Jump to content

ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்


Recommended Posts

ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்

 

ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்
 

 

 

பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுவது நிச்சயம். அந்த வகையில் ராஜா ரங்குஸ்கி என பெயர் தாங்கி வந்துள்ள படம் ராஜா போல நின்று விளையாடுமா என பார்க்கலாம்.

கதைக்களம்

ஊரில் போலிஸ் இளைஞனாக கதையின் ஹீரோ சிரிஷ். இவருக்கு பெரிதாக குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. வழக்கம் போல தன் காவல் ரோந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நண்பனாக சக போலிஸ் தோழன் கல்லூரி வினோத் மட்டுமே.

இடையில் ஹீரோயின் சாந்தினியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். எழுத்துதுறையில் ஆர்வலராக இருக்கும் இவருக்கென ஒரு தனி பாலிசி. ஒரு நாள் அவர் குடியிருப்பில் பெண் ஒருவர் கொல்லப்படுகிறார். ரோந்து பணிக்காக சென்ற ஹீரோ இதை கண்டு அதிர்ச்சியாகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த கொலைகள். சம்மந்தமில்லாமல் இவர் இக்குற்ற வழக்கில் சிக்க, நடப்பது என்ன? பின்னணியில் இருப்பது யார்? என புரியாத புதிராக நகர்வது தான் ராஜா ரங்குஸ்கி.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ சிரிஷ் மெட்ரோ படத்தை தொடர்ந்து 2 வது படமாக இந்த ஆக்‌ஷன் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். கதையில் இவர் தான் ராஜா. ஒரு சாதாரண போலிஸ் காவலர். காதல் ஒரு பக்கம். பழி மறுபக்கம் என அமைதியற்று அலைகிறார். பொருத்தமான கதையை தான் அவர் தேர்வு செய்திருக்கிறார். அவர் முன்பு நேர்காணல்களில் சொன்னது போல இப்படம் பலருக்கும் பிடிக்கும்.

ஹீரோயின் சாந்தினி பல படங்களில் நடித்த அனுபவத்தை காட்டியுள்ளார். ரங்குஸ்கியாக அவர் கேரக்டரில் இருந்தாலும் ஹீரோவுக்கு நிகரான இடம் இங்கே அவருக்கு என சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு ஹீரோயினை மையப்படுத்திய கதை போல என்றால் மிகையல்ல.

இயக்குனர் தரணி தரண் ஜாக்சன் துரை படத்தை கொடுத்து மற்ற படங்களுக்கு மத்தியில் இடம் பிடித்தது போல இப்படத்திலும் அவர் பிடித்து வைத்திருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நம் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார்.

கல்லூரி வினோத் இப்படத்தில் ஒரு சப்போட்டிங் ரோல் என்றாலும் சில இடங்கள் அடிக்கும் காமெடிகள் படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் புத்துணர்வு கொடுக்கிறார். வாழ்த்துக்கள்.

சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்திற்குள் வரும்படியான காட்சி நகர்வுகளை பார்க்கும் போது பல படங்களை பார்த்து பழகியவர்களுக்கு கொஞ்சம் Uneasy போல தான். ஆனாலும் சம்திங் மிஸ்ஸிங் என சொல்லவைக்கும். அதனால் ஒளிப்பதிவாளருக்கும் இதில் பங்குண்டு.

இசைக்கு யுவன். நாம் சொல்லவா வேண்டும். இந்த படத்திற்கு அவர் பெரிதளவில் சம்பளம் வாங்கவில்லை என்றாலும் தனக்காக இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்து வைத்துள்ளதோடு, அவர்களின் எதிர்பார்ப்பை இங்கேயும் நிறைவேற்றியுள்ளார். சிம்பு இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதுமட்டுமல்ல. படத்தில் நாம் எதிர்பாராத விசயங்களும் உண்டு. அதை நாங்கள் இங்கே சொல்லப்போவதில்லை.

கிளாப்ஸ்

படத்தில் கதை நகர்வு சலிப்படையாமல் நம்மை இழுத்து செல்வது தான்.

இயல்பான காமெடிகள் காமெடி நடிகர்கள் இல்லை என்ற குறையை மூடிவிட்டது.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு பக்க பலம்.

எதிர்பாராத கிளைமாக்ஸ் Interesting Segment.

பல்ப்ஸ்

ஹீரோ இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன்களை கூட்டியிருக்கலாம்.

பாடல்கள் மனதில் இடம் பெறுவது கொஞ்சம் கேள்வியாக தான் இருக்கிறது.

 

மொத்தத்தில் ராஜா ரங்குஸ்கி ஒரு புதிரான விளையாட்டு. தியேட்டரில் பாருங்கள் மக்களே...

https://www.cineulagam.com/films/05/100964?ref=reviews-feed

Link to post
Share on other sites

ஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்..! - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்

 
 

'ராஜா ரங்குஸ்கி' திரை விமர்சனம்

ஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்..! - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்
 

வில்லா ஒன்றில் நடக்கும் கொலை. அதை செய்தது யார், ஏன் எனத் த்ரில்லர் கதை சொல்கிறது, 'ராஜா ரங்குஸ்கி'.

ராஜா ரங்குஸ்கி

போலீஸ் கான்ஸ்டபிள் ராஜா. அவருக்கு எழுத்தாளர் ரங்குஸ்கி மீது காதல். ஒரு விஷயத்தை செய்யச் சொன்னால் செய்யமாட்டார்; செய்யாதே என்றால், செய்வார். இது ரங்குஸ்கியின் டிசைன். இந்த டிசைனைப் பயன்படுத்தி ஸ்கெட்ச் போட்டு, வேறொருவரைப் போல் ரங்குஸ்கியிடம் போன் செய்து, `ராஜாவைக் காதலிக்காதே' என்கிறார். டிசைன்படி ரங்குஸ்கி, ராஜாவைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். ராஜா `சாதித்துவிட்டோம்' என சிம்மை உடைத்துப்போட்டு துள்ளிக் குதிக்கும் வேளையில்தான், சோதிக்கிறது ஒரு போன் கால். ராஜா போட்ட ஸ்கெட்ச் உண்மையாகிறது. வேறு யாரோ ஒருவன் ராஜா செய்ததுபோலவே ரங்குஸ்கியிடம் போனில் பேச ஆரம்பிக்கிறான். ரங்குஸ்கியைக் கொல்லப்போவதாக ராஜாவுக்கும் போன் செய்து மிரட்டுகிறான். இதே நேரத்தில் ரங்குஸ்கியின் பக்கத்து வில்லாவில் வசிக்கும் மரியா என்பவர் கொலை செய்யப்படுகிறார். போனில் பேசுவது யார், மரியாவைக் கொன்றது யார், இருவரும் ஒருவன்தானா, வேறு வேறு ஆள்களா, கொலைக்கான காரணங்கள் என்ன... ஒவ்வொரு முடிச்சையும் ராஜா அவிழ்ப்பதாக நகர்கிறது திரைக்கதை.

 

 

கதையின் நாயகன் ராஜாவாக `மெட்ரோ' சிரீஷ். இந்தப் படத்தில் ஏனோ நடிக்கவே இல்லை. முகத்தில் வாய் மட்டும்தான் வேலை செய்கிறது, மற்றதெல்லாம் அப்படியே இருக்கிறது. நாமும் ஒரு போனைப் போட்டு, `கொஞ்சம் நடிங்க பாஸ்' என மிரட்டிவிடலாமா என யோசிக்க வைத்துவிடுகிறார். நாயகி ரங்குஸ்கியாக சாந்தினி. வலுவான கதாபாத்திரம், அதில் நன்றாகவும் நடித்து படத்திற்கு வலு சேர்க்கிறார். ராஜாவின் நண்பன் பாஸ்கராக வரும் `கல்லூரி' வினோத், காமெடி கவுன்டர்களில் கலக்கியிருக்கிறார். வாழ்த்துகள் ப்ரோ! சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக நடித்திருக்கும் ஜெயக்குமார் ஜானகிராமனும், இன்ஸ்பெக்டராக நடித்திருப்பவரும் நல்ல தேர்வுகள். கச்சிதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். கொல்லப்படும் மரியாவாக அனுபமா, வருவது சில நிமிடங்கள்தான் என்றாலும், நன்றாக மனதில் பதிகிறார். இப்படி மற்ற நடிகர்கள் எல்லோரும் நன்றாக நடித்து, படத்தின் ராஜபாட் ராஜாவிடமிருந்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

 

ராஜா ரங்குஸ்கி

தமிழ் சினிமா எத்தனையோ `வூ டன் இட்' திரைப்படங்களைப் பார்த்துவிட்டது. பொதுவாக, த்ரில்லர் படங்களைப் பார்க்கும்போது சுற்றியுள்ள கதாபாத்திரங்களின் மீது நமக்கு சந்தேகம் வரும். ஆனால், இந்தப் படத்தில் யார் மேலும் நமக்கு சந்தேகம் எழவில்லை. காரணம், அழுத்தமில்லாத பலவீனமான பாத்திர வடிவமைப்புகள். உண்மையிலேயே இறுதிவரை கொலையாளி யார் எனக் கொஞ்சம்கூட கணித்திட முடியாத அளவுக்கு திரைக்கதை அமைத்ததில் கவனிக்க வைக்கிறார், இயக்குநர் தரணிதரன். ஆனால், படம் முடிந்த பின்னர், இன்னுமொரு த்ரில்லர் படமாகத்தான் `ராஜா ரங்குஸ்கி' மனதில் பதிகிறது. அதேபோல், துப்புத் துலக்கும் காட்சிகளில் யதார்த்தமும் புத்திசாலித்தனமும் ஒருசில இடங்களில்தான் தெரிகிறது. கொலையாளியைக் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கும்போது ஏற்படும் ஒருவித ஆர்வம் மொத்தமாகவே மிஸ்ஸிங். புதுமையான கதைக்களம், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள். அதை, இன்னும் சிக்கலான சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்திருந்தால், ராஜாவும் ரங்குஸ்கியும் தனித்துத் தெரிந்திருப்பார்கள்.

ராஜா ரங்குஸ்கி

படம், டெக்னிக்கல் ஏரியாவில் தம்ஸ் அப் காட்டுகிறது. பின்னணி இசையில் கெத்து காட்டி, பாடல்கள் வெத்து வேட்டு கொளுத்தியிருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா. ராஜா - ரங்குஸ்கி லவ் தீம் செம! ஒளிப்பதிவாளர் டி.கே.யுவா வண்ணங்களோடு விளையாடியிருக்கிறார். பொக்கெ ஷாட்கள் தாறுமாறு. அருமையான விஷுவல் அவுட்புட்டாக வந்திருக்கிறது. ஷஃபிக் முகமது அலியின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது. 

நம்மை சீட்டின் நுனிக்கும் கொண்டுவராத, சீட்டை விட்டும் எழுந்திருக்கவும் வைக்காத ஒரு த்ரில்லர், இந்த `ராஜா ரங்குஸ்கி'.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/137730-raja-ranguski-review.html

Link to post
Share on other sites
  • 3 weeks later...

இன்று வெள்ளிக்கிழமை வார விடுமுறை..

சோம்பலுடன், சாம்சங் டிவி அப்ளிகேசனான டென்ட் கொட்டா (https://www.tentkotta.com/) தளத்தில் தேடிப் பார்த்ததில் புதிதாக  ராஜ ரங்குஸ்கி, 'இமைக்கா நொடிகள்' இரண்டும் வெளிவந்திருந்தன.

இரண்டுமே மிக அருமையான திரில்லர் படங்கள்தான்..:)

 

ராஜ ரங்குஸ்கி படமாக்கியதில், எளிமை இருந்தாலும் கதைக்களமும், இறுதியில் யார் இத்தனை கொலைகளை செய்தது என புதிர் விலகும்போதும் சற்று திகைப்புதான்.

கண்ட 'ஆமைவேக' அரைத்த மாவுகளை ஒதுக்கிவிட்டு, விறுவிறுப்பு வேண்டுவோர் இந்த இரு படங்களையும் அவசியம் பார்க்கலாம்..! 

 

.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.