Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பூகோள அரசியல் போட்டியின் விளைவாகவே தற்போது நாட்டில் சட்டத்திற்கு முரணான ஆட்சிக் கலைப்பும் நாடாளுமன்ற கலைப்பும் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும் இவற்றின் பின்னணியின் சீனாவின் செயற்பட்டு வருகின்றது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஆதவன் தொலைக்காட்சியின் சிறப்பு நிலைவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருந்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  குறித்த நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அபரீதமாக வளர்ச்சியடைந்தது. அதனை தடுத்து நிறுத்துவதற்காகவே மைத்திரி – ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கு மேற்குலக நாடுகளும் இந்தியாவும் பாரிய பங்களிப்பை வளங்கியிருந்தன.

இருந்தாலும் மைத்திரி – ரணில்  அரசாங்கத்தினால் சீனாவிடம் இருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. இந்நிலையில் இலங்கையில் தங்களுடைய பிடியை இறுக்குவதற்கு மேற்குலகம் – இந்திய கூட்டணி இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருந்தது.

குறிப்பாக, உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் நாட்டில் மஹிந்த தரப்பின் கைமேலோங்குவதை உணர்ந்து கொண்ட மேற்குலக நாடுகளும் இந்தியாவும் நிலைமை முழுமையாக மாறுவதற்கு முன்னர் தங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அழுத்தங்களை அதிகரித்தனர்.

குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதி, மத்தள விமான நிலையம், திருகோணமலை எண்ணெய் குதங்கள், பலாலி விமான நிலையம் போன்றவற்றின் அதிகாரங்களை தம்வசம் எடுத்துக்கொள்வதற்கான அழுத்தங்களை அதிகரித்துள்ளது. அதனை தடுத்து நிறுத்துவதை நோக்கமாக கொண்டே தற்போதை அரிசியல் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

http://athavannews.com/பூகோள-அரசியல்-காய்நகர்த்/

 

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் உண்மை.

பூகோளம் விரும்பினால் சேர்த்து வைக்கும் பிரித்து வைக்கும்.அடுத்தவன் தாளத்துக்கு ஆடுற நாடாகப் போச்சே.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் இந்தியாவுக்குச் சாதுவாக நெருப்புப்பத்த வெளிக்கிட்டு இருக்கு அடிமடியில கூடியவிரைவில் நெருப்புப்படரும் மன்னார் வளைகுடாவில் அதிநவீன ராடர் கருவிகளை சீனா விரைவில் அமைக்கும் இந்தியாவை இலங்கைத்தீவினூடாக அதி உச்ச அளவில் அச்சுறுத்தும் அப்போதுதான் தமிழர் விரோத தேசம் இந்தியா எமக்குச்செய்த வினைக்கு தகுந்த பாடத்தைப் படிக்கும்.  இந்தியாவைப்பொறுத்தமட்டில் இலங்கைத்தீவில் எல்லாமே கைமீறிப்போய்விட்டது.  தமிழர்களை உசுப்பேத்தி ஒரு வன்முறைக்கும்பலை உருவாக்கலாம் அவர்களைத் தங்கள் தாளத்திற்கேற்ப ஆடவைக்க முயலலாம் அதுக்கு ஏற்றாற்போலவே தமிழர் பகுதிகளில் இளையோர்களது நடவடிக்கை காணப்படுகிறது.

13 hours ago, கிருபன் said:

இவற்றின் பின்னணியின் சீனாவின் செயற்பட்டு வருகின்றது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முழுமுட்டாள் அரசியல் செய்யும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுறேஸ் பிறேமச்சந்திரன் போன்ற பச்சோந்திகள் கனகாலத்துக்கு முன்னர் சொன்னதை இப்ப சொல்றார்.

வீரகேசரி படிச்சு அரசியல் செய்யும் சம்பந்தனை விட மோசமான ஆளா இருப்பாரோ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.