Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்பெயின் - இளங்கோ-டிசே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் - 01

இளங்கோ-டிசே

ரோப்பாவில் மூன்று நாடுகளுக்குக் கட்டாயம் போகவேண்டும் என்ற ஒரு கனவு எனக்குள் எப்போதும் இருந்துகொண்டிருந்ததுபிரான்ஸும்இத்தாலியும்ஸ்பெயினும் என்னை எப்போதும்அவற்றின் கலை இலக்கியங்களினூடு ஈர்த்துக்கொண்டிருக்கின்ற நாடுகள்கூடுதலாக போர்த்துக்கல்லையும் சேர்க்கலாம்சென்ற வருடம் இத்தாலியையும்அதற்கு முதல்வருடம் பிரான்ஸையும் பார்த்திருந்தேன்இந்த வருடம் ஸ்பெயினுக்கானது.

 

La Sagarida Familla (Spain)

 

ஸ்பெயினை அடையாளப்படுத்தும் முக்கியமான ஒரு கட்டடக்கலையாக La Sagarida Familla இருக்கின்றது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால் 1880களில் கட்டத் தொடங்கிய இந்தத் தேவாலயமானது இன்னமும் நிறைவு செய்யப்படாது இப்போதும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதாகும். உலகில் கட்டிமுடிக்கப்படாத ஒரு தேவாலயம் இந்தளவிற்கு புகழ்பெற்றதாக இருக்கின்றதா என்பது அரிதாகத்தான் இருக்கும்.

 

33.jpg

இது அந்தோனியோ கெளடியின் (Anthony Gaudi) மிகச்சிறந்த வடிவமைப்பில் உருவாகிய ஒரு தேவாலயமானது. மத்தியகால கோதிக் (Gothic) கட்டட வடிவத்தை உடையது. கோதிக் கட்டட அமைப்பானது வெளியில் பார்க்கும்போது icicles போன்ற வடிவத்துடன் வானை நோக்கும் கூரானவையாகவும்உள்ளே போய்ப்பார்க்கும்போது மாடவிதானங்கள் மிகுந்த உயரத்திலும் இருக்கும். இதன் அடிப்படையே இப்படி வானை நோக்கி மானிடர் நீண்டு சென்று கடவுளை அடைந்துவிடுவது என்பதாகும். அத்துடன் உள்ளே நாம் நின்று பார்க்கும்போது நம்மை அதன் வடிவமைப்பின் பிரமாண்டத்தில் மிகச்சிறியவர்களாக (கடவுளின் முன்) உணரச்செய்வதுமாகும்.

 

இதில் வானை நோக்கி நீளும் பத்து கூம்புகள் (இன்னும் சில கட்டிமுடிக்கப்படவில்லை) ஒவ்வொன்றும் கடவுள் அருளிய பத்துக்கட்டளைகளை (10 commandments) அடையாளப்படுத்துபவை. ஒவ்வொன்றிலும் அவை குறித்தான கதைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

 

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நீளும் இந்தக் கட்டட நிர்மாணம்அந்தோனி கெளடி இறந்த நூற்றாண்டான 2026ல் நிறைவு செய்யப்படுமென கூறப்படுகின்றது.

 

 

Flamingo Dance

 

44.jpg

ஃப்ளமிங்கோ நடனம் இன்று ஸ்பெயினின் அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது. பாடல்ஆடல்கிற்றார் மற்றும் கைதட்டல் வழி இசையை மீட்டல் எனப் பல்வேறு கூறுகளை இந்த நடனம் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இன்று ஃப்ளமிங்கோ உலகின் பல்வேறு பகுதிகளில் பிரபல்யமாக இருந்தாலும்இது ஜிப்ஸிகளின் ஊடாக வந்துசேர்ந்த ஒரு நடனமாகும். ஸ்பெயினுக்குள்ளும்இந்தியாஈரான்எகிப்தினூடாக சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்துசேர்ந்த நாடோடிகளால் அந்தலூசியாப் பகுதிகளில் இது கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கின்றது. தொடக்கத்தில் தெருக்களில் நாடோடிகளால் ஆடப்பட்ட ஆட்டம்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பெயினின் கஃபேகளுக்குள்ளும்உள்ளக அரங்குகளுக்குள்ளும் நுழைந்திருக்கின்றது.

 

ஸ்பெயினில் ஃப்ளமிங்கோ வந்து வளர்ந்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றனர். முதலில் நாடோடிகளால் கொண்டுவரப்பட்டுபின்னர் ரொமாண்டிசக் காலத்தில் வளர்க்கப்பட்டுபிராங்கோவின் ஆட்சியில் ஸ்பெயினின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றப்பட்டதென்று கூறுகின்றார்கள். ஃபிராங்கோ தன் சர்வாதிகார ஆட்சியின்போதுஸ்பெயினுக்குள் உல்லாசப்பயணிகளை வரவழைப்பதற்காகவும்தனது கொள்கைப் பிரச்சாரங்களைச் செய்யவும் ஃப்ளமிங்கோவைப் பாவித்திருக்கின்றார். ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி முடிகின்றபோதுஃப்ளமிங்கோ தனக்கான ஓர் உயரிய இடத்தை ஸ்பெயினில் அடைந்துவிட்டிருக்கின்றது.

 

11.jpg

ஃப்ளமிங்கோ நடனத்தைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும்இதற்கெனத் தனித்துவமாக ஆடப்படும் அரங்கிற்குச் சென்று பார்த்தது இதுதான் முதற்தடவை. மிகச்சிறிய அரங்கு. முதல்வரிசையில் போய் அமர்ந்திருந்தேன். மெல்லிய இருளில், melancholyயான இசையில் ஃப்ளமிங்கோ இப்படி ஒரு உருக்கமானதும், eroticம் ஆன ஒரு நடனமாகவும் இருக்குமென எதிர்ப்பார்த்திருக்கவே இல்லை. வேறு பல்வேறுவகையான நடனங்களைப் பார்த்திருந்தாலும்அவற்றில் eroticஆட்டமுறையால் மட்டுமில்லைஆடை முறைகளாலும் கொண்டுவந்திருப்பர். இதில் அப்படி எந்தவகையான 'கவர்ச்சிகரமானஆடை உடுத்தல்களும் இல்லாதுஆட்ட முறையால் கொண்டுவந்தது வியப்பாக இருந்தது. இசை வாத்தியங்களைக் கூட அப்படிப் பெரிதாகப் பாவிக்கவில்லை. ஆனால் பாடலும்நடனமும் எங்கள் நரம்புகளுக்குள் ஊடுருவியபடி இருந்தது.

 

நான் ஃப்ளமிங்கோ நடனத்தைப் பார்த்தது பார்சிலோனாவின் பிரபல்யம் வாய்ந்தLos Tarantos என்கின்ற ஆடல் அரங்கில். இதே பெயரிலேயே பிரபல்யமான ஒரு திரைப்படம் ஃப்ளாமிங்கோ நடனத்தை அடிப்படையாகக் கொண்டு 1960களில் எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆட்டங்களைப் பார்த்த நீட்சியில் ஒரு சிறு ஆவணப்படத்தைப் பிறகு பார்த்தேன். அதில் ஃப்ளமிங்கோவின் இந்திய அடிவேர் தேடிவரும் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கும் ஒப்பாரிப்பாடல்களில் அதன் சில கூறுகள் இருக்கின்றதென்று கூறுகின்றார். அதில் சின்னப்பொண்ணு தமிழ் ஒப்பாரிப்பாடலொன்றை உருக்கமாகப் பாடுகின்றார். 

 

ஸ்பெயினில் ஃப்ளமிங்கோவையும்கேரளாவில் கதகளியையும்இன்னபிற இடங்களில் வேறுவகை நடனங்களையும் பார்க்கும்போதெல்லாம்நாமுந்தான் எத்தகைய அற்புதகலைகளையும்அருமையான கலைஞர்களையும் கொண்டிருக்கின்றோம்ஆனால் அதை மதிக்கவோஉலகின் பிற கலைகளுக்கு நின்று நிகராக நின்று நாம் சளைத்தவர்களில்லை என்று செப்பி எடுத்துச்செல்லவுந்தான்நம் சமூகத்தில் எந்தக்குரல்களும்உரிய அரசுக்களும் இல்லையென்ற சலிப்புத்தான் மேலிடுகின்றது.

 

http://djthamilan.blogspot.com/2018/09/01.html?m=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் - 02

Plaza de Sant Felip
 

11.jpg

இந்தப் பிளாஸாவையும்இதனோடிருக்கும் தேவலாயத்தையும் பல்வேறு திரைப்படங்களில் நாங்கள் பார்த்திருப்போம். முக்கியமாக எனக்குப் பிடித்த ‘Vicky Christina Barcelona’ மற்றும் ‘Perfume’ல் எளிதில் அவதானித்திருக்க முடியும். Vicky Christina Barcelonaவில்அந்தோனியோ விக்கியோடும்கிறிஸ்டீனாவோடும் சேர்ந்து உணவருந்தும்போதுவிக்கியின் கால்களைத் தடவி தவறான சமிக்ஞையைக் கொடுக்கும் காட்சி உங்களுக்கு நினைவில் வரக்கூடும். அது இந்த இடத்திலேயே படமாக்கப்பட்டிருக்கின்றது.

22.jpg

பின்னாட்களில் திரைப்படங்களினால் பிரபல்யம் வாய்ந்ததாக இந்த இடம் ஆகிவிட்டாலும் இதற்குள் ஒரு சோகமான வரலாறு இருக்கின்றது. ஸ்பெயினில் சர்வாதிகாரி பிரான்ஸிக்கோ ஃபிராங்கோவிற்கு எதிராக உள்நாட்டு யுத்தம் (1936-1939) நடைபெறுகின்றது. பார்சிலோனா உறுதியாக பிராங்கோவிற்கு எதிராகப் போராடியபோதுமுற்றுகையை உடைக்க பிராங்கோ விமானத்தாக்குதல் நடத்துகின்றார். இந்தப் பிளாஸாவில் இரண்டு குண்டுகள் விழுகின்றன. முதல் குண்டில் இந்தத் தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்த மக்களில் 30 பேரும்பிறகு 12 பேரும் கொல்லப்படுகின்றனர். இதில் 20 பேரளவில் சிறுவர்களாக இருந்ததனர் என்பது பெருஞ்சோகம். இத்தாக்குதல் நிகழ்ந்த சேதத்தை இப்போதும் மறக்கவிடாது நினைவூட்டியபடி பாதிக்கப்பட்ட சுவர் பாதுகாக்கப்படுகின்றது.

 

பார்சிலோனா பல்வேறு விடயங்களுக்கு பிரபல்யம்வாய்ந்தெனினும்இன்றும் அதன் பெரும்பகுதியாக அரசவிழ்ப்பாளர்கள் (anarchists) இருக்கின்றார்கள் என்றும்அதற்கென தனியே ஒரு walking Tour இருக்கின்றதென எங்களுக்கு இந்த இடத்தின் விபரங்களைச் சொல்லிக்கொண்டிருந்த சுற்றுலா வழிகாட்டி கூறியிருந்தார்.

 

33.jpg

இந்தச் சேதமடைந்த சுவருக்கு இன்னொரு கதையும் சொல்லப்படுகின்றது. ஃபிராங்கோவிற்கு எதிராகப் போராடிய அரசவிழ்ப்பாளர்கள்பலரை இதேயிடத்தில் சுட்டுக்கொன்ற பிராங்கோ அரசுஅதை மூடிமறைக்கவே விமானக்குண்டுத்தாக்குதலை நடத்தியது என்றும் சொல்கின்றார்கள். எதுவாயிருந்தாலும்இலங்கையைப் போலவே தனது சொந்த மக்கள் மீது குண்டுத்தாக்குதலை நிகழ்த்திய ஒரு கொடுங்கோல் அரசுதான் ஃபிராங்கோவினுடையது என்பதும்பிறநாடுகள் பல 2ம் உலக மகாயுத்தத்தோடு ஜனநாயக ஆட்சியிற்கு வந்தபோதும்ஸ்பெயின் ஃபிராங்கோ மரணமாகிய 1975ம் ஆண்டுவரை சர்வாதிகார ஆட்சியிற்குள் இருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

 

 

Churros

 

ஸ்பெயின் போனால் churros சாப்பிடாமல் வந்தால் 'சாபம்கிடைக்குமென்று சாப்பாட்டுப் பிரியர்கள் கூறுகின்றார்கள். அதுவும் Churros அதனோடு பிரத்தியேகமாய்த் தரும் சொக்கிலேட்டிற்குள் அமிழ்த்தி சாப்பிட்டால் அமிர்தமாக இருக்குமாம். 

 

44.jpg

இப்படி ஸ்பெயினில் Churros ஐச் சாப்பிட்ட ஆர்வத்தில்இன்னொரு நாட்டில் இருந்த ஆஜெண்டீனா கடையில் Churros வாங்கினால்அவர்கள் சீனியை மட்டும் மேலே தூவிவிட்டுத் தந்திருந்தார்கள். எனக்கென்னவோ அது எங்களின் வாய்ப்பனின் ருசி போல இருந்தது. வாய்ப்பனில் இருக்கும் வாழைப்பழம் மட்டும் அதில் 'மிஸ்ஸிங்'காக இருந்தது. ஆக கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் ஸ்பெயினிற்குப் போய்ஸ்பெயின் பெண்களின் கைகளிலிருந்து Churros வாங்கிச் சுவைத்தால் மட்டுமே அது Churros ஆகும்.

 

 

La Rambla

 

“The happiest street in the world, the street where the four seasons of the year live together at the same time, the only street on Earth that I wish would never end, rich in sounds, abundant of breezes, beautiful of meetings, ancient of blood: Rambla de Barcelona.”

-Federico García Lorca

 

77.jpg
La Rambla என்பது மரங்களும்பூக்கடைகளும்தெரு ஓவியங்களும்இன்னபிறவும் சூழந்த மிக அழகான கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீற்றர்கள் நீளும் ஒரு தெருவாகும். ஒரு முனையில் Plaça de Catalunya விலிருந்து தொடங்கி இன்னொருமுறையில் மிக உயரத்தில் வீற்றிருக்கும் கிறிஸ்தோபர் கொலம்பஸின் சிலையோடு முடிகின்றது. கொலம்பஸின் சிலையோடு பார்சிலோனாவின் கடல் தொடங்குகின்றது. கைகளால் காற்றின் திசையில் சுட்டிக்காட்டும் கொலம்பஸ் குறிப்பது அவர் 'கண்டுபிடித்தஅமெரிக்கா என்று பலர் சொன்னாலும்இந்தச் சிலை உண்மையான திசையின்படி சுட்டுவது அதற்கு எதிர்த்திசையிலான எகிப்தை என்று எங்களின் வழிகாட்டி நகைச்சுவையாகச் சொன்னார். Plaça de Catalunya என்பது ஒருவகையில் பார்சிலோனாவின் மத்தி. ஒரு திசையில் இதன் பழமை வாய்ந்த நகரான Gothic City இருக்கின்றதென்றால் அதன் மறுதிசையில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுப்பப்பட்ட நவீன கட்டங்கள் விகசித்து நிற்கின்றன.
 
66.jpg
இருபக்கமும் மரங்கள் சூழ்ந்த La Rambla வினூடு நடந்துபோனால்மர்லின் மன்றோ மாடியில் காட்சியளிக்கும் Erotic Muesum ஐயும்மிகப் பிரசித்தம் பெற்ற உணவுச்சந்தையான La Boqueríaவையும் நீங்கள் எளிதில் அடையமுடியும். மனதை இதமாக்கிவிடும் இந்தத் தெருவில்தான் சென்ற வருடம் ஆவணியில் ஒருவர் வேகமாய் வாகனத்தை ஓட்டி 15 பேருக்கு மேலான மக்களைப் பலியெடுத்தும்இன்னும் பலரைக் காயங்களுக்கும் உட்படுத்தியதுமானதுமான துரதிஷ்டவசமான சம்பவமும் நிகழ்ந்திருந்தது.

                     

http://djthamilan.blogspot.com/2018/09/02.html?m=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் - 03

Catalonia: தனிநாடு சாத்தியமா?

ஸ்பெயினுள்ள கட்டலோனியா ஒரு நீண்டகால வரலாற்றை உடைய நிலப்பரப்பாகும். ஃபிராங்கோவின் காலத்தில் தனது சுயநிர்ணய உரிமைக்காகக் கடுமையாகப் போராடித் தோற்றுமிருக்கின்றது. எனினும் ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சியின் பின், தனக்கான பல உரிமைகளை மீளப்பெற்றதோடல்லாது, 2006ல் கட்டலோனியா ஒரு 'தேசமாக'வாவும் (nation) பிரகடனப்படுத்த ஸ்பெனிய அரசால் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் 2010ல் 'தேசமாக' இருக்கும் உரிமை உட்பட பல பறிக்கப்பட்டுமிருந்தது.
 

44.jpg

இதன் நீட்சியோடும், ஸ்பெயினில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினாலும், கட்டலோனியாவின் தன்னொரு தேசமாகப் பிரகடனப்படுத்தும் குரல் அண்மையில் வெளிக்கிளம்பத் தொடங்கியது. கட்டலோனியா பிரதேசத்தினூட நிறையப் பொருளாதாரத்தை (கிட்டத்தட்ட மொத்த ஸ்பெயினில் 20%) பெறுகின்ற மத்திய அரசு, கட்டலோனியா மக்களுக்கு அதை உரியமுறையில் திரும்பித்தராது, அதிக வரிகளையும் மக்களுக்கு விதித்தமையும், கட்டலோனியா தனிநாட்டுக்கோசத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
 

22.jpg

இதன் நீட்சியில் ‘கட்டலோனியா எமக்கே’ என்ற குரல் வலுத்து, தம்மையொரு தேசமாக்கவேண்டுமென்று ஒன்றிணைந்த கட்சிகள்  தேர்தலில் வெற்றி பெற்றுமிருந்தன. அதன் தொடர்ச்சியில், சென்ற ஒக்ரோபரில் தனிநாட்டுக்கு கட்டலோனியாவின் மக்கள் (90%) ஆதரவளித்திருந்தனர். எனினும் நாம் கவனிக்கவேண்டிய விடயம் என்ன என்றால் இப்படி பெரும்பான்மையாக (90%) தனிநாட்டுக்கு வாக்களித்திருந்தாலும், இங்கே வாக்களித்தவர்கள் மொத்த கட்டலோனியா பிரதேசத்தின் 40% வீதம் மட்டுமே ஆகும். ஆக தனிநாடு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று வாக்களிக்காதவர்கள் கிட்டத்தட்ட 60% ஆனோர் என்பதாகும்.

மேலும் 2017 ஒக்ரோபர் 27ல் கட்டலோனியா தனிநாடாகப் பிரகடனப்படுத்த, மத்தியில் இருந்த வலதுசாரி அரசு அதைக் கொடுமையாக அடக்குகின்றது. இந்தத் தேர்தல் செல்லுபடியாகது என்று சட்டத்தினூடாக கட்டலோனிய அரசைக் கலைக்கின்றது. இதற்காய்ப் போராடிய பல்வேறு கட்சித்தலைவர்களைக் கைதுசெய்ய, சிலர் தப்பி பிற ஐரோப்பிய நாடுகளுக்குள் அடைக்கலந்தேடுகின்றனர்.
 

55.jpg

நான் பார்சிலோனாவிற்குப் போனபோது ஒருபக்கத்தில் நாளாந்த வாழ்க்கையும், மறுபுறத்தில் கட்டலோனியா தனிநாட்டுக்கோரிக்கையினால் சிறைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய நடந்த கூட்டங்களையும் பார்த்திருந்தேன். கட்டலோனிய தனிநாட்டுக் கோரிக்கை வந்தபோது, அவர்கள் ஏற்கனவே கட்டலோனியாவிற்கு இருக்கும் கொடியின் ஒருபகுதியை நீல வர்ண முக்கோணத்தையும் சேர்த்திருந்தனர். இது கியூபாவின் கொடியின் வடிவத்திற்கு அண்மையாகவும், ஒருவகையில் தனிநாட்டுக்கோரிக்கை அதைக் குறிப்பதாகவும் சொன்னார்கள்.

அடுத்தடுத்த வீடுகளில் தனிநாட்டுக்கோரிக்கைக்கும், அதேவேளை ஸ்பெயினோடு சேர்ந்திருக்க ஆதரவளிக்கும் கொடிகளையும் பார்த்தேன். எதை ஆதரிக்கின்றார்களோ அதை வெளிப்படையாக உணர்த்தும் ஒரு சுதந்திர நிலைமை இன்னமும் கட்டலோனியாவில் இருப்பதை அவதானிக்கமுடிந்தது. இலங்கை போன்ற நாடுகளில் 'தேசம்', 'சுயநிர்ணய உரிமை' என்பவற்றை இப்படிப் பொதுப்படையாக முன்வைத்துவிட்டு வீடுகளில் நிம்மதியாக வாழமுடியுமா என்ற யோசனைதான் அப்போதுதான் வந்தது.

கட்டலோனியா தன்னை தனிநாடாகப் பிரகடனப்படுத்தினாலும் உலகில் எந்த நாடுமே அதை அங்கீகரிக்கும் சமிக்ஞைகள் எதுவும் அண்மையில்லை. படுகொலைகள் நடந்த கொஸாவைக்கூட இன்னும் பல நாடுகள் தனித்த நாடாக அங்கீகரிக்கத் தயாரில்லை என்பதும் அண்மைக்கால உதாரணம்.
 

11.jpg

எனினும் கட்டலோனியா நிச்சயம் இந்தப் போராட்டங்களினூடாக மிக வெளிப்படையாக தன்னையொரு 'தேசமாக' காட்டப்போகின்றது. அதை நோக்கி எப்படி அவர்கள் நகர்கின்றார்கள் என்பதே நாம் கற்றுக்கொள்ளவேண்டியது. அதுமட்டுமில்லாது ஸ்பெயினின் மற்றப் பிரதேசமான பாஸ்கில் தனிநாடு கோரிப்போராடிய இயக்கம் தனது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுகின்றோம் என்று கடந்தமாதத்தில் அறிவித்தபின்னும், சில நாட்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான மக்கள்  200கிலோமீற்றர்களுக்கு நீளத்திற்குக் கரங்களை கோர்த்து,  ஒரு ஆர்ப்பாட்டத்தின் மூலம், தமது 'தனித்தேச' விருப்பைப் பொதுவெளியில் காட்டியிருக்கின்றார்கள் என்பதையும் நாம் அவதானிக்கவேண்டும்.


Hospital de Sant Pau 
 

33.jpg

நீண்டகாலத்திற்கு வைத்தியசாலையாக இயங்கிய இந்த இடம், அண்மையில் கலாசார மையமாகவும், நூதனசாலையாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது. யுனெஸ்கோவின் World Heritage Siteகளில் ஒன்றாகவும் இது இருக்கின்றது. அந்தோனியோ கெளடியின் பிரபல்யம் வாய்ந்த Sagarida Familla விற்கு அருகில் -10 நிமிட நடையில்- அமைந்திருக்கின்றது. இன்னமும் கட்டிமுடிக்கப்படாது வளர்ந்துகொண்டேயிருக்கும் பிரமாண்டமான Sagarida Familla தேவாலயத்தைவிட, Sant Pau என்னை இதன் எளிய/திருத்தமான வடிவமைப்பால் அதிகம் கவர்ந்திருந்தது.


Paella

Paella என்பது ஸ்பெயினில் பிரசித்தமான உணவாகும். உண்மையில் இது ஸ்பெயினில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் உணவாக, உள்ளூர் ஸ்பானியர்களாகக் கொள்ளப்பட்டாலும், நம்மைப் போன்ற பயணிகள் இதை ஸ்பெயினின் தேசிய உணவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
 

66.jpg

Paella என்று பெயரிருந்தாலும் பை(ய்)யா என்றே உச்சரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த உணவின் அநேகமான எல்லாவகையையும் சுவைத்திருந்தேன். தனியே மரக்கறிகளால் மட்டும் ஆனது, தனியே கடல் வகையால் மட்டும் ஆனது, கடல் உணவும், கோழியும் கலந்தது என பல்வேறு வகையில் பைய்யா தயாரிக்கப்படுகின்றது. சோற்றுடன் கலந்து பரிமாறப்படும் எதுவுமே எனக்குச் சொர்க்கம் போன்றதென்பதால் நானும் ருசித்து ருசித்து பைய்யாவைச் சாப்பிட்டேன்.

என்றேனும் ஒருகாலம் நானுமொரு சிறு உணவகம் அமைத்து, சாப்பிடுபவர்களும் என்னை நம்பி வந்தால், நானும் இப்படி இலங்கையில் வைத்து பைய்யாவைச் சுடச்சுடப் பரிமாறுவேன் எனக் கூடவே சாப்பிட்டுக்கொண்டிருந்த நண்பருக்குச் சொன்னேன்.

'ஓ.. நீ வழமையாக அவிக்கும் சோற்றுக்குள் மரக்கறிகளையும், கொஞ்சம் மைசூர்ப் பருப்பையும் போட்டு வேகவைத்து இதுதான் எங்கள் அம்பனை இராசதானியின் தேசிய உணவென்று பரிமாறுவாயே, அதுதானா உனது Jaffna style Paellaவா' என்று கேட்டார் நண்பர்.

நல்லதொரு எழுத்தாளன் ஆவதுதான் கனவாகிப்போய்விட்டதென்றால், சிறந்ததொரு சமையற்காரன் ஆகவும் இந்தச் சமூகம் விடாதென்று நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
....................


நன்றி: 'அம்ருதா' - ஆவணி, 2018

 

http://djthamilan.blogspot.com/2018/10/03.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் சுற்றுலா மிக நன்றாக இருந்தது, பையா(லா)என்னும் உணவுவகை சமைப்பதற்கு மிகவும் விசேஷமான திறமை வேண்டும். அதிலும் அந்த சிப்பிகளை சரியான பதத்தில் வைனில் அவிப்பது எல்லாம் ஒரு கலை. பெரிய தாச்சி சட்டிக்குள் ஆவி பறக்க அந்த உணவை பார்ப்பதே ஒரு சுகம். .  பகிர்வுக்கு நன்றி கிருபன்.....!  tw_blush:

Image associée  Image associée

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருமுறை சமைத்தேன். யூரியூப் வீடியோவைப் பார்த்துத்தான்! எதிர்பார்த்தை விட நன்றாக வந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது!

பார்சிலோனா போகவேண்டும் என்ற திட்டம் பலவருடங்களாக உள்ளது. அடுத்த வருடம் போகமுடிந்தால் டி.சே. இந்தப் பயணக் கட்டுரையில் சொன்ன இடங்களுக்கும் பார்சிலோனா ஸ்ரேடியத்திற்கும் கட்டாயம் போகமுயல்வேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.