Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புல்லுமலை தொழிற்சாலைமுற்றாகக் கைவிடப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புல்லுமலை தொழிற்சாலைமுற்றாகக் கைவிடப்பட்டது

Editorial / 2018 ஒக்டோபர் 23 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:52 Comments - 0

பேரின்பராஜா சபேஷ், ஆர்.ஜெயஸ்ரீராம்

 

மட்டக்களப்பு, பெரிய புல்லுமலையில் நிர்மாணிக்கப்பட்டுவந்த, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணிகளை, முற்றாகக் கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

“தொழிற்சாலை அமைக்கப்படுவதை, குறித்த பிரதேச மக்கள் எதிர்த்தனர்.
அதேபோன்று, தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தொழிற்சாலை அமைப்பதில்லை என எமது நிறுவனம் தீர்மானித்துள்ளது” என, அந்நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான முஹம்மட் அப்துல் ஜெஷீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, செங்கலடி, செல்லம் பிறிமியர் அரங்கில், நேற்று (22) இடம்பெற்ற, முக்கிய கூட்டத்துக்குப் பின்னர் நடத்திய, ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ரொமன்சியா லங்கா நிறுவனத்தின் உரிமையாளரான முஹம்மட் மும்தாஜ் மௌலவியின் சகோதரரும் நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான முஹம்மட் அப்துல் ஜெஷீம், முஹம்மட் அமீர், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன், அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேசத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “குறித்த தொழிற்சாலையுடன், காத்தான்குடி நகர சபைத் தவிசாளருக்கோ அல்லது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கோ எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. இந்தத் தொழிற்சாலையை அரசியல் மயப்படுத்த வேண்டாம். ஆனால், தொழிற்சாலையை வைத்து, சிலர் அரசியல் செய்கிறனர்” என்றார்.

“தமிழர்களும் முஸ்லிம்களும் எப்போதும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்தத் தொழிற்சாலையை வைத்து இனங்களிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில், அரசியல் கைங்கரியங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த தமிழ் உணர்வாளர்கள், “குறித்த தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறுத்திக் கொள்கிறோம் என வெறுமனே கூறிக்கொள்ளாமல், எதிர்காலத்தில் எந்தவிதமான சட்ட விவாதங்களுக்கும் செல்லமாட்டோமென, நிறுவனத்தின் உரிமையாளர் கடிதம் எழுதி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.  

 

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/புல்லுமலை-தொழிற்சாலைமுற்றாகக்-கைவிடப்பட்டது/73-224107

 

நல்ல விடயம்!

தண்ணீரை வைத்து கொள்ளையடிக்க நினைத்த கும்பல் விரட்டப்படுள்ளது.

இதற்கு அண்மையில் தண்ணீரின் விலைக்கு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டதும் ஒரு காரணம்.
ஒக்டோபர் 1ம் திகதி முதல் 5L தண்ணீர் ரூ.150/- மேல் விற்கக் கூடாது என விலை கட்டுப்படுத்தப்பட்டது. அதுவரை  5L தண்ணீர் ரூ.230/- முதல் ரூ.300/- வரை விற்கப்பட்டு வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு அடகுவைக்கப்பட்ட நாட்களிலிருந்து இழந்தவைகள் அதிகம் புல்லுமலை இல்லையென்றால் இன்னொர் இடத்தை தேர்தெடுக்கிறார்கள் என்று உட் சூட்சுமாகவும் இருக்கலாம் இதற்கு இலங்க எதிர்ககட்சியும் காரணம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புல்லுமலை தொழிற்சாலை விவகாரம்: எழுத்துமூலமான அறிவித்தலை வழங்குமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலையின் செயற்பாடுகளை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அது தொடர்பில் எழுத்துமூலமான அறிவித்தல்கள் வழங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “புல்லுமலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி போத்தலில் அடைக்கும் தொழிற்சாலை தொடர்பாக கடந்த மே மாதம் 24ஆம் திகதி அறிந்துகொள்ளமுடிந்தது.

அதனை தொடர்ந்து குறித்த தொழிற்சாலையினை அகற்றுவதற்காக ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். அதன் ஒரு கட்டமாக ஜுன் மாதம் 04ஆம் திகதி குறித்த தொழிற்சாலைக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேபோன்று மட்டக்களப்பு நகரில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். இதேபோன்று செங்கலடி, கித்துள் ஆகிய பகுதிகளிலும் குறித்த தொழிற்சாலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஐந்துக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்த குடிநீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக நடாத்தப்பட்டிருந்தன. அதேபோன்று குறித்த குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை மூடுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை வலியுறுத்தும் வகையில் கையெழுத்துப்போராட்டங்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சிலர் பாதுகாப்பு பிரிவினரால் பிரச்சினைகளுக்கும் உட்பட்டனர்.

குறித்த நிலத்தடி நீரை உறிஞ்சி அமைக்கப்படும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை மூடுமாறு நாடாளுமன்றத்திலும் உரை நிகழ்த்தியிருந்தேன். அந்தவேளையில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ குறித்த தொழிற்சாலை தொடர்பான தகவல்களை கோரியிருந்த நிலையில் அவை பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தன.

இந்த தொழிற்சாலை மாவட்டத்திற்கு மிகவும் அச்சுறுத்தலான விடயம் என்ற ரீதியில் அதனை மூடுவதற்காக நடாத்தப்பட்ட அனைத்து போராட்டங்களிலும் பங்குபற்றிய இந்த மண்ணையும் வளத்தினையும் நேசிக்கும் அனைவருக்கும் நன்றி“ என தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/புல்லுமலை-தொழிற்சாலை-வி-2/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.