Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகமெங்கும் இன்று தியாகி திலீபன் நினைவேந்தல்!

Featured Replies

தமிழர் தாயகமெங்கும் இன்று தியாகி திலீபன் நினைவேந்தல்!

 

41925152_10217931084932062_2135480743416

தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

http://www.newsuthanthiran.com/2018/09/26/தமிழர்-தாயகமெங்கும்-இன்ற/

  • தொடங்கியவர்

மறக்க முடியுமா இன்றைய நாளை!!

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நாள்: 26-9-1987

1987-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் உயிரி நீத்தார்.

அவரது ஐந்து கோரிக்கைகள்தான் என்ன?

1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ” புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறப்பதை உடனே நிறுத்தவேண்டும்.
5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று,

தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள ராணுவ, பொலிஸ்நிலையங்கள் மூடப்படவேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை உண்ணாவிரத மேடையில் பிரசாத் படிக்க, இதே கோரிக்கைகளை 13-08-1987 அன்று இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி 24 மணிநேரம் ஆன நிலையில், தகுந்த தீர்வு கிடைக்காத காரணத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் பிரதேசப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ( 13-08-1987) தீர்மானிக்கப்பட்டது.

பிரபாகரனும் நிலைமையை விளக்கி தீட்சித்துக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலையொட்டி உண்ணாவிரத மேடை அமைக்கப்பட்டிருந்தது.

தாயற்ற திலீபனுக்கு நடுங்கும் கரத்துடன் வந்த ஒரு தாய், திருநீற்றைப் பூசினார். மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார்.

அதில் அமர்ந்தவர் 265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் இதே 26-09-(1987) காலை 10. 48 மணிக்குப் பிரிந்தது. .

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நாள்: 26-9-1987

திலீபன் எனும் பார்த்திபன் ராசையா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர்.

இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்திலும் உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தவர்.

இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம். 1987 செப்ரெம்பர் 15 ஆ-ம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

1987-ம் ஆண்டு செப்ரெம்பர் 26 ஆ-ம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் உயிர் நீத்தார்.

https://newuthayan.com/story/09/மறக்க-முடியுமா-இன்றைய-நாளை.html

  • தொடங்கியவர்

திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்து கிளிநொச்சியில் உண்ணாவிரதம்

 

thileeban-memorial-1-720x450.jpg

தியாக தீபம் திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்னறில் அமைக்கப்பட்ட விசேட பந்தலில் இன்று (புதன்கிழமை) காலை முதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திலீபன் உயிர்நீத்த நேரமான காலை 10.50 வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, அதன் பின்னர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, பசுபதிப்பிள்ளை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

thileeban-memorial-3.jpg

thileeban-memorial-2.jpg

thileeban-memorial-4.jpg

http://athavannews.com/திலீபனின்-தியாகத்தை-நினை/

  • தொடங்கியவர்

தியாக தீபத்துக்கு அஞ்சலி ஆரம்பம்!!

 

தியாக தீபம் தீலிபன் உணவு ஒறுப்பில் ஈடுபட்டு இறுதித் துயில் கொண்ட நல்லூர் நினைவிடத்தில் சற்றுமுன்னர் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

42631222_2142689752664561_22595905923024

https://newuthayan.com/story/10/தியாக-தீபத்துக்கு-அஞ்சலி-ஆரம்பம்.html

தீலீபனின் நினைவிடத்துக்கு- பறவைக் காவடியுடன் இருவர்!!

 

தியாகி தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்று நேரத்தில் யாழ்ப்பாணம்  நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் ஆரம்பிக்கடவுள்ள நிலையில் இருவர் பறைவைக் காவடியுடன் வருகை தந்துள்ளனர்.

42472031_10209750938770359_4305158158176

https://newuthayan.com/story/10/தீலீபனின்-நினைவிடத்துக்கு-பறவைக்-காவடியுடன்-இருவர்.html

42677088_2246272922109949_3158909112897542619663_2246272848776623_3758439745160442608034_2246272872109954_7287519251642942586339_2246273278776580_2283342500183642580250_2246273208776587_4700408532250342559782_2246273032109938_7611721945993742559782_2246273032109938_7611721945993742545096_2246273175443257_5788089664019642677088_2246272922109949_31589091128975

  • தொடங்கியவர்

தியாகி திலீபனுக்கு நல்லூரில் உறவுகள் கூடி அஞ்சலி!!

 

தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

42628352_1345692932233709_6205525850574542593385_1345693228900346_7208782407934142576595_1345693138900355_6232117930134342572374_1345693428900326_4733514286196842556406_1345692978900371_7659521693592842530776_1345693532233649_5735472393338442521677_1345693318900337_1636606638284642634003_1345693075567028_62315505821344

https://newuthayan.com/story/11/தியாகி-திலீபனுக்கு-நல்லூரில்-உறவுகள்-கூடி-அஞ்சலி.html

  • தொடங்கியவர்

தியாகியின் நினைவேந்தல் காவடியுடன் தமிழர்தாயகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

 

 
 

தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடமான நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக மேற்கொண்டுவருகின்றனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

அதேவேளை, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை திலீபனின் நினைவு நாளையொட்டி இன்று கைதடியிலிருந்து இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்தவாறு நல்லூரிலுள்ள நினைவேந்தல் அமைந்துள்ள இடத்தில் நிறைவு செய்துள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

அதனையடுத்து இந்நினைவேந்தல் நிகழ்வில் யாழ் மேயர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு திலீபன் உயிர்நீத்த அதே நேரத்தில் ஈகைச்சுடரேற்றி உணர்வ பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/106688?ref=bre-news

  • தொடங்கியவர்

 

தீலீபனின் நினைவிடத்துக்கு பறவைக் காவடியுடன் இருவர்!!

 

நல்லூரின் தியாகி தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல்!

  • தொடங்கியவர்

திலீபனின் நினைவுதினம் மன்னாரிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

 

DSC_0043-720x450.jpg

‘தியாக தீபம் திலீபனின்’ 31ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு மன்னாரில் இன்று (புதன்கிழமை) இரு இடங்களில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், காலை 10.48 மணியளவில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது தியாக தீபம் திலிபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் மற்றும் மத தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் தியாக தீபம் திலிபனின் 31ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

DSC_0064-428x285.jpgIMG_0022-428x284.jpgIMG_0164-428x285.jpg

http://athavannews.com/திலீபனின்-நினைவுதினம்-மன/

  • தொடங்கியவர்

பெரும் எழுச்சியுடன் -திலீபனுக்கு நல்லூரில் நினைவேந்தல்!!

 

தியாக தீபம் தீலீபனுக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று காலை 10.48 தொடக்கம் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மஞ்சள் மற்றும் சிவப்பு நிறக் கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்ட நினைவிடத்தில் திலீபனின் எழுச்சிப் பாடல்கள் ஒலிக்கப்பட்டு, பெரும் எழுச்சியுடன் நிகழ்வுகள் நடைபெற்றன.

படங்கள்- தர்சன்

 

IMG_94601.jpgIMG_94621.jpgIMG_94631.jpgIMG_94641.jpgIMG_94671.jpgIMG_94681.jpgIMG_9472.jpgIMG_9482.jpgIMG_9492.jpgIMG_9494.jpgIMG_9502.jpgIMG_9504.jpgIMG_9512.jpgIMG_9514.jpgIMG_9529.jpgIMG_9538.jpgIMG_9546.jpgIMG_9555.jpgIMG_9558.jpgIMG_9559.jpgIMG_9561.jpgIMG_9563.jpgIMG_9573.jpgIMG_9582.jpgIMG_9587.jpgIMG_9589.jpgIMG_9590.jpgIMG_9592.jpgIMG_9597.jpgIMG_9602.jpgIMG_9605.jpgIMG_9608.jpgIMG_9612.jpgIMG_9614.jpgIMG_9621.jpgIMG_9622.jpgIMG_9625.jpgIMG_9627.jpgIMG_9630.jpgIMG_9635.jpgIMG_9640.jpgIMG_9641.jpgIMG_9642.jpgIMG_9643.jpgIMG_9648.jpgIMG_9649.jpgIMG_9665.jpgIMG_9673.jpgIMG_9680.jpgIMG_9685.jpgIMG_9686.jpgIMG_9687.jpgIMG_9706.jpgIMG_9709.jpgIMG_9726.jpg

https://newuthayan.com/story/12/பெரும்-எழுச்சியுடன்-திலீபனுக்கு-நல்லூரில்-நினைவேந்தல்.html

  • தொடங்கியவர்

யாழ்.பல்கைலக்கழகத்தில்-திலீபனுக்கு நினைவேந்தல்!!

 

 

தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பணம் பல்கலைக்கழகத்தில் உணர்வு பூர்வமாக க் கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் கி.கிருஸ்ணமீனன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் காலை 10.48 க்குப் பல்கலைக்கழகப் பதில் துணைவேந்தரும், விஞ்ஞான பீடாதிபதியுமான கலாநிதி பிரின்ஸ் ஜெயதேவன் பொதுச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர். விரிவுரையாளர்கள், மாணவர்களின் நினைவுரைகள், தியாகி திலீபனின் அகிம்சைப் போராட்ட வரலூற்றை விளக்கும் காணொலிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

42730963_10217457549217019_661231535866342645894_10217457550537052_891126803344842587262_10217457548296996_244257526876642580241_10217457546936962_258688163013142576297_10217457548176993_732181197134142566733_10217457549977038_824721501373542558950_10217457548537002_266200375635042547300_10217457546856960_486880516331542539909_10217457546616954_854825327871742520865_10217457546296946_710352697155542507166_10217457549777033_5635815713118

 

https://newuthayan.com/story/13/யாழ்-பல்கைலக்கழகத்தில்-திலீபனுக்கு-நினைவேந்தல்.html

 

வேலணையில் தியாக தீபத்துக்கு அஞ்சலி!!

 

தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் தீவகம் வேலணை வங்களாவடிச்சந்தியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் , முன்னாள் போராளிகளின் பெற்றோர், தமிழ் தேசிய உணர்வாளர்கள் , பொதுமக்கள், இளைஞர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

20180926_104840.jpg20180926_104834.jpg20180926_104812.jpg20180926_093929.jpg

 

https://newuthayan.com/story/13/வேலணையில்-தியாக-தீபத்துக்கு-அஞ்சலி.html

 

தியாகி திலீபனுக்கு பருத்தித்துறையில் அஞ்சலி!!

 

தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபி முன்பதாக இன்று நடைபெற்றது.

பருத்தித்துறை மருத சிவன் கோவிலடி வளாகத்தில் போர் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி முன்பதாக தியாகி திலீபனின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மாவீரன் ஒருவரின் தாயார் ஈகைச் சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

42573025_2449189418455333_1690236361606442511344_2449189395122002_88815156997725

https://newuthayan.com/story/12/தியாகி-திலீபனுக்கு-பருத்தித்துறையில்-அஞ்சலி.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.