Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலுக்கு பதிலாக பிரதமராக மஹிந்த? – மைத்திரி-ராஜபக்ஷ தரப்பினர் ரகசிய சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு பதிலாக பிரதமராக மஹிந்த? – மைத்திரி-ராஜபக்ஷ தரப்பினர் ரகசிய சந்திப்பு!

download-2.jpg

இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருப்பதாக, நம்பகமான அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் பத்தரமுல்ல இல்லத்தில் இடம்பெற்றதாகவும், பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் இதில் பங்கேற்றனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தச்சந்திப்பின் போது இடைக்கால பரந்த கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றியும் இருதலைவர்களும் இணக்கம் கண்டுள்ளதாகவும் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மீண்டும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

இதன்போது, பரந்துபட்ட, கூட்டணி மேற்பார்வை அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டது. இந்தப் பேச்சுக்களில், பசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார். இந்தப் பேச்சுக்கள் வெற்றியளித்தால், மேற்பார்வை அரசின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார்.

அடுத்த சுற்றுப் பேச்சுக்கள், இரண்டு வாரங்களின் பின்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை சீஷெல்ஸ் நாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக செல்லும் இலங்கை ஜனாதிபதி, அங்கிருந்து திரும்பிய பின்னர் போலந்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணங்களின் பின்னர், இரண்டு வாரங்களில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை இலங்கை ஜனாதிபதி   சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பான வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சதித்திட்டம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதிக்குத் தெரியாத பல விடயங்களை, மைத்திரிபால சிறிசேனவிடம், மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகி, கூட்டு எதிரணியுடன் இணைந்து மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள சூழலிலேயே இந்த இரகசியச் சந்திப்பு பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன.

http://athavannews.com/ரணிலுக்கு-பதிலாக-பிரதமரா/

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சந்திப்பார்களா? MY3 + MR = இடைக்கால அரசாங்மா?

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின் இல்லத்தில்,  மைத்திரி – மஹிந்த ஆகியோர் கடந்த வாரம்  சந்தித்து இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையுமானால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை  இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பேருவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, “நாட்டை விற்பனை செய்தவர்களுடன் அரசாங்கத்தை அமைக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.com/

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பதவிக்கு வர தலையால் கிடங்கு கிண்டும் மகிந்த கைக்கொள்ளும்  இன்னுமொரு முயற்ச்சி.

தாமரை கட்சியில் ஒரு காலை வைத்துக் கொண்டே, சுதந்திரக் கட்சியில் எம்பி ஆக உள்ள மகிந்த, ஒரு நாள் தாமரை கட்சி தலைமை ஏற்றபது குறித்து பேசுவார். மறுநாள் ஐதேக யுடன் உறவுகளை முறித்து வந்தால், தானும், கூட்டாளிகளும் சுதந்திரக்  கட்சியில் ஐக்கியம் ஆவது குறித்து பேசுவார்.

அரசியல் அமைப்பின் 19 வது  திருத்த சட்ட படி, நான்கரை ஆண்டுகள் ஆடசியினைக் கலைக்கவோ, பிரதமரை நீக்கவோ ஜனாதிபதிக்குரிய ஆதிகாரம் இல்லாமல் போனது.

நாலரை ஆண்டுகள் நெருங்கும் வேளையில் ரணிலை நீக்குவதன் மூலம்   தான் பிரதமராக வருவது குறித்து சிலாகிக்கிறார்.  இங்கே சில பிரச்சனைகள் உள்ளன. சுதந்திர கட்சிக்கு 95 உறுப்பினர்கள் மட்டுமே உண்டு. ஐதேக கட்சிக்கு 105 உறுப்பினர்கள் உண்டு, ஆகவே பெரும் பான்மை இல்லை. ஆனாலும் தமிழ், முஸ்லீம் கட்சிகளுடன் சேர்ந்து அரசு அமைக்கப் போவதாக இந்த விசயத்தில் புரோக்கர் ஆக செயல் படும் புரோக்கர் திசாநாயக்க சொல்கிறார்.

சம்பந்தர் பற்றி  நமக்கு தெரியும். டபாரெண்டு குத்துக்கரணம் அடித்து, அங்காள  பக்கம் போய் நிண்டு... மகிந்தா எல்லாம் தருவார். அமைதியா இருங்கோ எண்டு சொல்லுவார். ஆனால் முஸ்லீம் கட்சிகள் நிலை அவ்வாறு சொல்ல  முடியாது. காரணம் மகிந்தா இனவாதி என அவர்கள் அல்ல, முஸ்லீம் மக்கள் தீவிரமாக நம்புவது.

அடுத்த முக்கியமான சிக்கல் மைத்திரின் நிலைமை.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டி இடலாம் என்று இந்தியாவில் மகிந்த சொன்னார்.  அரசியல் அமைப்பு சட்டப் படி முடியாது என்று தெரிந்தாலும் சொன்னார். இது நூல் விட்டு பார்க்கும் வேலை தான்.

இலங்கையின்  பல சட்ட நூல்களை எழுதிய பிரபல சட்ட விரிவுரையாளர், ஜி எல் பீரிஸ் தான் தாமரைக் கடசியின் தலைவர். இவர்தான் மகிந்த  மீண்டும் போட்டியிட தடை இல்லை என்று சொன்னவர். பல சட்ட நிபுணர்களினால் நிராகரிக்கப் பட்ட விடயம் இது.

இதன் கபடமான சட்ட நோக்கம் இப்போது தெளிவாக தெரிய வருகிறது.

அதாவது ரணிலை, நாலரை ஆண்டுகள் முடிவில் நீக்கி விட்டு, மகிந்தவை பிரதமர் ஆக்குவது. இன்னுமொரு அரசியல் அமைப்பு சட்ட விதிப்படி, பதவியில் இருக்கும் ஜனாதிபதி மரணித்தால், பிரதமர் ஜனாதிபதி ஆகி , எஞ்சியுள்ள இறந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் வரை பதவியில் இருக்கலாம்.

ஜனாதிபதி பிரேமதாசா இறந்தபோது இவ்வாறே பிரதமர் விஜயதுங்க ஜனாதிபதியானார். 

இப்போது நிலைமை தெரிகிறதா? மகிந்தா , மைத்திரி கையை, காலை பிடித்து பிரதமரானால்... முதல் வெடி மைத்திரிக்கு.... பிறகென்ன..... ஜனாதிபதி தேர்தலில் மூன்றாம் முறை நிற்க முடியாது என்று தான் சட்டம் சொல்லுது ராஜாக்களே . 

ஜனாதிபதி இறந்தால், பிரதமர், அவசர நிலையால் ஜனாதிபதி ஆகலாம் என்றும் அதே சட்டம் சொல்லுது என்பார்... 

அவ்வளவு தான். பிறகு சட்டம் மாறும். வெள்ளை வான்கள் ஓடும். பண வெள்ளமும் ஓடும்....

மகிந்தவை யாரும் அசைக்க முடியாது. இந்த திட்டத்துடன் தான் மகிந்தா  எம்பி ஆனார். ரணில் ஆப்படித்தார். இப்ப நாலரை ஆண்டுகள் முடிவதால், மகிந்தா  மீண்டும் காவடி தூக்கிறார் .

மைத்திரி, மகிந்த  கொடுக்கும் இத்த கையிறினை இறுக்கப் பிடிப்பாரா அல்லது ரணிலுடனே பயணிப்பாரா?

சுஜ ஆக்கம்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

இவர்கள் தங்களுக்குள் எந்த விதமாகவும் அடிபடுவார்கள். ஆனால் தமிழர் பிரச்சனை என வரும் போது இன ரீதியாக ஒன்றுபடுவார்கள்.
ஆனால்....
எங்கடை அரசியல் மூஞ்சூறுகள் எப்பவும் எட்டுத்திக்கிலையும் 68 விதமாய் பிரிஞ்சு நிக்குங்கள். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.