Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை…

October 19, 2018

Mohamed-Nizamdeen.jpg?resize=800%2C534

அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிஸாம்டீன்,  பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் நிஸாம்டீன், எனும் 25 வயதுடைய இளைஞர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்ரேலிய காவற்துறையினர் குற்றஞ்சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/99831/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“இலங்கை இளைஞனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்தது அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்”

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.australia.jpgமொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அத் திட்டம் தொடர்பான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிஸாம்தீன் தற்போது முழுமையாக பயங்கரவாத குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் குறித்த பயங்கரவாத குற்றச்சாட்டில் மொஹமட் நிஸாம்தீனை சிக்க வைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/42836

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த அவுஸ்ரேலிய வீரர் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் சகோதரர்

.......

பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் யார்? வேறு திசையில் செல்லும் நிசாம்தீன் வழக்கு!

e1ccf7129bef764359d960a4d47ea107-102785.jpg

பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவுஸ்ரேலிய பொலிஸார் மீளப்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் அவரது வீடு கடந்த வாரம் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது என டெய்லி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இலங்கை மாணவர் நிசாம்தீனின் பணியிட அலுவலகத்தின் மேசையில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பேட்டில், முக்கிய இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்வது உட்பட அரசியல் புள்ளிகளை படுகொலை செய்வதற்கும் திட்டமிடப்பட்ட தகவல்கள் எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் நிசாம்தீன் கைது செய்யப்பட்டு சிட்னி Goulburn பகுதியில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு சிறையில் ஒரு மாத காலம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால், கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் புத்தகத்திலுள்ள தகவல்கள் எதுவுமே நிசாம்தீனின் கையெழுத்தில் அமைந்தவை அல்ல என்பதை நிசாம்தீனும் அவரது தரப்பு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் எடுத்துக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் திருப்பப் பெற்றுக்கொண்டனர். இருப்பினும் அதற்கு முன்னரே நிசாம்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அப்படியெனில் பிரச்சினைக்குரிய தகவல்கள் அடங்கிய அந்த குறிப்பேட்டில் உள்ள அந்த கையெழுத்துக்கு சொந்தமானவர் யார் என்பதை கண்டறிவதில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரமப்பித்ததுடன் பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரியை கண்டுபிடித்து கைது செய்வதற்கு சகல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணைகளின் பிரகாரம், கிரிக்கெட் அணி வீரர் உஷமன் கவாயாவின் மூத்த சகோதரன் அர்சலன் கவாஜா பெற்றோருடன் தங்கியிருந்த Westmead வீட்டில் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கடந்த வாரம் தேடுதல் நடத்தப்பட்டது.

இருப்பினும் இந்த தேடுதலின்போது அர்சலன் கவாஜா கைது செய்யப்படவோ அல்லது எவ்வித குற்றச்சாட்டுகளோ பதிவுசெய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் வீரர் உஷமன் கவாயாவின் மூத்த சகோதரனான அர்சலன் கவாஜா நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பயங்கரவாத-தாக்குதல்-பின்/

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அவுஸ் அணியில் இப்படி ஒரு வீரர் இருக்கிறார் என்று இன்று தான் கேள்விப்படுகிறேன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

அவுஸ் அணியில் இப்படி ஒரு வீரர் இருக்கிறார் என்று இன்று தான் கேள்விப்படுகிறேன் 

35 ரெஸ்ற் மட்ச் விளையாடி இருக்கின்றார். ஏழு சென்சுரி அடித்திருக்கின்றார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்கக்கூடாதே!

http://m.espncricinfo.com/australia/content/player/215155.html

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎21‎/‎2018 at 3:09 AM, கிருபன் said:

35 ரெஸ்ற் மட்ச் விளையாடி இருக்கின்றார். ஏழு சென்சுரி அடித்திருக்கின்றார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்கக்கூடாதே!

http://m.espncricinfo.com/australia/content/player/215155.html

இலங்கையணி தோத்துக் கொண்டு போவதால் கிரிக்கெட் மேல் உள்ள ஆர்வம் குறைந்து போயிட்டுது? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.