Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர் கிழக்கின் ஆளுநராக நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 06-04-2007 13:38 மணி தமிழீழம் [சிறீதரன்]

சிங்களவர் கிழக்கின் ஆளுநராக நியமனம்

சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸவால் திரு.ஹரத் அபேவர்த்தனவை மாகாண ஆளுநர் ரெயர் அட்மிரல் மோகன் விஜயவிக்கிரமவின் சிபார்சின்பேரில் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வடக்கு கிழக்கையை பிரித்தபின் இருமாதங்கள் கிழக்கின் ஆளுநராக பணியாற்றிய திரு.ஆர்.தணிகைலிங்கம் அவர்கள் ஏப்ரல் முதலாம் திகதி ஓய்வுபெற்றதையடுத்து அவரது வெற்றிடத்திற்கே இவரை நியமித்துள்ளதாக அறியமுடிகிறது.

பதிவு

  • Replies 53
  • Views 6.1k
  • Created
  • Last Reply

ஏதோ நடத்துங்கோ! நடத்துங்கோ! வேட்டியைத் தூக்கிக்கொண்டு குதிக்கால் ***யில அடிக்க ஓடேக்க எல்லாம் தெரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 06-04-2007 13:38 மணி தமிழீழம் [சிறீதரன்]

சிங்களவர் சிழக்கின் ஆளுநராக நியமனம்

சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸவால் திரு.ஹரத் அபேவர்த்தனவை மாகாண ஆளுநர் ரெயர் அட்மிரல் மோகன் விஜயவிக்கிரமவின் சிபார்சின்பேரில் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வடக்கு கிழக்கையை பிரித்தபின் இருமாதங்கள் கிழக்கின் ஆளுநராக பணியாற்றிய திரு.ஆர்.தணிகைலிங்கம் அவர்கள் ஏப்ரல் முதலாம் திகதி ஓய்வுபெற்றதையடுத்து அவரது வெற்றிடத்திற்கே இவரை நியமித்துள்ளதாக அறியமுடிகிறது.

பதிவு

கிழக்கை சிங்களவன் கைப்பற்ற அனுமதிச்சிட்டு.. கத்துறதில பலனில்லை..! மக்களுக்கு இப்போ உள்ளது அரசியல்வாதிகளின் தேர்வல்ல.. மக்களுக்கு இப்போ தேவை ஈழமுமல்ல.. தங்கள் நாளாந்த நலன்களை கவனிக்க ஒரு காத்திரமான நிர்வாக நடைமுறை. அதை சிங்களவன் தந்தால் என்ன வெள்ளைக்காரன் தந்தால் என்ன..! நீங்கள் எல்லாம் வெள்ளைக்காரனின் அரசியல் நிர்வாக நடமுறைக்குள் கப்பியா இல்லையா..! :rolleyes::lol:

இதுதான் ஐக்கிய இலங்கை.

இதுதான் ஐக்கிய இலங்கை.

:lol::rolleyes:

மக்களுக்கு இப்போ தேவை தங்கள் நாளாந்த நலன்களை கவனிக்க ஒரு காத்திரமான நிர்வாக நடைமுறை. அதை சிங்களவன் தந்தால் என்ன வெள்ளைக்காரன் தந்தால் என்ன..!

கருநாய் தந்தாலென்ன டக்லஸ் தந்தாலென்ன...!

சங்கிரி தந்தாலென்ன சோமவன்ச தந்தாலென்ன...!

ஆகா..... என்ன தத்துவம்டா! கொன்னுட்டீங்க தலைவரே! :lol::rolleyes::lol:

கருணா டக்கிளசு வேணாம் என்று புகலிடத்தில் இருந்து கொண்டு அழகாகக் கதைக்கலாம். தாயகத்தில் டக்கிளஸ் மந்திரி.. கருணா அரசின் இராணுவத்தின் செல்லப்பிள்ளை.

அரசு மற்றும் இராணுவம் கிழக்கின் பல பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் நிலையில் புலிகளின் நிர்வாக நடைமுறைகள் மக்களின் தேவைகளை கவனிக்க முடியாத அளவுக்கு சிதைந்துவிட்ட நிலையில் மக்கள் புலிகள் வருவார்கள் ஈழம் தருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நடைமுறை மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் தங்களை சூழலுக்கு ஏற்ப மாற்றி வாழ வேண்டியதாகிறது.

டாவினின் கூர்ப்புக் கொள்கை.. தக்கன பிழைக்கும் அல்லன மடியும்..! மக்கள் தங்களை தக்க வைக்க கருணா அமைத்தால் என்ன டக்கிளஸ் அமைத்தால் என்ன சிங்களவன் அமைத்தான் என்ன நிர்வாகங்களை ஏற்க வேண்டியது அவர்களின் வாழ்க்கையை தக்க வைக்க அவசியம். அதில் அரசியல் பார்க்க முடியாது.

டக்கிளஸை கருணாவை உருவாக்கியது முழுக்க முழுக்க மக்கள் அல்ல. அதில் புலிகளுக்கும் பங்குண்டு. அவர்கள் விட்ட தவறுகளுக்கு மக்கள் துன்பங்களை சுமக்கிறார்களே அரசியல் நெருக்கடிகளை சந்திக்கிறார்களே தங்கள் வாழ்வைத் தொலைக்கிறார்களே நிம்மதிகளை இழக்கிறார்களே அதை ஏன் தியாகமா பார்க்க மறுக்கிறீர்கள்.

புகலிடத்தில் உங்களால் வெள்ளைக்காரனிடம் கைநீட்டி வாழ்க்கைப் பிச்சை வாங்கி வாழ்வது கெளரவம் என்றால் ஏன் தாயகத்தில் கருணாவிடம்... டக்கிளசிடம் கை நீட்டி.. சிங்களவனிடம் கை நீட்டி வாழ்வையாவது காப்பாற்றிக் கொள்வது எந்த வகையில் தவறு. புலிகள் கைவிட்டிட்டுப் போய் விடுவார்கள்.. மக்களை பாதுகாக்கவோ நிர்வகிக்கக் கூடிய பலமோ புலிகளிடம் கிழக்கில் இல்லை எனும் போது மக்கள் தங்களின் வாழ்வை புலிகளை எதிர்பார்த்து தொலைத்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களின் கால மாற்றத்துக்கு ஏற்ப மாறினால் தான் தங்களை தக்க வைக்க முடியும்.

சிங்களவன் பலத்தோடு இருக்கிறான்.. அதுதாங்க தமிழனை நிர்வகிக்கக் கூடிய பலத்தோடு இருக்கிறான். அதை அனுமதித்தவர்கள் தான் இது குறித்து வெட்கப்பட வேண்டும். தமது வாழ்வுக்காக இராணுவ அடக்குமுறைக்குள் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்கள் அல்ல..!

உரிமைக்காகப் போராட வெளிக்கிட்ட மக்களை வாழ்வுக்காக போராட வைத்தது சிங்களவனின் வெற்றி.. தமிழர்களின் படுதோல்வி..! :lol:

Edited by nedukkalapoovan

சிங்களமயமாகும் கிழக்கு – நாடாளுமன்றில் சம்பந்தன்

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு படையினர் எமது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எமது மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன. வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு கிழக்கு வேகமாக சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது என அவர் பாராளுமன்றில் அவசரகால பிரேரணையை ஒருமாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது மக்களுக்கு எதுவிதப் பாதுகாப்புமில்லை. அரச படையில் 99 வீதமான சிங்களவர்களே உள்ளனர். அவர்களால் எமது மக்களின் பாதுகாப்பை நிச்சயம் உறுதிப்படுத்த முடியாது. அவர்களின் நடவடிக்கைகள் எமது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளன.

படையினரைக் கட்டுப்படுத்த இந்த அரசால் முடியவில்லை. தமிழர்கள் மீது அரசிற்கு சிறிதேனும் அக்கறையில்லை. இன்னும் எத்தனையோ தமிழர்கள் பூஸா தடுப்பு முகாம்களில் வாடுகின்றனர்.

எல்லாப் பக்கங்களிலும் எல்லா வகைகளிலும் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் உரிமைகள் முழுவதும் மீறப்பட்டுள்ளன.

இது மாத்திரமின்றி வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கிழக்கு மிக வேகமாக சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றது.

75 சதவீதத்துக்கும் அதிகமான தமிழ்பேசும் மக்கள் வாழும் கிழக்கிற்கு சிங்களவர் ஒருவர் அதுவும் முன்னாள் படை அதிகாரி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் எந்தப் பகுதிக்கும் இராணுவ அதிகாரி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை.

கிழக்கில் ஒவ்வொரு துறைகளிலும் சிங்களவர்களே செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு தமிழர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளே மேலோங்கி நிற்கின்றன.

பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீள இணைப்பது தொடர்பாக அரசு இன்னும் எதுவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்துக்கு சட்டமூலம் கொண்டுவந்து மீண்டும் இணைக்க முடியும்.

அதற்கான ஆதரவை ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆகிய கட்சிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதனையும் அரசு மேற்கொள்ளாமல் தமிழர்களை மேலும் மேலும் துன்பப்படுத்துவதிலேயே ஈடுபட்டுள்ளது.

எல்லா விதத்திலும் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

மனித உரிமை மீறல்களை

விவரிக்க சர்வதேச கண்காணிப்புக்குழு

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கை பூஜ்ஜியமாகவே உள்ளது. இந்த மீறல்களைக் கண்காணிப்பதற்காக சர்வதேச பிரதிநிதிகள் இலங்கையில் நியமிக்கப்பட வேண்டும். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன என்று ஐ.நா.சபை 2006இல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஹீயூமன் வார்ச், இந்திய மனித உரிமை அமைப்புகள் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க இலங்கையில் சர்வதேச பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை மௌனம் சாதிக்கின்ற நிலையில் சர்வதேச பிரதிநிதிகள் இலங்கையின் மனித உரிமை மீறல் கண்காணிப்பில் ஈடுபடுவது மிகவும் அவசியம்.

இன்று வடக்கு கிழக்கில் தினமும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர், காயப்படுத்தப்படுகின்றனர், வெள்ளைவான்களில் கடத்தப்படுகின்றனர், இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தப்படுகின்றனர்.

கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பில் படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் காரணமாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ்மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்த இம்மக்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு இன்னும் மேற்கொள்ளவில்லை.

இந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படுகின்ற போது அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் கண்காணிப்பின் கீழே மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்கனவே இந்த அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

[உதயன்]

எத்தனை காலத்திற்கு??

  • கருத்துக்கள உறவுகள்

புகலிடத்தில் உங்களால் வெள்ளைக்காரனிடம் கைநீட்டி வாழ்க்கைப் பிச்சை வாங்கி வாழ்வது கெளரவம் என்றால் ஏன் தாயகத்தில் கருணாவிடம்... டக்கிளசிடம் கை நீட்டி.. சிங்களவனிடம் கை நீட்டி வாழ்வையாவது காப்பாற்றிக் கொள்வது எந்த வகையில் தவறு. புலிகள் கைவிட்டிட்டுப் போய் விடுவார்கள்.. மக்களை பாதுகாக்கவோ நிர்வகிக்கக் கூடிய பலமோ புலிகளிடம் கிழக்கில் இல்லை எனும் போது மக்கள் தங்களின் வாழ்வை புலிகளை எதிர்பார்த்து தொலைத்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களின் கால மாற்றத்துக்கு ஏற்ப மாறினால் தான் தங்களை தக்க வைக்க முடியும்.

சிங்களவன் பலத்தோடு இருக்கிறான்.. அதுதாங்க தமிழனை நிர்வகிக்கக் கூடிய பலத்தோடு இருக்கிறான். அதை அனுமதித்தவர்கள் தான் இது குறித்து வெட்கப்பட வேண்டும். தமது வாழ்வுக்காக இராணுவ அடக்குமுறைக்குள் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்கள் அல்ல..!

உரிமைக்காகப் போராட வெளிக்கிட்ட மக்களை வாழ்வுக்காக போராட வைத்தது சிங்களவனின் வெற்றி.. தமிழர்களின் படுதோல்வி..!

குறுக்கால....

சிங்களவன் இதைத்தான் எதிர்பார்க்கின்றான்

அதை அப்படியே செய்யப்போவதாக நீங்கள் ஏற்கின்றீர்கள்

அதைவிட நீரும் பிச்சைதான் எடுக்கின்றீர்

நானும் அதைத்தான் செய்கின்றேன் என்ற மார்தட்டல் வேறு

சரி உமக்கு ஏன் புகலிடத்தமிழர் மீது இவ்வளவு கோபம்

ஒன்றை மட்டும் மறுக்கவேண்டாம்

தமிழீழத்தில் புலம் பெயராதவர் எவருமில்லை

நீர் பக்கத்து ஊருக்கு புலம்பெயர்ந்திருக்கலாம்

இன்னொருவர் பக்கத்து நாட்டுக்கு புலம்பெயர்ந்திருக்கலாம்

இதில் என்ன இருக்கிறது மார்தட்ட???

ஆம் மக்களுக்கு தற்போது தேவை அரசியல் அல்ல வாழ்வதற்கு வழி. அவர்களை இந்த அவலத்தில் இருந்து பாதுகாக்காத எவருக்குமே இதைத்தான் செய் அல்லது இதைதான் சாப்பிடு என்று சொல்ல உரிமையில்லை. அவர்களுக்கு எது கிடைக்கிறதோ அதை பற்றிக் கொண்டு அவர்கள் பிழைத்துக் கொள்வதையே நான் விரும்புகிறேன். மற்றும்படி எனது அரசியல் விளக்கங்களுக்கா அவர்களை பலியாகச் சொல்ல முடியாது.

பசியிலிருப்பவனுக்கு முன்னால் போய் அரசியல் கதைத்தால் தெரியும் அறையின் வேதனை!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மக்களில் இருந்து பிரித்துப் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, மக்கள் போராடாமல், மக்களின் ஒத்துழைப்பின்றி விடுதலையை வென்றெடுக்க முடியுமா?

ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சிங்களவரின் பொறுப்புக்கள் எவை? அவரால் தமிழ் மக்களின் எவ்வாறான பிரச்சனைகளை, எவ்வளவு காலத்திற்கு தீர்த்து வைக்கமுடியும் என்பதை முதலில் சொல்லிவிட முடியுமா? மக்கள் இவ்வாறான ஒரு ஆளுநரை சிறீ லங்கா அரசிடம் கேட்டார்களா?

மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதா அல்லது மக்களை அதிகாரம் செய்வதற்காக இந்த ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதா? இந்த ஆளுநர் பதவி இல்லாதவிடத்து மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாதா? மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதவிடத்து தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது கைவிடப்பட வேண்டுமா?

ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு கட்டுப்பட்டு பயந்து வாழ்ந்து தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதையா அல்லது, ஒரு இனம் இன்னொரு இனத்துடன் போர்புரிந்து, போட்டியிட்டு, வெற்றியீட்டி வாழ்வதையா கூர்ப்புக் கொள்கையில் சார்ல்ஸ் டார்வின் தக்கன பிழைக்கும், அல்லாதன மடியும் என்று கூறினார்?

ஒன்றும் விளங்கவில்லை.....

வலி எல்லோருக்கும் உண்டு

நீங்கள் அங்கிருந்தபடி நினைக்கின்றீர்கள்

வெளிநாட்டுக்கு போய்விட்டவர்கள் எல்லாம் கிடைத்து சொர்க்கத்தில் மிதப்பதாக???

ஆனால் ஒவ்வொரு செக்கனும் உங்களைத்தான் நாம் நினைக்கின்றோம்

ஏன் புரியுதில்லை இது உங்களுக்கு???

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் எப்பவுமே (வட-கிழக்கு மாநிலமாக இணைந்திருந்தபோதும்) சிங்களவர்தான்.. தலைமைக் காரியதரிசியாக இருந்த தியாகலிங்கம் என்பவர் ஓய்வு பெற்றபின் தற்போது சிங்களவர் நியமிக்கப்படுள்ளார்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21808

தமிழர்கள் "இராமன் ஆண்டான் என்ன.. இராவணன் ஆண்டான் என்ன.." என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று சொல்லுவது உண்மையானால் "அடிமையாக வாழ்ந்தாலும் பரவாயில்லை, உயிருடன் வாழ விடுங்கள்" என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனால் அடிமை வாழ்வு கேவலமானது என்பது கொஞ்சக் காலத்தில் புரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மக்களில் இருந்து பிரித்துப் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, மக்கள் போராடாமல், மக்களின் ஒத்துழைப்பின்றி விடுதலையை வென்றெடுக்க முடியுமா?

ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சிங்களவரின் பொறுப்புக்கள் எவை? அவரால் தமிழ் மக்களின் எவ்வாறான பிரச்சனைகளை, எவ்வளவு காலத்திற்கு தீர்த்து வைக்கமுடியும் என்பதை முதலில் சொல்லிவிட முடியுமா? மக்கள் இவ்வாறான ஒரு ஆளுநரை சிறீ லங்கா அரசிடம் கேட்டார்களா?

மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதா அல்லது மக்களை அதிகாரம் செய்வதற்காக இந்த ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதா? இந்த ஆளுநர் பதவி இல்லாதவிடத்து மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாதா? மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதவிடத்து தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது கைவிடப்பட வேண்டுமா?

ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு கட்டுப்பட்டு பயந்து வாழ்ந்து தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதையா அல்லது, ஒரு இனம் இன்னொரு இனத்துடன் போர்புரிந்து, போட்டியிட்டு, வெற்றியீட்டி வாழ்வதையா கூர்ப்புக் கொள்கையில் சார்ல்ஸ் டார்வின் தக்கன பிழைக்கும், அல்லாதன மடியும் என்று கூறினார்?

ஒன்றும் விளங்கவில்லை.....

ஆம் மக்களுக்கு தற்போது தேவை அரசியல் அல்ல வாழ்வதற்கு வழி. அவர்களை இந்த அவலத்தில் இருந்து பாதுகாக்காத எவருக்குமே இதைத்தான் செய் அல்லது இதைதான் சாப்பிடு என்று சொல்ல உரிமையில்லை. அவர்களுக்கு எது கிடைக்கிறதோ அதை பற்றிக் கொண்டு அவர்கள் பிழைத்துக் கொள்வதையே நான் விரும்புகிறேன். மற்றும்படி எனது அரசியல் விளக்கங்களுக்கா அவர்களை பலியாகச் சொல்ல முடியாது.

பசியிலிருப்பவனுக்கு முன்னால் போய் அரசியல் கதைத்தால் தெரியும் அறையின் வேதனை!

வலி எல்லோருக்கும் உண்டு

நீங்கள் அங்கிருந்தபடி நினைக்கின்றீர்கள்

வெளிநாட்டுக்கு போய்விட்டவர்கள் எல்லாம் கிடைத்து சொர்க்கத்தில் மிதப்பதாக???

ஆனால் ஒவ்வொரு செக்கனும் உங்களைத்தான் நாம் நினைக்கின்றோம்

ஏன் புரியுதில்லை இது உங்களுக்கு???

கிழக்கின் ஆளுனராக சிங்களவர் நியமிக்கப்படுவது இது முதற்தடவை அல்ல. யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக சிங்களவர்கள் இருந்த காலமும் உண்டு. ஆளுனர் நிர்வாக அதிகாரம் உள்ள ஒருவர். அவருக்கு அரசியல் தலையீடுகள் செய்ய அதிகாரம் இல்லை.

இங்கு திடீர் என்று சிங்கள ஆளுனர் நியமனத்தை இனவாத சாயத்தோடு தலைப்பிட்டதும் அதை அநியாயம் என்பதன் அர்த்தம் தான் இன்னும் புரியவில்லை.

சிங்களவரோ தமிழரோ முஸ்லீமோ ஆளுனர் தனது நிர்வாகக் கடமைகளைச் செய்து பிராந்திய மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய தேவைகளை வழங்குதலே இப்போதுள்ள தலையாய தேவை..!

அதைவிடுத்து அரசியல் பேசும் நேரமாக இது இல்லை. கிழக்கு சிங்களமயமாவது இன்று நேற்றல்ல 30 வருடங்களுக்கு மேலாக நடக்கிறது. அது புதிசான விடயமுல்ல. அதை எதிர்த்துப் போராட்டம் ஆரம்பித்தவர்கள் பலர் இன்று தாயகத்தின் இல்லை. வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..!

இப்போ தேவை அகதிகளாகியுள்ள மக்களுக்கு ஒரு நிரந்தர இருப்பிடம்.. உணவு.. போக்குவரத்து..வேலை வாய்ப்பு.. கல்வி..விவசாயம் போன்ற அத்தியாவசிய தேவைகளையும் வாழ்க்கைக்கு அடிப்படையான வசதிகளையும் ஈட்டிக்கொடுப்பதே ஆகும்..!

சம்பந்தன் சந்திரிக்காவோடு ஒட்டி இருந்த காலத்திலும் சிங்கள ஆளுனர் தான் கிழக்கில் இருந்தார்..! அப்போ எல்லாம் சிங்கள மயமாகாத கிழக்கு இப்போ..மட்டும்..!

கிழக்கில் புலிகளின் ஆதிக்கம் இல்லாது போகும் போது அது சிங்கள மயமாவது தடுக்க முடியாதது. அதை எந்த சக்தியும் தடுக்கக் கூடிய நிலையில் இல்லை. எனவே வெறும் அறிக்கைகளை விட்டு மக்கள் நிர்வாகிகளிடமிருந்து பிரித்து துன்பத்தில் உளல விடுவதிலும் மக்கள் தமது தேவைகளைத் தீர்க்க வழிவிடுவதே அவசியமானது..!

புகலிடத்தில் இருந்து கொண்டு நீங்கள் நினைக்கிறீங்கள் என்பது அங்குள்ள மக்களுக்கு சோறுபோடாது. நீங்கள் நினைக்கலாம்.. இல்ல கூத்தடிக்கலாம்.. அதைப்பற்றி அக்கறைப்பட வேண்டிய தேவை அரச கட்டுப்பாட்டுக்குள் பல இடர்களையும் தாங்கி தங்கள் வாழ்வைத் தக்க வைத்திருக்கும் மக்களுக்கு அவசியமில்லை. அரசுதான் உணவு கொடுக்கிறது.. எரிபொருள் கொடுக்கிறது பாடசாலைகளுக்கு சம்பளம் கொடுக்கிறது.. நூல் கொடுக்கிறது.. எல்லாம் அரசின் கையில் தான் உள்ளது..!

மக்கள் உரிமைகளைப் பற்றிச் சிந்திக்கவே வலுவற்ற நிலைக்கு அவர்களை இராணுவ அணுகுமுறைகள் கொண்டு வந்து நிறுத்திவிட்டதை புலம்பெயர்ந்து இருந்து இராணுவ வெற்றிகளுக்காக காத்திருபவர்கள் சிந்திக்க வேண்டும்..! போராட்டத்தை காசு மட்டும் பலப்படுத்தாது. மனோபலம் இழந்த மக்கள் மத்தியில் காசு பூச்சாண்டிதான் காட்ட முடியும் என்பது புகலிடத்திற்கு ஓடி வந்து பதுங்கி இருந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டிருக்கும் வாய் வீரத்தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்..!

சிங்கள மயமாக்கத்துக்கு புலம்பெயர்ந்து ஓடுதல் அளிக்கும் வசதியை உணராமல்.. புலம்பெயர்ந்து இருந்து கொண்டு கனவு காணிறதை கவனிக்கட்டாம்..! அதை நீங்கள் செய்யுங்கள்.. சிங்களவன் செய்ய வேண்டியதை செய்து சாதிக்க வேண்டியதை சாதித்துக் கொள்வான்..!

உரிமை கேட்ட தமிழர்கள் உணர்விழந்து ஓடிய போது நினைக்கத்தவறியதை இன்று தாயக மக்களை நோக்கி பூச்சாண்டி வார்த்தைகளால் பூசி மெழுகுதல் அவசியமில்லை.

தங்கள் வாழ்வை தீர்மானிக்க தாயகத்தில் உள்ள மக்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் காலத்துக்கு ஏற்றாற் போல சிங்கள நிர்வாக தலைமைத்துவத்துள் இருப்பதும் பயன்பெறுவதும் அவர்களின் தேவைகள் மட்டுமே தீர்மானிக்க முடியும். புலம்பெயர்ந்தவர்கள் அல்ல..! பின்வாங்கிச் செல்லும் புலிகளாலும் அது தற்போதைக்கு சாத்தியமில்லை. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் "இராமன் ஆண்டான் என்ன.. இராவணன் ஆண்டான் என்ன.." என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று சொல்லுவது உண்மையானால் "அடிமையாக வாழ்ந்தாலும் பரவாயில்லைஇ உயிருடன் வாழ விடுங்கள்" என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனால் அடிமை வாழ்வு கேவலமானது என்பது கொஞ்சக் காலத்தில் புரியும்...

அப்போது நண்பனே

நான் இருக்கமாட்டேன்

நீயும் இருக்கமாட்டாய்

என் பிள்ளை பிராங்கோ-தமிழில் கடிக்கும்

உன் பிள்ளை ஆங்கிலோ-டமிழில் குதறும்

தமிழீழத்தில் சிங்களத்தமிழில் என்பரம்பரை உளறும்

எல்லாமே காலம் கடந்திருக்கும்.....................

ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் பலாத்காரத்தால் அடிமைகள் கொண்டு வந்தான். இன்று பணத்தைக் காட்டி அடிமைகளை உள்வாங்கிக் கொள்கின்றான். புகலிடத்தில் அடிமைகளாக உள்ளதை உணராமல் உங்களால் சொகுசாக வாழ்க்கையை வாழ முடியும் என்றால் ஏன் ஈழத்தில் மட்டும் மக்கள் துன்பத்தில்.. உரிமை.. போராட்டம்..வாழ்விழப்பு.. உயிரிழப்பை சந்திக்க வேண்டும். சிங்களவனிடம் கொடுத்திட்டு உங்களைப் போலவே வாங்கிச் சாப்பிட்டு.. வாழ்ந்து விட்டால் வாழ்க்கை அமையாதா..!

புலம்பெயர்ந்து ஓடுதல் பெரிய வசதியை சிங்களமயமாக்கலுக்கு செய்திருக்கிறது. சிங்கள மயமாக்கல் போராட்டம் இராணுவ மயமாக முதல் இருந்த வேகத்தை விட அதன் பின்னர்தான் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழர்கள் எப்போ மேற்குலக நாடுகளின் பிராஜா உரிமைக்காக உழைக்க வெளிக்கிட்டார்களோ அப்பவே அவர்களின் உரிமைப் போராட்டம் வாழ்க்கைப் போராட்ட நிலைக்கு தள்ளப்பட்டாயிற்று. இதுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் சாதித்த சிங்களவர்களுக்கான வெற்றி..!

அன்றே புலம்பெயர்ந்த தமிழர்களை ஓடவிடாமல் தடுக்க அரசுக்குப் பல வழிகள் இருந்தும் ஜே ஆர் ஜெயவர்த்தனா ஓடவிட்டிட்டு சொன்னது அவர்கள் ஓடுவது நமக்கு வெற்றி என்று..! அது நிகழ்கால உண்மையும் ஆகிவிட்டது..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புகலிடத்தில் இருந்து கொண்டு நீங்கள் நினைக்கிறீங்கள் என்பது அங்குள்ள மக்களுக்கு சோறுபோடாது. நீங்கள் நினைக்கலாம்.. இல்ல கூத்தடிக்கலாம்.. அதைப்பற்றி அக்கறைப்பட வேண்டிய தேவை அரச கட்டுப்பாட்டுக்குள் பல இடர்களையும் தாங்கி தங்கள் வாழ்வைத் தக்க வைத்திருக்கும் மக்களுக்கு அவசியமில்லை. அரசுதான் உணவு கொடுக்கிறது.. எரிபொருள் கொடுக்கிறது பாடசாலைகளுக்கு சம்பளம் கொடுக்கிறது.. நூல் கொடுக்கிறது.. எல்லாம் அரசின் கையில் தான் உள்ளது..!

மக்கள் உரிமைகளைப் பற்றிச் சிந்திக்கவே வலுவற்ற நிலைக்கு அவர்களை இராணுவ அணுகுமுறைகள் கொண்டு வந்து நிறுத்திவிட்டதை புலம்பெயர்ந்து இருந்து இராணுவ வெற்றிகளுக்காக காத்திருபவர்கள் சிந்திக்க வேண்டும்..! போராட்டத்தை காசு மட்டும் பலப்படுத்தாது. மனோபலம் இழந்த மக்கள் மத்தியில் காசு பூச்சாண்டிதான் காட்ட முடியும் என்பது புகலிடத்திற்கு ஓடி வந்து பதுங்கி இருந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டிருக்கும் வாய் வீரத்தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்..!

சிங்கள மயமாக்கத்துக்கு புலம்பெயர்ந்து ஓடுதல் அளிக்கும் வசதியை உணராமல்.. புலம்பெயர்ந்து இருந்து கொண்டு கனவு காணிறதை கவனிக்கட்டாம்..! அதை நீங்கள் செய்யுங்கள்.. சிங்களவன் செய்ய வேண்டியதை செய்து சாதிக்க வேண்டியதை சாதித்துக் கொள்வான்..!

உரிமை கேட்ட தமிழர்கள் உணர்விழந்து ஓடிய போது நினைக்கத்தவறியதை இன்று தாயக மக்களை நோக்கி பூச்சாண்டி வார்த்தைகளால் பூசி மெழுகுதல் அவசியமில்லை.

தங்கள் வாழ்வை தீர்மானிக்க தாயகத்தில் உள்ள மக்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் காலத்துக்கு ஏற்றாற் போல சிங்கள நிர்வாக தலைமைத்துவத்துள் இருப்பதும் பயன்பெறுவதும் அவர்களின் தேவைகள் மட்டுமே தீர்மானிக்க முடியும். புலம்பெயர்ந்தவர்கள் அல்ல..! பின்வாங்கிச் செல்லும் புலிகளாலும் அது தற்போதைக்கு சாத்தியமில்லை.

இதன் அர்த்தம் என்ன?

நாங்கள் இப்படி வாழப்போகின்றோம் எங்களை விட்டுவிடுங்கள் என்பதா?

அதற்கேன் இத்தனை சோடனை????

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் பலாத்காரத்தால் அடிமைகள் கொண்டு வந்தான். இன்று பணத்தைக் காட்டி அடிமைகளை உள்வாங்கிக் கொள்கின்றான். புகலிடத்தில் அடிமைகளாக உள்ளதை உணராமல் உங்களால் சொகுசாக வாழ்க்கையை வாழ முடியும் என்றால் ஏன் ஈழத்தில் மட்டும் மக்கள் துன்பத்தில்.. உரிமை.. போராட்டம்..வாழ்விழப்பு.. உயிரிழப்பை சந்திக்க வேண்டும். சிங்களவனிடம் கொடுத்திட்டு உங்களைப் போலவே வாங்கிச் சாப்பிட்டு.. வாழ்ந்து விட்டால் வாழ்க்கை அமையாதா..!

சகோதரா

நான் அடிமையாய் உள்ளேன் என்பதை 100 வீதம் உணர்ந்துள்ளேன்.

அதனால் தான் அதிலிருந்து என்னையும்

அடிமையாய் நீ இனிமேல் ஆக்கப்படாமல் இருப்பதற்குமாய் நான் இயங்குகின்றேன்...

தப்பா???

ஈழம் கேட்டிட்டு உங்களால் எப்படி மேற்குலக நாடுகளின் பிரஜா உரிமைகளோடு வாழ முடியுதோ அதைப் போல அந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க உரிமை உண்டு. அதைப் புகலிடத்தில் உள்ளவர்கள் தீர்மானிக்க முடியாது. அவை பேசாம வெள்ளைக்காரனுக்கு அடிமை வேலை செய்து கொலிடேக்குப் போறதை மட்டும் செய்துக்க வேண்டியதுதான்..! தமிழீழத்தை வார்த்தையளவில் உச்சரிச்சிட்டா தமிழீழம் கிடைக்கப் போறதில்லை. இழப்பு கண்டு நாட்டை விட்டே ஓடினா நாடு காப்பற்றப்படப் போறதில்லை..! வாழ்க்கைக்கு உரிமையை உதறிட்டு ஓடினவைக்கு அடுத்தவனைப் பார்த்து உரிமை காக்கப் போராடு என்று சொல்ல எந்த அருகதையும் இல்லை. உங்களின் பவுண்சும் டொலரும் போராட்டம் நடத்தும் என்றால் அதைக் கொண்டு சிங்களப்படைகளை தாயகத்தில் இருந்து அப்புறப்படுத்தி உங்கள் தமிழீழத்தை மீட்க ஏன் தாமதிக்கிறீர்கள். தாயக மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். அவர்களுக்கும் புலம்பெயர்ந்து மேற்குகல பிரஜா உரிமைகளோடு வாழத்தான் உரிமை கொண்டுள்ளனரே தவிர சிங்களவனை சிங்கள மயமாக்கலை எதிர்க்க வேண்டும் என்ற கடமை உங்களுக்கு இல்லாத போது அவர்களுக்கு என்ன தேவை இருக்கு..!

அதிலும் சிங்கள நிர்வாகத்தோடு ஒத்துழைத்து வாழ்க்கையை வாழ்ந்து தகாத காலத்தைக் கழிப்பதுதான் அவர்களுக்குள்ள மாற்றுவழி. அதை அவர்கள் தீர்மானிப்பதை புலம்பெயர்ந்துள்ள புல்லர்கள் புறுபுறுக்க முடியாது...! :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் பலாத்காரத்தால் அடிமைகள் கொண்டு வந்தான். இன்று பணத்தைக் காட்டி அடிமைகளை உள்வாங்கிக் கொள்கின்றான். புகலிடத்தில் அடிமைகளாக உள்ளதை உணராமல் உங்களால் சொகுசாக வாழ்க்கையை வாழ முடியும் என்றால் ஏன் ஈழத்தில் மட்டும் மக்கள் துன்பத்தில்.. உரிமை.. போராட்டம்..வாழ்விழப்பு.. உயிரிழப்பை சந்திக்க வேண்டும். சிங்களவனிடம் கொடுத்திட்டு உங்களைப் போலவே வாங்கிச் சாப்பிட்டு.. வாழ்ந்து விட்டால் வாழ்க்கை அமையாதா..!

சகோதரா

நான் அடிமையாய் உள்ளேன் என்பதை 100 வீதம் உணர்ந்துள்ளேன்.

அதனால் தான் அதிலிருந்து என்னையும்

அடிமையாய் நீ இனிமேல் ஆக்கப்படாமல் இருப்பதற்குமாய் நான் இயங்குகின்றேன்...

தப்பா???

அடிமையாக இருந்து வாழ்க்கையை தீர்மானிக்கின்றேன் என்று உங்களால் வெளில சொல்ல முடியும் என்றால் ஏன் அவர்களும் அதையே செய்ய முடியாது.

நீங்கள் கட்டாயப்படுத்திய அடிமை வாழ்வுக்குள் இல்லை. வெள்ளைக்காரன் உங்களைப் பிடிச்சு கட்டாயப்படுத்தி வைச்சிருக்கவில்லை. நீங்களா கட்டாயமா வந்து அடிமையை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றீர்கள். இதற்குள் அடிமையாக உள்ளேன் என்பதை உணர்வதாக கதையளக்காதீர்கள்..! நீங்கள் அடிமை வாழ்வைத் தேர்ந்தெடுத்து உரிமையை உதறி வந்துவிட்டு தாயக மக்களை நோக்கி அடிமை வாழ்வு உரிமை பாதுகாப்பு என்று கதையளக்க முடியாது. வெள்ளைக்காரன் உங்களை அடிமையில் இருந்து வெளில போய் உங்க தமிழீழத்தில போராடி உரிமை பெற்று வாழ வேண்டாம் என்று தடுக்கவே இல்லை. தாராளமா போகலாம் போராடலாம்.. தாயக மக்களோடு கூடி இருந்தே அடிமைத்தனத்தின் பாதிப்பைச் சொல்லி தியாகம் செய்து நாட்டை மீட்டு பாதுகாத்து.. தமிழீழத்தில் உரிமையோடு வாழலாமே..! அதைவிட்டிட்டு நான் அடிமையாத்தான் இருக்கிறன் என்று பெருமையாச் சொல்லி அடிமையை விலக்க அடிமைக்குள் இருந்தே உங்கள் வாழ்க்கையை அமைத்து அதை பத்திரம பாதுகாத்தப்படி... தாயகத்தில் அடிமை அறுக்க பாடுபடுகிறேன் என்று கதையளந்து எனியும் மக்களை ஏய்ப்பதை தாயக மக்கள் ஏற்கத்தயார் இல்லை..! அவர்களும் உங்களைப் போல அடிமைக்குள் வாழ்வமைத்து வசதியாக வாழ முடிவெடுக்கட்டன் விடுங்களன்..! நீங்கள் மட்டும் தான் அடிமையாய் வாழ வேணுமோ..??! உங்களுக்கு உரிமை வாழ்வு அவசியமில்லை ஆனால் அவர்களுக்கு அது அவசியம்.. என்று நீங்கள் நினைப்பது வேடிக்கையானது..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடிமை வாழ்வினை ஏற்று வாழ நினைப்பவர்களுக்குச் சுதந்திரத்தின் பெறுமதி தெரியாது.. சுதந்திரத்தின் பெறுமதி தெரியாவிட்டால் போராட வேண்டிய தேவை இல்லை. போராடாமல் விட்டுவிட்டால் சுய அடையாளத்தையும், சுயகெளரவத்தையும் இழந்துவிடுவோம்.. உயிரை இழப்பதை விட இவற்றை இழப்பது பரவாயில்லை என்பவர்கள் தமிழர்களில் அதிகரித்தால் போராட்டம் தன்பாட்டில் அழிந்துவிடும்.. இதைத்தான் சிங்கள அரசியல்வாதிகள் செயலாக்கப் பார்க்கின்றனர்.. அதற்கு ஊக்கம் கொடுப்பவர்களை நம்மிடையே வளர்க்கின்றனர்.. இப்படி எத்தனையோ தடைகளையும், சோதனைகளையும் தாண்டித்தான் தமிழர் போராட்டம் வந்திருக்கின்றது.. இனியும் முன்னோக்கிப் போகும்...

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு சொன்னதுக்கு கருடன் சொன்னதாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே என்று..!

உரிமையை உதறி எறிந்துவிட்டு போராட்டத்தை விட்டு தூர விலகி ஓடி.. அடிமையை விரும்பி ஏற்று அதற்குள்ளேயே வளமான வாழ்வை அமைத்துக் கொண்டு... அடிமை சுயத்தை அழிக்கும் அடிமை நாட்டை அழிக்கும் அடிமை உரிமையை அழிக்கும் என்று புலம்பெயர்ந்துள்ள அடிமைகள் தாயகத்தைப் பார்த்துச் சொல்ல அவர்களுக்கு தகுதி இருக்குமா.. பாம்பே சொல்லு..!

தாயக மக்களுக்கு தகாத சூழலை தக்க வகையில் கழிக்க அவர்களுக்கே உரித்தான உரிமை உண்டு. அதைப் புலம்பெயர்ந்துள்ள அடிமைகள் தீர்மானிக்க அல்லது விமர்சிக்க அருகதையற்றவர்கள்..! :P :lol:

Edited by nedukkalapoovan

தமிழர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனிய தமிழீழப் பகுதிகளில் வாழும் மக்களிற்காக மட்டும் நடத்தப்படவில்லை.

ஏராளம் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் தமிழீழம் கிடைத்தபின் தமிழீழத்திற்கு திரும்பவும் குடிபெயர்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள்.

ஏராளமான புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் தமிழீழ விடுதலைக்காக வெளிநாடுகளில் இரவுபகலாக அயராது உழைக்கின்றார்கள். தாயக விடுதலைக்காக பாடுபடுகின்றார்கள். வெறும் துவக்கை தூக்கி அடிபடுவது மட்டுமல்ல போராட்டம், போராட்டத்திற்கு நாம் பல வழிவகைகளில் நாம் உதவமுடியும்.

எனவே, தாயக மக்களிற்கு அறிவுரை கூறும் தகுதி, தாயக மக்களை வழிநடாத்தும் தகுதி புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களிற்கு நிச்சயம் உண்டு...

புலிகளையும், மக்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பிரித்து நாசூக்கான முறையில் இங்கு வைக்கப்படும் விதண்டாவாதத்தில் ஒரு பயனும் இல்லை...

வடகிழக்கிற்கோ வடக்கிற்கோ அல்லது கிழக்கிற்கோ தமிழர் எப்பவாவது ஆளுனராக இருந்திருக்கிறாரா???? :lol::rolleyes::lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளையும்இ மக்களையும்இ தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பிரித்து நாசூக்கான முறையில் இங்கு வைக்கப்படும் விதண்டாவாதத்தில் ஒரு பயனும் இல்லை...

நாம் சாட்சியில்லாமல்

அத்தாட்சியில்லாமல் இங்கு அடுக்கவில்லை

1977 தேர்தலிலிருந்து

2005 தேர்தல்வரை தாயகமக்கள் சொன்ன தீர்ப்புப்படியே தான் செயற்கிடுகின்றோம்

சொல்கின்றோம்

செய்யுங்கள் என்று தீர்ப்பு வழங்கிவிட்டு

இல்லையென்பது விதண்டாவாதமே தவிர வேறென்ன????

குறுக்கால மட்டும்தான் போவன் என்றால்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.