Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முசிறி பட்டினம்: 2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
2000 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறைகள், வணிகம் என செழித்து இருந்த தமிழக நாகரிகம்படத்தின் காப்புரிமை Kerala Council For Historical Research

கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது.

மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவு உயர்ந்துகொண்டே வந்துள்ளது. கற்காலம் தொடங்கி இன்று வரை மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி கணிக்கமுடியும். இந்த அடிப்படையில், கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்துறை நிபுணர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் கழிவறைகள் கட்டி, பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிவந்துள்ளனர்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறைகள், வணிகம் என செழித்து இருந்த தமிழக நாகரிகம்படத்தின் காப்புரிமை Kerala Council For Historical Research

சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பட்டினம் பகுதியின் வரலாறு, அங்கு தொல்லியல் ஆய்வில் கிடைத்த பல்வேறு பொருட்களின் விவரங்களை 'பாமா'(PAMA) என்ற தனியார் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் செரியன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

கழிவுபானைகள்

''வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், தமிழகம் என்பது பரந்துவிரிந்து, இன்றுள்ள தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக இருந்திருக்கும் என்றே கருதுகிறோம். அதில் பட்டினம் நகரம் முக்கியமான துறைமுகமாக இருந்தது. இங்கு கழிவறைகள் இருந்ததற்கான சான்றாக கழிவுப் பானைகள் கிடைத்துள்ளன,''என்கிறார் பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தும் தொல்லியல் ஆய்வாளர் செரியன்

''ஆறு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, கடைசியாக வைக்கப்பட்ட பானை கூம்பு வடிவில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவறை வெஸ்டர்ன் டாய்லெட் என்று அறியப்படும் கழிவறையை ஒத்திருந்தது. இதே அமைப்பில் ஆறு கழிவறைகளை இதே இடத்தில் கண்டறிந்தோம்,''என்று விளக்கினார் செரியன்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறைகள், வணிகம் என செழித்து இருந்த தமிழக நாகரிகம்படத்தின் காப்புரிமை Kerala Council For Historical Research

2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் பாமா நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. பட்டினம் துறைமுகத்திற்கு வந்துசென்ற வணிகர்கள் அரேபியா, சீனா, ஓமான், ஸ்பெயின், எகிப்து போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால், அந்த நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களையும் இந்த ஆய்வில் பாமா ஈடுபடுத்தியுள்ளது. ''பட்டினம் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு பானை ஓடுகள் கிடைத்தன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்தது,''என்று கூறினார் செரியன்.

‘கடல் கடந்த வணிகம்’

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வணிகர்களுக்கு பட்டினம் நகரம் எவ்வாறு ஒரு இணைப்பு நகரமாக இருந்தது என்பதை ஆதாரங்களுடன் பேசிய அவர், ''இரும்புக் காலம் முடிந்து, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், இந்தியாவின் மேற்கில் உள்ள அரேபிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் வணிகர்கள் பட்டினம் நகரத்தில் வாணிபம் செய்ததற்கு அடையாளமாக பல வெளிநாட்டு ரத்தின கற்கள் அகழ்வாய்வில் கிடைத்தன. 146 நாணயங்களை கண்டறிந்தோம். விதவிதமான குடுவைகள் கிடைத்தன. அந்த குடுவைகளை கூர்ந்துநோக்கியபோது, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொண்டுவந்த குடுவைகள் அவை என்று தெரிந்தது. அதற்கு சாட்சியாக மேல்பகுதியில் ஒவ்வொரு நாட்டின் பிரத்தேயேக அலங்கார வேலைப்பாடுகள் தெரிந்தன. அதேபோல படகுகளை கட்டிவைப்பதற்கான இரும்பு கம்பிகள் இருந்தன,''என்று கூறுகிறார் செரியன்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறைகள், வணிகம் என செழித்து இருந்த தமிழக நாகரிகம்படத்தின் காப்புரிமை Kerala Council For Historical Research

''பட்டினம் நகரம் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நுழைவாயிலாக இருந்தது என்று நம்புகிறோம். எங்களுக்கு கிடைத்த எலும்புத் துண்டுகளை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியபோது, அவை மேற்கு மற்றும் தெற்கு ஆசியப்பகுதி, மற்றும் ஐரோப்பியப் பகுதியில் இருந்து வந்தவர்களின் எலும்புகள் அவை என்று கண்டறிந்தோம்,''என்கிறார் செரியன்.

அதேபோல தமிழகத்தில் அகழ்வாய்வு நடக்கும் கீழடி மற்றும் அழகன்குளம் போன்ற இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களுக்கும், பட்டினத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களுக்கும் ஒற்றுமை இருப்பதை உறுதி செய்யமுடிந்தது என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/india-46053711

  • 2 weeks later...

கொடுங்கல்ல்லூர் கேரளத்தில் ஒரு முக்கிய துறைமுகமாய் மிகப் பிற்காலத்தில் விளங்கியது. அதுவே சங்க இலக்கியத்தில் வரும் முசிறியாக் இருக்கலாம் என ஊகங்கள் கேரளத்தில் பரவலாய் உண்டு.
 1946ல்  இந்தியத் தொல்பொருள் துறையின் மார்ட்டிமர் வீலரின் சீடர்  திரு. அனுஜான் அச்சன் ஆய்வு செய்தார். கொடுங்கல்லுரின் தொன்மை 14ம் நூற்றாண்டிற்கு முன்பு செல்லவில்லை என்றார்.
ஆயினும் கேரளத்தில் ஒரு சிறு செல்வாக்குமிக்க கூட்டம்  கொடுங்கல்ல்லூர் தான் முசிறி எனப் பொய்யாய் பரப்பி வந்து மீண்டும்  1968 ௭0 மிகவும் அதிகமான பரப்பின் சர்வே செய்து பெரும் அளவில் அகழ்வாய்வு செய்தது. 

IMG_20150829_090636.jpg IMG_20150829_090649.jpg

 

கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….  கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.
கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..

IMG_20150829_090704.jpg IMG_20150829_090844.jpg

 

திருவஞ்சிக்களம் இங்கே நடந்த அகழ்வாய்வு கலவையான(Mixed) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை 10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.
IMG_20150829_090859.jpg IMG_20150829_090922.jpg
திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.
பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் and this article was earlier published in Araichi, 170, under the Heading “Archaeological Investigations in Kerala” 
தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை  AUTHOR: பேராசிரியர் டாக்டர் கே.வி.இராமன்

தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை

 
இந்தியத் தொல்பொருள் துறையின் தென்மண்டலப் பிரிவுக் கண்காணிப்பாளராய் டாக்டர் கே.வி.இராமன் பல ஆண்டுகள் பணியாற்றினார். புதையுண்ட நகரங்களான நாகார்ஜுன கொண்டா, கொடுங்கல்லூர், பூம்புகார், காஞ்சி, மதுரை, குன்றத்தூர் முதலான இடங்களில் அகழ்வாய்வு செய்து அரிய செய்திகளைக் கண்டறிந்துள்ளார். பூம்புகாரில் இவரது நேரடிப் பார்வையில் நடைப்பெற்ற அகழ்வாய்வுகளும் கண்டுபிடிப்புகளும் அறிஞர்களால் பாராட்டப்பெற்றன. மேலும் UNESCO நிறுவனத்தினர் இவருக்கு விருதும் கேடயமும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலைப் பற்றி இவர் எழுதிய ஆராய்ச்சி நூலுக்காக, சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இவரது ’பாண்டியர் வரலாறு’ என்ற நூலினைத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2011-இல் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை அவருக்கு ‘தனிச்சிறப்புமிக்க புகழ்மிகு தொல்லியலாளர்’ என்னும் வெகுமதி பட்டத்தினை வழங்கி கெளரவித்தது.
For further reading


http://haindavakeralam.com/HkPage.aspx?PAGEID=13876&SKIN=C
 கொடுங்கலூர் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்தது என்பதை கிறிஸ்துவ சர்ச்சும் உறுதிப் படுத்தியுள்ளது.
 History of Christianity in India, Vol. I, by Fr. A. Mathias Mundadan, Professor of Church History and Theology at the Dharmaram Pontifical Institute, Bangalore, in says 
Opinion seems to be Unanimously in supporting the Hypothesis that the whole or Greater part of the western section of the Kerala coast was once under waters and that the formation of the Land was due to some process of nature either gradual or Sudden. Page-12

இந்திய சர்ச்சுகளால் புனையப்பட்ட இந்தியாவிற்கு பைபிள் தொன்மக் கதை நாயகர் ஏசுவின் சீடர் தோமோ வருகை கதைக்கு 19ம் நுற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டது  மலையாளத்தில் ரப்பான் பாட்டு- இதில் தோமோ கொடுங்கல்லூரில் இறங்கி தன் மதமாற்றத் தொழிலை செய்தார் என கதை உள்ளது; எனவே தொல்லியல் முழுவதும் பொய்  என்ற பின்னர்; கேரள சர்ச் கட்டுப்பாடில் உள்ள  KCHR கேரள வரலாற்று அறக்கட்டளை எனும் நிறுவனம் தொல்லியல் அகழ்வாய்வு என பல பொருட்கள் கிடைத்தது எனச் செய்தி பரப்பி வந்தது. இவை பொமு 1000 - பொஆ 1000 இடையிலானவை என அதாவது 2000  ஆண்டு புழங்கிய பொருள் என்றது.
2011ல் திருவனந்தபுரத்தில் இந்தியத் தொலியலாளர் மாநாடு- இதில் செரியன் கட்டுரை வாசித்தார் முடிவில் அவரிடம்-2000 ஆண்டு புழங்கிய பொருள்களில் எந்தக் குழியில் எந்த பொருள்; எத்தனை அடியில் கிடைத்தது எனக் கேட்கஇ நாங்கள் குறிக்கவில்லைஇ அத்தனையும் ஒன்றாய் சேர்த்துவிட்டோம் என்றார். உலகு புகழ் வாய்ந்த அறிஞர்கள் பட்டணம் போய் பார்த்தால் ஒரே அளவான 7 குழிகள் மட்டுமே இவை எவ்விதமான தொல்லியல் நடைமுறைப்படியும் பதிவு செய்யவில்லை. 
பட்டணத்தில் அறிஞர்களிடம் அவர் எவ்விதமான மனிதக் குடியேற்றம் நிறைந்த ஊர் ஏது கிடைக்கவில்லை என்றார்.
தொல்லியல் அறிஞர்கள் நிறுவனத்தின் முடிவுகள் தவறு அவர்களை வெளியேற்றி இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்றது. இன்றுவரை உள்ள ஆதாரம் ஏது பட்டணம் முசிறி என்றிட  இன்றுவரை ஆதராமான தரவுகள் இல்லை என்பதை திரு செரியன் ஹிந்து பத்திரிக்கையில் அது வெற்று ஊகமே எனவும் அறிவித்தார். 

https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/postulating-hypotheses-is-no-crime/article2572475.ece?fbclid=IwAR1raGmnEDTrYRfUQpGxbbshBx0VgMZtALYyvj1drdWeN03TCBdL62_-Bsw
பல்வேறு பண மோசடி, மோசடி தொல்லியல் அகழ்வாய்வு என  KCHR கேரள வரலாற்று அறக்கட்டளைலிருந்து செரியன் டிஸ்மிஸ் செய்யப் பட்டார். பிறகு பாமா என ஒன்றை தானே ஆரம்பித்து மீண்டும் பொய் பரப்புகிறார்

அகழ்வில் கிடைத்தமையாய் அவர் காட்டிய பொருட்கள் இருந்தமையாய் இப்போது காட்டும் புகைப்படம், மற்றும் ஒரு படகு படம் போன்றவை அறிஞர் அவையில் நீக்கி தான் கொடுத்தார்.
பட்டணம் முசிறி இல்லை; அது பரதப் புழா அருகில் இருந்திருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.