Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் கொழும்பின் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்பதனை நான் கேள்விப்படவில்லை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கொழும்பின் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்பதனை நான் கேள்விப்படவில்லை..

September 29, 2018

gotabaya-rajapaksa.jpg?resize=650%2C366

கொழும்பின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்பதனை தான் கேள்விப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் கடைசி இரண்டு வாரங்களில் விடுதலைப்புலிகள் சென்னையிலிருந்தோ அல்லது வேறு ஏதோவொரு காட்டுப்பகுதியில் இருந்தோ கொழும்பின் மீது விமானதாக்குதலை மேற்கொண்டு கொழும்பை அழிக்க திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியுயோர்க்கில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய தெரிவித்து கோத்தபாய, இது தனக்கும் பாதுகாப்பு தரப்பிற்கும் இது புதிய செய்தி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இறுதி யுத்த காலப்பகுதியில் தான் இலங்கையிலேயே இருந்ததாகவும் தான் வேறு எங்கும் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றங்களில் இருந்து நாட்டை விடுவிக்கவேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பு எனம் குறிப்பிட்ட அவர் ஜனாதிபதியின் கருத்துக்களை வைத்து பார்க்கும்போது வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கு தெரியாமலே ஐநா தீர்மானத்திற்கு இணை அனுசரனையை வழங்கும் முடிவை எடுத்துள்ளார் என்பது நிச்சயமாகின்றது எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தத்தை வழிநடத்தியது தானே என ஜனாதிபதி தெரிவிப்பதால் அவரிற்கு என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கும் இதன் காரணமாக ஐநாவை உடனடியாக இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சரை இந்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுமாறு சிறிசேன உத்தரவிடவேண்டும் எனவும் தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச யுத்த குற்றங்கள் என எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/97620/

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டத்துக்கு மருந்து அடிக்கிற விமானம் மூலம் ஒன்றும்  செய்ய முடியாது என்ரவையல் இப்ப ஐநா குற்றசாட்டில் தப்ப புதுசு புதுசா கதை விடுனம் . விட்டால் புலி அணுகுண்டு செய்ய வெளிகிட்டவை அதை தாங்கள் தடுத்துவிட்டம் என்றும் கதை விடுவினம் .

  • கருத்துக்கள உறவுகள்

இவையளோட பேசணுமின்னா  நம்ம தேசியதலைவர் சொன்ன மொழியிலைதான் பேசணும் அந்த மொழி மட்டும்தான் இவங்களுக்கு புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für kothapaya rajapaksa with mahintha blood   Ãhnliches Foto  Ãhnliches Foto

அப்ப... சட்டையில்,  இருந்த... சிவப்பு  நிறம்  எல்லாம்....  
நம்மட... குசினிக்குள் இருந்த,  
செத்தல் மிளகாய் சம்பலா....  கோபால். ?

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.