Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

499391511_1221169306071586_8465471304025

  • 3 weeks later...
  • Replies 479
  • Views 91.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    எந்த மொழியிலும் இல்லாத சிறப்புக்கள், அன்னைத் தமிழில் .

  • ஆணவம் அடங்கிய அந்த நேரம்......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

504102034_9893165754094975_9189459584861

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

506455492_1273720291429327_4287205047845

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மா , பலா , வாழை ......முக்கனி என்று அழைக்கப்படுவது ஏன் ........... ! 😁

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ தரும் தண்டனை எது தெரியுமா ........ ! 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணம் பேச ஆரம்பித்தால் .......... ! 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

520012921_1250260743506271_3810663628827

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

" அடி " என்னும் இரெண்டெழுத்து .......... ! 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தர்கள் கூறும் வாழ்க்கை ரகசியங்கள் ஐந்து . ......... ! 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாதும் ஊரே யாவரும் கேளீர் .......... ! 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

524479241_1957052284832605_6047747272895

திசைகள் : தமிழின் மற்றொரு சிறப்பு .......... ! 👍

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

536767067_1276076797591332_7346580759852

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

rdpnsoteSo32t26m8:1p2eie te3la8a108gb8g1803hg6ls22,t84g0 1mr ·

Veeramani Sekar 

rdpnsoteSo32t26û6:1a2,i  to3la2a008g68g1803hg6lc23ai84g011mt ·

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக் கொள்ள முன்வரவில்லை.

முடியவும் முடியாது.

கன்னடா------முடியாது

தெலுங்கு----- முடியாது

மலையாளம்------முடியாது

ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.

ஆனால் தமிழில்.....

#தமிழ்,

தமிழ்ச்செல்வி,

தமிழ்ச்செல்வன்,

தமிழரசன்,

தமிழ்க்கதிர்,

தமிழ்க்கனல்,

தமிழ்க்கிழான்,

தமிழ்ச்சித்தன்,

தமிழ்மணி,

தமிழ்மாறன்,

தமிழ்முடி,

தமிழ்வென்றி,

தமிழ்மல்லன்,

தமிழ்வேலன்,

தமிழ்த்தென்றல்,

தமிழழகன்,

தமிழ்த்தும்பி,

தமிழ்த்தம்பி,

தமிழ்த்தொண்டன்,

தமிழ்த்தேறல்,

தமிழ்மறை,

தமிழ்மறையான்,

தமிழ்நாவன்,

தமிழ்நாடன்,

தமிழ்நிலவன்,

தமிழ்நெஞ்சன்,

தமிழ்நேயன்,

தமிழ்ப்பித்தன்,

தமிழ்வண்ணன்,

தமிழ்ப்புனல்,

தமிழ்எழிலன்,

தமிழ்நம்பி,

தமிழ்த்தேவன்,

தமிழ்மகன்,

தமிழ்முதல்வன்,

தமிழ்முகிலன்,

தமிழ் வேந்தன்,

தமிழ் கொடி.

என்று தமிழோடு...

தமிழ் மொழியோடு பெயர் வைத்துக் கொள்ள முடியும்!!!

தமிழன் மட்டுமே...

தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!!

அனைவருக்கும் பகிருங்கள். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...

பெத்தவங்கள ஏன் .....

"அம்மா"

"அப்பா" ன்னு கூப்பிட்றோம்..!!

எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?

*அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?

அ – உயிரெழுத்து.

ம் – மெய்யெழுத்து .

மா – உயிர் மெய்யெழுத்து.

அ – உயிரெழுத்து.

ப் – மெய்யெழுத்து .

பா – உயிர் மெய்யெழுத்து.

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.

இந்த உயிரும், மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!

"மம்மி - என்பது பதப்படுத்தப்பட்ட பிணத்தின் பெயர்..."

படித்தேன்...

பகிர்கிறேன்...

இனிய காலை வணக்கம்.🙏" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">

வாழ்க வளத்துடன்.......!

Voir la traduction

தமிழின் சிறப்பு . ....... ! 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

541997638_1811706766091004_5273645485812

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ......... ! 🙏

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

560521516_1193184716016678_3115398451346

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு வரி தத்துவம் ·

தமிழில் டீக்கு "தேநீர்',

காபிக்கு "குளம்பி' என்று

பெரும்பாலோருக்குத் தெரியும்.

மற்ற சில முக்கியமான உணவு

பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு14:29

🌏" >68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,.

🌏">800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.

🌏>400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன்.

>200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.

🌏">உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.

🌏" சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....

🌏"சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...

🌏" >100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்...

குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் ....

மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!

தமிழன்டா..........

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

கண்டிப்பாக படித்து பகிரவும் ....

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று

3/4 - முக்கால்

1/2 - அரை

1/4 - கால்

1/5 - நாலுமா

3/16 - மூன்று வீசம்

3/20 - மூன்றுமா

1/8 - அரைக்கால்

1/10 - இருமா

1/16 - மாகாணி(வீசம்)

1/20 - ஒருமா

3/64 - முக்கால்வீசம்

3/80 - முக்காணி

1/32 - அரைவீசம்

1/40 - அரைமா

1/64 - கால் வீசம்

1/80 - காணி

3/320 - அரைக்காணி முந்திரி

1/160 - அரைக்காணி

1/320 - முந்திரி

1/102400 - கீழ்முந்திரி

1/2150400 - இம்மி

1/23654400 - மும்மி

1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001

1/1490227200 - குணம்

1/7451136000 - பந்தம்

1/44706816000 - பாகம்

1/312947712000 - விந்தம்

1/5320111104000 - நாகவிந்தம்

1/74481555456000 - சிந்தை

1/489631109120000 - கதிர்முனை

1/9585244364800000 - குரல்வளைப்படி

1/575114661888000000 - வெள்ளம்

1/57511466188800000000 - நுண்மணல்

1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்......! 👍

வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

படித்து பகிர்ந்து

Voir la traduction


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனையூரான் ஜெராட் ·

இலங்கையில் தமிழர்களிடம் பேச்சு வழக்கில் பேசப்படும் போர்த்துக்கேய சொற்கள்

அலுமாரி — நிலைப் பேழை.

அன்னாசி — செந்தாழம்பழம்.

கொய்யாப் பழம் — காழ்ப் பழம்.

பப்பாளி — செங்கொழும்பை.

அலவாங்கு — கடப்பாரை.

அலுகோசு — தூக்கிலிடுபவர்.

பைலா — ஆட்டம்.

சாவி — திறவுகோல், திறபு.

சன்னல் — சாளரம், காலதர்.

கதிரை — நாற்காலி.

கஜு — முந்திரி.

களுசான் — காலாடை.

கமிசை — கைச்சராய்.

கடதாசி — தாள்.

கோப்பை — தட்டு.

குசினி — அடுப்படி.

மேஜை — மிசை.

பாண் — வெதுப்பி.

பேனா — எழுதுகோல், தூவல்

பீங்கான் — வழை.

பீப்பா — உருள்கலன்.

சப்பாத்து — மூடுகாலணி.

தவறணை — கள்ளகம்.

தாச்சி — கலம்.

துவாய் — துண்டு

விறாந்தை — தாழ்வாரம்

Voir la traduction


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு வரி தத்துவம் ·

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

முதல்வன் படத்தில்

வரும்

உளுந்து வெதைக்கையிலே என்ற பாடலை பயணத்தின் போது கேட்டேன்

கிராமத்துப் பெண்

பாடுவதாக அமைந்த பாடல் அது

வைரமுத்துவின் வரிகளில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் பாடலுக்கு இசை ஏ .ஆர். ரஹ்மான்

பல காலம் அந்த பாடலை தொடர்ந்து கேட்டு வந்தாலும்

பல்லவி பகுதியில் வரும் ஒரு சில வரிகள் எனக்கு புரிந்து கொள்ள இயலாமல் இருந்தேன்

அவை பின்வருமாறு

" உளுந்து விதைக்கையிலே

சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே

நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன்

அந்த நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குளி பூத்துப்போனேன்..

வக்கப்படப்பில் கெவுளி கத்த..

வலது பக்கம் கருடன் சுத்த..

தெருவோரம் நெறக்கொடம் பாக்கவும்.

மணிச்சத்தம் கேக்கவும் ஆனதே..

ஒரு பூக்காரி எதுக்க வர.

பசும்பால் மாடு கடக்கிறதே..

இனி என்னாகுமோ?

ஏதாகுமோ? இந்த சிருக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?

என்று வரும் பல்லவி..

இதைப்பற்றி சிந்திக்கவே தோன்றாமல் பாடலின் இசைக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட வரிகள் போல என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.

நேற்று தான் எனக்குப்புரிந்தது.

இது இசைக்காக எழுதப்பட்ட வரிகள் அன்று.

தமிழர்கள் காலம் காலமாக கொண்டிருக்கும் "சகுணங்கள்" மீது கொண்ட நம்பிக்கையை பிரதிபலிக்கும் வரிகள் என்று.

பாடல் வரிகளுக்குள் செய்த சிறு மறுஆய்வு வருமாறு..

உளுந்து என்பது மானாவாரி நிலத்தில் விதைக்கபடும் பயிர்

மேலும் உளுந்து வளர காற்றில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் .

அத்தகைய ஈரப்பதம் குளிர் காலத்தில் மட்டுமே இருக்கும் .

தமிழகத்தில் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்கள் குளிர்காலங்களாகும்.

அப்போது அடிக்கும் காற்றை ஊதக்காத்து / கூதக்காத்து என்று அழைப்பார்கள் கிராம் மக்கள்.

காற்றில் ஈரப்பதம் இருக்கும் காற்று ஊதக்காத்து.

வாடக்காத்து என்றும் சொலவடை உண்டு.

பெரும்பாலும் அந்த மாதங்களில் ஆற்றில் இருந்து வரும் வாய்க்காலில் ஓடையில் தண்ணீர் ஓடும் .ஆகவே அதில் இறங்கி நடந்து போக முடியாது. தாண்டி தான் போகமுடியும்..

இதைத்தான் அழகாக இரண்டு வரிகளில் வைரமுத்து எழுதியிருக்கிறார் பாருங்கள்.

" *உளுந்து வெதைக்கையிலே

சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே

நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன்* "

அடுத்த வரிகளில்

"அந்த நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குளி பூத்துப்போனேன்" என்கிறாள்

தமிழக மக்களிடம் பண்டைய காலம் தொட்டு சகுணம் பார்க்கும் பழக்கம் இருந்தது என்பதை சங்க நூல்கள் வழி அறிய முடிகிறது.

இது ஒரு நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. வருகிறது.

அது பிரதிபலிக்கும் வகையில் அடுத்த வரிகள் வருகின்றன

"வக்கப்படப்பில் கெவுளி கத்த.

வலது பக்கம் கருடன் சுத்த.."

எனும் வரிகளில்

ஸ்வர்ணலதா " வெக்கப்படப்பில் " கெவுளி கத்த

என்று பாடியிருப்பார்.

நானும்

பல லிரிக்ஸ் வெப்சைட்டுகளில் இந்த பாடல் குறித்து தேடினாலும்

அனைத்திலும் "வெக்கப்படப்பு" என்றே இருந்தது.

நானும் வெக்கப்படப்பு என்பது கிராமத்து வீடுகளில் ஒரு பகுதியாக இருக்குமோ? என்று யோசித்து தேடிக்கொண்டிருந்தேன்.

இது குறித்த கிராமத்தில் வசிக்கும் தம்பியிடம் கேட்டேன்.

"வெக்கப்படப்பு" னா என்னது? கிராமத்து வீடுகளில் அது ஒரு இடமா? என்று கேட்டேன்.

அவர் "அப்படி ஒரு இடம் இல்லையே.. ஒரு வேளை வக்கப்படப்பா இருக்கும் " என்றார்

வக்கப்படப்பு என்பது வைக்கோல் படப்பு என்ற சொல்லில் இருந்து மருவி வந்துள்ளது.

நெற்கதிர் அறுத்து மீதம் இருக்கும் வைக்கோலை சேர்த்து குவித்து வைக்கும் இடத்தை " வக்கப்படப்பு " என்பார்கள்.

கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு

"அடி காட்டுக்கு

நடு மாட்டுக்கு

நுனி வீட்டுக்கு"

நெற்கதிரின் அடிப்பகுதி - அதை வயக்காட்டில் உரமாக விடப்படும்

நடுப்பகுதி - மாட்டுக்கு வைக்கோலாக மாறும்

நுனியில் இருக்கும் நெற்கதிர் - வீட்டுக்கு வரும்

இதுவே அதன் அர்த்தம்.

வக்கப்படப்பில் கெவுளி கத்த..

இதில் கெவுளி என்பது பல்லிக்கு கிராமத்தில் வழங்கப்படும் பெயர்.

Indian house lizard என்று அழைக்கப்படும் பல்லி மேற்கில் இருந்து கத்துவது நல்ல சகுணம் என்று பார்க்கபடுகிறது.

"வலது பக்கம் கருடன் சுத்த" என்ற வரிகளில்

கருடன் என்று அழைக்கப்படும் கழுகு இடப்பக்கத்திலிருந்து வடப்பக்கம் செல்வதை நற்குணம் என்று கூறப்படும்.

நான் கேட்டு அறிந்த செய்தி யாதெனில் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடக்கும் போது கருடன் மேலே வானத்தில் சுற்றுவது நற்சகுணம் என்று நம்பப்படுகிறது.

அடுத்த வரிகள்

"தெருவோரம் நெறகொடம் பாக்கவும்.

மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே..

ஒரு பூக்காரி எதுக்கவர.

பசும்பால்மாடு கடக்கிறதே..

இனி என்னாகுமோ? ஏதாகுமோ? இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?"

இவையனைத்தும் கிராமங்களில் இன்றும் நல்ல சகுணங்களாக பார்க்கப்பட்டு வருகின்றன என்பதை சில கிராமவாசிகளிடம் கேட்டுத்தெரிந்து கொண்டேன்

மேலும் எவற்றையெல்லாம் நற் சகுணங்கள் , கெட்ட சகுணங்கள் என்று நினைக்கிறார்கள் என்று ஆய்வு செய்ததில் பின்வரும் விசயங்கள் கிடைத்தன

பண்டைய காலங்களிலும் தமிழ் மக்கள் பல விஷயங்களுக்கு சகுணங்கள் பார்த்திருப்பது பாடல்கள் மூலம் புலனாகிறது.

அவற்றுள் ஒன்று இதோ

“மையல் கொண்ட மதன்ழி இருக்கையள்

பகுவாய் பல்லி படுதொறும் பரவி

நல்ல கூறுகென நடுங்கி” (அகம்-289)

இவ்வரிகளானது தலைவனைப் பிரிந்த தலைவி, தன் அன்புக் காதலன் வரும் நாளை எதிர் நோக்கியிருக்கும் வேளையில், பல்லியானது நிலைக் கதவுகளிலும், சுவர்களின் மீதும், இருப்பதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள், பல்லியை நோக்கி நல்ல பலன் கூறுதல் வேண்டும் என தன் மனதில் எண்ணிக் கொள்கின்ற விதமாக அமைந்திருப்பதிலிருந்தே, அக்கால மக்களின் நம்பிக்கைகளின் ஒன்றில் முக்கியமானதாக இவை இருந்துள்ளது எனவும் அறிய முடிகிறது.

என்னைப்பொறுத்த வரை சகுணம் என்பது Just a matter of coincidence .

ஒன்றோடு ஒன்று ஒத்து நடக்கும் இரு செயல்களை நாம் முடிச்சுப்போட்டுக் கொள்வதே சகுணம் என்கிறோம்.

.

யானை , குதிரை , பசு , கன்று , காளை , திருமணமாகாத பெண் , குழந்தையுடன் பெண் , ஆடை அணியாத குழந்தை , சங்கு , தாமரை , பூக்கள் விற்பவர் , பால் ,நிறை குடம் , காகம் இடப்பக்கமிருந்து வடப்பக்கம் செல்வது , பல்லி கத்துவது , வீட்டில் இருக்கும் காகம் கரைவது போன்றவற்றை நற்சகுணம் என்று நம்பினர்.

பூனை குறுக்கே போவது, நாய் குறுக்கே போவது, நாய் ஊளையிடுவது, மண்வெட்டியுடன் எதிரே வருவது, தும்முவது, தலையில் முக்காடு போட்டவர் எதிரே காண்பது , விதவயைக் காண்பது இப்படி பலவற்றை துற்சகுணங்கள் என்று மூடநம்பிக்கை கொண்டிருந்தனர்

என்னைப்பொறுத்த வரை இந்த சகுணங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை மூடநம்பிக்கையாகும் .

தன்னம்பிக்கையும்,

சமூகம் மீது தனிமனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கை இரண்டு மட்டுமே மனிதவாழ்க்கைக்கு நன்மை சேர்ப்பது.

இருப்பினும் இந்தப்பாடல் வரிகள் மூலம் இத்தனை விசயங்களை கற்க முடிந்தது சிறப்பான விசயம்.

படித்து பகிர்ந்து

Voir la traduction

உளுந்து விதைக்கையிலே பாடலில் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா . ........! 😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bjp Eswaramoorthy Kannan ·

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?

அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!

"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?

இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!!

"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?

உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!

"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?

எதையும் ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!

"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?

அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.

"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!

- படித்ததில் பிடித்தது .

Voir la traduction


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Chandran Veerasamy ·

1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்மாநாட்டு கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,

‘அறிந்ததனை அறிந்தோர்க்கு

அறிவிக்கும் போதினிலே

அறிந்ததுதான் என்றாலும்

எத்துணை அழகம்மா? என்று

அறிந்தோரையும் வியக்க வைக்கும்

அருங்கலையே கவிதையாகும்’

... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.

தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.

மக்களின் ஆரவாரம் விண்ணைப்

பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு

ரகசியம் அறிந்தவர் அண்ணா !

- தி இந்து .

Voir la traduction

566197853_25105351272462102_149083338242

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰🥰 Best Friends For Ever💐💐💐

#அலமாரி 25-10-25

உண்டோ குரங்கேற்றுக்கேற்றுக்

கொள்ளாத கொம்பு...?

அந்த குரங்கு மரத்திற்கு மரம் தாவித் திரிந்தது

நான் உன்னை ஏற்கமாட்டேன் என ஒரு மரம் அதனை விரட்டியது.

நீ என்னைப் புகழ்ந்து பாடினால் ஒழிய நான் உன்னை

ஏற்க மாட்டேன் என்று தீர்க்கமாக கூறியது அந்த மரம்.

மரம் என்பது இங்கே சோழ நாட்டு மன்னன் . குரங்கென்பது

கம்பன்

கடவுளைப் பற்றிப் பாடிய இவ்

வாயால் நரனைப் பாட மாட்டேன்.

என்றான் சோழ மன்னனிடம் கம்பன்.

" மன்னவனும் நீயோ....?

வள நாடும் நின்னதுவோ...?

உன்னை அறிந்தோ தமிழை

ஓதினேன். என்னை விரைந்

தேற்றுக் கொள்ளாத

வேந்துண்டோ....? உண்டோ

குரங்கேற்றுக் கொள்ளாத

கொம்பு ...?

என்று பாடி அவை அகன்றான்

கம்பன். அதன் பிறகுதான் பாண்டிய நாட்டிற்கு பிரவேசம்

ஆனான் கம்பன். அது கம்பன்

வரலாறு.

அது தலைமை ஆசிரியர்

அறை. அந்த ஆசியை அதிகமாகப்

பேசுகிறார். அவரிடம் சொல்லி

வையுங்கள். எனகிறது நிர்வாகம்.

நிர்வாகம் கூறியதை த. ஆ

அந்த ஆசிரியையிடம் சென்னார்..

அதற்கு அந்த ஆசிரியை ,

" பெரிதே உலகம் பேனுனர்

பலரே...."

எனக் கூறி அறையை விட்டு அகன்றார் அந்த ஆசிரியை..

சில நாட்களிலேயே அவருக்கு அரசு பள்ளியில் பணி கிடைத்து,.

கம்பனையம் , அந்த ஆசிரியை

யும் ஒர நேர் கோட்டில் வைத்துப்

பார்த்து வியந்தேன்.

Voir la traduction

571185557_4240030269649112_5387944510799

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kanagu Kanagraj ·

நன்றி Kalai Marx

தமிழ் மொழி என்று நினைத்து பாவிக்கும் அரபு மொழி சொற்கள் சில கீழே

அசல் أصل. மூலம்

மாஜி ماضي முந்தைய

அத்து حد வரம்பு

முகாம் مقام தங்குமிடம்

அத்தர் عطر மணப்பொருள்

முலாம் ملام மேற்பூச்சு

அமுல் عمل நடைமுறை

ரத்து رد விலக்கு/நீக்கம்

அனாமத் أنعمت. கேட்பாரற்ற

ரசீது رصيد ஒப்புப் படிவம்

அல்வா حلوه இனிப்பு

ராஜி راضي உடன்பாடு

ஆஜர் حاظر வருகை

ருஜு رجوع உறுதிப்பாடு

ஆபத்து آفت துன்பம்

ருமால் رمال கைக்குட்டை

இனாம் انعام நன்கொடை

லாயக் لائق தகுதி

இலாகா علاقة துறை

வக்கீல் وكيل வழக்குரைஞர்

கஜானா خزانة கருவூலம்

வக்காலத்து وكالة பரிந்துரை

காலி خالي வெற்றிடம்

வகையறா وغيره முதலான

காய்தா قاعدة தலைமை/வரம்பு

வசூல் وصول திரட்டு

காஜி قاضي நீதிபதி

வாய்தா وعده தவணை

கைதி قيد சிறையாளி

வாரிசு وارث உரியவர்

சவால் سوال அறைகூவல்/கேள்வி

சர்பத் شربة. குளிர்பானம்

ஜாமீன் ضمان பிணை

சரத்து شرط நிபந்தனை

ஜில்லா ضلعة மாவட்டம்

தகராறு تكرار. வம்பு

தாவா دعوة வழக்கு

திவான் ديوان அமைச்சர்

பதில் بدل மறுமொழி

பாக்கி باقي நிலுவை

மஹால் محل மாளிகை

மகசூல் محصول அறுவடை/ விளைச்சல்

மாமூல் معمول வழக்கம்.

Voir la traduction

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

🌷கரிசக்காட்டுப்பூவே🌷

பழமொழி - remix

பழசு: பல் போனா சொல் போச்சு

புதுசு:‘cell’ போனா சொல் போச்சு😄"

பழசு: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!!

புதுசு: பேலன்ஸ் இருக்கும் போதே பேசிக்கொள்..😃"

பழசு: இளங்கன்று பயமறியாது..!!

புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது..😃"

பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!

புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்😄"

பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது..!!

புதுசு: நெட்வொர்க்கை திருத்த முடியாது..😃"

பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..!

புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..😃"

பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!!

புதுசு: செல்போன் ஒண்ணு.. சிம்மு ரெண்டு.😃"

பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!

புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே..😃"

பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்..!!

புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்..😃"

பழசு: பேராசை பெருநஷ்டம்..!!

புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்..

கொஞ்சம் சிரிங்க பா....

Voir la traduction......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவி காளமேகம் சிலேடை . ........! 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனி மலர்  ·

Venkatesan Vellore ·

தன் நண்பரை காண மாடியில் உள்ள அவர் வீட்டுக்கு படத்தில் உள்ளவர் படியேறி செல்கிறார். அது மழைக்காலம் என்பதால் நண்பரின் மனைவி தன் புடவையை உலர்த்த வாசலில் கொடி கட்டி காயபோட்டிருக்கிறார். இவர் உள்ளே நுழையும்போதே " இதுதான் வாயில் புடவை என்பதோ?" என கேட்க, அதைகேட்ட நண்பரும் அவரது மனைவியும் வாய்விட்டு சிரித்தார்களாம்.

------------------------

இவரும், குமரி அனந்தனும் அன்று ஒரே மேடையில் பேசுவதாக நிகழ்ச்சி இருந்தது. முதலில் குமரி அனந்தன் அட்டகாசமாய் பேசி கைத்தட்டல் பெற்று அமர்ந்துவிட்டார். அடுத்து இவரை அழைத்திருக்கின்றனர். இவர் மேடைக்கு முன் நின்று, குமரி அனந்தனை பார்த்து " எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள்? என கேட்க, அவரோ அமர்ந்திருந்தவாறே " வண்ணாரப்பேட்டை" என்றாராம்.

" அதான், எனக்கு முன்னே வெளுத்து வாங்கிவிட்டீர்" என சொல்ல ....கூட்டம் சிரிப்பாலும் கரவொலியாலும் ஆர்ப்பரித்ததாம்.

--------------------

இலக்கிய கூட்டம் முடிந்து காரில் சென்று கொண்டிருக்கிறார். கார் திடிரென நின்றுவிட்டது. கூட வந்தவர்கள் இவரை உட்கார சொல்லிவிட்டு, கீழே இறங்கி தள்ளியிருக்கிறார்கள். கார் கிளம்பவில்லை. உடனே இவரும் கீழே இறங்கி காரை தள்ளியிருக்கிறார்.

" நீங்க ஏன் வந்தீங்க? என அதில் ஒருவர் கேட்க, " என்னை தள்ளாதவன்னு யாரும் சொல்லிட கூடாதுல்ல. அதான் வந்தேன்". என சொல்ல... எல்லோரும் சிரித்து மகிழ்ந்தார்களாம்.

அப்படியொரு சிலேடை பேச்சில் மன்னராக திகழ்ந்த கி.வா.ஜ.வின் நினைவுநாள்தான் இன்று.

கவிஞராக, எழுத்தாளராக, கலைமகள் இதழின் ஆசிரியராக, இலக்கிய சொற்பொழிவாளராக திகழ்ந்த இவர், தமிழ்த் தாத்தா எனப்படும் உ.வே.சா.வின் மாணவர் ஆவார்.

Voir la traduction

577351749_2060200761183349_3488162776623

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.