Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Chandran Veerasamy ·

காதல் என்ற வார்த்தை இருக்கவே கூடாது .. கண்ணதாசனுக்கு எம்ஜிஆர் போட்ட கண்டிஷன்!! அப்படி வந்தது தான் இந்த பாட்டு

காதல் பாடல் என்றாலே அந்த பாடலில் காதல் என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. ஆனால் கவியரசு கண்ணதாசன் காதல் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல் எழுதியிருக்கிறார் என்றால் அதுதான் அவரை கவியரசு என்ற போற்ற வைக்கிறது.

’பாவ மன்னிப்பு’ என்ற படத்திற்காக ஒரு காதல் பாடல் வேண்டும் என்று இயக்குனர் பீம்சிங் தெரிவித்திருந்தார். இந்த பாடல் அனைத்திலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த நிலையில், அந்த பாடலுக்கு டியூன் போட்ட எம்எஸ் விஸ்வநாதன், காதல் என்ற வார்த்தை இல்லாமல் எனக்கு ஒரு காதல் பாடல் வேண்டும் என்று கண்ணதாசனிடம் கோரிக்கை வைத்தார்.

கவியரசு கண்ணதாசன் ஒரு சில வினாடிகள் மட்டுமே யோசித்தபோது அவருக்கு உடனே பகவத் கீதையில் உள்ள மாதங்களில் அவள் மார்கழி எழுதிய வரி ஞாபகத்திற்கு வந்தது. உடனே அதை மனதில் வைத்து காதலையும், காதலியையும் உவமை படுத்தி ஒரு பாடலை எழுதினார். இதுதான் ’காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல். அந்த பாடல் இதோ:

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப் புறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

பால் போல் சிரிப்பதில் பிள்ளை அவள்

பனி போல் அணைப்பதில் கன்னி

கண் போல் வளர்ப்பதில் அன்னை

கண் போல் வளர்ப்பதில் அன்னை

அவள் கவிஞனாக்கினாள் என்னை

இந்த பாடலில் இடம் பெற்றுள்ள வசந்தம், ஓவியம், மார்கழி, மல்லிகை, மணிப்புறா, தாலாட்டு, மாங்கனி, தென்றல் ஆகியவை காதலையும் காதலியையும் குறிக்கும் என்றாலும் ஒரு வார்த்தை கூட இந்த பாடலில் காதல் என்ற சொல் இருக்காது.

இந்த நிலையில்தான் எம்ஜிஆர் அவர்கள் ’உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற திரைப்படத்தை நடித்து இயக்கி கொண்டிருந்தபோது ’காலங்களில் அவள் வசந்தம்’ பாடல் போலவே எனக்கு ஒரு பாடல் வேண்டும் என்றும் நவரசம் சொட்டும் வகையில் காதல் அந்த பாடலில் இருக்க வேண்டும், ஆனால் காதல் என்ற வார்த்தை வரக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்காக எழுதிய பாடல் தான் ’அவள் ஒரு நவரச நாயகன்’. இந்த பாடலிலும் காதல் மற்றும் காதலியை உவமைப்படுத்த கண்ணதாசன் காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் இதோ.

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்

தழுவிடும் இனங்களில் மானினம்

தமிழும் அவளும் ஓரினம்

மரகத மலர்விடும் பூங்கொடி

மழலை கூறும் பைங்கிளி

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்

என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்

குறுநகை கோலத்தில் தாமரை

கோடை காலத்து வான்மழை

கார்த்திகை திங்களின் தீபங்கள்

கண்ணில் தோன்றும் கோலங்கள்

அருசுவை நிரம்பிய பால்குடம்

ஆடும் நடையே நாட்டியம்

ஊடல் அவளது வாடிக்கை

என்னைத் தந்தேன் காணிக்கை

மேற்கண்ட இரண்டு பாடல்களுமே கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் விரும்பி கேட்ட பாடலாக இருந்தது. இந்த பாடல்களை ஆழ்ந்து கேட்டால் இன்றளவும் இதில் இருக்கும் உவமை ஆச்சரியத்தை வரவழைக்கும்.

Voir la traduction

584555881_25373996145597612_270313625950

கண்ணதாசன் ஒரு தமிழ்க்கடல் .........! 🙏

  • Replies 479
  • Views 91.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    எந்த மொழியிலும் இல்லாத சிறப்புக்கள், அன்னைத் தமிழில் .

  • ஆணவம் அடங்கிய அந்த நேரம்......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Prashantha Kumar  ·

இளையராஜாவின் தன் மனைவியின்

மேல் கொண்ட காதல்!

அதற்கு என்ன என்று தானே

கேட்கிறீர்கள்..

விஷயத்துக்கு வருவோம்...

1985ல் இதய கோவில் என்று ஒரு படம் மணிரத்னம் இயக்கத்தில் வந்தது. இசை இளையராஜா தான். மொத்தம் 7 பாடல்கள், எல்லா பாடல்களும் செம ஹிட். ஒவ்வொரு பாடலை எழுதியதும் ஒவ்வொரு கவிஞர்கள்.

இதயம் ஒரு கோவில்

அதில் உதயம் ஒரு பாடல் …

இந்த பாடலை எழுதியது சாட்சாத் ராஜா தான். தன்னை ஒரு கவிஞராக அறிமுகப்படுத்தி கொண்டது இந்த பாடல் வழியே தான். அதற்கு பின் நம் ஆத்மாவை தொடும் பல பாடல்கள் அவர் இயற்றி இருக்கிறார்.

அதெல்லாம் சரி, இன்னும் திருமதி ராஜா பற்றி விஷயம் எதுவும் வரவேயில்லையே!

இதோ வரேன்!!

இந்த பாடலில் ஒவ்வொரு சரணத்திலும் தன மனைவி பெயர் வருமாறு எழுதியுள்ளார். திருமதி ஜீவா என்பது அவர் மனைவியின் பெயர்.

பல்லவியிலேயே வண்டியை செகண்ட் கியர் போட்டு தூக்கி விட்டார்:

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

சரணத்தை கவனியுங்கள்:

ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே

உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே

பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை!

ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை!!

எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது

இப்பொழுது இரண்டாவது சரணத்துக்கு செல்வோம்.

காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்

ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்

ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா!

அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்

என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே

நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது?

சும்மா எப்போ பார்த்தாலும் ரெக்கார்டிங்! ரெக்கார்டிங்ன்னு பிரசாத் ஸ்டூடியோவிலேயே இருந்தால், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு யார் ஹோம்வர்க் சொல்லி குடுக்கறதாம்?

எல்லா பாடத்திலயும் முட்டை வாங்கிட்டு வரான்! என்று ஒரு வேளை திருமதி ஜீவா அவர்கள் ராஜாவை அன்போடு கேட்டிருக்கலாம்.

கடைசி சரணத்தில் அம்மணிக்கு நாசூக்கா ஒரு செய்தி வேறு சொல்லி விடுகிறார்.

பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா

உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா

மீராவின் கண்ணன் மீராவிடமே

எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே

வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே

தனது முதல் பாடலை அவர் நினைத்திருந்தால் ஒரு ஜனரஞ்சக டூயட்டாகவோ, ஐட்டம் நம்பராகவோ எழுதி இருக்கலாம். தம் மனதில் இருக்கும் அன்பை, காதலை, பிரமத்தை, ப்யாரை எவ்வளவு பக்திபூர்வமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள். காரணம் திருமதி ஜீவா மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.

பிரின்ஸ் ஜுவல்லரிகாரர்கள் வேண்டுமானால் "காதலை சொல்லிடும் வழி தங்கம்!" என்று World Gold Council tagline ஐ தாங்களே யோசித்து எழுதிய வரிகள் போல விளம்பரப்படுத்தி நம் தலையில் மிளகாய் அரைக்கலாம்.

மேதைகள் தமக்கே உரிய பாணியில், அசால்ட்டா சொல்லி விட்டு போய்க் கொண்டேயிருப்பார்கள். சூட்சம புத்தியுளளவர்களுக்கு புரியும்.

மற்றவர்கள் "என்னடே பாட்டு இது? என்று கொட்டாவி விட்டு கேண்டினில் பஜ்ஜி சாப்பிட்டு விட்டு வருவார்கள்.

ஆனால் தனது மனைவியின் மேல்

உள்ள காதலை இளையராஜா பாடல்

சொல்லிய விதம் ஒரு கவிஞரால் மட்டும் தான் முடியும் .

நன்றி ரங்கா அவர்கள்

முகநூல் தொகுப்பு:பிரசாந்த்

Voir la traduction

585670440_3566740783468999_4590437935081

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Paranji Sankar ·

இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.

உதாரணமாக,

"தேர் ஓடுவது எதனால்?

தெருவை மெழுகுவது எதனால்?" என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில், "அச்சாணியால்" என்பது.

தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது அச்-சாணியால் என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.

"நீ வசிக்கும் ஊர் எது?

உன் காலில் காயம் வந்தது எப்படி?" என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் "செங்கல்பட்டு" என்பது.

"சாம்பார் மணப்பதேன்?

உடல் நலிவதேன்?" என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் "பெருங்-காயத்தால்" என்பது.

இன்று ஆங்கில வழிக் கல்வி பெருகிவிட்ட காலம். முன்னர் பெரும்பாலானோர் தமிழ்வழிக் கல்வியில் பயின்றபோது இத்தகைய சொல் விளையாட்டுகள் குழந்தைகளின் தமிழறிவையும், சிந்தனைத் திறனையும் ஒரு சேர வளர்த்தன...

இடைக்காலத்தில் வாழ்ந்த இளஞ்சூரியன், முதுசூரியன் என்ற இரட்டைப் புலவர்களில் ஒருவர் கண் பார்வையற்றவர், ஒருவர் கால் ஊனமானவர். கால் ஊனமானவரைக் கண்பார்வையற்றவர் தோளில் சுமந்து செல்வார். கால் ஊனமானவர் தோளில் இருந்தவாறே எப்படிச் செல்ல வேண்டும் என வழி சொல்வார். இவ்விரு புலவர்கள் எழுதிய வெண்பாக்கள் பலவும் இதேபோல் சொல் விளையாட்டு பாணியில் அமைந்தவை தான். ஒருவர் வெண்பாவின் இரண்டடியில் கேள்வி கேட்க மற்றவர் அடுத்த இரண்டடிகளில் பொருத்தமான பதில் சொல்வார்.

மதுரைத் தெப்பக் குளத்தில் கால் ஊனமானவர் படியில் அமர்ந்து பார்த்தவாறிருக்க, கண்பார்வை அற்றவர் தம் துணியை நீரில் அலசினார். அப்போது துணி குளத்தில் நழுவி எங்கோ சென்றுவிட்டது. அதைப் பார்த்த கால் ஊனமானவர்?

"அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ?"

- எனக் கேள்வி கேட்டார்.

அதாவது, தண்ணீரில் துணியைப் போட்டு துவைக்கிற சாக்கில் அடிஅடியேன்று அடித்தால் அது (கோபித்துக் கொண்டு) நம்மை விட்டுப் போகாதா என்பது அவர் கேள்வியின் பொருள்.

அதற்கு பார்வையற்றவர் சொன்ன பதில் இதுதான்..

"எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதூரைச் சொக்கலிங்கம் உண்டே துணை"

- என்று வெண்பாவை நிறைவு செய்தார்.

அதாவது கலிங்கம் என்ற சொல்லுக்குத் துணி என்று பொருள். இந்தத் துணி போனால் என்ன? மதுரைச் சொக்கலிங்க மாகிய தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்பதே அவரது பதில்.

பார்வையற்றிருந்தாலும் அவரது தெய்வ நம்பிக்கையின் ஆழம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

இப்போது முழு வெண்பாவையும் பார்க்கலாம்....

"அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத்தப்பினால் நம்மையது தப்பாதோ? -

எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதுரைச்

சொக்கலிங்கம் உண்டே துணை".

எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம், திருக்குறளைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டார்.

"திருக்குறள் 1330 குறள்கள் அல்லவா? திருக்குறளைத் திருக்குறள்கள் என்று தானே சொல்லவேண்டும்? அப்படியிருக்க பன்மையில் சொல்லாமல் ஏன் ஒருமையில் திருக்குறள் என்று சொல்கிறோம்?" என்று கேள்வி கேட்டார்.

அதற்கு சுஜாதா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

"திருக்குறள் '#கள்'ளை

அனுமதிப்பதில்லை".

Voir la traduction

583767531_122261929952037466_90360149800

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Magudeswaran Govindarajan  ·

Suivre

sdSntrooepm07i4fgtu5l85hc0i542919ull402la2clm1l0m0u2u2 16682 ·

இரு சொற்களுக்கிடையே எல்லா இடங்களிலும் வலிமிகுதல் இல்லை. வலிமிகவேண்டிய இடங்களில் தவறுமாயின் பொருள் வேறுபாடு தோன்றிவிடும். சந்திப் பிழைக்கான தலையாய அறியாமை இந்நுணுக்கம் அறியாமல் இருப்பதுதான்.

ஒரே சொற்றொடர்தான். அவ்விரு சொற்களுக்கிடையே ஓரிடத்தில் வலிமிகும். ஓரிடத்தில் வலிமிகாது. என்ன காரணம் ? அவ்விரு சொற்களுக்குமிடையே தோன்றும் பொருள் வேறுபாடுதான். அவ்விரு சொற்களும் சொற்றொடராகி அடுத்தடுத்து வருகையில் தாம் உணர்த்த விரும்பும் பொருளுக்கேற்ப வலிமிகுத்தோ மிகாமலோ வரும். சொற்றொடர் அமைப்புகளின் பொருளுணர்ச்சிக்கேற்றவாறு/பொருள் நோக்கத்திற்கேற்றவாறு வலிமிகுவிக்கவேண்டும், அல்லது வலிமிகுவிக்காமல் விடவேண்டும்.

ஒரே சொற்றொடர் அமைப்புக்குள் பொருள் வேறுபாடுகள் தோன்றும் அமைப்புகளை எடுத்துக்காட்டுகளாக எழுதியுள்ளேன், காண்க :-

இரவு முழுவதும் பெய்த மழையினால் சாலைகளில் நீர் தேக்கம்.

மேட்டூரில் இருப்பது நீர்த்தேக்கம்.

00

கற்ற கலை பொருள் செய்யப் பயன்படவில்லை.

கலைப்பொருள் செய்து பெரிதாக ஈட்டியவர்கள் பலர்.

00

அவர்களுக்கிடையே இருந்த உறவு சிக்கலாகிவிட்டது.

உறவுச்சிக்கல் ஏற்படாதபடி வாழப் பார்.

00

இந்தப் பேருந்து பயணத்திற்கு உதவாது.

பேருந்துப் பயணம் அலுத்துவிட்டது.

00

உழவர்க்கு உழவு தொழிலாகும்.

உயிர்காப்பது உழவுத்தொழில்.

00

நீ எடுத்த காட்சி பிழையானது.

என்னுடைய பார்வையில் காட்சிப்பிழை உண்டோ ?

00

அன்பு தளையாகக்கூடாது.

அன்புத் தளைக்குள் அகப்பட்டதனால் விடுபட முடியவில்லை.

00

கிளி பேசும்.

கிளிப்பேச்சு கேட்பதற்கு இனிமை.

00

மழை காலந்தவறிப் பெய்கிறது.

மழைக்காலம் வந்துவிட்டது.

00

வளர்ச்சி தடைபடக்கூடாது.

வளர்ச்சித்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்.

00

இரு சொற்களுக்கிடையே தோன்றும் இருவகையான பொருட்பயன்பாடுகள் இவை. இவற்றை நினைவிற்கொண்டால் வலிமிகல், மிகாமை குறித்துத் தெளிவடையலாம்.

- கவிஞர் மகுடேசுவரன்

Voir la traduction

588039945_25482418578036624_908512238542

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰🥰 Best Friends For Ever💐💐💐

பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்!

அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும்.

போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும்.

தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள்.

மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான்.

அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.

குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.

தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன.

மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின.

தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான்.

பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன்.

மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான்.

வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன.

அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.

'யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது.

பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாராட்டப் போகிறான்’ என்று எண்ணி, ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன்.

ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை.

அர்ஜுனன் திகைத்தான்.

'பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன்.

அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார்.

"அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு.

முதலில் நீ இறங்கு!'' என்று கட்டளையிட்டார்.

கண்ணனின் வார்த்தையை மீறி அறியாத அர்ஜுனன், அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான்.

அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே’ என ஒரு கணம் ஏங்கினான்.

"கர்மயோகம்’ என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்?

இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை?

நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது?' என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன்.

அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார்.

அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார்.

கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது.

எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர்.

யாருக்கும் எதுவும் புரியவில்லை.

''அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன.

அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன்.

நான் சாரதியாக அமர்ந்துகொண்டிருந்ததால்தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன.

படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு.

இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன்.

நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும்.

அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்தேன்.

இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய்.

இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கி, உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்!

தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய்.

என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்- காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன்.

இருந்தாலும்,

உன்னுடைய சுயகௌரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது.

அது தவறு.

இதோ...

உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன்'' என்று,

நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன்.

அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம்

அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல விழுந்துகிடந்தான்.

வாழ்க்கை எனும் ரதத்தினில்,

கடவுளை சரணடைந்தால்,

இறுதி வரை துன்பத்தையும் தடைகளையும் களைந்து, பிறவிப்பிணியினை கடந்தேற,

சாரதி போல் நம்மை நடத்தி செல்வார்.

எனவே அவனை கேள்வியேயில்லாமல் சரணடைவோம்.

*மனதை கவர்ந்த பதிவு*

👉" சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*

👉" பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*

👉"தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*

👉"பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*

👉" இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*

*👉"பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*

👉" செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*

👉" வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*

👉" பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!

*👉" இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*

*🙇" ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*

*🙏" மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!*

590616554_10161945318878314_773141511324

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.