Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற வாகனங்களை துரத்திச் சென்ற காவல்துறையினர் மீது கல் வீச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற வாகனங்களை துரத்திச் சென்ற காவல்துறையினர் மீது கல் வீச்சு

October 14, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அனுமதி பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றி சென்ற வாகனங்களை காவல்துறையினர் துரத்திய போது , காவல்துறையினர் மீது சரமாரியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோவிலை அண்மித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் குறித்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்.அதன் போது மணல் அகழ்வில் ஈடுபட்டு இருந்த வாகனங்கள் காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் காவல்துறையினர் குறித்த வாகனங்களை துரத்தி சென்றுள்ளனர்.

சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம் காவல்துறையினர் வாகனங்களை துரத்தி சென்ற நிலையில் முள்ளி பகுதியில் காவல்துறையினரைக் கண்டு ஓடிய வாகனங்கள் சடுதியாக நிறுத்தப்பட்டு உள்ளன.அதனை அடுத்து காவல்துறையினர் வாகனங்களை நெருங்கிய போது வாகனத்தில் இருந்து காவல்துறையினர் மீது சரமாரியாக கல் வீச்சில் ஈடுபட்டனர். திடீர் கல்வீச்சு தாக்குதலினால் காவல்துறையினர் நிலை குலைந்து நின்றதை அடுத்து மீண்டும் வாகனங்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளன.குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://globaltamilnews.net/2018/99321/

  • கருத்துக்கள உறவுகள்

கல்லெறிக்கு  பயந்த  காவல் துறையினர்,  வெறுங் கையுடன் சென்று இருக்கிறார்கள் போலுள்ளது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் நெருங்கி கிட்டப்போன பின்புதான் தெரிந்து இருக்கும் தங்களுக்கு லஞ்ச பணம் தந்துவிட்டு மணல் ஏற்றுபவர்கள் என்று சொறிலங்கா ஏவல்துறைக்கு.

கல் எறியால் இவை பின்வாங்கினராம் நம்பும் படியா இருக்கு .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, கிருபன் said:

சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம் காவல்துறையினர் வாகனங்களை துரத்தி சென்ற நிலையில் முள்ளி பகுதியில் காவல்துறையினரைக் கண்டு ஓடிய வாகனங்கள் சடுதியாக நிறுத்தப்பட்டு உள்ளன.அதனை அடுத்து காவல்துறையினர் வாகனங்களை நெருங்கிய போது வாகனத்தில் இருந்து காவல்துறையினர் மீது சரமாரியாக கல் வீச்சில் ஈடுபட்டனர். திடீர் கல்வீச்சு தாக்குதலினால் காவல்துறையினர் நிலை குலைந்து நின்றதை அடுத்து மீண்டும் வாகனங்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளன.குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.