோயல் அணியின் நிதர்சன் முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்து அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் கோல் பெறப்பட்டு சில நிமிடங்களிலேயே கானுஜன் மேலும் ஒரு கோலினைப் பதிவு செய்து றோயல் அணியின் முன்னிலையை உறுதி செய்தார்.

றோயல் அணியினர் பெற்றுக்கொண்ட இரண்டு கோல்களுடன் முதல் பாதி நிறைவிற்கு வந்தது.

 

போட்டியின் இரண்டாவது பாதியிலும் நிதர்சன் மேலும் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர நிறைவில் 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழக அணி இலகு வெற்றியைப் பதிவு செய்தது.

முழு நேரம்: ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் 3 – 0 குப்பிளான் ஞானகலா விளையாட்டுக் கழகம்

ஆட்டநாயகன் – எடிசன் பிகுராடோ

கோல் பெற்றவர்கள்

  • ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் – நிதர்சன்  6’ & 46’, கானுஜன் 12′

வடக்கின் கில்லாடி தொடரின் முதலாவது சுற்றின் பதினொராவது மற்றும் பன்னிரண்டாவது போட்டிகள் நாளைய (18) தினம்  இடம்பெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெவுள்ள முதலாவது போட்டியில் பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழக அணியும், அடுத்து 4.45 மணிக்கு இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கொட்டடி முத்தமிழ்  விளையாட்டுக் கழக அணியும் மோதவுள்ளது.

 

http://www.thepapare.com

 

  • தொடங்கியவர்

“வடக்கின் கில்லாடி யார்?” நான்காம் நாள் போட்டிகளின் முடிவுகள்

IMG-20180918-WA0006-696x522.jpg
 

 அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்” உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதலாவது சுற்றின் நான்காவது நாள் ஆட்டங்கள் இன்றைய தினம் (18) அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.

பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்

யாழ் லீக்கினுடைய பலம் வாய்ந்த அணியான பாசையூர் சென். அன்ரனிஸ் அணியை எதிர்த்து தீவக லீக்கின் முன்னணி அணியான வேலணை ஐயனார் கழகம் மோதியது.

 

 

இரு அணியினரும் கோல் பெறுவதற்கு தொடர் முயற்சியை மேற்கொண்ட போதும், எதுவிதமான முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இறுதியில்  கோல்கள் ஏதுமின்றி போட்டி நிறைவிற்கு வந்தது.

முழு நேரம்: பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்

ஆட்டநாயகன் – ஜெயந்தன் (கோல்காப்பாளர் – வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்)

தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் 6 –  என்ற கோல்கள் கணக்கில் வேலணை ஐயனார் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த சுற்றில் ஐயனார் அணி நவிண்டில் கலைமதி அணியுடன் மோதவுள்ளது.


குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் எதிர் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழகம்

யாழின் கில்லாடி தொடரில் தொடர்ச்சியாக இரு ஆண்டுகளிலும் கிண்ணத்தை தமதாக்கி தொடரின் நடப்புச் சம்பியன்களாக களங்காணும் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து மற்றொரு யாழ் லீக்கின் பிரதிநிதியான கொட்டடி முத்தமிழ் அணி மோதியது.

போட்டியின் ஆரம்பத்தில் கோல் போடுவதற்கு தடுமாறிய பாடும்மீன் அணி இறுதியாக, 15 ஆவது நிமிடத்தில் சேயன் மூலம் கோல் பெற்றது. முதல் பாதியினுடைய இறுதி நிமிடத்தில் பற்றிக்ஸ் கல்லூரியினுடைய முன்கள வீரர் ரஜிக்குமார் சாந்தன் மேலும் ஒரு கோலைப் பெற்றுக்கொடுக்க முதல் பாதி நிறைவில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் பாடும்மீன் கழகம் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் மயூரன் ஒரு கோலையும், சேயன் போட்டியில் இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுக்க, ஆட்ட நேர நிறைவில் 4 – 0 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றிபெற்ற நடப்புச் சம்பியன்களான பாடும்மீன் அணியினர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முழு நேரம்: குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 4 – 0 கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழகம்

ஆட்டநாயகன் – டெரின்சன்

கோல் பெற்றவர்கள்

குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் – சேயன் 15′ & 52’, சாந்தன் 28’, மயூரன் 44′

 

வடக்கின் கில்லாடி தொடரின் முதலாவது சுற்றின் பதினொராவது மற்றும் பன்னிரண்டாவது போட்டிகள் நாளைய தினம் (19)  இடம்பெறவிருந்த இளவாலை யங் ஹென்றீசியன்ஸ், உரும்பிராய் திருக்குமரன் அணிகளுக்கிடையிலான போட்டியில் யங்ஹென்றீசியன்ஸ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஊரெழு றோயல் அணியை எதிர்த்து முல்லைத்தீவு சுப்பர் றாங் அணி மோதவுள்ளது. றோயல், சுப்பர் றாங் அணிகளுக்கு இடையிலான போட்டி இரண்டாவது சுற்றுப்போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4.45 மணியளவில் இடம்பெறவுள்ளள முதல் சுற்றின் 14 ஆவது போட்டியில் மன்னார் கில்லறி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“வடக்கின் கில்லாடி யார்?” ஐந்தாவது நாள் போட்டிகளின் முடிவுகள்

Untitled-1-192-696x464.jpg
 

 அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்” உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதலாவது சுற்றின் ஐந்தாவது நாள் ஆட்டங்கள் இன்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.

மன்னார் கில்லறி விளையாட்டுக் கழகம் எதிர் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்

மன்னார் லீக்கின் முன்னணி அணியான கில்லறி அணியை எதிர்த்து, வடமராட்சி லீக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் இளம் அணியான கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி மோதியது.  

 

போட்டியின் முதல் பாதியின் 24 ஆவது நிமிடத்தில் றோஞ்சர்ஸ் அணி வீரர் உள்ளனுப்பிய பந்தை கில்லறியின் பின்கள வீரர்கள் வெளியனுப்புவதற்கு முயற்சித்த வேளையில் அந்த பந்து ஓன் கோலாக (Own Goal) மாறியது.

பின்னர் இரு அணியினரும் கோல் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கவில்லை.

கில்லறி அணியினர் பெற்றுக்கொடுத்த ஓன் கோலுடன், போட்டியில் வெற்றிபெற்ற கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேவேளை மன்னார் லீக்கின் ஜாம்பவன்களான கில்லறி அணியினர் துரதிஷ்டவசமாக தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறுகின்றனர்.

முழு நேரம்: மன்னார் கில்லறி விளையாட்டுக் கழகம் 1 – 0 கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்

ஆட்டநாயகன்மாதுஜன்

  • இரண்டாவது சுற்றுப் போட்டிகள்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் எதிர் முல்லைத்தீவு சுப்பர் றாங் விளையாட்டுக் கழகம்

பிரபல வீரர்களை உள்ளடக்கிய யாழ் லீக்கின் முன்னணி அணியான றோயல் அணியை எதிர்த்து முல்லைத்தீவு லீக்கின் ஏக பிரதிநிதியான சுப்பர் றாங் அணி மோதியது.

போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் சுப்பர் றாங் அணியின் உதயவர்மன் முதலாவது கோலை பதிவு செய்தார். சில நிமிடங்களிலேயே றோயல் அணியின் நம்பிக்கைக்குரிய வீரர் எடிசன் பிகுராடோ ஒரு கோலைப் போட்டு கோல் கணக்கை சமன் செய்தார்.

24 ஆவது நிமிடத்தில் நிதர்சன் ஒரு கோலைப் போட்டு முதல் பாதி ஆட்டத்தின் நிறைவின் போது றோயல் அணியை முன்னிலைப்படுத்தினார்.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் போது இரு அணிளினதும் கோல் பெறும் முயற்சிகள் தோல்வியில் நிறைவடைய, கோல்கள் ஏதுமின்றி இரண்டாவது பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

போட்டியில் வெற்றிபெற்ற ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினர் ”வடக்கின் கில்லாடி யார்” தொடரின் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

முழு நேரம்: ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் 2 – 1 முல்லைத்தீவு சுப்பர் றாங் விளையாட்டுக் கழகம்

ஆட்டநாயகன் – நிதர்சன்

  • கோல் பெற்றவர்கள்

முல்லைத்தீவு சுப்பர் றாங் விளையாட்டுக் கழகம் – உதயவர்மன் 10′

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் – எடிசன் 14′, நிதர்சன் 24′

”வடக்கின் கில்லாடி யார்” தொடரின் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறப்போகும் இறுதி இரண்டு அணிகளைத் தீர்மானிப்பதற்கான போட்டிகள் நாளைய தினம் (20) அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில்  இரணைமாதாநகர் சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நாவற்குழி அன்னை விளையாட்டுக் கழகமும். பிற்பகல் 4.45 மணிக்கு இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“வடக்கின் கில்லாடி யார்?”: தொடரின் முதலாவது சுற்றின் இறுதிப் போட்டிகளின் முடிவுகள்

 

 

Day-06-696x464.jpg
 

Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப் படும்வடக்கின் கில்லாடி யார்?உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது சுற்றின் கடைசி ஆட்டங்கள் நேற்றைய தினம் (21) அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றன.

 

 

போட்டி இல. 15: இரணைமாதாநகர் சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் நாவற்குழி அன்னை விளையாட்டுக் கழகம்

யாழ் லீக்கின் FA கிண்ண சம்பியன்களான நாவற்குழி அன்னை விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கிளிநொச்சி இரணைமாதாநகர் சென். மேரிஸ் அணி மோதியது.  

ஆட்ட நேரத்தின் போது கிடைத்த கோல் பெறும் வாய்ப்புக்களினை இரு அணியினரும் வீணடிக்க, கோல்களேதுமின்றி போட்டி நிறைவிற்குவந்தது.

முழு நேரம்: சென். மேரிஸ் 00 – 00 நாவற்குழி அன்னை

தொடர்ந்து இடம்பெற்ற சமநிலை தவிர்ப்பு உதையில் 04-03 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற சென். மேரிஸ் அணி இரண்டாவது சுற்றிற்கு தகுதிபெற்றது.

ஆட்டநாயகன்- டெனிசியஸ்


போட்டி இல.16: கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் எதிர் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழகம்

இரு முன்னணி அணிகளுக்கிடையிலான மோதலாக விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாததாக அமைந்திருந்த, இந்த போட்டியில் ஹரிசன் பெற்றுக்கொடுத்த ஒரு கோலினது துணையுடன் வெற்றிபெற்ற கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் இறுதி அணியாக இரண்டாவது சுற்றிற்கு தகுதிபெற்றுள்ளது.

 

 

முழு நேரம்: கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் 01-00 ஆனைக்கோட்டை யூனியன்  விளையாட்டுக் கழகம்

ஆட்டநாயகன் – கயந்

கோல் பெற்றவர்கள்

  • உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் – ஹரிசன்

வடக்கின் கில்லாடி தொடரில் முதலாவது சுற்று ஆட்டங்கள் நிறைவிற்கு வந்துள்ள நிலையில் நாளை முதல் (22.09.2018) இரண்டாவது சுற்று ஆட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவிருக்கின்றன.   


இரண்டாவது சுற்றிற்கு தகுதி பெற்றுள்ள அணிகள்.

யாழ்ப்பாணம் சென். மேரிஸ் வி., யாழ் பல்கலைக்கழகம், வேலணை ஐயனார் வி., நவிண்டில் கலைமதி வி., ஊரெளு றோயல் வி., முல்லைத்தீவு சுப்பர் றாங் வி., மெலிஞ்சிமுனை இருதயராசா வி., ஜோசப்வாஸ்நகர் ஐக்கிய வி., குஞ்சர்கடை கொலின்ஸ் வி., கிளிநொச்சி உதயதாரகை வி., அச்செழு வளர்மதி வி., குருநகர் பாடும்மீன் வி., இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் வி., கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் வி., இரணைமாதாநகர் சென் மேரிஸ் வி., உருத்திரபுரம் வி.

 

 

இதன்படி, அதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கொலின்ஸ் விளையாட்டுக் கழகமும்,  

3 மணிக்கு இடம்பெறவிருக்கும் இரண்டாவது போட்டியில் நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் அச்செளு வளர்மதி விளையாட்டுக் கழகமும் தொடர்ந்து இடம்பெறவிருக்கும் மூன்றாவது போட்டியில் இளவாலை யங் ஹென்றீயன்ஸ் விளையாட்டுக் கழகத்துடன் யாழ் பல்கலைக்கழக அணியும் போட்டியிடவுள்ளன.

http://www.thepapare.com/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூரின் இளைஞர்களை வைத்து போட்டிகளை நடாத்திக் கொண்டிருக்கும் அரியாலை சனசமூக நிலையத்தாருக்கு வாழ்த்துக்கள்.இன்றைய இளைஞர்கள் தடம் புரளாமல் இருக்க இவை போன்ற ஊக்குவிப்புகள் மிகவும் அவசியம்.....!  

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எழுத்துப்பிழையை திருத்துங்க பாஸ் 

வடக்கின் கில்லடி யார்

கில்லாடி என்று வரனும் .

  • கருத்துக்கள உறவுகள்

மூலம் இணைத்தவர் மூலத்தில் கடி வாங்கியது இருந்து அவருக்கு அரவு  Résultat de recherche d'images pour "snake moving gif"  போட்டுடும் என்று பயம். அதுதான் அரவை அவர் போடவில்லை......!  ? 

  • தொடங்கியவர்

“வடக்கின் கில்லாடி யார் ?” தொடரின் காலிறுதியில் அச்செளு வளர்மதி மற்றும் யங்ஹென்றீசியன்ஸ்

 

 

Jaffna-Football-696x464.jpg
 

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்?” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இடண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்றைய தினம் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

 

குஞ்சர்  கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்

கிளிநொச்சி லீக்கின் முன்னணி அணியான உருத்திரபரம் அணியினை எதிர்த்து யாழின் பலவான்கள் ஞானமுருகனை நொக் அவுட் செய்திருந்த கொலின்ஸ் அணி மோதியிருந்த இப்போட்டியில், நடுவரது தீர்ப்புக்களின் மீதான அதிருப்தியின் காரணமாக கொலின்ஸ் அணியினர் மைதானத்தினை விட்டு வெளியேற போட்டி கைவிடப்பட்டிருந்தது.

போட்டி தொடர்பான தீர்ப்பு நாளைய தினம் அறிவிக்கப்படுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் அச்செளு வளர்மதி விளையாட்டுக் கழகம்

பலம் வாய்ந்த சென். மேரிஸ் அணியினை எதிர்த்து யாழில் வளர்ந்துவரும் ஓர் இளம் அணியான அச்செளு வளர்மதி அணி மோதியது.

போட்டியின் முதலாவது பாதியில் மேரிஸ் அணி அனுபவ வீரர் ஜக்சன் மற்றும் இளைய வீரர் ஜெரின்சன் ஆகிய இருவர் மூலமாகவும் தலா ஒரு கோலினைப் போட்டு முதற் பாதியாட்டத்தினை இரண்டு கோல்கள் முன்னிலையுடன் நிறைவிற்கு கொண்டுவந்தது.

 

இரண்டாவது பாதியின் ஆரம்பம் முதல் மிகவும் ஆக்ரோசமாக ஆடிய அச்செளு வளர்மதி அணி டிலக்சன் மூலமாக முதலாவது கோலினைப் பெற்றுக்கொண்டது. முதல் கோல் பெறப்பட்ட சில நிமிடங்களிலேயே தேனுஜன் ஒருகோலினைப் போட்டு சமன் செய்தார். மேரிஸ் அணியினர் மூன்றாவது கோலிற்காக முயற்சி செய்த போதும், அம் முயற்சி தோல்வியில் முடிய போட்டி சமநிலையில் நிறைவிற்கு வந்தது.

முழு நேரம்: நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் 02 : 02 அச்செளு வளர்மதி விளையாட்டுக் கழகம்

காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணியினைத் தேர்வு செய்வதற்காக இடம்பெற்ற பெனால்டி சந்தர்ப்பத்தில் 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அச்செளு வளர்மதி அணி காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

  • ஆட்டநாயகன்  – வசந்தன்

கோல் பெற்றவர்கள்

நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் – ஐக்சன், ஜெரின்சன்

அச்செளு வளர்மதி விளையாட்டுக் கழகம் – டிலக்சன் தேனுஜன்

யாழ் பல்கலைக்கழகம் எதிர் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகம்

கடந்த யாழின் கில்லாடி யார்? தொடரின் அரையிறுதிப் போட்டியாளர்களான யங்ஹென்றீசியன்ஸ் அணியினை எதிர்த்து  யாழ். பல்கலைக்கழக அணி மோதியது.

போட்டியின் ஆரம்ப நிமிடங்களிலேயே யங் ஹென்றீசியன்ஸ் அணி வீரர் நடுவரால் சிவப்பு அட்டை மூலம் மைதானத்தினை விட்டு வெளியேற்றப்பட, 10 வீரர்களுடனேயே தொடர்ந்து விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது யங் ஹென்றீசியன்ஸ் அணி.

முதற் பாதியாட்டத்தின் போது பல்கலைக்கழக அணியினரிற்கு கிடைத்த கோல் பெறும் வாய்ப்புக்கள் எவையும் சாதகமாக நிறைவு செய்யப்படவில்லை.

 

 

கோலேதுமின்றி நிறைவிற்கு வந்தது முதலாவது பாதியாட்டம். தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது பாதியாட்டத்தில் நிதானமாக ஆடிய யங் ஹென்றீசியன்ஸ் அணி அல்பிரட் தனேஸ் மூலமாக முதலாவது கோலினைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து கோல் பெறுவதற்கான முயற்றியில் இரு அணியினரும் ஈடுபட்ட போதும் பின்கள வீரர்களது சிறப்பாட்டத்தின் மூலம் அம் முயற்சிகள் தடுக்கப்பட தனேஸ் பெற்ற ஒரு கோலுடன் நிறைவிற்கு வந்தது போட்டி.

முழு நேரம்: யாழ் பல்கலைக்கழகம் 00 : 01 இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகம்

  • ஆட்டநாயகன் – டிலக்சன்

கோல் பெற்றவர்கள்

இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகம் – தனேஸ்

இன்று (23.09.2018) காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து நவின்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் போட்டியிடவுள்ளது.

10:45 மணிக்கு குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் மற்றும் இரணைமாதாநகர் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகமும், தொடர்ந்து 1 மணியளவில் ஜோசப்வாஸ் ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக் கழகமும் போட்டியிடவுள்ளது.

தொடரின் இறுதி காலிறுதிப்போட்டியான கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகம் மற்றும் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான போட்டி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
On 9/21/2018 at 11:43 PM, பெருமாள் said:

முதலில் எழுத்துப்பிழையை திருத்துங்க பாஸ் 

வடக்கின் கில்லடி யார்

கில்லாடி என்று வரனும் .

 

http://www.thepapare.com

ஏன் நவீனனால் நேரடி இணைப்பைக் கொடுக்கமுடியவில்லை என்று சொல்லமுடியுமா? இந்த இணையம் தமிழர்களால் நடாத்தப்பட்டால் எழுத்துப்பிழைகளை கட்டாயம் கவனித்திருப்பார்கள்.

 

நம்ம ஊர் அணி நடுவரது தீர்ப்புக்களின் மீதான அதிருப்தி காரணமாக வெளியேறியுள்ளது?

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

 

http://www.thepapare.com

ஏன் நவீனனால் நேரடி இணைப்பைக் கொடுக்கமுடியவில்லை என்று சொல்லமுடியுமா? இந்த இணையம் தமிழர்களால் நடாத்தப்பட்டால் எழுத்துப்பிழைகளை கட்டாயம் கவனித்திருப்பார்கள்.

 

நம்ம ஊர் அணி நடுவரது தீர்ப்புக்களின் மீதான அதிருப்தி காரணமாக வெளியேறியுள்ளது?

 

 

 

விளையாட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டி எழுப்பும் என்பதில் மாற்று கருத்து கிடையாது . ஆனால் அங்கு நடைபெறும் விளையாட்டு போட்டிகளுக்கு ஏன் பாதுகாவலர் போலிஸ் பிரதமவிருந்தினராக போய் மாலை வரவேற்பை பெற்றுகொள்வது மாத்திரம் அல்ல தீர்ப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் அதனால் ஊர் பிரச்சனைகளுக்கு வழிகோலுகின்றனர் .

  • தொடங்கியவர்

“வடக்கின் கில்லாடி யார்?” தொடரின் காலிறுதியில் பாடும்மீன், கலைமதி, இருதயராசா அணிகள்

VKY-696x460.jpg
 

 

 அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும்வடக்கின் கில்லாடி யார்?உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இடண்டாவது சுற்றின் மூன்று ஆட்டங்கள்  நேற்றைய தினம் (23) அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றிருந்தன.

வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் எதிர் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம்  

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமாகிய யாழ் மாவட்டத்தின் இரு முன்னணி அணிகளுக்கிடையிலான மோதலாக அமைந்திருந்த இப்போட்டியில், கலைமதி அணியினர் முதற் பாதியில் ஒரு கோலினைப் போட்டு அணியினை முன்னிலைப்படுத்தினர்

 

 

அதனைத்  தொடர்ந்து இரு அணியினரும் அடுத்த கோலிற்கு முயற்சி செய்த போதும் கோல் காப்பாளர்கள் லாவகமாகப் பந்தைத் தடுத்தனர்.  

தொடர்ந்து ஆரம்பமாகிய இரண்டாவது பாதியாட்டத்தின் போதும் மேலும் ஒரு கோலினைப் பதிவு செய்த கலைமதி, போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முழு நேரம் : ஐயனார் வி.க 00 – 02 கலைமதி வி.க

  • ஆட்டநாயகன் சந்துரு (கலைமதி வி.க)

கோல் பெற்றவர்கள்

நவிண்டில் கலைமதி வி.க – பாணுப்பிரியன், விஜேன்சன்


குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் எதிர் இரணைமாதா நகர் சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம்

தொடரின் நடப்புச் சம்பியன்களான பாடும்மீன் அணியினை எதிர்த்து இரணைமாத நகர் மேரிஸ் அணியினர் மோதியிருந்தனர்.  

நடப்புச் சம்பியன்கள், பத்திரிசியார் கல்லூரி வீரர் சாந்தன் மூலமாக கோல் கணக்கினை ஆரம்பித்தனர். கீதன் மேலும் ஒரு கோலினைப் பதிவு செய்ய முதற் பாதியாட்டத்தின் நிறைவின் போது இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றிருந்தது பாடும்மீன் அணி.

 

 

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தினை தொடர்ந்த பாடும்மீன் அணிக்கு பத்திரிசியார் கல்லூரியின் மற்றொரு வீரரான ஹெயின்ஸ் ஒரு கோலினைப் பெற்றார்.

ஐசன் மூலமாக மேலுமொரு கோலினைப் பதிவு செய்த பாடும்மீன் அணியினர் தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியிலும் நான்கு கோல்கள் வித்தியாசத்தில்  வெற்றிபெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முழு நேரம் : பாடும்மீன் வி.க 04 – 00 சென். மேரிஸ் வி.க

  • ஆட்டநாயகன் – கீதன் (பாடும்மீன் வி.க)

கோல் பெற்றவர்

பாடும்மீன் வி.க – சாந்தன், கீதன், ஹெயின்ஸ், ஐசன்


மெலிஞ்சிமுனை இருதயராசா விளையாட்டுக் கழகம் எதிர் ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம்

மன்னாரின் பலம் வாய்ந்த அணியான ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணியினை எதிர்த்து தீவகத்தின் முன்னணி அணியான மெலிஞ்சிமுனை இருதயராசா அணி மோதியது.  

போட்டியின் 8ஆவது நிமிடத்தில் தரன் மூலமாக முதல் கோலினைப் போட்டு மன்னார் வீரர்களிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது இருதயராசா அணி.

முதற் பாதியாட்டத்தின் பிற்பகுதியில் மேலும் ஒரு கோலினை பதிவு செய்த இருதயராசா அணியினர், முதற்பாதியாட்டத்தின் நிறைவில் இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றிருந்தனர்.

 

 

இரண்டாவது பாதியாட்டத்தின் போது தமது முதலாவது கோலினைப் பெறுவதற்காக ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணியினர் அடுத்தடுத்த முயற்சிகளினை மேற்கொண்ட போதும் அவற்றை மெலிஞ்சிமுனை அணியினர் இலகுவாகத் தடுத்தனர்.

கோல்களேதுமின்றி இரண்டாவது பாதியாட்டம் நிறைவிற்கு வர, போட்டியில் வெற்றி பெற்ற இருதயராசா அணியினர் தீவகத்தின் ஒரே அணியாக காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முழு நேரம் : இருதயராசா வி.க 02 – 00 ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய வி.க

  • ஆட்டநாயகன் – அருள்ராஜ் (இருதயராசா வி.க)

கோல் பெற்றவர்கள்  

இருதயராசா வி.க – தரன் 8′ அருள்ராஜ் 20′

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

றேஞ்சர்ஸை வீழ்த்தி “வடக்கின் கில்லாடி யார்?” காலிறுதிக்குள் நுழைந்தது உதயதாரகை

c6c35f4523d246020428a529935cd9e7-696x464
 

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு  நடாத்தப்படும் “ வடக்கின் கில்லாடி யார்?” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது சுற்றின் இறுதிப் போட்டி   இன்றைய தினம் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.    

கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகம்

FA கிண்ண சுற்றுத் தொடரில் இறுதி 32 அணிகளுள் முன்னேறியிருக்கும் றேஞ்சர்ஸ் அணியினை எதிர்த்து கிளிநொச்சியின் முன்னணி அணியான உதயதாரகை அணி மோதியது.

 

 

போட்டியின் 6ஆவது நிமிடத்தில் கீர்த்திகனினது கோல் மூலம் போட்டியின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது றேஞ்சர்ஸ் அணி.

மேலதிக கோல்களேதுமின்றி றேஞ்சர்ஸ் அணி முன்னிலையுடன் நிறைவிற்கு வந்தது முதலாவது பாதியாட்டம்.

இரண்டாவது பாதியாட்டத்தின் 5ஆவது நிமிடத்தில் ஜெனார்தன் பெற்ற கோலினுதவியுடன் கோல் கணக்கினை சமன் செய்தது உதயதாரகை விளையாட்டுக் கழகம். அதேவேகத்தில் தினேஷ் மேலும் ஒரு கோலினைப் பதிவு செய்து உதயதாரகை அணியினை முன்னிலைப்படுத்தினார்.

போட்டியின் 50ஆவது நிமிடத்தில் ஜெனார்த்தன் மேலும் ஒரு கோலினைப் போட்டார். இரண்டாவது பாதியில் சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்திய உதயதாரகை அணி ஆட்டத்தை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

முழு நேரம்:  றேஞ்சர்ஸ் வி. 01 – 03  உதயதாரகை வி.

  • ஆட்டநாயகன்அன்ரனிராஜ் ( உதயதாரகை வி.கோல் பெற்றவர்கள்
  • றேஞ்சர்ஸ் வி.க – கீர்த்திகன் 6′
  • உதயதாரகை வி.க – ஜெனார்த்தன் 35’ & 50′, தினேஷ் 37′

 

காலிறுதிக்கு தகுதிபெற்றது கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்

இம்மாதம் 22ஆம் திகதி கொலின்ஸ், உருத்திரபுரம் அணிகளுக்கிடையிலான போட்டி 01-01 என சமநிலையிலிருக்கையில், நடுவரது தீர்ப்பினை ஆட்சேபித்து போட்டி நிறைவடைவதற்கு சில நிமிடங்களிருக்கையில் கொலின்ஸ் அணி மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தது. இதனால், போட்டி கைவிடப்பட்டிருந்தது.

குறித்த போட்டி தொடர்பாக யாழ் லீக்கினது போட்டிக் குழு, நடுவர்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களது கருத்திற்கமைய யாழ் லீக் போட்டிக் குழு, உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

 

 

இதன்படி, வடக்கின் கில்லாடி யார்?” தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் யாவும் நிறைவடைந்துள்ள நிலையில்? இம்மாதம் 27ஆம் திகதிமுதல் காலிறுதிச்சுற்று ஆட்டங்கள் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெறவுள்ளது.

காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்.

இளவாலை யங்ஹென்றீசியன்ஸ் (வலிகாமம்), குருநகர் பாடும்மீன் (யாழ்), கிளிநொச்சி உருத்திரபுரம் (கிளிநொச்சி), நவின்டில் கலைமதி (வடமராட்சி), கிளிநொச்சி உதயதாரகை (கிளிநொச்சி), அச்செளு வளர்மதி (யாழ்), ஊரெழு றோயல்(யாழ்), மெலிஞ்சிமுனை இருதயராசா(தீவகம்)

http://www.thepapare.com/vadakkin-killadi-yaar-day-9-match-roundup-tamil/

  • தொடங்கியவர்

“வடக்கின் கில்லாடி யார்” இறுதிச்சுற்று மோதல்கள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்

FB_IMG_1537948294124-696x492.jpg
 

“வடக்கின் கில்லாடி யார்?” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நாளை (27) முதல் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெறவிருக்கின்றது.

தொடரின் இறுதிச் சுற்று ஆட்டங்களை முன்னிட்டு ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பில் சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர் ஹெரிசாந்த், செயலாளர் கவிந்தன், யாழ்ப்பாண உதைப்பந்தாட்ட லீக்கினுடைய தலைவர் ஆர்னோல்ட், செயலாளர் அஜித்குமார், இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவர் அன்ரனிப்பிள்ளை, இறுதிச் சுற்றில் பங்குபற்றும் அணிகளது தலைவர்கள் முகாமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

யாழ் உதைப்பந்தாட்ட லீக்கினது தலைவர் ஆர்னோல்ட் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்துவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது லீக்கினால் விஷேட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முதலாவது வருடம் முதல் போட்டிகளை சிறப்பாக ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றனர். இம்முறை வட மாகாண ரீதியிலான தொடர் சிறப்பாக இடம்பெற எனது வாழ்த்துக்கள்!“ என தெரிவித்தார்.

வருடாந்தம் கூடைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்து கிரிக்கெட் என பல விளையாட்டுப் போட்டிகளை சரஸ்வதி சன சமூக நிலையத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.

சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் “வடக்கின் கில்லாடி யார்?” உதைப்பந்தாட்ட தொடருக்கு வட மாகாணத்தின் 32 அணிகள் உள்வாங்கப்பட்டிருந்தன. 32 அணிகளுள் விலகல் முறையில் இடம்பெற்ற முதலிரு சுற்றுக்களின் நிறைவில், யாழ் லீக்கின் மூன்று அணிகள், கிளிநொச்சி லீக்கின் இரண்டு அணிகள், வலிகாமம், வடமராட்சி மற்றும் தீவக லீக்குகளின் தலா ஒரு அணி என 08 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

இந்த தோடரில் பல முன்னணி அணிகள் அதிர்ச்சி தோல்விகளை சந்திக்க, வளர்ந்து வரும் அணிகள் அவ்வணிகளது இடங்களை தட்டிப்பறித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருட”யாழின் கில்லாடி யார்?” தொடரில் அரையிறுதியில் மோதியிருந்த யாழின் பகழ்பூத்த மூன்று அணிகளுடன், இந்த இளம் அணியினர் மின்னொளியின் கீழான மோதலிற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்

இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் (வலிகாமம்), குருநகர் பாடும்மீன் (யாழ்), கிளிநொச்சி உருத்திரபுரம் (கிளிநொச்சி), நவின்டில் கலைமதி (வடமராட்சி), கிளிநொச்சி உதயதாரகை (கிளிநொச்சி), அச்செளு வளர்மதி (யாழ்), ஊரெழு றோயல் (யாழ்), மெலிஞ்சிமுனை இருதயராசா (தீவகம்)

 

இறுதிச் சுற்றுப் போட்டிகளின் நேர அட்டவணை

  • முதலாவது காலிறுதிப் போட்டி

அச்செளு வளர்மதி வி.க எதிர் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் வி.க – 28/09

  • இரண்டாவது காலிறுதிப் போட்டி

கிளிநொச்சி உருத்திரபுரம் வி.க எதிர் கிளிநொச்சி உதயதாரகை வி.க – 30/09

  • மூன்றாவது காலிறுதிப் போட்டி  

மெலிஞ்சிமுனை இருதயராஜா வி.க எதிர் குருநகர் பாடும்மீன் வி.க – 27/09

  • நான்காவது காலிறுதிப் போட்டி

நவிண்டில் கலைமதி வி.க எதிர் ஊரெளு றோயல் வி.க – 29/09

  • முதலாவது அரையிறுதிப் போட்டி – 2/10
  • இரண்டாவது அரையிறுதிப் போட்டி – 4/10
  • மூன்றாம் இடத்திற்கான போட்டி – 6/10
  • இறுதிப் போட்டி – 7/10

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் கில்லாடி யார்? பெனால்டியில் றோயலை வென்ற பாடும்மீன் இறுதிப்போட்டிக்கு

October 5, 2018
Vadakkin killadi Yaar
 

Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது  அரையிறுதிப்போட்டி இன்றைய தினம் (04) அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றிருந்தது.

குருநகர் பாடும்மீன்  விளையாட்டுக் கழகம் எதிர் ஊரெளு றோயல் விளையாட்டுக் கழகம் 

நடப்புச் சம்பியன்கள், யாழின் கில்லாடி பட்டத்தின் உரித்தாளர்கள் குருநகர் பாடும்மீன் அணியினர் இருதயராஜா அணிக்கு எதிரான இலகு வெற்றியுடனும், ஊரெளு றோயல் அணியினர் பெனால்டியில் கலைமதி அணியை வெற்றிகொண்டும் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தனர்.

6 ஆவது நிமிடத்தில் விசோத் இலகுவான சந்தர்ப்பத்தினை கோல் காப்பாளரின் கைகளுள் உதைந்தார். 

10 ஆவது நிமிடத்தில் றோயல் அணிக்கு எடிசன் உள்ளனுப்பிய பந்தினை தேனுஜன் நேர்த்தியா ஹெடர் செய்யத் தவறினார். 

14 ஆவது நிமிடத்தில் சாந்தன் மத்திய கோட்டிலிருந்து கோலாக்கும் முயற்சியினை மேற்கொண்ட போதும் கோல்காப்பாளர் அதனை தடுத்தார்.

16 ஆவது நிமிடத்தில், எதிரணி வீரரின் கைகளில் பந்து பட்டமையினால் றோயல் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. எடிசன் உதைந்த பந்து கோல் கம்பத்திற்கு அருகால் வெளியேறியது. 

25 ஆவது நிமிடத்தில், முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக றோயல் அணிக்கு மேலும் ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. எடிசன் கோலினை நோக்கி உதைந்த பந்து கம்பத்தின் இடது பக்க விளிம்பில் பட்டு வெளியேறியது.

34 ஆவது நிமிடத்தில் றோயலின் கோல் பரப்பினை நோக்கி அனுப்பப்பட்ட பந்தினை, றோயலின் பின்கள வீரரின் தடுப்பில் பட்டு பந்து முன்னேற விரைந்து செயற்பட்ட விசோத் கோலை நோக்கி உதைந்தார். கோல்காப்பாளர் அதனை லாவகமாக தடுத்தார். 

மேலும் ஒரு ப்ரீ கிக் றோயல் அணிக்கு கிடைக்கப்பெற, பந்தினை கோல் கம்பத்தின் வலது பக்கத்திற்கு உதைந்தார். கோலாக்குவதற்கு ஏனைய முன்கள வீரர்கள் முன்னேறியிருக்காததால் அந்த வாய்ப்பும் நழுவியது. 

39 ஆவது நிமிடத்தில் சாந்தன் கோலை நோக்கி உதைந்த பந்தினை கஜந்தன் தடுக்க, வலது பக்கத்தினை நோக்கி வந்த பந்தினை நேர்த்தியாக கோலை நோக்கி விசோத் உதைய, பந்தினை சிறப்பாக சேகரித்தார் றோயல் கோல்காப்பாளர்.

44 ஆவது நிமிடத்தில் பாடும்மீனிற்கு கிடைத்த ப்ரீ கிக்கினை காஸ்ரோன் கோலை நோக்கி உதைந்தார், சாந்தன் ஹெடர் செய்ய கோல்காப்பாளர் அதனை தடுத்தார்.

இரு அணிகளும் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை வீணடிக்க கோல்கள் ஏதுமின்றி முதல் பாதி ஆட்டம் நிறைவிற்கு வந்தது.

 

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே ஹெய்ன்ஸ் பரிமாறிய பந்தினை சாந்தன் கோலினை நோக்கி உதைய கோல்காப்பாளர் அதனைப் பற்றிப்பிடித்தார். 

இரண்டாவது பாதியின் 11 ஆது நிமிடத்தில் பாடும்மீனிற்கு கிடைத்த ப்ரீ கிக்கினை சாந்தன் இடது பக்கத்திற்கு உதைய பந்தினை கோல்காப்பாளர் தடுக்க, ஹெய்ன்ஸ் கோல் கம்பத்திற்கு மேலால் உதைந்து வீணடித்தார்.

இரண்டாவது பாதியின் 26 ஆவது நிமிடத்தில் கீதன் உதைந்த பந்து கோல் கம்பத்தின் விளிம்பில் பட்டு வெளியேறியது. 

றோயல் அணியின் கபில் அடுத்தடுத்து மேற்கொண்ட இரு முயற்சிகளையும் கோல் காப்பாளர் தடுத்தார். 

ஹெய்ன்ஸ் எடுத்துச் சென்ற பந்தினை சன்சஜன் வெளியேற்றினர். 

41 ஆவது நிமிடத்தில் றோயல் அணிக்கு மத்திய கோட்டிற்கு அருகில்  கிடைத்த ப்ரீ கிக்கினை எடிசன் உதைய கோல்காப்பாளர் பாய்ந்து தடுத்தார். 

42 ஆவது நிமிடத்தில் கமில் மேற்கொண்ட கோல் முயற்சியினை கோல்காப்பாளர் கைகளில் பட்டு நழுவிய போதும் மீண்டும் அதனை சேகரித்தார். 

இரண்டாவது பாதியில் இரு இரு அணியினராலும் கோல் முயற்சிகளை சாதகமாக நிறைவு செய்ய முடியாது போக, போட்டி கோல்கள் ஏதுமின்றி நிறைவிற்கு வந்தது.

வெற்றியாளரைத் தீர்மானிக்க தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற நடப்புச் சம்பியன் குருநகர் பாடும்மீன் அணியினர் இம்முறை “வடக்கின் கில்லாடி யார்” பட்டத்தினை தமதாக்குவதுடன், அரியாலை சரஸ்வதியின் கிண்ணத்தினை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் அனுபவ வீரர்களைக் கொண்ட இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (7) எதிர்கொள்ளவுள்ளனர். 

சனிக்கிழமை(6) இடம்பெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில், ஊரெளு றோயல்அணியினை எதிர்த்து கிளிநொச்சி உருத்திரபுரம் அணி மோதவுள்ளது. 

ஆட்டநாயகன் – பிரதீபன் (பாடும்மீன்  வி.க)

 

http://www.thepapare.com/vadakkin-killadi-yaar-2018-second-semi-final-match-report-tamil/

  • கருத்துக்கள உறவுகள்

பாடும்மீன் -யங்ஹென்றிஸ் இறுதியில் நாளை

பதிவேற்றிய காலம்: Oct 10, 2018

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­தின் நூற்­றாண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் வடக்­கின் கில்­லாடி வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரின் இறு­தி­யாட்­டத்­தில் குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து இள­வாலை யங்­ஹென்­றிஸ் விளை­யாட்­டுக் கழக அணி நாளை மோத­வுள்­ளது.

அரி­யாலை கால்­பந்­தாட்­டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் இரவு 7 மணிக்கு இந்த இறு­தி­யாட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.

 

பரி­ச­ளிப்பு நிகழ்­வுக்கு முதன்மை விருந்­தி­ன­ராக யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் என்.வேத­நா­ய­கன், சிறப்பு விருந்­தி­னர் க­ளாக இலங்கை கால்­பந்­தாட்­டச் சமே­ள­னத்­தின் தலை­வர் அனுர டி சில்வா, இலங்கைக் கால்­பந்­தாட்­டச் சமே­ள­னத்­தின் பொதுச் செய­லா­ளர் ஜஸ்­வர் உமர், யாழ்ப்­பாண மாவட்ட கால்­பந்­தாட்ட லீக்­கின் தலை­வர் இ.ஆர்னோல்ட், யாழ்ப்­பாண மாந­கர சபை ஆணை­யா­ளர் இ.த.ஜெய­சீ­லன், யாழ்ப்­பாண பிராந்­திய சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் வர்­ண­ஜெ­ய­சுந்­தர, பொலிஸ் தலை­மைக் காரி­யா­லயப் பரி­சோ­த­கர் மகிந்த சிறி உள்­ளிட்ட பல­ரும் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B9%E0%

 

https://newuthayan.com/story/09/பாடும்மீன்-யங்ஹென்றிஸ்-இறுதியில்-நாளை.html

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் கில்லாடியாக முடிசூடியது பாடும்மீன்

October 11, 2018
Vadakkin Killadi finals

 

Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட “வடக்கின் கில்லாடி யார்?” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி  இன்றைய தினம் (11) அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த மோதலில், நடப்புச் சம்பியன்கள் குருநகர் பாடும் மீன்கள் அணியினை எதிர்த்து தேசிய ரீதியில் அனுபவம் வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய இளவாலை யங் ஹென்றிசியன்ஸ் அணி மோதியிருந்தது.

மைதானம் நிறைந்த இரசிகர்களிற்கு மத்தியில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் யாழின் கில்லாடி யார்? உதைப்பந்தாட்ட தொடரில் தொடர்ச்சியாக இரு முறைகளிலும் கிண்ணம் வென்று நடப்புச் சம்பியன்களாக ஜொலித்துக்கொண்டிருந்த பாடும் மீன் அணியினர், இம்முறை வட மாகாண ரீதியில் இடம்பெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் அணியினை 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று வடக்கின் கில்லாடி பட்டத்தினையும் தமதாக்கியுள்ளனர்.

நடப்பு வருட பிரிவு 2 கால்பந்து சுற்றின் இறுதிப் போட்டியாளர்களான பலமான பாடும் மீன் அணியும் மறுபக்கம், ஹென்றீசியன்ஸ் அணி தேசிய அணி வீரன் யூட் சுமன் மற்றும் மற்றொரு மத்திய கள வீரரான மதுசன் ஆகியோரின்றியே இந்த மொதலில் களம் நுழைந்திருந்தது.

போட்டியின் முதலாவது நிமிடத்தில் பாடும் மீனின் மத்திய களத்திலிருந்து கோல் பரப்பினை நோக்கி உதைந்த பந்தினை ஹென்றீசியன்ஸ் வீரர் கிறிஷாந்த் தடுப்பதற்கு தவற, பந்தினை பெற்றுக்கொண்ட பாடும் மீனின் ஹேய்ன்ஸ் ஹெடர் மூலம் பந்தை கோலாக்க தவறினார்.

மத்திய கோட்டிற்கு அருகில் கிடைத்த ப்ரீ கிக்கினை பிராங்கோ கோலை நோக்கி உதைய பாடும் மீனின் முன்கள வீரர்கள் அதனை கோலாக்கத் தவறினர்.

பாடும் மீன் அணி பந்தினை தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மறு பக்கம் ஹென்றீசியன்ஸ் அணி தமக்கிடையில் சீரான பிணைப்பு இல்லாது மிகவும் மந்தமான ஆட்டத்தினையே வெளிப்படுத்திக்  கொண்டிருந்தது.

ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து ஹென்றீசியன்ஸ் வீரர் தனேஸ் உள்ளுதைந்த பந்து கோல் கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.

பாடும் மீன் அணியின் விசோத் கோலினை நோக்கி பந்தினை உதைந்த போதும், பந்து கம்பத்திற்கு சற்று அகலமாக வெளியேறியது.

30ஆவது நிமிடத்தில்  ஹென்றீசியன்ஸ் அணியின் முன்கள வீரர் மற்றொரு கோல் முயற்சியாக பந்தினை எடுத்துச்செல்ல பாடும் மீனின் கப்டன் அதைத் தடுத்தார்.

ஹென்றீசியன்ஸின் அனுபவ வீரர் ஞானரூபன் வினோத் பாடும் மீனின் கோல் பரப்பினை நோக்கி வேகமாக எடுத்துச் சென்ற பந்தினை, பின் கள வீரர்கள் வெளியேற்றினர். கோணர் கிக்கினை மின்றோன் கோலை நோக்கி உதைய தனேஸ் ஹெடர் செய்த பந்து கோலிற்கு வெளியே சென்றது.

43ஆவது நிமிடத்தில் பாடும் மீனின் ஜெரிங்சன் உதைந்த பந்து நேரடியாக கோல்காப்பாளரின் கைகளில் சரணடைந்தது.

முதல் பாதியாட்டத்தின் மேலதிக நேரத்தில் பாடும்மீனிற்கு கிடைத்த கோணர் கிக்கினை இளம் வீரர் சாந்தன், கோலின் இரண்டாவது கம்பத்தினை நோக்கி உதைய விவேகமாக செயற்பட்ட விசோத் பந்தினை தலையால் கோலிற்குள் செலுத்தி தமது அணியினை முன்னிலைப்படுத்தினார்.

முதலாவது பாதி : பாடும் மீன் வி.க 1 – 0 யங் ஹென்றீசியன்ஸ் வி.க

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் சற்று வேகமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஹென்றீசியன்சிற்கு, இரண்டாவது பாதியின் 3ஆவது நிமிடத்தில் மின்றோன் உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

சில நிமிடங்களில் ஹென்றீசியன்ஸ்  அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை ஞானரூபன் உதைய, பந்து கோல் கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.

போட்டியின் 55ஆவது நிமிடத்தில் பாடும் மீனிற்கு மைதானத்தின் இடது பக்கத்தில் கிடைத்த ப்ரீ கிக்கினை சாந்தன் கோலாக்குவதற்காக மற்றொரு முயற்சியாக வலது பக்கத்தினை நோக்கி உதைய, பந்து துரதிஷ்ட வசமாக வெளியேறியது.

ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் மைதானத்தில் வலது பக்கத்திலிருந்து ஹென்றீசியன்சின் கோல்  கம்பந்தினை நோக்கி அனுப்பிய பந்தினை, விரைந்து செயற்பட்ட சாந்தன் பந்து கிடைக்கப்பெற்ற அதே பக்க மூலைக்கு உதைய, கோல்காப்பாளர் அமல்ராஜ் அதனை பாய்ந்து தடுத்தார்.

66ஆவது நிமிடத்தில் மைதானத்தின் வலது பக்கத்தில் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே இருந்து, கோலினை நோக்கி உதைந்த பந்து மயிரிழையில் கம்பத்திற்குமேலால் சென்றது.

போட்டியின் 76ஆவது நிமிடத்தில் மைதானத்தின் வலது பக்கத்திலிருந்து சாந்தனிற்கு சிறந்த பந்துப்பரிமாற்றம் கிடைக்கப்பெற சாந்தன் அதனை நேர்த்தியாக கோலாக மாற்றினார்.

போட்டி நிறைவை நெருங்கும் தருணமான 89ஆவது நிமிடத்தில் மின்றோன் கோலை நோக்கி பந்தினை இடது பக்கத்தினால் மிக வேகமாக எடுத்துச் செல்ல, பாடும் மீனின் கோல் காப்பாளர் பந்தினை நோக்கி முன் நகர்ந்தார். கோல் காப்பாளரினை ஏமாற்றி பந்தினை கட்டுப்படுத்திய மின்றோன் கம்பத்தின் மற்றைய மூலையினை நோக்கி தட்டி விட பந்து கம்பத்திற்கு அருகாமையினால் வெளியேறியது.

ஹென்றீசியன்சிற்கு கிடைத்த இறுதி வாய்ப்பும் நழுவிப்போக, போட்டி முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திய குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் தொடரில் கோல்கள் எதனையும் விட்டுக்கொடுக்காது, தமக்கான 2 கோல்களை செலுத்தி தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக அரியாலை சரஸ்வதியின் கிண்ணத்தினை தமதாக்கியுள்ளதோடு, இவ்வருடம் “வடக்கின் கில்லாடி” என்ற நாமத்தினையும் தம்வசப்படுத்தியுள்ளனர்.

தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் முதற் பதினொருவருள் பல மாற்றங்கள், வீரர்களின் நிலைகளில் மாற்றங்கள் என ஒழுங்கு படுத்தப்படாத அணியாக போட்டிகளில் மோதியிருந்த யங் ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகம் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை கோலாக்கி இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளனர்.

முழு நேரம் : பாடும் மீன் வி.க 2 – 0 யங் ஹென்றீசியன்ஸ் வி.க

ஆட்டநாயகன் – ரெஜிக்குமார் சாந்தன் (பாடும் மீன் வி.க)

கோல் பெற்றவர்கள்

பாடும் மீன் வி.க – விசோத் 39’, சாந்தன் 76

விருதுகள்

  • மக்கள் மனங்கவர்ந்த வீரன் – கஜகோபன் (றோயல் வி.க)
  • தொடரின் சிறப்பாட்டக்கார் – கீதன் (பாடும் மீன் வி.க)
  • சிறந்த கோல் காப்பாளர் – பிரதீபன் (பாடும் மீன் வி.க)

மூன்றாவது இடத்திற்கான போட்டி

கிளிநொச்சி உருத்திரபுரம் வி.க எதிர் ஊரெளு றோயல் வி.க

கிளிநொச்சி உருத்திரபுரம் அணியினை 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஊரெளு றோயல் அணி மூன்றாவது இடத்தினை தமதாக்கியிருந்து.

கோல் பெற்றவர்கள்

ஊரெளு றோயல் வி.க – எடிசன் பிகுராடோ 41’ P, கபில் 80’, பிரசண்ணா 88’

கிளிநொச்சி உருத்திரபுரம் – ஹரீஸ் 62’ P

 

http://www.thepapare.com/vadakku-killadi-finals/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.