Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர் கிழக்கின் ஆளுநராக நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனிய தமிழீழப் பகுதிகளில் வாழும் மக்களிற்காக மட்டும் நடத்தப்படவில்லை.

ஏராளம் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் தமிழீழம் கிடைத்தபின் தமிழீழத்திற்கு திரும்பவும் குடிபெயர்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள்.

ஏராளமான புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் தமிழீழ விடுதலைக்காக வெளிநாடுகளில் இரவுபகலாக அயராது உழைக்கின்றார்கள். தாயக விடுதலைக்காக பாடுபடுகின்றார்கள். வெறும் துவக்கை தூக்கி அடிபடுவது மட்டுமல்ல போராட்டம், போராட்டத்திற்கு நாம் பல வழிவகைகளில் நாம் உதவமுடியும்.

எனவே, தாயக மக்களிற்கு அறிவுரை கூறும் தகுதி, தாயக மக்களை வழிநடாத்தும் தகுதி புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களிற்கு நிச்சயம் உண்டு...

புலிகளையும், மக்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பிரித்து நாசூக்கான முறையில் இங்கு வைக்கப்படும் விதண்டாவாதத்தில் ஒரு பயனும் இல்லை...

இதையேதான் தாயகத்தில் உள்ள மிகுதி மக்களும் சொல்கின்றனர். தங்களையும் மேற்குலக நாடுகளுக்கு இடம்பெயர விடுங்கள்.. அல்லது சிங்களவனைட்ட என்றாலும் வாங்கி வாழ விடுங்கள் வசதியா இருந்து கொண்டு போராட்டத்துக்கு துவக்குத்தூக்காமலே பங்களிக்கின்றோம். போராட்டத்தில் துவக்குத் தூக்காமல் பங்களிக்க இலட்சக்கணக்கில் ஆக்கள் தயாராக இருக்கினம்..! பிரச்சனையே துவக்கோட வாறவனை எதிர்க்க ஆக்களில்லாமல் ஓடிப்போறதுதான்..!

புலிகள் வேறு மக்கள் வேறு என்று அரசு சொல்வதை நிரூபிப்பது போலவே தான் செயற்பாடுகள் இருக்கின்றன. அரசைப் பொறுத்தவரை ஆயுதரீதியாக தங்களை எதிர்ப்பவர்களை அது புலிகள் எங்கிறது. புகலிடத்தில் உள்ள தமிழர்கள் கூட துவக்குத் தூக்காமலே விடுதலைக்கு பங்களிப்புச் செய்வம் என்று நினைக்கிறார்கள். இதையே தாயக மக்களும் ஏன் நினைக்கக் கூடாது. அப்படி நினைச்சிட்டா புலிகள் வேற மக்கள் வேற என்று ஆகிறதோடு ஆயுதப்போராட்டத்தை நடத்த ஆளும் கிடைக்காது. யாருக்குத்தான் ஆயுதம் தூக்கி அடிபட்டு சாக ஆசை..!

எட்ட இருந்து குடும்பம் குட்டியோட என் ஜோய் பண்ணிக்கொண்டு உல்லாசமா வாழ்வை அமைத்துக் கொண்டு அப்பப்ப 1000 பவுணை டொலரை வைச்சுப் போராட்டம் நடத்துறதென்றால் யார்தான் வேணாம் என்று சொல்லுவான்..! ஆனால் உந்தப் போராட்டம் உரிமை பெற்றுத்தராது சிங்களவரை வசதியா குந்த வைக்க வகை செய்யும்..!

போராட்டம் அகிம்சை வழி தாண்டித்தான் ஆயுத வழிக்கு வந்தது..! காசு கொடுத்துப் போராட்டம் நடத்த முடியும் என்று கருதி இருந்தா அப்பவே காசைக் கொடுத்திட்டு போராட்டம் நடத்தி ஈழம் கண்டிருப்பார்கள். 20,000 போராளிகள் ஆயுதம் தூக்கி சாகனும் என்றது அவசியமில்லை. அவர்களுக்கும் வெளிநாடு வந்து அசைலம் அடிச்சு வாழ ஒன்று வழிதெரியாமல் ஆயுதம் தூக்கி அடிபடல்ல. அவங்க பிழைக்கத் தெரியாத முட்டாள்கள் எங்களைப் பாருங்க எங்க வாழ்வும் வளமா இருக்கு காசு கொடுத்து உங்கினை கோசம் போட்டு போராட்டத்துக்கு பங்களிப்புச் செய்யுற யுக்தி அவைக்குத் தெரியாததுக்கு..நாங்களா பாடு என்று கேட்கிறீர்கள் போல..!

ஆக நீங்கள் வெள்ளைக்காரனட்ட அடிமை வாழ்வை வாங்கி உல்லாச வாழ்வை அமைச்சுக்கொண்டு போராடுவீர்கள் தாயக மக்கள் நீங்கள் கொடுக்கிற காசுக்கும் குரலுக்கும் செவிமடுத்து கூலிகளாக போராட்டம் நடத்தி சாகனும்..! அப்படித்தானே...! அதுக்கு எனி தாயக மக்கள் தயார் இல்லை. அவையும் அசைலம் அடிச்சிட்டு பிரஜா உரிமை வாங்கிட்டு அப்புறமா இணையம் மூலமும் ஆர்ப்பாட்டம் மூலமும் காசு மூலமும் போராட்டத்தை நடத்தவே விரும்புகின்றனர். எல்லோரும் அப்படிப் போராடினால் இழப்பு இல்லாமல் மக்கள் போராட்டமா நடத்தலாம் தானே. வீணா ஏன் ஆயுதம் வாங்கி அடிபட்டு ஒரு பகுதி சாகனும்..! இப்படியான இலகு வழி இருக்க புலிகள் எதற்கு அடிபடுறாங்களோ..! தேவையில்லாம ஆமிட பலத்தை அதிகரிச்சதுதான் மிச்சம்..! புலம்பெயர்ந்த நாங்க சொல்லுற வழில போனா எல்லோரும் சுகமா இருந்து தாயகத்தில சிங்களவனட்ட இருந்து ஈழம் காணலாம் எல்லோ..! மாப்பிள்ளை உங்க திட்டம் கருத்தில் கொள்ளத்தக்கதாத்தான் இருக்குது. பாப்பம் தாயக மக்கள் நல்ல நடவடிக்கை எடுப்பாங்க. புலிகள் மட்டும் ஆயுதம் வைச்சுப் போராடனும் என்றது அவங்க தலைவிதி இல்லைத்தானே. அவங்களுக்கும் நல்ல வாழ்க்கை வெளிநாட்டில கிடைக்காமலா போகும்..! அப்புறம் காசு அனுப்பி போராடலாம் ஆயுதம் இல்லாமல்..! வேணுன்னா ரோபோ செய்து ஆமி கூட அடிபட விடுவம்..! புலம்பெயர்ந்த நாங்கள் சும்மாவா இருக்கிறம் ரோபேட்டிங் இஞ்சினியரிங் வரை படிக்கிறது ஏன்.. போராட்டம் நடத்தத் தானே..!

என்ன மாப்பிள்ளை.. நீங்க மணமகள் கனவோட உங்க புகலிடத்தில இருக்கிறீங்க.. ஆனா அங்க உங்க வயசுப் பையங்க மரணமாலையோட இருக்கிறாங்க..! நீங்க அவங்களை பலிகொடுத்து ஈழம் காணலாம் காசு மட்டும் போதும் இல்ல ஐநா முன்னால கூடி கொலிடே விசிட் செய்யுறது போதும் என்று இருக்கிறீங்க போல..! அது சரியாப்பட்டல்ல. காசு உழைச்சுக் கொடுத்தது போக ஆயுதம் தூக்க வா என்றா போக ரெடியா இருங்க.. ஒரு மாதத்தில ஈழம் பெற்றுத்தரலாம்..! இல்ல அது நடக்காது. சிங்களவன் ஆக்கிரமிக்கிறதை உங்க இருந்து காசால வாயால தடுத்து நிறுத்த ஈழத்தில் உங்க கூலிகள் அல்ல போராடுறது. புகலிட அடிமைகளுக்கு தாயகத்தை பார்த்து கட்டளை இட எந்த அருகதையும் இல்ல..! :lol::rolleyes:

  • Replies 53
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளையும்இ மக்களையும்இ தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பிரித்து நாசூக்கான முறையில் இங்கு வைக்கப்படும் விதண்டாவாதத்தில் ஒரு பயனும் இல்லை...

நாம் சாட்சியில்லாமல்

அத்தாட்சியில்லாமல் இங்கு அடுக்கவில்லை

1977 தேர்தலிலிருந்து

2005 தேர்தல்வரை தாயகமக்கள் சொன்ன தீர்ப்புப்படியே தான் செயற்கிடுகின்றோம்

சொல்கின்றோம்

செய்யுங்கள் என்று தீர்ப்பு வழங்கிவிட்டு

இல்லையென்பது விதண்டாவாதமே தவிர வேறென்ன????

குறுக்கால மட்டும்தான் போவன் என்றால்...

1977 வட்டுக்கோட்டைப் பிரகடனத்தில் எல்லோரும் அகதியாய் அசைலம் அடிச்சு வெளிநாட்டில செட்டிலாகி அங்கங்க ஈழம் பிரகடனம் செய்யச் சொன்னாங்களாக்கும்..!

2005 இல தாயகத்தில நாங்க போராடுறம் புலம்பெயர்ந்துள்ளவை காசு தந்திட்டு கச்சிதமா இருந்தா போராட்டம் வெல்லும் என்று மக்கள் உறுதி தந்தவையாக்கும்..!

தமிழர்கள் புலம்பெயரப் பெயரத்தான் உலகில் போராட்டம் பயங்கரவாதமா பிரகடனப்படுத்தப்பட்டு.. இன்று புலிகள்.. தங்கள் அனைத்துலகச் செயலகங்களையும் இழந்து ராஜதந்திரத் தொடர்புகளுக்கும் இடமில்லாமல் நிற்கின்றனர். இந்த நிலை 1986 இருக்கவில்லை..! இப்ப புரியனும்.. புலம்பெயர்ந்த புண்ணியாவான்கள் போராட்டத்துக்கு வழங்கித் தந்த சர்வதேச அங்கீகாரத்தை..! உள்ளதையும் கெடுத்த குட்டிச்சாத்தான்கள்..! இப்பவும் இங்க வந்து காட்டிக் கொடுத்துக் கொண்டு போராட்டத்தை உச்சரிச்சு அசைலம் அடிச்சு அதன் வலிமையே கேவலப்படுத்திய கூட்டம்..! காசு கொடுத்து போராடினமாம். உங்கள் குரலை எந்த அரசு கவனத்தில எடுத்து என்ன செய்துது.. இப்பவும் புலிகள் தான் குரல் கொடுக்க வேண்டி இருக்குது. உங்களால உங்க இருந்து திருப்பி அனுப்பிறதைக் கூட தடுக்க வக்கில்ல.. உங்க இருந்து தாயக மக்களுக்கு போராடக் கற்றுக் கொடுக்கினமாம்..! போராடப் பயந்து அடிமைக்குள் வாழ வந்த பயந்தான் கொள்ளிங்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போராட மாட்டன்

காசு கொடுக்க மாட்டன்

தியாகம்பண்ணமாட்டன்

செய்யிறசனையும் தடுப்பன்

ஆனால் தமிழீழக்குழந்தை பிறந்தா கொஞ்சுவன்

அசிங்கமான விவாதம

  • கருத்துக்கள உறவுகள்

போராட மாட்டன்

காசு கொடுக்க மாட்டன்

தியாகம்பண்ணமாட்டன்

செய்யிறசனையும் தடுப்பன்

ஆனால் தமிழீழக்குழந்தை பிறந்தா கொஞ்சுவன்

அசிங்கமான விவாதம

புலம்பெயர்ந்த மலட்டுகளை நம்பி தமிழீழக் குழந்தையை பிறப்பித்து கொஞ்ச நினைப்பது தவறு என்பதே வாதம்..! தாயக மக்கள் தான் நொந்தும் அதைச் செய்ய வேண்டும் உறுதியோடு..! அவர்களை நோக்கி விமர்சிக்கவும் கட்டளையிடவும் புலம்பெயர்ந்த மலட்டுகளுக்கு உரிமையில்லை..! (மலடுகள் என்ற பதம் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் இடப்படவில்லை. மலடு என்றால் இயலாமைகள் என்று கொள்ளப்பட வேண்டும்..!) :rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி,

இங்கே தாயக மக்களுக்கு கட்டளை போட்டது யார்? எவ்வாறான கட்டளை போட்டார்கள்

?

புலத்தில் இருந்து போராட தாயகம் போனவர்கள் இருக்கிறார்கள்.

தாயகத்திலும் புல்லுருவிகள் இருக்கிறார்கள்.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி,

இங்கே தாயக மக்களுக்கு கட்டளை போட்டது யார்? எவ்வாறான கட்டளை போட்டார்கள்?

எனவே, தாயக மக்களிற்கு அறிவுரை கூறும் தகுதி, தாயக மக்களை வழிநடாத்தும் தகுதி புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களிற்கு நிச்சயம் உண்டு...

இந்தத் தலைப்பே அர்த்தமற்றது. யாழ்ப்பாணம் யாழ்ப்பாணக் கட்டளைத்தளபதியின் கையில் இருக்கிறது. கிழக்கு மாகாணம் கிழக்கின் கட்டளைத்தளபதியின் கையில் இருக்கிறது. இராணுவ மேலாதிக்கத்தை நிறுவ அனுமதித்ததன் மூலம் சிங்களவர்கள் தாங்கள் நினைத்ததை கிழக்கிலோ வடக்கிலோ செய்ய முடியும் என்ற நிலை இருக்கும் போது ஆளுனர் நியமனம் சிங்கள மயமாக்கல் என்பதாக கருத்துரைக்கப்படுதல் சரியான நிலையல்ல. ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இருப்பு வழி செய்தவர்கள் தான் சிங்கள மயமாக்கலுக்கு உதவிக் கொண்டிருக்கின்றனர்..!

தாயக மக்களுக்கு உள்ள தற்போதைய ஒரே தேர்வு சிங்கள நிர்வாக இயந்திரத்தோடு சேர்ந்தியங்கி தங்களின் வாழ்வைத் தக்க வைத்து தகாத காலத்தை தந்திரமாகக் கழிப்பதுதான். ஆனால் இதை புகலிடத்தில் சொகுசா இருந்து கொண்டு சிங்கள மயமாக்கம் மண்ணாங்கட்டியாக்கம் என்று எடுத்து விடுறது அநாவசியமானது என்பதையே சொல்லியுள்ளோம். இடையில் புலம்பெயர்ந்தவர்கள் தாயக மக்களுக்கு அறிவுரையும் வழிநடத்தலும் வழங்க முடியும் என்றது மிகவும் தவறான அணுகுமுறை அதற்கான நிலை புகலிடத்தில் உள்ளவர்களுக்கு உண்டா..என்பதை அவர்களே அறிய வேண்டும். தாயக மக்கள் தான் தீர்மானிக்க முடியும் தங்கள் தலைவிதியை. அடிமை வாழ்வு வாழும் புகலிடத்தில் உள்ளவர்களுக்கு தாயக மக்களுக்கு அறிவுரை சொல்ல அருகதையில்லை. தேவையென்றால் தாயக மக்களின் மனிதாபிமான தேவைகள் கருதி தார்மீக ஆதரவை வழங்குவதே இவர்களின் ஒரே தேவை..! தாயக மக்களின் துயரத்தை வைத்து வயிறு வளர்க்கும் கூட்டம்.. அவர்களுக்கு அறிவுரை சொல்லவும் இது செய் அது செய் போராடு அடிமையாகு என்று சொல்ல எந்த அருகதையும் கிடையாது..! :lol:

அது சரி,

இங்கே தாயக மக்களுக்கு கட்டளை போட்டது யார்? எவ்வாறான கட்டளை போட்டார்கள்

?

புலத்தில் இருந்து போராட தாயகம் போனவர்கள் இருக்கிறார்கள்.

தாயகத்திலும் புல்லுருவிகள் இருக்கிறார்கள்.

20,000 போராளிகளின் மரணத்தைக் காட்டி 10 இலட்சம் பேர் புலம்பெயர முடிந்தது என்றால்.. அந்தப் 10 இலட்சத்தில் எத்தனை மீண்டும் போராடப் போனது..??!

10 இலட்சம் தமிழர்களை கொண்டுள்ள தாயத்தில் உள்ள புல்லுருவிகளின் எண்ணிக்கை பெரிசா புகலிடத்தில் பதுங்கிக் கொண்டவர்கள் பெரிசா..?! ஏன் புகலிடத்தில் புல்லுருவிகள் இல்லையா..??! :rolleyes::lol:

கிழக்கில் தமிழர் வசம் இருந்த பகுதிகளையெல்லாம் சிங்களவர்களிடம் ஏறக்குறைய தாரை வார்த்து விட்டோம்!!!! இனி சிங்களவன் இருந்தாலென்ன? சோனகன் இருந்தாலென்ன? ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்ரெனெற்றில் வெட்டிப் போராட்டம் ந்டாடத்தும் எங்களுக்கே புலத்து வாழ்க்கை அடிமை வாழ்க்கை என்று விளங்கிவிட்டதென்றால், உண்மையான மறத்தமிழனுக்கு அது எப்ப விளங்கியிருக்க வேண்டும்? அது விளங்கி ஆண்டுகள் பலவாகிறது. போராட்டத்துக்கு உயிரைக் குடுத்து பலம்சேர்ப்போர் புகலிடத்தில்ல உள்ளனர். எண்ணிக்கை போதாது என்பது உண்மையே.

புகலிடத்தில் உள்ளவர்கள் போராடப்போய்த்தான் பங்களிப்புச் செய்யவேண்டுமென்ற உங்கள் உணர்வு பூர்வமான கருத்து எந்தவிதமான பலனையும் தராது. புகலிடத்திலுள்ளவர்கள் அனைவரும் ஒருகதைக்கு சென்று போராடினால் தமிழீழம் கிடைக்கும் என்று நினைப்பது தவறு. இன்றைக்கு சிங்களவனுக்கு இணையாக போராட்டத்தை நகர்த்த புகலிடத்தில் பலவழிகளில் வேலை நடக்கிறது. அந்த வேலைகள் இல்லாமல் என்றுமே போராட்டம் வெல்லாது. எனவே புகலிடத்திலுள்ளோர் ப்ராக்டிகலாக என்ன செய்யவேண்டுமென்று அலசுவது சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு சொன்னதுக்கு கருடன் சொன்னதாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே என்று..!

உரிமையை உதறி எறிந்துவிட்டு போராட்டத்தை விட்டு தூர விலகி ஓடி.. அடிமையை விரும்பி ஏற்று அதற்குள்ளேயே வளமான வாழ்வை அமைத்துக் கொண்டு... அடிமை சுயத்தை அழிக்கும் அடிமை நாட்டை அழிக்கும் அடிமை உரிமையை அழிக்கும் என்று புலம்பெயர்ந்துள்ள அடிமைகள் தாயகத்தைப் பார்த்துச் சொல்ல அவர்களுக்கு தகுதி இருக்குமா.. பாம்பே சொல்லு..!

தாயக மக்களுக்கு தகாத சூழலை தக்க வகையில் கழிக்க அவர்களுக்கே உரித்தான உரிமை உண்டு. அதைப் புலம்பெயர்ந்துள்ள அடிமைகள் தீர்மானிக்க அல்லது விமர்சிக்க அருகதையற்றவர்கள்..! :P :lol:

மற்றவர்களை யாரென்றே தெரியாத பரதே*க்கும் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் எழுத அருகதையில்லை.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காகப் போராடுபவர்கள் தாயகத்தில் உள்ளவர்கள் மட்டும் என்றால் தமிழீழப் போராட்டம் எப்பவோ செத்துப்போயிருக்கும்.. தமிழீழப் போராட்டம் இவ்வளவு தூரம் நகர்ந்து வந்தது எப்படியென்று தெரியாமலே பிதற்றுவதை நிறுத்த வேண்டும்.. பிரான்சில் 19 பேரைக் கைது செய்து அதில் 15 பேரை நான்கு மாதம் உள்ளே தள்ளியுள்ளனர். அவர்களும் அடிமை வாழ்வை சொகுசு வாழ்வாகக் கருதி தம் செல்வத்தைப் பெருக்கி, குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு வாழ்ந்திருக்கலாமே..

அது ஏன் புலம் பெயர்ந்த தமிழருக்குத்தான் அதிகமாக சுதந்திரத்தின் தேவையும் அடிமையாய் வாழுறதில் உள்ள அவமானமும் அதிகமாகத் தெரியுது. எனக்கு தெரிந்த சிலர் இங்கே இருக்கும் போது போராட்டம் என்றால் ஓடும் புளியம் பழமுமாக இருந்தவர்கள் அங்கு போனதும் என்னமாய் அரசியல் விளக்கம் தருகிறார்கள்.

ஒரு தரம் இங்க அடிவேண்டி அடிவேண்டி சுரணை கெட்டுப்போய் இருக்கிற உண்மையான அகதித்தமிழனை ஒருக்கா புலம் பெயர்ந்த நாடுகளுக்கு அனுப்பி எடுத்தால் நல்லது போல படுகுது.

எவ்வளவு வீதமான புலம்பெயர்ந்த தமிழர் நாட்டிலையும் மக்களிலையும் எவ்வளவு அக்கறையாக இருக்கினமென்டது வெளிநாடுகளில நடந்த போராட்டங்களை பார்க நல்லாவே தெரியுது. அதிலையும் சிலபேர் தாங்கள் இரகசியமாக ஆதரவு கொடுக்கினமாம். வெளியில காட்டமாட்டினமாம். பிரான்சில 9 ஆம் திகதி எவ்வளவு பேர் வருகினம் எண்டு பாப்பம்?

இங்க களத்திலையும் "அவசரமா செய்யவேண்டிய நடவடிக்கைகள்" எண்டு தலைப்பை போட்டதோட சரி. அரட்டையில இருக்கிற ஆர்வம் இதுகளைதானும் செய்யிறதில இல்லை. ஒரு நாளைக்கு 2.09 எண்ட வேகத்தில சனம் சாகுது.

குறைகளை சுட்டிக்காட்டியவுடன எவ்வளவு பேர் வரிஞ்சு கட்டிக்கொண்டு வாரியள்? செயற்பாட்டை பற்றி எழுதினா ஒரு குருவியையும் காணேல?

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் தமிழர் வசம் இருந்த பகுதிகளையெல்லாம் சிங்களவர்களிடம் ஏறக்குறைய தாரை வார்த்து விட்டோம்!!!! இனி சிங்களவன் இருந்தாலென்ன? சோனகன் இருந்தாலென்ன? ...

புலிகள் மயிர்க்கூச்செறியும் தாக்குதல்களை நடாத்தாமல் பின்வாங்கிவிட்டதால் "சப்"பென்று போய்விட்டதாக்கும்.. :mellow:

கிழக்கில் தேசியத்தை நேசிக்கும் தமிழர்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க களத்திலையும் "அவசரமா செய்யவேண்டிய நடவடிக்கைகள்" எண்டு தலைப்பை போட்டதோட சரி. அரட்டையில இருக்கிற ஆர்வம் இதுகளைதானும் செய்யிறதில இல்லை. ஒரு நாளைக்கு 2.09 எண்ட வேகத்தில சனம் சாகுது.

குறைகளை சுட்டிக்காட்டியவுடன எவ்வளவு பேர் வரிஞ்சு கட்டிக்கொண்டு வாரியள்? செயற்பாட்டை பற்றி எழுதினா ஒரு குருவியையும் காணேல?

சாணக்கியன்,

உங்களையும் ஒரு புலம்பெயர்ந்த தமிழனாகவே கருதுகிறோம். கொழும்பில் இவ்வளவு வசதிகளுடன் கை ஸ்பீட் இன்ரெனெட் இல் கருத்து எழுதுகிறீர்கள். ஒரு சராசரித்தமிழனுக்கு அங்கு இருக்கும் பிரடச்சனை உங்களுக்கு இருக்கும் என நினைக்கவில்லை. பிடிபட்டால் 1 அவரிற்குள் வெளியில வர உங்களது தொழிலூடாகவோ அல்லது கல்விநிறுவனமூடாகவோ அல்லது உறவினரூடாகவோ வசதியிருக்கும். இப்படிப்பட்ட நிலையில் இப்படி திட்டங்களுக்கு உங்களது பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம் என்பதை மறக்கவேண்டாம். சில சமயங்களில் அங்கு சராசரி மனிதன் படும் கஸ்டங்களில் நீங்கள் ஏறி சவாரி செய்வது கவலையளிக்கிறது.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்களை யாரென்றே தெரியாத பரதே*க்கும் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் எழுத அருகதையில்லை.. :rolleyes:

கிருபன்,

இந்தக்கருத்தை கண்டிக்கிறேன். மற்றவர் யாரென்று பார்த்து இங்கு யாரும் கருத்து எழுதுவதில்லை. கருத்தை மட்டும் தான்பார்ப்பது. மேலும், நெடுக்ஸின் கருத்து தொப்பி அளவானவருக்கு மட்டுமே என்பதை மறக்கவேண்டாம்.

தொப்பி எனக்கு அளவாக வந்திருக்கு! :mellow:

பல காலமாக யாழ் களத்தினூடாக முகமூடிக்குள் இருந்து கருத்து எழுதும் எல்லோரும் வேறெந்த வேலைகளும் செய்வதில்லை என்று தப்பான அபிப்பிராயம் கொள்ளத் தேவையில்லை.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல காலமாக யாழ் களத்தினூடாக முகமூடிக்குள் இருந்து கருத்து எழுதும் எல்லோரும் வேறெந்த வேலைகளும் செய்வதில்லை என்று தப்பான அபிப்பிராயம் கொள்ளத் தேவையில்லை.. :rolleyes:

அப்படி நீங்கள் செய்யும் வேலைகள் சொல்லாதவரை இங்கு எல்லாருக்கும் தெரிய நியாயமில்லைத் தானே. அப்படித் தெரியாத போது, வேலை செய்யாத ஒரு தமிழனுக்குச் சொல்லும் விடயங்களை நீங்கள் உங்களுக்கு என்று எடுத்து ப*** போன்ற பாரதூரமான சொற்களை பாவிக்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

இனி உங்களைப் போல இங்கு எல்லாரும் நானும் வேலை செய்கிறேன் உனக்கு என்ன தெரியும் என்ற ரீதியில் தனிநபர் தாக்குதல் தொடுத்தால் என்ன செய்வது. யார் செய்கிறார்கள் யார் செய்யவில்லை என யாருக்குத் தெரீயும்?

பண்பாக எழுதவேண்டும் என்றால் சிலவிடயங்களை உறைக்குமாப்போல் சொல்லமுடியாது (இது எனது தனிப்பட்ட இயல்பு!).

இனி உங்களைப் போல இங்கு எல்லாரும் நானும் வேலை செய்கிறேன் உனக்கு என்ன தெரியும் என்ற ரீதியில் தனிநபர் தாக்குதல் தொடுத்தால் என்ன செய்வது. யார் செய்கிறார்கள் யார் செய்யவில்லை என யாருக்குத் தெரீயும்?

உங்களின் இந்தக் கருத்துடன் ஒத்துப் போகின்றேன்.. முகமூடிக்குள் இருப்பவர்களின் உண்மையான முகம், நோக்கம் என்பன தெரியச் சாத்தியமில்லை. எனவே முகமூடிக்குள் இருந்து சொல்லும் விடயங்களை எல்லோரும் உண்மையென்று நம்புவதில்லை.. இதனால்தான் பலதிட்டங்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை..

என்ன செய்ய உண்மை தான்.

சொல்லப்படும் விடயம் என்ன என்பதை விடுத்து சொல்லுபவர் யார் என்று பார்க்கும் கலிகாலம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

இனி உங்களைப் போல இங்கு எல்லாரும் நானும் வேலை செய்கிறேன் உனக்கு என்ன தெரியும் என்ற ரீதியில் தனிநபர் தாக்குதல் தொடுத்தால் என்ன செய்வது. யார் செய்கிறார்கள் யார் செய்யவில்லை என யாருக்குத் தெரீயும்?

இங்கு யாரும் புலுடாவிடமுடியாது - தம்பி

எல்லாம் அவனுக்கு தெரியும்

இங்கு எல்லாமே கணக்கிலுண்டு

செய்தது

செய்யாதது

செய்வித்தது

செய்யவிடாதது

செய்ததாக கதை விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இன்ரெனெற்றில் வெட்டிப் போராட்டம் ந்டாடத்தும் எங்களுக்கே புலத்து வாழ்க்கை அடிமை வாழ்க்கை என்று விளங்கிவிட்டதென்றால், உண்மையான மறத்தமிழனுக்கு அது எப்ப விளங்கியிருக்க வேண்டும்? அது விளங்கி ஆண்டுகள் பலவாகிறது. போராட்டத்துக்கு உயிரைக் குடுத்து பலம்சேர்ப்போர் புகலிடத்தில்ல உள்ளனர். எண்ணிக்கை போதாது என்பது உண்மையே.

புகலிடத்தில் உள்ளவர்கள் போராடப்போய்த்தான் பங்களிப்புச் செய்யவேண்டுமென்ற உங்கள் உணர்வு பூர்வமான கருத்து எந்தவிதமான பலனையும் தராது. புகலிடத்திலுள்ளவர்கள் அனைவரும் ஒருகதைக்கு சென்று போராடினால் தமிழீழம் கிடைக்கும் என்று நினைப்பது தவறு. இன்றைக்கு சிங்களவனுக்கு இணையாக போராட்டத்தை நகர்த்த புகலிடத்தில் பலவழிகளில் வேலை நடக்கிறது. அந்த வேலைகள் இல்லாமல் என்றுமே போராட்டம் வெல்லாது. எனவே புகலிடத்திலுள்ளோர் ப்ராக்டிகலாக என்ன செய்யவேண்டுமென்று அலசுவது சிறந்தது.

புகலிடத்தில் உள்ளவர்களால் (பெரும்பாலவானவர்கள்) எனிப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவே முடியாது. அந்தளவுக்கு அவர்களின் மனநிலை சொகுசு வாழ்க்கையோடு ஊறிவிட்டது..!

புலம்பெயர்ந்தவர்கள் இல்லை என்றால் போராட்டம் இறந்திருக்கும் என்றது போல சொல்கின்றார்கள்..! இது மிகப்பலவீனமான சிந்தனை. உலக நாடுகள் நினைத்திருந்தால் சகல வழிகளிலும் இவர்கள் அனுப்பும் பணத்தை பிறீஸ் பண்ணி இவர்களின் பங்களிப்பை முற்றாக தடுத்து போராட்டத்தை அழித்தே இருக்கலாமே..?! ஏன் முனையவில்லை..! விடுதலைப்புலிகள் நிதி சார்ந்தும் 100% புலம்பெயர்ந்தவர்களை தான் மட்டும் தங்கி இருக்கின்றனர் என்பது அப்பட்டமான உண்மையை உணராத பொய்..!

போராட்டத்துக்கு மேலதிகபலமாக மட்டுமே புலம்பெயர்ந்தவர்கள் செய்யும் உதவிகள் இருக்கின்றன. போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படாவிட்டால் அடிமைத்தமிழர்கள் அசைலம் அடிக்க ஒரு மண்ணாங்கட்டியும் கிடைத்திருக்காது..! ஆக போராட்டத்தைக் காட்டி வாழ்க்கையைத் தீர்மானித்தவர்கள் இன்று அந்த போராட்டத்தை இடர்களின் மத்தியிலும் நகர்த்திக் கொண்டிருக்கும் மக்களை நோக்கி அங்க சிங்களமயமாக்கம் இங்க சிங்களமயமாக்கம் என்று புலம்புவதை நிறுத்தி அந்த மக்களுக்கு அவர்களின் இடர்களில் இருந்து விடுவிக்க என்ன மனிதாபிமானப்பணி செய்கின்றனர்..! அது கூட தடுக்கப்படுகிறதா..??! புலிகளுக்குத்தான் உதவ முடியாது என்றால் ஏன் மக்களுக்கு உதவ ஏன் போகிறார்கள் இல்ல.. முன் வருகிறார்கள் இல்லை..!

இன்று உலகெங்கும் புலிகளுக்குத் தடை. நிதிகள் பிறீஸ் பண்ணப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்தவர்களின் குரல்களை வெள்ளைக்காரனின் நாய் கூட செவிமடுப்பதில்லை..! அப்படி இருக்க.. இவர்கள் தான் போராட்டததை நகர்த்திக் கொண்டிருக்கிறார்களாம். சவாலாக சொல்கின்றோம்.. இந்தப் புலம்பெயர்ந்த புளுகர்கள் முடிந்தால் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு அனுப்பப்படும் அப்பாவிகளை என்றாலாவது தாயகத்துக்கு திருப்பி அனுப்பவதை தடுத்து நிறுத்த ஒற்றுமைப்படட்டும் பார்க்கலாம்..! உலக அரசுகளை அப்படிச் செய்யாமல் தடுக்கட்டும் பார்க்கலாம்..!

போராட்டத்துக்கு வாயால் வெட்டி வீழ்த்துவது நமக்கு தேவையில்லை. போராட்டத்தின் பலவீன நிலையை களைந்து பலமாக்கதேவையான அனைத்ததயும் செய்ய அனைவரும் முன்வர தயாராக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. தாயக மக்களுக்கு இது எமக்கு அது என்று பிரிச்சு வைச்சுப் போராட்டம் நடத்த புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றும் போராட்டத்தை அண்டி வாழாது வாழ வந்தவர்கள் அல்ல. போராட்டம் போட்ட பிச்சைதான் அவர்களின் புலம்பெயர் வாழ்வு..! தாயக மக்களின் அழுகுரல் தான் இவர்களின் அகதி அந்தஸ்து..! அதை உணர்ந்து அடக்கி வாசிப்பதோடு தங்கள் தார்மீகப் பங்களிப்பு காசு கொடுத்தல் மட்டுமல்ல அவசியம் என்றால் தாய் மண்ணிற்குப் போய் பலம் சேர்க்கவும் தயாராக இருக்க வேண்டும். தூர இருந்து கொடி பிடிப்பதோடு போராட்டம் வெற்றி பெறும் என்று புலம்பெயர்ந்தவர்கள் கருதினால்.. தாயக மக்களும் ஆயுதங்களைப் போட்டுவிட்டு கொடி பிடித்து தங்களை காப்பாற்றிக் கொள்ள உள்ள உரிமையையும் அங்கீகரிக்கத்தான் வேண்டும்..!

தாயக மக்கள் படும் துன்பங்களின் 20% தானும் புலம்பெயர்ந்தவர்கள் அனுபவிக்கவில்லை. ஆனால் தாங்கள் கஸ்டப்பட்டு 1000 பவுண்ஸ் அல்லது 10000 டொலர் கொடுத்ததும் அது படு கஸ்டமான காரியமாம்..! தாயக மக்கள் தங்க நகைகளாக அள்ளிக் கொடுத்தும் போராட்டத்தை நடத்தினர் என்பதை 1983-7 வரை புலம்பெயராமல் கிராமங்களுக்குள் சிக்குண்டு அரசின் கொடுமையில் வாடியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்..! தாயக மக்கள் தாம் முடிவெடுத்து போராட்டத்தை நகர்த்த தந்திரங்களைக் கையாள தயாராகவே உள்ளனர். ஆனால் புலம்பெயர்ந்துள்ளவர்கள் தான் தாயக மக்களையும் போராட்டத்தில் இருந்து விலக்கி மேலும் மேலும் புலம்பெயர வைத்து இன்று தமிழ் கிராமங்கள் சிங்கள முஸ்லீம் மக்களாலும் இராணுவத்தாலும் அபகரிகப்பட வாய்ப்புச் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது சிங்களவர்களைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை முறியடிக்க கிடைத்த ஒரு நடவடிக்கையின் வெற்றி என்றே கொள்ள வேண்டும்..! அதை முறியடிக்க வேண்டின் புலம்பெயர்ந்தவர்கள் தேவையான போது தாயகம் திரும்பி போராட்டம் நடத்த தயார் நிலையில் இருப்பதோடு சகல வழியிலும் தாயக மக்களுக்கு ஈடாக போராட்டப் பங்காளிகளாக தங்களை எங்கிருப்பினும் வைத்திருக்க வேண்டும். காசு கொடுப்பதும்.. குரல் கொடுப்பதும் மட்டும் அல்ல இவர்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு...! இன்னும் பல...உண்டு..! அதைக் கூட அறியாதவர்களாக சுயநலவாதிகளாகவே அநேக புலம்பெயர்ந்தவர்கள் போராட்டத்தில் இருந்தும் விலகி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்..! இந்த நிலை களையப்பட வேண்டும்..! அனைவரும் ஒரே நிலையில் வேறுபாடுகள் இன்றி போராட்டத்தை நகர்த்திச் செல்ல முனையும் போது சர்வதேச தடைகளையும் மீறி போராட்டத்தை நகர்த்தச் செய்ய முடியும். அதுவே எதிரியின் சூழ்சிகளை முறியடிக்கும்..தமிழரின் பலமாக இருக்கும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குருவிக்கு விசா முடிந்து திரும்பிப் போகச் சொல்லிக் கடிதம் வந்திட்டுது போலிருக்கிறது. Work permit உம் எடுத்துக் கொடுக்க ஒருவரும் உதவில்லையாக்கும். அதுதான் புலம்பெயர்ந்தவர்களை இப்படிப் போட்டுத்தாக்குது! :rolleyes::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

குருவிக்கு விசா முடிந்து திரும்பிப் போகச் சொல்லிக் கடிதம் வந்திட்டுது போலிருக்கிறது. Work permit உம் எடுத்துக் கொடுக்க ஒருவரும் உதவில்லையாக்கும். அதுதான் புலம்பெயர்ந்தவர்களை இப்படிப் போட்டுத்தாக்குது! :mellow::lol:

தனிநபர்களை அவர்கள் மீதான தாக்குதல்களள இதற்குள் இழுப்பது அவசியமற்றது. கருத்துப் பகர முடியும் என்றால் பகர வேண்டியது..! இன்றேல் விலகி இருப்பது நன்று..! நெடுக்காலபோவனை இன்னொருவராக நோக்கி கருத்துப் பகர்வது பாவம் யாரோ இன்னொருவரை சந்தேகத்தின் பெயரால் தாக்குவதாகும்..! இது மிகவும் கண்டிக்கத்தக்க நிலை இங்கு..!

நாம் இங்கு வந்தது தொட்டே புலம்பெயர்ந்தவர்களின் நடவடிக்கைகள் பலவற்றில் அதிர்ப்திகொண்டே உள்ளோம். நியாயமான தாயக்கபற்று உள்ள பலருக்கும் இந்த நிலை உள்ளது. நிச்சயம் அசைலம் என்ற பெயரில் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அவர்களின் உயிர்த் தியாகத்தால் எழுந்த போராட்டத்தைக் காட்டி எமது வாழ்க்கையை வசதியாக்க நாம் நினைக்கவே மாட்டோம்..! அதற்கு அவசியமும் இல்லை..!

புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய நிறைய விடயங்கள் எம்மிடம் இருக்கிறது. அசைலம் அடிக்க வழங்கும் ஸ்ரேற்மென்றில இருந்து. விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவம் போன்ற சொற்தொடர்கள் பாவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கைகள் எண்ணிலடங்காதவை. இதன் மூலம் எமது போராட்டம் பற்றிய பல தப்பபிப்பிராயங்கள் பல நாடுகளின் நீதித்துறையில் விதைக்கப்பட்டுள்ளது..! பரிஸ்ரெர்ஸ் கூட பயங்கரவாதிகள் என்றே புலிகளை உச்சரிக்கின்றனர். இந்த நிலை 15 வருடங்களுக்கு முன்னர் இருக்கவில்லை..! இதற்குக் காரணம் யார்..! தாயகத்தில் உரிமைக்காகப் போராட வெளிக்கிட்டவர்கள் செய்த தியாகம் இவர்களுக்கு அசைலம் அடிக்க ஆதாரம் வழங்கத்தானா..??! இரத்தக் கண்ணீர் வருகிறது... இந்தச் சுயநலம் பிடித்த புகலிடத்தமிழர்களை நோக்கும் போது. அப்பட்டமான பொய்களைப் புலிகள் மீது கூட சொல்லித்தான் அசைலம் அடிக்கின்றனர்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்கள் படும் துன்பங்களின் 20மூ தானும் புலம்பெயர்ந்தவர்கள் அனுபவிக்கவில்லை. ஆனால் தாங்கள் கஸ்டப்பட்டு 1000 பவுண்ஸ் அல்லது 10000 டொலர் கொடுத்ததும் அது படு கஸ்டமான காரியமாம்..! தாயக மக்கள் தங்க நகைகளாக அள்ளிக் கொடுத்தும் போராட்டத்தை நடத்தினர் என்பதை 1983-7 வரை புலம்பெயராமல் கிராமங்களுக்குள் சிக்குண்டு அரசின் கொடுமையில் வாடியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்..! தாயக மக்கள் தாம் முடிவெடுத்து போராட்டத்தை நகர்த்த தந்திரங்களைக் கையாள தயாராகவே உள்ளனர். ஆனால் புலம்பெயர்ந்துள்ளவர்கள் தான் தாயக மக்களையும் போராட்டத்தில் இருந்து விலக்கி மேலும் மேலும் புலம்பெயர வைத்து இன்று தமிழ் கிராமங்கள் சிங்கள முஸ்லீம் மக்களாலும் இராணுவத்தாலும் அபகரிகப்பட வாய்ப்புச் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது சிங்களவர்களைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை முறியடிக்க கிடைத்த ஒரு நடவடிக்கையின் வெற்றி என்றே கொள்ள வேண்டும்..! அதை முறியடிக்க வேண்டின் புலம்பெயர்ந்தவர்கள் தேவையான போது தாயகம் திரும்பி போராட்டம் நடத்த தயார் நிலையில் இருப்பதோடு சகல வழியிலும் தாயக மக்களுக்கு ஈடாக போராட்டப் பங்காளிகளாக தங்களை எங்கிருப்பினும் வைத்திருக்க வேண்டும். காசு கொடுப்பதும்.. குரல் கொடுப்பதும் மட்டும் அல்ல இவர்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு...! இன்னும் பல...உண்டு..! அதைக் கூட அறியாதவர்களாக சுயநலவாதிகளாகவே அநேக புலம்பெயர்ந்தவர்கள் போராட்டத்தில் இருந்தும் விலகி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்..! இந்த நிலை களையப்பட வேண்டும்..! அனைவரும் ஒரே நிலையில் வேறுபாடுகள் இன்றி போராட்டத்தை நகர்த்திச் செல்ல முனையும் போது சர்வதேச தடைகளையும் மீறி போராட்டத்தை நகர்த்தச் செய்ய முடியும். அதுவே எதிரியின் சூழ்சிகளை முறியடிக்கும்..தமிழரின் பலமாக இருக்கும்..!

இக்கருத்துடன் நானும் உடன்படுகின்றேன்

ஆனால் இக்கருத்துக்கு வருவதற்கு நீங்கள் கையாண்ட அடாவடித்தனம் பலபேரை ஊசலாட வைத்துவிடும்

எதிரி எதிர்பார்ப்பதும் அதுவே.

நன்றி

சுபமாய் முடித்ததற்கு..

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இங்கு வந்தது தொட்டே புலம்பெயர்ந்தவர்களின் நடவடிக்கைகள் பலவற்றில் அதிர்ப்திகொண்டே உள்ளோம். நியாயமான தாயக்கபற்று உள்ள பலருக்கும் இந்த நிலை உள்ளது. நிச்சயம் அசைலம் என்ற பெயரில் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அவர்களின் உயிர்த் தியாகத்தால் எழுந்த போராட்டத்தைக் காட்டி எமது வாழ்க்கையை வசதியாக்க நாம் நினைக்கவே மாட்டோம்..! அதற்கு அவசியமும் இல்லை..!

புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய நிறைய விடயங்கள் எம்மிடம் இருக்கிறது. அசைலம் அடிக்க வழங்கும் ஸ்ரேற்மென்றில இருந்து. விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவம் போன்ற சொற்தொடர்கள் பாவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கைகள் எண்ணிலடங்காதவை. இதன் மூலம் எமது போராட்டம் பற்றிய பல தப்பபிப்பிராயங்கள் பல நாடுகளின் நீதித்துறையில் விதைக்கப்பட்டுள்ளது..! பரிஸ்ரெர்ஸ் கூட பயங்கரவாதிகள் என்றே புலிகளை உச்சரிக்கின்றனர். இந்த நிலை 15 வருடங்களுக்கு முன்னர் இருக்கவில்லை..! இதற்குக் காரணம் யார்..! தாயகத்தில் உரிமைக்காகப் போராட வெளிக்கிட்டவர்கள் செய்த தியாகம் இவர்களுக்கு அசைலம் அடிக்க ஆதாரம் வழங்கத்தானா..??! இரத்தக் கண்ணீர் வருகிறது... இந்தச் சுயநலம் பிடித்த புகலிடத்தமிழர்களை நோக்கும் போது. அப்பட்டமான பொய்களைப் புலிகள் மீது கூட சொல்லித்தான் அசைலம் அடிக்கின்றனர்..! :rolleyes:

என்ன செய்ய? முன்பெல்லாம் படிப்பில் கெட்டிக்காரர்கள்தான் "சீமை"க்கு வந்து குடியேறினார்கள்.. போராட்டம் ஆரம்பித்தபின்னர் எல்லோராலும் "சீமை"க்கு வரமுடிஞ்சுது. இதனால லண்டனில் படிக்கிறோம் என்று சொல்லுவதே தற்போது கெளரவக்குறைச்சலாப் போயிடுத்து!

ஸ்ருடன்ற் விசாவில் வருவோர் இரவிரவாக ஒளிச்சு ஒளிச்சு வேலை செய்து படிக்கிறதுக்கும் இருக்கிறதுக்கும் நாய் படாத பாடு பட்டாங்கள்.. அகதியாய் வந்தவங்கள் அரசின் உதவியுடன் இதையெல்லாம் செய்து முன்னுக்கு வந்திட்டாங்கள் என்றபடியால் வயித்தெரிச்சல் இருக்கத்தானே செய்யும்..

தலைப்பை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்..

இப்படியான தமிழர்கள் போராட்டம் நடத்தி நாடு கண்டு நாட்டை விருத்தி செய்து வாழ்வார்கள். சிங்களவன் செய்யத் தவறியது ஓசில வீடும் கொடுத்து வாரம் ஒரு 500 ரூபாவும் கொடுத்து லோனில ரீவியும் வாசிங் மிசினும் பிரிஷ்சும் அவொனும் காரும் வாங்க வசதி செய்து கொடுத்திருந்தா போராட்டம் கொழும்பு வீதியிலேயே முடங்கி இருக்கும்..!

ஊரூரா அடுத்தவன் உழைப்பில வாழ நினைக்கிற தமிழருக்கு பெயர் புலம்பெயர் தமிழர்கள் என்றார் கூளிங் கிளாஸ்.. கிருபன்சு..! நல்ல அழகாய் புலம்பெயர் தமிழர்களின் தேவையைக் காட்டியதற்கு நன்றி..! இவர்களை நம்பி ஒரு போராட்டம்.. உயிர்க் கொடைகள்...பேரேமாற்றமே தாயகத்துக்கு வந்து சேரும்.. என்பதைச் சொல்வதே நம் நோக்கம். :icon_idea: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.